அத்தியாயம் – 24
காயத்திரி ரிஷன் தந்தப் புடவையை அணிந்து ரெடியாக இருந்தாள். அவள் டார்க் க்ரீன் கலர் புடவைக் கட்டி இருந்தாள்.
ரிஷன் காயத்திரியை அழைத்துச் செல்ல வந்தான். அவன் டார்க் பிரவுன் ஷர்ட் மற்றும் பிரவுன் பாடர் வைத்த வேஷ்டி கட்டி இருந்தான், இதைக் காயத்திரி தான் வாங்கித் தந்து இருந்தாள்.
“அம்மு… ரெடியா போகலாமா..?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் ரிஷன்.
“ம்ம்ம்ம் ரெடி தான் போகலாம்” என்று சொன்னாள் காயத்திரி.
டார்க் க்ரீன் கலர் புடவையில் அழகாக இருந்தாள்.
ரிஷன் அவளைக் கட்டி அணைத்து… “அம்மு ஐ நீட் எ கிஸ்” என்று சொல்லி அவள் உதட்டில் முத்தம் வைத்தான். முதல் முத்தம் இருவருக்கும் இனித்தது சற்று அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். சில பல நிமிடங்கள் நீடித்தது அந்த இதழ் முத்தம். காயத்திரி ரிஷனை இறுக்கமாக அணைத்து இருந்தாள். சில நிமிடம் கழித்துத் தான் இயல்புக்கு வந்தனர் இருவரும்.
காயத்திரி அவள் புடவையைச் சரி செய்து கொண்டாள். ரிஷன் முகத்தில் அழகான வெட்க முருவல் இருந்தது… அவன் தலையைக் கோதி தன்நிலை அடைத்தான்..
“அம்மு… யாரு என்ன பேசினாலும் பெருசா எடுத்துக்காத ஒகே யா?” என்றான் ரிஷன்.
“எனக்குள்ள காயங்கள் இருக்கு தான் ஆனா இது எல்லாம் என்னோட தனிப்பட்ட விஷயத்துல… சோ யாரு என்ன பேசினாலும் என்னைக் கஷ்டப்படுத்தாது… காளிதாஸ்வோட அக்காவை விட யாரும் என்னை அசிங்கமா பேசிட போறது இல்லை சோ நீங்க யாரும் எதையும் யோசிக்க வேண்டாம் இந்தப் பங்ஷன் நல்லா சூப்பரா நடக்கும்” என்றாள் காயத்திரி.
காயத்திரி அவனிடம் குங்குமம் தர அதை அவள் நெற்றியில் வைத்துவிட்டு
அவள் நெற்றியில் முத்தம் வைத்து அழைத்துச் சென்றான்.
இருவரும் கைகோர்த்தபடி பங்ஷன் நடக்கும் இடத்துக்கு வந்தனர்.
ஹர்ஷினி “பாவா இன்னும் கொஞ்ச நேரத்தில காயத்திரி மதினி வந்துடுவாங்க… யாராவது ஏதாவது சொல்லிடுவாங்களோனு பயமா இருக்கு” என்று வினு நேத்ரனிடம் கவலையாகச் சொன்னாள்.
“கண்ணம்மா பார்த்துக்கலாம் இத்தனை பேர் இருக்கோம்ல நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு” என்று அவள் கையைத் தட்டிக்கொடுத்தான்.
சரியாக ரிஷன் மற்றும் காயத்திரி உள்ளே வந்தனர் அந்த நேரம்.
ஹர்ஷினி முகத்தில் தெரிந்த தவிப்பை பார்த்த ரிஷன்., சின்னச் சிரிப்போடுப் கண்ணை மூடி திறந்தான். ஹர்ஷினி அண்ணனின் செயலால் கொஞ்சம் அமைதி ஆனாள்.
அதன்பின் பங்ஷன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
சில உறவுகள் காயத்திரியை பார்த்து அதிர்ச்சி அடைத்தனர். அதுவும் ரிஷனுடன் கைகோர்த்து வருவதைப் பார்த்து இன்னும் பேரதிர்ச்சி ஆகினர்.
அங்கு இருந்தவர்கள் பேசியது…
“ மல்லிகா… இது மாலா பொண்ணு தானே இவ என்ன ரிஷனோட கை கோர்த்துட்டு வரா… இவ யாரோ கூட ஓடி போயிட்டானுதானே அந்த மாலா சொல்லிட்டு இருந்தா” என்று பரமேஸ்வரி சொன்னார்.
