அத்தியாயம் – 25
மறுநாள் காலையில் காயத்திரி கண் விழிக்கும் போது ரிஷன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.
அவன் தலை முடி நெற்றில் படர்ந்து அழகாக இருந்தது. காயத்திரி அவன் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு தன் காலை வேலைகளைச் செய்யச் சென்றாள்.
காயத்திரி குளித்துவிட்டு சுடிதார் அணிந்து கொண்டாள்.
பார்த்திபனுக்கு “குட் மார்னிங்… வீட்டுக்கு வா” என்று மெசேஜ் போடுவிட்டாள்.
கிட்சன் சென்று பால் காய்ச்சி விட்டு காலை உணவுக்குப் பொங்கல், சாம்பார், சட்னி செய்ய ஆயத்தமானாள்.
ரிஷன் குக்கர் விசில் சவுண்டிலில் தான் எழுந்தான். குளித்து விட்டு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு கிட்சேனுக்கு வந்தான்.
காயத்திரி… சாம்பார் செய்துக்கொண்டு இருந்தாள்.
“குட் மார்னிங் அம்மு” என்றான் ரிஷன்.
“குட் மார்னிங் டியர்” என்றாள்
காயத்திரி அவனைப் பார்க்காமலே.
ரிஷன் ஹாலில் சென்று அமர்ந்தான்.
“டீ போடுறேன் கிருஷ்ணா” என்றாள் காயத்திரி.
“ம்ம்ம்ம் பார்த்திக்கும் சேர்த்து போட்டு” என்றான் ரிஷன்.
பார்த்திபன் வீட்டுக்குள்ளே வந்தான்.
இருவருக்கும் டீ கொடுத்தாள் காயத்திரி.
அப்போது தன் ரிஷன் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து இருப்பதைப் பார்த்தாள். ரிஷன் அப்படிப் பார்க்க ஒரு வித தயக்கமாக இருந்தது காயத்திரிக்கு.
அவள் பார்ப்பதை உணர்ந்த ரிஷன் கண் அடித்துவிட்டு டீ குடிக்க ஆரம்பித்தான்.
பார்த்திபனிடம்…. “ டேய் உன் பிளான் என்ன இன்னைக்கு” என்று கேட்டான் ரிஷன்.
“எந்தப் பிளானும் இல்லை ஏன் என்ன விஷயம்?” என்று குழப்பமாகக் கேட்டான் பார்த்திபன்.
“எங்காவது வெளியே போலாம் மூணு பேரும் அதுக்குத் தான் கேட்டேன்” என்றான் ரிஷன்.
இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதைக் கிட்சனுக்குள்ளே இருந்து கேட்ட காயத்திரி…
“ நோ அவுட்டிங் பிளான்… நெஸ்ட் வீக் புல்லா ட்ராவெல் தான் சோ இன்னைக்கு மட்டும் ரெஸ்ட் வேணும்… வேணுனா நைட் டின்னருக்கு வெளிய போகலாம்” என்றாள் காயத்திரி.
“ம்ம்ம்ம் ஓகே” என்று சொன்னான் ரிஷன்.
“பார்த்தா… நாளைக்கு விருந்துக்கு வினு அண்ணா வீட்டுக்கு வா… நம்ம சேர்ந்து போகலாம்” என்று அழைத்தாள் காயத்திரி.
பார்த்திபன் யோசிக்கும் போதுதே வினு நேத்ரன் கிட்ட இருந்து போன் கால் வந்தது.
“ஹலோ அண்ணா” என்றான் பார்த்திபன்.
“டேய்… நாளைக்கு மச்சானுக்கும் காயுக்கும் விருந்து அவங்க கூட நீயும் வந்துடு சரியா..” என்றான் வினு நேத்ரன்.
“சரி அண்ணா வந்துடுறேன்” என்றான் பார்த்திபன்.
காயத்திரி சிரித்து விட்டு சென்றாள்.
அதன் பின் மூவரும் அமர்ந்து காலை உணவு சாப்பிடனர்.
“மச்சி கடைக்குப் போய் முட்டை மட்டும் வாங்கிட்டு வா” என்று பார்த்திபனிடம் கூறினாள் காயத்திரி.
