மௌனத்தின் நேசம் – 23

அத்தியாயம் – 23

நாட்கள் அதன் வேகத்தில் நகர்ந்தது. இன்னும் ஐந்து நாட்கள் தான் இருந்தது கல்யாணத்துக்கு. காயத்திரி மற்றும் பார்த்திபனுக்கு இன்று தான் கடைசி நாள் அந்தக் கல்லூரியில்.

ஒரு வாரத்துக்கு முன்பு தான் பார்த்திபன் அவன் விரும்பும் பெண்ணிடம் தன் காதலை சொன்னான்…., ஆனால் அந்தப் பெண் வேறு ஒருவரை விரும்புவதாகக் கூறிவிட்டாள்…!! ஆதலால் பார்த்திபனும் காலேஜ் வேலையில் இருந்து நின்று விட முடிவு செய்து லெட்டர் குடுத்துவிட்டான்.

காலேஜ் முடித்துவிட்டு காயத்திரி மற்றும் பார்த்திபன் காரில் சென்று கொண்டிருந்தனர்.

“பார்த்திபா…. அடுத்து உன் பிளான் என்ன? டெக்சாஸ் வரியா கண்டிப்பா உன் திறமைக்கு நல்ல வேலை கிடைக்கும்” என்று கேட்டாள் காயத்திரி.

பார்த்திபன் சிரித்துவிட்டு… “அது எப்படி நீயும், உன் ஆளும் ஒரே மாதிரி கேக்குறீங்க என்று கேட்டுவிட்டு…. ம்ம்ம்ம் அவள் ரிஜெக்ட் பண்ணுவான்னு நினைக்கலை… பட் ஒகே ஒன் சைடு லவ் தானே ஈஸியா யா வெளியே வந்துடுவேன்… எனக்கு டெக்சாஸ் வர ஐடியா இல்லை தங்கம் எனக்குச் சொல்லிக் குடுக்கத் தான் பிடுச்சு இருக்கு நிறையப் புதுசா கத்துக்க முடியுது சோ ப்ரோபஸ்ஸோர் ஒர்க் தான். கோவை பி.எஸ்.ஜி காலேஜ்ல அப்ளை பண்ணி இருக்கேன் நெஸ்ட் செமஸ்டர்ல இருந்து அங்க தான். நீ டெக்சாஸ் போனதுக்கு அப்பறம் போய் ஜாயின் பண்ணனும்” என்றான் பார்த்திபன்.

இருவரும் சூப்பர் மார்க்கெட் சென்று சில ஜமான்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தனர்.

காயத்திரிக்கும் சரோஜினியுடன் செஷன் முடிந்து இருந்தது.

பார்த்திபா… “நாளைக்கு மார்னிங் போய் பிளவுஸ் வாங்கிட்டு வரணும் நியாபக படுத்து” என்று சொன்னாள் காயத்திரி.

இருவரும் சமைத்து சாப்பிட்டுவிட்டு அவர் அவர் வீட்டில் தூங்கினர்.

***************************

வினு நேத்ரன் வீட்டில் சாரதா, ரெங்கநாதன், வனிதா, வனஜா எல்லோரும் வந்து இருந்தனர்.

தீபா…. “ இன்னும் ஐந்து நாள்ல கல்யாணம் கல்யாண பொண்ணு மட்டும் தனியா இருக்குறது நல்லா இல்லை, காயுவை இங்க கூப்பிட்டா வர மாட்டேன்கிற அதான் நானும், உங்க மாமாவும் அங்க கன்னியாகுமாரிக்கு போய் அவ கூட இருக்கலாம்ன்னு முடிவு எடுத்திருக்கோம்” என்று சொன்னார் சாரதா.

“சரி அக்கா இதும் நல்லது தான், அவ தனியா இருக்க வேண்டாம். அவ கூடச் சேர்ந்து நீங்களும் திருச்செந்தூர் வந்துடுங்க” என்றார் தீபாலக்ஷ்மி.

“பெரியம்மா… காயு வீடு தெரியுமா?” என்று கேட்டான் வினு நேத்ரன்.

“இல்லை டா தெரியாது, விசாகனை கூட்டிட்டு போகலாம்ன்னு நினைச்சோம்” என்றார் ரெங்கநாதன்.