“அதான் அக்கா எனக்கும் புரியல அவ கழுத்துல பாருங்க புதுத் தாலி இருக்கு” என்றார் மல்லிகா.
அவர்கள் பேசிய அதே நேரம்….
சீர்தட்டை காயத்திரியும், ரிஷனும்,அவன் நண்பர்களின் மனைவிகளும் சபைக்கு எடுத்து வந்தனர்.
காயத்திரி ரிஷனுடன் சேர்ந்து சீர் தட்டை சபையில் வைத்தாள். மொத்தமாக ஏழு தட்டுக்கள்
மகிழ் குட்டிக்கு தோடு, டிரஸ், மாலை…
செயின் ( ரிஷனின் நண்பர்கள் போடுவது),
டாலர் ( பார்த்திபன் செய்வது).
டாலரில் தமிழில் “மகிழ்வதனி” என்ற டிசைன் இருக்கும்.
அதன்பின் பழங்கள், சாக்லேட், பூ, சந்தனம் குங்குமம் என்று தட்டுகள் வைத்தனர்.
மகிழ்வதனி ரோஜா நிறத்தில் அழகாகப் பட்டுப் பாவாடை சட்டை அணிந்து ரோஜாவை போல் அம்சமாக இருந்தாள்.
நல்ல நேரம் ஆரம்பிக்கவும் ரிஷன் மடியில் அமர வைத்து காது குத்தினர். அத்தை முறைக்குக் காயத்திரி மோதிரம் செய்தாள்.
மகிழ் பாப்பா ரொம்ப அழுததால் அவளை வெளியே அழைத்துச் சென்றனர் தீபாலக்ஷ்மி மற்றும் ஹர்ஷினி.
காயத்திரி சபையில் இருந்து விலகி வந்தாள் அந்த நேரம் பரமேஸ்வரி காயத்திரியை அழைத்தார்…. காயத்திரியும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தாள்….
“ஏன் டி மா… நீ என்னமோ யாரு கூடவோ ஓடி போயிட்டேன்னு உங்க அம்மா சொல்லிட்டு இருந்தா… நீ என்னா இங்க அந்தத் தம்பி ரிஷன் கூட ஜோடி போட்டுட்டு வர” என்று கேட்டார் பரமேஸ்வரி.
காயத்திரி கொஞ்சம் கூட அசாராமல்…
“ என் புருஷன் கூட நான் வராம வேற யாரு வருவா..?” என்று கேட்டு விட்டு
“ஆமா நான் ஓடி போனதை யாராவது பார்த்திங்களா என்ன…? யாரோ ஏதோ சொன்னா நான் அதுக்குப் பலி ஆக முடியாது” என்றாள் காயத்திரி.
“சரி டி நீ ஓடி போகலைனா இத்தனை வருஷம் எங்க இருந்தா..?” என்று கேட்டார் மல்லிகா.
“ நானும் ரிஷனும் லவ் பண்ணோம்.. வீட்டுக்கு முறைப்படி பொண்ணு கேட்டு யசோதா அத்தையும் ஜெகதீஸ்வரன் மாமாவும் வந்தாக ஆனா அப்பா தரல.. நான் அவர் இறந்ததுக்கு அப்பறம் மேல படிக்கணும்ன்னு சொன்னேன் ஆனா அவுங்க விடல அவுங்க தம்பி காளிதாஸை கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாங்க எனக்குப் பிடிக்கல அதான் வீட்டை விட்டு வெளியே வந்து படுச்சேன்… ரிஷன் வெளிநாட்டில் இருந்து வரவும் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று சொன்னாள் காயத்திரி.
“என்ன மா சொல்லுற…. காளிதாஸை நீ கல்யாணம் பண்ணிக்கணும்மா அவன் வயசு என்ன உன் வயசு என்ன? எப்படி மாலாக்கு இப்படிப் புத்தி போச்சு?” என்று ஆதங்கமாகக் கேட்டார் பரமேஸ்வரி.
இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த ரிஷன் காயத்திரிடம் வந்தான்.
“அம்மு…. என்ன மா?” என்று குரல் உயர்த்திக் கேட்டான்.
“ஒன்னு இல்லை தம்பி சும்மா தான் பேசிட்டு இருந்தோம் காயத்திரியை பார்த்து ரொம்ப நாள் அச்சுல அதான்” என்றார் மல்லிகா.
“கிருஷ்ணா நீங்க போய்ப் பந்தி வேலையைப் பாருங்க…. ஜஸ்ட் சும்மா தான் பேசிகிட்டு இருக்கோம்” என்றாள் காயத்திரி.