“அம்மு… நெஸ்ட் டூ டேஸ்க்கு கண்டிப்பா நான்-வெஜ் தான் இருக்கும் இன்னைக்கு வெஜ் செய்யலாம்” என்றான் ரிஷன்.
“தக்காளி சாதம், உருளை கிழங்கு பொரியல் செய்யலாம்” என்றான் பார்த்திபன்.
“ம்ம்ம்ம் ஒகே” என்று சொல்லி விட்டு காயத்திரி ரெஸ்ட் எடுக்க ரூம்க்கு சென்றாள்.
ரிஷன் மற்றும் பார்த்திபன் சேர்த்து மதிய சமையல் செய்தனர். ரிஷன் ஒரு ஸ்லீவ் லெஸ் டிஷர்ட் அணிந்துக்கொண்டான்.
“டேய்ய்… நீயும் எங்க கூடச் சென்னைக்கு வா பிரின்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து டின்னர் அரேஞ்சு பண்ணி இருக்காங்க” என்று பார்த்திபனிடன் கேட்டான் ரிஷன்.
பார்த்திபன் யோசையாகப் பார்த்த… “ நீங்க தனியா போகலாம்ல நான் எதுக்குக் கூடவே?” என்று கேட்டான்.
“என்ன தான் நாங்க லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டாலும் பெருசா தனியா மீட் எல்லாம் பண்ணது இல்லை., நீ கூட இருந்தா அம்மு கொஞ்சம் கம்ஃபோர்டபிளா பீல் பண்ணுறா., சில பர்சனல் ரீசன் நல்லா லைப் இன்னும் ஸ்டார்ட் பண்ணல நாங்க அதான் கூட வான்னு கூப்பிடுறேன்” என்று விளக்கமாக கூறினான்.
“ம்ம்ம்ம் ஓகே நானும் வரேன்” என்று சொன்னான் பார்த்திபன்.
அதான் பின் இருவரும் பேசிக்கொண்டே சமையல் வேலைகளை முடித்தனர்.
“நான் வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்ச் சாப்பிட்டுக்கிறேன் நீங்க ரெஸ்ட் எடுங்க என்று சொல்லிவிட்டு”….
பார்த்திபன் டிபன் பாக்ஸில் போட்டுக்கொண்டு தன் வீட்டுக்கு சென்று விட்டான்.
ரிஷன் ரூம்க்கு வரும் போது காயத்திரி தூங்கிக்கொண்டு இருந்தாள்.
ரிஷனும் அவள் அருகில் படுத்துவிட்டான்.
காயத்திரி எழுந்து ரிஷனை எழுப்பினாள் சாப்பிடுவதற்கு.
ரிஷன் காயத்திரியை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டு அவள் இதழில் முத்தம் வைத்தான்.
காயத்திரி முதலில் அதிர்த்தாலும் பின் இதழ் முத்தத்தில் மூழ்கினாள்.
ரிஷன் பொறுமையாக அவளை விடுத்து எழுந்து அமர்ந்து “ லவ்லி” என்றான்.
காயத்திரி செல்லமாக முறைத்துவிட்டு எழுந்து சென்று மௌன நிலையில் மதிய உணவை பரிமாறினாள்.
இருவரும் மௌனமாகச் சாப்பிடனர்.
சாப்பிட்டு முடித்து விட்டு காயத்திரி அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு ஹாலில் அமர்ந்தாள்.
ரிஷன் அவள் அருகில் அமர்ந்து அவள் கையோடு கை கோர்ந்துக்கொண்டான். காயத்திரி அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
அம்மு… “நைட் ஹோட்டல் வேணாம் ஆர்டர் பண்ணி சாப்பிடுக்கலாம்” என்றான்.
“ம்ம்ம்ம் சரி., டிரஸ் பேக் பண்ணனும் நானும்” என்றாள் காயத்திரி.
ரிஷன் மற்றும் காயத்திரி இருவரும் சேர்த்து டிரஸ் எடுத்து வைத்தனர்.
மாலை பார்த்திபன் வர மூவரும் சேர்த்து அரட்டை அடித்தனர்.
இரவு உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு அன்றைய நாளை முடித்தனர்.