அதன்படி ரெங்கநாதன் குடும்பம் கன்னியாகுமாரிக்கு விசாகனோட செல்ல முடிவு ஆனது. காயத்திரிக்கு இதைப் பற்றி யாரும் சொல்லவில்லை.

மறுநாள் விசாகன் அவர்களை அழைத்துக்கொண்டு கன்னியாகுமாரிக்குச் சென்றான்.

வனிதா மற்றும் வனஜா தான் காயத்திரியை பார்க்க ஆர்வமாக இருந்தனர். இருவருக்கும் காயத்திரியை ரொம்பப் பிடிக்கும்.

வனிதா மற்றும் வனஜா இருவரும் கோவை பி.எஸ்.ஜி காலேஜ்ல BE கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார்கள்.

காயத்திரி மற்றும் பார்த்திபன் இருவரும் வீட்டில் தனியாக இருக்க எரிச்சலாக இருந்தால் சன்செட் வியூ பாயிண்ட்க்கு சென்று இருந்தனர்.

ஈவினிங் தான் காயத்திரி வீட்டை அடைந்தனர். வீடு பூட்டி இருக்கவும் காயத்திரிக்கு அழைத்தான் விசாகன்.

காயு.. “எங்க இருக்க வீடு பூட்டி இருக்கு?” என்று கேட்டான்.

அண்ணா… “வீட்டுக்கு வந்து இருக்கீங்களா? இருங்க அண்ணா ஒரு பத்து நிமிசத்துல வரோம்” என்று சொல்லி பார்த்திபனை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

சன்செட்க்கு இன்னும் நிறைய நேரம் இருந்ததால் கூட்டம் பெருசாக இல்லை சீக்கிரம் வீட்டுக்கு சென்றனர்.

விசாகன் மற்றும் ரெங்கநாதன் குடும்பம் காரில் காத்துகொண்டு இருந்தனர்.

காயத்திரி வந்து வீட்டை திருந்துவிட்டாள்.

“வாங்க அண்ணா… வாங்க சித்தி… வாங்க சித்தப்பா” என்று எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்தாள்.

வனிதா, வனஜா அக்கா என்று கத்திக்கொண்டு சென்று காயத்திரியை கட்டிக்கொண்டனர்.

அவர்களுக்கு அவ்வளவு சந்தோசம். இருவரும் என்ன படிக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டாள்.

பார்த்திபன் டீ போட்டுக் கொண்டு வந்து தந்தான்.

காயு… “உன் கல்யாணம் வரைக்கும் நாங்க எல்லாரும் இங்க தான்… கல்யாண பொண்ணு தனியா இருக்கக் கூடாது” என்றார் ரெங்கநாதன்.

அவர்களுடன் அந்த மூன்று நாட்களும் காயத்திரி கன்னியாகுமாரியிலா உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களுக்குச் சென்றாள்.

இன்னும் ஒரு நாள் தான் இருந்தது திருமணத்துக்கு, நாளை அனைவரும் திருசெந்தூர் செல்ல ஆயத்தமானார்கள்.

அன்று காலையில் தான் வனிதா அவளோட தோழி மூலம் ஒரு மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்டை வர வைத்து காயத்திரிக்கு மெஹந்தி போட வைத்தாள்.

அன்று இரவு ஏனோ காயத்திரியால் சரியாகத் தூங்க முடியாமல் தவித்தாள். பழைய நினைவுகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. டாக்டர் சொன்ன பயற்சிகள் செய்து மெடிடேஷன் செய்து அதன் பின் தான் தூங்கினாள்.

மறுநாள் காலையில் சாரதா புதுப் புடவை எடுத்திருந்தார். அதைக் கட்ட சொன்னார். அதன் படி காயத்திரி புதுப் புடவை கட்டி பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று விட்டு திருச்செந்தூருக்கு கிளம்பினார்கள்.

பார்த்திபன் காரில் காயத்திரி வனிதா மற்றும் வனஜா என்றும், விசாகன் காரில் ரெங்கநாதன் மற்றும் சாரதா என்று கிளம்பினர்.