“ம்ம்ம்ம் சரி அம்மு” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
“இப்போ நீ என்ன படுச்சு இருக்க.?” என்று கேட்டார் பரமேஸ்வரி.
“நான் இப்போ ME., MBA., படுச்சு இருக்கேன்” என்றாள் காயத்திரி.
“எங்க இந்தக் காலத்து பொம்பள பிள்ளைகள் ஒரு டிகிரி வாங்கவே பல கஷ்ட படுதுங்க படிக்க… நீ அசால்ட்டா மூணு டிகிரி வாங்கி இருக்க, அதுக்கு எல்லாம் குடிப்பின வேணும் போல ” என்றார் மல்லிகா.
காயத்திரி அதற்குப் பதில் சொல்லவில்லை அவர்கள் சொல்லுவது போல் பெண் பிள்ளைகள் படிக்கக் கஷ்டப்பட வேண்டிதான் உள்ளது இந்தக் காலத்திலும். அனைவருக்கும் முதுகலை டிகிரி எல்லாம் படிக்க முடியாது. பல பெண்களை இளங்கலை படிக்கும் போதே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர் அதன் பின் குடும்பம்,பிள்ளை என்று பெரும்பாலும் வாழ்க்கை அதிலேயே போய் விடுகிறது. ஒரு சதவீதம் தான் முதுகலை படிப்பு எல்லாம் படிக்க முடிகிறது.
“ரொம்பச் சந்தோசம்மா… உன் கல்யாண வாழ்க்கை நல்லப்படியா அமைய எங்க வாழ்த்துக்கள்” என்று மனமார இருவரும் கூறினார்கள்.
காயத்திரி சின்னச் சிரிப்புடன் அவர்களிடம் இருந்து விடைப்பெற்று சென்றாள்.
ரிஷனுடம் சேர்ந்து அவளும் பந்தி வேலைகளைப் பார்த்தாள்.
சில உறவுகள் அவளை நலம் விசாரிக்கவும்…
சில உறவுகள் அவள் திருமணத்தைப் பற்றிக் கேட்கவும் செய்தனர்.
சில உறவுகள் இத்தனை நாட்கள் எங்கு இருந்தாய் என்று கேட்டனர்….
அனைவருக்கும் ஏற்ற பதிலை தந்தாள் காயத்திரி.
மதிய உணவு வேலை முடிய உறவினர்கள் எல்லாம் கிளம்பிவிட்டனர்.
சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு அனைவரும் கன்னியாகுமரி காயத்திரி வீட்டுக்குக் கிளம்பினார்கள்.
மாலையில் தான் நல்ல நேரம் அந்த நேரத்தில் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கிளம்பினார்கள்.
அதன் படி சரியாக நல்ல நேரத்தில் காயத்திரி வீட்டுக்கு சென்றனர்.
ஹர்ஷினி, மதுமிதா, ஸ்வேதா, வனிதா மற்றும் வனஜா ஐவர் சேர்த்து ஆலம் சுற்றி புதுமனை தம்பதிகளை வரவேற்றனர்.
வலது கால் எடுத்து வைத்து காயத்திரி உள்ளே வந்தாள். பூஜை ரூமில் விளக்கு ஏற்றினாள்.
ஹர்ஷினி ரிஷன் காயத்திரிக்கு பாலும் பழமும் கொடுத்தாள்.
காயத்திரி பால் காய்ச்சி டீ போட்டு கொடுத்தாள்.
ரிஷனின் நண்பர்கள் சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி முதலில் கிளம்பினார்கள்.
ரிஷனை தனியாக அழைத்த அவர்கள் “மச்சி ஆல் தி பெஸ்ட்” என்று கிண்டல் அடித்துவிட்டு சென்றனர்.
சற்று நேரம் இருந்துவிட்டு செந்தில்ராஜன் குடும்பமும், ரெங்கநாதன் குடும்பமும் கிளம்பினார்கள்.
செந்தில் ராஜன் மற்றும் ரெங்கநாதன் இருவரையும் விருந்துக்கு அழைத்தனர்.
தீபாலக்ஷ்மி மற்றும் சாரதா காயத்திரியை தனியாக அழைத்து…. “கண்ணு உன் வாழ்க்கையில இதுக்கு அப்பறம் சந்தோசம் மட்டும் தான் இருக்கனும். போதும் போதும் என்ற அளவுக்கு நீ கஷ்டப்பட்டுட்ட இனிமேல் நீயும் சந்தோசமா இருந்து ரிஷனையும் சந்தோசமா வச்சுக்கோ” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.