மறுநாள் காலையில் பார்த்திபன் காரில் மூவரும் தூத்துக்குடி வினு நேத்ரன் வீட்டுல் நடைபெறும் விருந்துக்குச் சென்றனர்.
புதுமணத் தம்பதிகளுக்கு ஆர்த்தி எடுத்து வரவேற்றனர்.
பாலும் பழமும் கொடுத்தாள் ஹர்ஷினி.
அதன் பின் விருந்து அமர்க்களப்பட்டது.
காயத்திரி வனிதா மற்றும் வனஜாவை அழைத்து… “பார்த்திபன் உங்க காலேஜ்ல தான் ப்ரோபஸ்சர சேர போறான் அவன் கிட்ட என்ன ஹெல்ப் வேணும் நாளும் கேட்டுக்கோங்க” என்றாள்.
அவர்கள் சிரித்து விட்டு
அக்கா… “பார்த்தி அண்ணா எங்க கிட்ட சொல்லிட்டாங்க சோ நாங்க பார்த்துகிறோம்” என்றாள் வனஜா.
வினு நேத்ரன்… “காயத்திரி மற்றும் ரிஷனுக்கு டிரஸ் எடுத்துக்கொடுதான்”.
விசாகன்… “ பார்த்திபனுக்கு டிரஸ் கொடுத்தான்”.
மாலையில் வினு நேத்ரன் ஏற்பாடு செய்து இருந்த டிரைவருடன் மூவரும் சென்னை நோக்கி பயணம் செய்தனர்.
நிதானமான பயணம் மறுநாள் காலையில் சென்னை வந்து அடைந்தனர்.
ரிஷன் சென்னையில் ஹோட்டலில் ரூம் புக் செய்து இருந்தான் அங்குப் போய் மூவரும் தங்கினர்.
இரவு ஒரு ஹோட்டலில் தான் விருந்து ஏற்பாடு செய்து இருந்தனர் ரிஷனின் நண்பர்கள்.
காலை உணவு முடித்து விட்டு மூவரும் நன்றாக ரெஸ்ட் எடுத்தனர்.
மாலையில் எழுந்து கிளம்பி ஹோட்டலுக்குச் சென்றனர் மூவரும்..
சென்னை டிராபிக்யில் செல்ல கொஞ்ச நேரம் ஆனது.
இரவு விருந்து நடக்கும் இடத்ததுக்குச் சென்றனர். ஒரு கடற்கரை ரிசார்ட் ஹோட்டல் அது.
ரிஷனின் நண்பர்கள் குடும்பம், ரிஷனுடன் பழகிய நண்பர்கள், பெங்களூர் பிரின்ட்ஸ் என்று சில பேரு வந்து இருந்தார்கள்.
முதலில் ரிஷன் மற்றும் காயத்திரி கேக் வெட்டி தன் திருமணத்தைக் கொண்டாடினார்கள்.
பஃபே முறையில் இரவு விருந்து நடைபெற்றது.
விருந்து முடித்து விட்டு நள்ளிரவு தான் ஹோட்டலுக்கு வந்தனர்.
“நாளை காலையில் பிலைட் டா கோவைக்குச் சோ நாங்க கார் புக் பண்ணி போய்கிறோம்… நீ நல்லா ரெஸ்ட் எடுத்துட்டுக் கிளம்பு” என்று பார்த்திபனிடம் சொன்னான் ரிஷன்.
“ம்ம்ம்ம் சரி அதான் டிரைவர் இருக்கார்ல ஒன்னும் பிரச்சனை இல்லை நான் பார்த்துக்கிறேன்” என்றான் பார்த்திபன்.
காயத்திரி மற்றும் ரிஷன் ரெஸ்ட் எடுத்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்து கோவைக்குக் கிளம்பினர்.
காயத்திரிக்கு முதல் விமானப் பயணம் கொஞ்சம் டென்ஷனாக இருந்தாள்.
ரிஷன் அவள் கையுடன் கைகோர்த்து அவள் பயத்தைப் போகினான்.
காயத்திரியை ஜன்னல் ஓரம் அமர வைத்த ரிஷன் அவளிடம் வான் மேகங்கள் நகரும் காட்சியைக் கட்டினான்.
மூன்று மணி நேர பயணம் சட்டென்று முடித்துவிட்டது.