ரிஷன் மற்றும் அவன் நண்பர்கள், வினு நேத்ரன் குடும்பம் எல்லாரும் அன்று காலையிலே திருச்செந்தூர் சென்று இருந்தனர்.

காயத்திரி மதியம் போல் திருச்செந்தூர் வந்து சேர்த்தாள்.

சாரதா குடும்பத்துக்கு மூணு பெட்ரும் கொண்ட சூட் புக் செய்து இருந்தனர், அவர்களுடன் காயத்திரியும் தங்கிக்கொண்டாள்.

பார்த்திபன் விசாகன் உடன் தங்கிக்கொண்டான்.

சாரதா… காயத்திரிடம் “நாளைக்குக் கல்யாணம் மணப்பெண் நீ அதுனால எங்கையும் வெளியே வர வேண்டாம் நீ ரூம்குள்ள இரு” என்று சொன்னார்.

காயத்திரி சூட்டில் தனி ரூமில் தங்கிகொண்டாள்.

தனியாக இருப்பது ஒருமாதிரி இருக்க… பார்த்திபனுக்குப் போன் செய்தாள்.

“ஹலோ தங்கம்.. என்ன மா?” என்று கேட்டான்.

“ரூம்மை விட்டு வெளியே வர வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க அது ஒருமாதிரி இருக்கு பார்த்திபா” என்று சொன்னாள்.

“நாளைக்கு மகிழ் பாப்பா காது குத்து பங்ஷனுக்குச் சில ரிலேட்டிவ் வந்து இருக்காங்க உன்னைப் பார்த்தா தேவை இல்லாம பேசுவாங்க அதான் உன்னை ரூமில் இருக்கச் சொல்லி இருக்காங்க” என்று சொன்னான்.

“புரியுது பார்த்திபா… சரி விடு நீ வேலை இருந்தா பார்” என்று சொல்லி கால் கட் செய்தாள்.

சில நிமிடம் மெடிடேஷன் செய்துவிட்டு., தூங்கினாள் காயத்திரி.

மாலையில் வனிதா வந்து காயத்திரியை எழுப்பி டீ கொடுத்து சென்றாள்.

டீ குடித்து விட்டு ரூம் ஜன்னல் வழியே தெரிந்த கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரிஷனின் நண்பன் கார்த்திக்கின் மனைவி ஸ்வேதா காயத்திரியை தேடி அவள் ரூம்க்கு வந்தாள்.

“காயு”.. என்று அழைத்தாள் ஸ்வேதா.

காயத்திரி திரும்பி பார்த்து

ஹே… “ஸ்வேதா எப்படி இருக்க?” என்று கேட்டு அணைத்துக்கொண்டாள்.

“நல்ல இருக்கேன் டி… நீ எப்படி இருக்க” என்று கேட்டாள் ஸ்வேதா.

“ம்ம்ம்ம்.. எனக்கு என்ன நல்லா இருக்கேன்” என்று சொன்னாள் காயத்திரி.

“எங்க டி உன் பொண்ணு கூட்டிட்டு வரலையா?” என்று கேட்டாள் காயத்திரி.

“இல்லை டி…. அவளுக்கு ட்ராவெல் ஒத்துக்காது அதான் அத்தை கிட்ட விட்டுட்டு வந்துட்டேன்” என்றாள்.

இருவரும் கதைகள் பேசிக்கொண்டு இருந்தனர்.

ரிஷன் காயத்திரியை பார்க்க அவள் ரூம்க்கு வந்தான்.

ரிஷன் கதவை திறந்து உள்ளே வந்தான்.

காயத்திரி எப்பவும் போல் ரிஷனை பார்த்தாள். ஆனால் ரிஷன் காயத்திரியை ரசித்துப் பார்த்தான் விடிந்தால் திருமணம் அதுவும் தன் காதலியுடன் மனதுக்குள் அவ்வளவு சந்தோசம். தன் பெற்றோர் இல்லை என்கிற வருத்தத்தைத் தவிர அவன் மனம் சந்தோஷத்தில் ததும்பியது.

ஸ்வேதா அவர்களுக்குத் தனிமை கொடுத்து வெளியே சென்றாள்.