ஹர்ஷினி காயத்திரியை அணைத்து “ எங்க அண்ணாவை சந்தோசமாக பார்த்துக்கோங்க” என்று சொல்லி சென்றாள்.
வினு நேத்ரன் ரிஷனை அணைத்து விட்டுக் கிளம்பினான்.
பார்த்திபன் ரெஸ்ட் எடுக்க அவன் வீட்டுக்கு சென்று விட்டான்.
ரிஷன் மற்றும் காயத்திரி தனியாக இருந்தனர்.
ரிஷனுக்குச் சோர்வாக இருந்தால் சோபாவில் படுத்து விட்டான்.
காயத்திரி ரெப்பிரேஷ் ஆகிவிட்டுச் சாதாரணக் காட்டன் புடவை கட்டிக்கொண்டாள்.
அவள் வரும் போது ரிஷன் சோபாவில் தூங்கிக்கொண்டு இருந்தான்.
காயத்திரி…. “சாப்பிட வீட்டுக்கு வா” என்று பார்த்திபனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு.,
நைட் டின்னருக்கு சப்பாத்தி மற்றும் பட்டாணி குருமா செய்து வைத்தாள்.
அவள் வேலையை முடிக்கும் நேரம் பார்த்திபன் வந்தான்.
“தங்கம்… என்ன பண்ணுற?” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.
“டின்னர் வேலை முடுஞ்சது பார்த்தா… கிளீனிங் மட்டும் தான்” என்றாள்.
“சரி நான் பார்க்கிறேன் நீ போய் ரெஸ்ட் எடு” என்றான்.
காயத்திரி சோபாவில் அமர்ந்தாள்.
இன்னும் ரிஷன் தூங்கிக்கொண்டு தான் இருந்தான்.
காயத்திரி ரிஷனை மெதுவாக எழுப்பினாள்.,
“கிருஷ்ணா…. டின்னர் சாப்பிட்டு தூங்குங்க டின்னர் ரெடி” என்றாள் காயத்திரி.
ரிஷன் மெதுவாக எழுந்து ரெப்பிரேஷ் ஆகிவிட்டு டின்னர் சாப்பிட வந்தான்.
பார்த்திபன், ரிஷன், மற்றும் காயத்திரி மூன்று பேரும் ஒன்றாகக் சாப்பிடனர்.
பார்த்திபன் சீக்கிரமா சாப்பிட்டு விட்டு… “ தங்கம் எனக்கு இதுவே போதும் பால் வேண்டாம்” என்று சொல்லி விட்டு வீட்டுக்கு சென்றான்., அவர்களுக்குத் தனிமை கொடுக்க நினைத்து.
பார்த்திபனே கிட்சன் முழுவதும் கிளீன் பண்ணிவிட்டு சென்று இருந்தான். பெருசாகக் கிளீனிங் வேலை எதுவும் இல்லை
ரிஷன் இருக்கும் பாத்திரதை மட்டும் கழுவி வைத்தான்.
காயத்திரி இருவருக்கும் பால் ஆத்திக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
ரிஷன் முன்னாடியே டெக்சாஸ் போய்த் தான் நம் வாழ்க்கையைத் தொடங்க போகிறோம் என்று சொல்லி இருந்தாலும்…. காலையில் நடந்த இதழ் முத்தம் இன்னும் காயத்திரி மனதில் இருந்தது… ஆதலால் சில எதிர்பார்ப்புகள் அவளுக்கு இருந்தது. கொஞ்சம் டென்ஷனாக இருந்தாள்.
காயத்திரி பெட் ரெடி செய்தாள்.
ரிஷன் இருவர் குடித்த பால் டம்ளரை கழுவி விட்டு ரூம்க்குள் வந்தான். காயத்திரி டென்ஷனாக இருப்பதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான்.
ரிஷனுக்குக் காயத்திரியிடம் சில விஷயங்கள் பேச வேண்டி இருந்தது.
“அம்மு…” என்று அழைத்தான்.
“ம்ம்ம்ம்” என்று சொன்னாள்.
“இங்க வந்து உக்காரு உன்கிட்ட பேசணும்” என்றான்.
காயத்திரி ரிஷனுக்கு எதிரில் அமர்ந்தாள்.
ரிஷன் அவள் கையைப் பற்றிக்கொண்டான்.
“அம்மு…. கண்டிப்பா இங்க நம்ம லைப் ஸ்டார்ட் பண்ண போறது இல்லை டெக்சாஸ் போய்ட்டு மெடிக்கல் செக்அப் முடுச்சுட்டு தான் சோ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு…. உன்கிட்ட நான் வேற பேசணும். கொஞ்சம் பொறுமையா கேளு” என்றான் ரிஷன் கிருஷ்ணா.