கோவையில் இறங்கி அவர்களுக்கு ஏற்பாடு செய்து இருந்த கார் மூலம் ஊட்டி நோக்கி சென்றனர்.
மதிய உணவை கோவையில் சாப்பிட்டு விட்டு ஊட்டி நோக்கி பயணம் செய்தனர்.
முதலில் குன்னூரில் உள்ள சிம்ஸ் பார்க்கு சென்றனர். அவர்கள் சென்ற நேரம் லேசாக மழை தூரிக்கொண்டு இருந்தது.
பார்க்கை சுற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு முன்னே சென்ற அயல் நாட்டு ஜோடி திடிரென்று இதழ் முத்தம் பரிமாறினர்.
காயத்திரிக்கு ஒரு வித அவஸ்தையான உணர்ந்தாள்.
ரிஷன் சிரித்து விட்டு…
ஹேய்.. “இது எல்லாம் அவுங்களுக்குள்ள ரொம்பச் சாதாரணம்” என்றான்.
மெதுவாக இருவரும் கைகோர்த்துக்
கொண்டு பார்க்கை சுற்றி வந்தனர்.
அதன் பின் டால்பின் நோஸ் வியூ பாயிண்ட் இடத்ததுக்குச் சென்றனர்.
இறுதியாக டீ கார்டன் சென்று விட்டு முன் இரவு நேரத்தில் ஊட்டிக்கு சென்றனர்.
மலை ஏற ஏற குளிர் காற்று அதிகம் ஆனது. காரில் ரிஷனை நெருங்கி அமர்ந்தாள் காயத்திரி.
அவர்களுக்கு ரிசர்வ் செய்து இருந்த ஹோட்டல் ரூம்க்கு சென்றனர்.
குளிர் அதிகமாக இருந்தது… ரூமில் ஹீட்டர் ஆன் செய்தான் ரிஷன்.
காயத்திரி ரொம்ப சோர்வாக இருந்தாள். ரிஷன் இரவு உணவை ரூம்க்கு ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு படுத்தனர்.
மறுநாள் காலையில் கண் விழித்த காயத்திரி ரிஷனை பார்க்க அவன் உறக்கத்தில் இருந்தான்.
காயத்திரி எழுந்து குளித்து டிரஸ் மாற்ற ரூமில் நடக்க அவள் பாத கொலுசு இசையில் ரிஷன் முழித்து விட…
காயத்திரி ரிஷன் தூங்குவதாக நினைத்து மெதுவாகத் தன் உடைகளை அணிந்தாள்.
நிச்சயமாக ரிஷன் இப்படி ஒரு சூழ்நிலை இங்கு நிகழும் என்று நினைக்கவில்லை… அதுவும் அவளை இப்படி ஒரு கோலத்தில் பார்ப்போம் என்றும் எண்ணவில்லை….
அவன் உடலில் பல ரசாயன மாற்றும் நிகழ்ந்தது…
கண்களை மூடினால் கூட அவன் பார்த்த காட்சி தான் கண்ணுக்குள் உலா வந்தது.
அதற்கு மேல் படுத்து இருக்க முடியாமல் எழுந்து குளிக்கச் சென்றான்.
ரிஷன் குளித்துவிட்டு வரவும் காயத்திரி…
“குட் மார்னிங் கிருஷ்ணா” என்றாள்.
“குட் மார்னிங்” என்றான்.
காலையில் கண்ட காட்சியில் இருந்து வெளியே வர முடியாமல் ஒரு வித அவஸ்தையான நிலையில் தவித்தான்.
அவன் டிரஸ் மாற்றிவிட்டு வர இருவரும் சாப்பிட சென்றனர்.
அவர்கள் சாப்பிட விட்டு வர கார் ரெடியாக இருந்தது.
முதலில் பைக்காரா நீர்வீழ்ச்சி சென்றனர். காயத்திரி ரிஷனின் கையுடன் கை கோர்த்துக்கொண்டாள்.
லேசாக மழை தூரிக்கொண்டே இருந்தது.
ரிஷன் அவள் தோளோடு தோள் உரச்ச நடந்து சென்றனர்.
அவன் மெல்ல மெல்ல தன் கட்டிப்பாட்டை இழந்துக்கொண்டே இருந்தான்.