ரிஷன் காயத்திரியை நெருங்கி அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

அம்மு… “ரொம்ப ஹாப்பியா இருக்கேன்… நாளைக்கு நம்ம மேரேஜ்…. லைப்ல ரொம்ப எதிர்பார்த்த தருணம் அம்மா, அப்பா இல்லை அது மட்டும் தான் வருத்தம்… அதைத் தவிர ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன் அம்மு” என்று உணர்ச்சி பொங்க பேசி அவளை அணைத்துக்கொண்டான்.

காயத்திரிக்கும் ரிஷனின் பெற்றோர் இன்றித் தங்கள் திருமணம் என்பது வருத்தமாகத் தான் இருந்தது.. அதையும் தாண்டி அவள் மனதுக்குள்ளும் சந்தோசமாக இருந்தாள்.

காயத்திரி ரிஷனிடம் இருந்து விலகி சென்று அவள் பையில் இருந்து ஒரு டிரஸ் எடுத்து தந்தாள்.

“இதை மகிழ் பாப்பா பங்ஷனுக்குப் போட்டுகோங்க” என்று சொன்னாள் காயத்திரி.

“லவ் யூ டி அம்மு” என்று சொல்லி சென்றான்.

காயத்திரி சிரித்துவிட்டு கடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் உணவு வந்தது அவளுக்கு. காயத்திரியும் சாப்பிட்டு விட்டு அமைதியாக படுத்து விட்டாள்.

அதிகாலை எழுத்துவிட்டாள் காயத்திரி… ஏற்கனவே மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆன்லைன் மூலமாகக் காயத்திரி புக் செய்திருந்தாள்.

அவர்கள் வருவதற்குள் காயத்திரி குளித்து ரெடியாக இருந்தாள்.

அவர்களும் சரியான நேரத்துக்கு வந்து விட்டார்கள்.

அவர்கள் கைவண்ணத்தில் காயத்திரி செர்ரி ரெட் புடவையில் அழகாகத் தயார் ஆகினாள்.

காலை 6.30 – 7.25 முகூர்த்தம். சரியாக 6 மணிக்கெல்லாம் காயத்திரியை அழைத்துச் செல்ல ஹர்ஷினி, சாரதா மற்றும் ஸ்வேதா வந்துவிட்டனர்.

மணமகள் காயத்திரி அவர்களுடன் கோவிலுக்குச் சென்றாள். காலையில் செய்த மெடிடேஷனால் அவள் ஒரு அமைதியான மனநிலையில் இருந்தாள்.

கோவிலில் மணமகன் ரிஷன் கிருஷ்ணா மாப்பிள்ளை உடையில் அழகாக நின்றிருந்தான்.

காயத்திரியை பார்த்த ரிஷன் கண் அடித்து “அழகா இருக்க” என்று உதட்டு அசைவில் சொன்னான்.

காயத்திரி அமைதியாகச சின்னச் சிரிப்பு சிரித்து விட்டு சென்றாள்.

ரெங்கநாதன் குடும்பம், ரிஷனின் நண்பர்கள், செந்திராஜன் குடும்பம, பிரபு குடும்பம் மற்றும் பார்த்திபன் மட்டும் கோவிலில் இருந்தனர்.

திருச்செந்தூரில் முருகன் கோவிலில் விநாயகர் மடத்தில் தான் திருமணம்.

முதலில் விநாயகருக்கு பூஜை செய்து விட்டு…. ஐயர் மாலை எடுத்து தர ரிஷனின் தாய்மாமா பிரபு இருவருக்கும் அணிவித்தார். விநாயகர் முன் இருந்த தாலியை ஐயர் எடுத்து தர ரிஷன் கிருஷ்ணா… காயத்திரியின் கண்களைப் பார்த்துக்கொண்டே தன் பெற்றோரை மனதில் நினைத்துக் கொண்டே தாலி கட்டி தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.

காலில் மெட்டி போட்டு விட்டு, மாலை மாற்றினார்கள். அனைத்தையும் பாலாஜி தன் கேமராவில் படம் பிடித்தான்.

அனைவரும் மூலவர் முருகனை தரிசனம் செய்யச் சென்றனர்.