காயத்திரி டீப் பிரீத் எடுத்து விட்டு ரிஷனை பார்த்தாள்.
“சொல்லுங்க…. என்ன விஷயம் என்னைப் பொறுமையா வேற கேக்க சொல்லுறீங்க?” என்று கேட்டாள் காயத்திரி.
“அம்மு… நீ சமந்தப்பட்ட வீடியோ ஒன்னு என்கிட்ட இருக்கு என்று சொல்லி அந்த விடியோவை கட்டினான்” ரிஷன் கிருஷ்ணா.
காயத்திரி அந்த விடியோவை பார்க்கும் போதே இது எப்போ எடுத்த வீடியோ யார் எடுத்தது எல்லாம் புரிந்தது. இதை எதிர்பார்த்து இருந்தாள் தான் அதனால் பெருசாக எதுவும் அவளைப் பாதிக்கவில்லை.
“அம்மு… இதை ராஜதுரை போனில் இருந்து போலீஸ் எடுத்தது… உங்க அண்ணன் வினு நேத்ரன் தான் போலீஸ் வச்சு அவனை அர்ரெஸ்ட் பண்ண வச்சது., இந்த வீடியோ கூட அவன் தான் எனக்குக் குடுத்தான்” என்றான் ரிஷன்.
காயத்திரி…. “இது எனக்குப் பெரிய ஷாக் எல்லாம் இல்லை ராஜதுரையோட கேரக்டர் அது தானே… விடுங்க இது எல்லாம் முடிஞ்சு போன விஷயம்” என்றாள் காயத்திரி.
சில நொடிகள் மௌனமாக இருந்தனர்.
ரிஷன் காயத்திரியை நெருங்கி அமர்ந்தான்.
“லவ் யூ டி” என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்..
“லவ் யூ டூ” என்றாள் காயத்திரி.
ரிஷன் அவள் மடியில் படுத்துக்கொண்டான்.
காயத்திரி அவன் தலையைக் கோதி விட்டாள்.
“இந்த ஊட்டி பேக்கெஜ் என்ன செய்யுறது.?” என்று கேட்டாள் காயத்திரி.
“ம்ம்ம்ம்.. போய்ச் சுத்தி பார்த்துட்டு வரலாம் உன் கூட நான் தனியா ட்ராவெல் பண்ணது இல்லை சோ இதை யூஸ் பண்ணிக்கிறேன்” என்றான் ரிஷன்.
“கிருஷ்ணா…. அங்க இப்போ கிளைமேட் சில்ன்னு இருக்கும்” என்றாள் காயத்திரி.
“ஏய் நான் பார்க்காத சில் கிளைமேட்டா அது எல்லாம் எனக்கு ஒன்னும் இல்லை… நீ எதுக்குச் சொல்லுறேன்னு புரியுது என்னோட கண்ட்ரோல் மிஸ் ஆகாது” என்றான் ரிஷன்.
“சரி ஓகே..!! எனக்கு ஒன்னும் இஸ்சுஸ் இல்லை நெஸ்ட் வீக் போகலாம்” என்றாள் காயத்திரி.
“பார்க்கலாம் உங்க கண்ட்ரோல் எப்படின்னு” என்று கிண்டலாகச் சொன்னாள் காயத்திரி.
ரிஷன் சின்னச் சிரிப்புடன் அவள் மடியில் இருந்து எழுந்து விட….
காயத்திரி பெட்டில் படுத்து விட்டாள்.
ரிஷன் அவள் கைகளைக் கோர்த்துக்கொண்டு அவனும் படுத்து விட்டான்.
காயத்திரி ட்ராவெல் அசதியில் தூங்கி விட…
ரிஷன் மாலை தூங்கியதால் போன் பார்த்துக்கொண்டு படுத்திருந்தான்.
சில நிமிடம் கழித்துத் தூங்கும் தன் காதல் மனைவியின் அழகை ரசித்துக்கொண்டே படுத்திருந்தான்.
மனதுக்குள் இன்பமாக இருந்தது அவனுக்கு…
தன் மனதுக்கு இனியவள் உடன் திருமணம் முடிந்த நிலையில் அவள் அருகில் படுத்து இருப்பது சந்தோஷமாக இருந்தது.
சில பல நிமிடங்கள் கழித்து அவனும் உறங்கினான்.
ஊட்டியில் ரிஷணின் காட்டுப்பாடு
உடையுமா….
இல்லை நீடிக்குமா…
பார்க்கலாம்….