டோடபெட்டா பீக் சென்று விட்டு….
பைன் பாரஸ்ட்யில் நடக்கும் போது மழை நன்றாகப் பொழிய ஆரம்பித்தது.
ஆதலால் இருவரும் ரூம்க்கு வந்து விட்டனர்.
திடிரென்று ஏற்பட்ட மேக வெடிப்பால் அதிக மழை பொழிந்தது.
ரூமில் ஹீட்டர் வைத்தும் குளிர் சற்று அதிகமாக இருந்தது.
காயத்திரி குளிரில் நடுங்க ரிஷன் அவளை அணைத்தான். இருவருக்குள்ளும் ஒரு வேதியியல் மாற்றம் நிகழ்ந்தது.
காலையில் இருந்து நிலை இல்லாமல் தவித்த ரிஷன் அவள் இதழை தீண்டினான்..
இங்கு இருந்த ஏகாந்த நிலை அடுத்தக் கட்ட நிலைக்கு அவனை இழுத்து சென்றது….
ரிஷன் மேலும் மேலும் முன்னேற காயத்திரி அவனுக்குள் முழு மனதோடு இணைத்தாள்..
தீண்டும் உன் இதழில் தித்திக்கின்ற இரவில் தேடல் தொடங்குதடி…
உந்தன் மர்மம் விளங்குதடி…. மீண்டும் உன் விழியில் மெய் மறந்த நிகழில் நாணம் நெளிக்குதடி….
என்னைக் குழைத்துப் பருகுதடி….
மூச்சின் களத்தில் முத்த போரின் முடிவில்…
ஆட்சி கலையுதடி…
என் ஆண்மை அடிமையடி….
என் ஆண்மை அடிமையடி….
முழுதும் முற்றுப்பெற அவளை அணைத்துக் கொண்டு படுத்தான்.
காயத்திரி அசதியில் தூங்கி விட…. ரிஷன் அவளை ரசித்துக்கொண்டு படுத்து இருந்தான். காயத்திரி கன்னியாகுமாரியில் கேட்டது நினைவுக்கு வர தலையைக் கோதி சிரித்துக் கொண்டான்.
மெல்ல எழுந்து இரவு உணவு ஆர்டர் செய்து விட்டு மீண்டும் அவளை அணைத்துப் படுத்துக்கொண்டான்.
சற்று நேரத்தில் காயத்திரிக்கு பசி எடுக்க அவள் விழித்துக்கொண்டாள்…. ரிஷனை பார்க்க வெக்கப்படுக்கொண்டே நெளிய… ரிஷன் கண் திறந்து பார்த்தான்.
“என்ன அம்மு?” என்றான் ரிஷன்.
“பசிக்குது….” என்று வெக்க குரலில் சொல்ல…
ரிஷன் சிரித்து விட்டு அவளுக்குத் துண்டு எடுத்துக் கொடுத்தான்,
“டின்னர் வந்துடுச்சு வா சாப்பிடலாம்” என்று அழைத்தான்.
காயத்திரி எழுந்து டிரஸ் மாற்றி விட்டு வர…
இருவரும் சாப்பிட்டனர்…
ரிஷன் அவளிடம் செல்ல சீண்டல்கள் செய்து கொண்டே சாப்பிட்டான்.
ரிஷன் மீண்டும் அவளை நாட காயத்திரி அவனுடன் இணைந்தாள்.
ரிஷன் அவளுக்குத் தாம்பத்திய சுவையும்… காதலின் இனிமையும்… நிறைவாக வழங்கினான்.
அங்கு இருந்த இரு நாட்களும் ரிஷன் மற்றும் காயத்திரி காதலர்களைப் போல் ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு அவர்களில்
தேன் நிலவை இனிமையாகக் கொண்டாடிவிட்டு சென்னைக்கு வந்தனர்.
சென்னை வந்த மறுநாளே அவர்களின் விசா ரெடியாக இருக்க இன்னும் பத்து நாளில் புதுமணத் தம்பதிகள் டெக்சாஸ் நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
அவர்களின் வாழ்க்கை பயணம் தொடங்கியது.
இருவரின் வாழ்க்கை நடந்த நிகழ்வுகளை…..
பார்க்கலாம்….