ரிஷன் கிருஷ்ணா காயத்திரி கையுடன் கை கோர்த்துக் கொண்டான்.

தரிசனம் முடித்துவிட்டு….

ரிஷன் கிருஷ்ணா தனியாக ஒரு சூட் புக் செய்திருந்தான், அங்குச் சென்றனர் அனைவரும்.

ரிஷன் மற்றும் காயத்திரிக்கு பாலும் பழமும் கொடுத்தாள் ஹர்ஷினி.

குட்டியாக வரவேற்பு மாறி செட் செய்து இருந்தான் ரிஷன். பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர் இருவரும்.

ரிஷனின் நண்பர்கள் அவர்களுக்குப் பரிசு கொடுத்தனர்.

வினு நேத்ரன் மற்றும் ஹர்ஷினி இருவருக்கும் செயின் பரிசாகக் கொடுத்தனர்.

பார்த்திபன் மோதிரம் கொடுத்தான் இருவருக்கும்.

மோதிரத்தின் நடுவில் இதய வடிவம் அதில் ஆங்கிலத்தில் “Ammu” என்று ஒரு மோதிரத்தில், மற்றொன்றில் “RK” என்று இருந்தது. இருவரும் மோதிரம் மாறிக்கொண்டனர்.

விசாகன் ஊட்டிக்கு ஹனிமூன் பேக்கெஜை பரிசாகக் கொடுத்தான்.

அதன் பின் அனைவரும் காலை உணவு சாப்பிடனர்.

காலை 9.30 – 10.30 தான் மகிழ்வதனி குட்டிக்கு காது குத்தும் பங்ஷன்.

காலை உணவு முடித்துவிட்டுப் புதுமணத் தம்பதிகள் ரிஷனின் சூட் வந்தனர்.

“அம்மு….” என்று அழைத்து அவளை அணைத்துக் கொண்டான். அவள் நெற்றியில் முத்தம் வைத்து…..

“அம்மு…நீ ரெஸ்ட் எடு கொஞ்ச நேரம் நான் போய்ப் பங்ஷனுக்கு ரெடி பண்றேன்” என்றான்.

“ம்ம்ம்ம் சரி பாருங்க” என்றாள் காயத்திரி.

ரிஷன் அவளுக்கு வேற புடவை எடுத்திருந்தான் அதைத் தந்தான்.

“கொஞ்ச நேரம் கழுச்சு இதை மாத்திக்கோ” என்று சொல்லி சென்றான்.

காயத்திரி தன் மேக்கப் கலைத்து விட்டு….

கொஞ்ச நேரம் மெடிடேஷன் செய்தாள்.

சில உறவுகள் கண்டிப்பாக எதாவது பேசகூடும் அதற்கு அவள் மனநிலையைத் தயார் செய்தாள்.

சில நிமிடங்கள் கழித்து அவள் ரிஷன் தந்த புடவையை மாறிவிட்டு சிம்பிளாக ரெடி ஆகினாள்.

தீபாலக்ஷ்மி காயத்திரியை பார்க்க வந்தார்.

காயுமா…. “நான் உன்கிட்ட பேசணும் டா” என்றார்.

“சொல்லுங்க சித்தி” என்று சொன்னாள் காயத்திரி.

“எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கமா… சில உறவுகள் நம்மளை கஷ்டப் படுத்திப் பார்த்து அல்ப சந்தோசம் அடைவாங்க… அதை நீ பெருசா எடுத்துக்கக் கூடாதாது மா” என்று சொன்னார்.

காயத்திரி சிரித்துவிட்டு “சித்தி நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன் நீங்க பங்ஷன் வேலையைப பாருங்க” என்று சொன்னாள் காயத்திரி. தீபாலக்ஷ்மி அவளை அணைத்தார்.

ரிஷன் வந்து காயத்திரியை அழைத்துக்கொண்டு பங்ஷன் நடைபெறும் இடத்ததுக்கு அழைத்துச் சென்றான்.

காது குத்தும் நிகழ்ச்சியில் உறவுகளால் காயத்திரிக்கு என்ன நடக்கும்….?

பார்க்கலாம்….

error: Content is protected !!