அத்தியாயம் – 22
காயத்திரி உளவியல் மருத்துவர் Dr.சரோஜினி முன் அமர்ந்து இருந்தாள். Dr.சரோஜினி சிறந்த உளவியல் மருத்துவர். 12 வருடமாக உளவியல் மருத்துவராகப் பணிபுரிகிறார்.
காயத்திரி தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் அவரிடம் சொன்னாள். தற்போது ரிஷன் கூடத் திருமணம், ரிஷனின் எண்ணம், அவளின் நிலை அனைத்தையும் சொன்னாள்.
சரோஜினி… “ காயத்திரி இது ரொம்ப் பெரிய விஷயம் இல்லை கண்டிப்பா சரி செய்ய முடியும். இன்னும் இருபது நாளில் மேரேஜ் அதுக்குள்ள சரி செய்ய முடியாது ஆனால் சில காலம் ஆகும் கண்டிப்பா சரி செய்யலாம். மைண்டுக்கு சில பயிற்சி சொல்லி தரேன். மெடிடேஷன் பண்ணுங்க. டைம் வில் க்யுர் யுவர் ப்ரொப்லெம்” என்றார்.
அதன் பின் காயத்திரி டெய்லி இரண்டு மணி நேரம் Dr.சரோஜினியுடன் செலவிட்டாள்.
பார்த்திபன் கேட்ட போது கூட அவள் மனநிலை, ரிஷனின் மனநிலை எல்லாம் சொல்லி இதைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறினாள்.
பார்த்திபனும் புரிந்துக்கொண்டு காயத்திரிக்குத் துணை நின்றான்.
செஷன் ஆரம்பித்த பிறகு காயத்திரிக்கு எஸ்தர் மேம் நினைவு அதிகமாக வந்தது எஸ்தரை மிஸ் செய்தாள். அவர்களுக்குச் சென்ற வருடம் தான் திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார். வில்லியம்ஸ் மற்றும் மரியாவும் மூன்று மாதங்களுக்கு முன் தான் வெளிநாடு சென்றனர். அதனால் தான் காயத்திரி அவர்களை ரொம்ப மிஸ் செய்கிறாள்.
************************
திருமணப் புடவை எடுக்க ரிஷன் மற்றும் வினு நேத்ரன் குடும்பம், சாரதா, ரெங்கநாதன், ரிஷனின் தாய்மாமா பிரபு அவர் மனைவி மஞ்சுளா எல்லோரும் மதுரையில் உள்ள ஜவுளி கடைக்கு வந்து இருந்தனர்.
ரிஷன் காயத்திரியிடம் மீண்டும் கேட்டுப் பார்த்தான் புடவை எடுக்க வர சொல்லி… ஆனால் அவள்… “எக்ஸாம் வருது அதனால் வரமுடியாது நீங்களே எடுங்க” என்று சொல்லிவிட்டாள்.
காயத்திரி இல்லாமல் புடவை எடுக்க ரிஷனுக்குக் கஷ்டமாக இருந்தது. அவன் மனதுக்குள் சில ஆசைகள் இருந்து அதுவும் கல்யாண புடவை எடுப்பதைப் பல விதமாய்க் கற்பனைச் செய்து பார்த்து இருந்தான்…. ஆனால் இன்றோ….. காயத்திரி இன்றித் தான் மட்டும் புடவை தேர்வு செய்வது வருத்தமாக இருந்தது.
ஐந்து புடவை தேர்வு செய்து காயத்திரிக்கு வீடியோ காலில் அழைத்தான் ரிஷன் கிருஷ்ணா.
காயத்திரிக்கு அது பிரீ டைம் அதனால் போன் காலை எடுத்தாள்.
“ஹலோ… சொல்லுங்க” என்றாள்.
ரிஷன் ஏதும் பேசாமல் புடவையை மட்டும் கட்டினான்.
லைட் க்ரீன், ஸ்கை ப்ளூ, செர்ரி ரெட், பேபி பிங்க் மற்றும் வெந்தைய கலர் என்று ஐந்து புடவை இருந்தது.
காயத்திரி…. “செர்ரி ரெட் கலர் புடவை எடுங்க” என்று சொன்னாள்.
ரிஷன் ஏதும் பேசாமல் செர்ரி ரெட் கலர் புடவை எடுத்துவிட்டு கால்லை கட் செய்தான்.
ரிஷனின் கோபம் காயத்திரிக்குப் புரிந்தது அவளும் எதுவும் பேசாமல் தன் வேலையைப் பார்க்க தொடங்கினாள்.
காயத்திரி இந்த எக்ஸாம் முடியவும் காலேஜில் இருந்து நிற்பதற்கு லெட்டர் குடுத்து விட்டாள் அதனால் தான் லீவு எடுக்க முடியாமல் தவிர்த்தாள்.. மேலும் டாக்டர் சரோஜினியுடன் செஷன் முக்கியமான நிலையில் உள்ளது ஆதலால் தான் புடவை எடுக்கச் செல்லாமல் இருந்தாள் காயத்திரி.
ரிஷன் புடவை எடுத்துவிட்டு தாலி வாங்கிவிட்டு,
மகிழ் குட்டிக்கு டிரஸ்,தோடு என்று எல்லாம் வேலைகளையும் முடித்தான்.
அன்று மாலையே காயத்திரியை பார்க்க கன்னியாகுமாரி சென்றான்.
அவன் சென்ற நேரம் வீடு புட்டி இருந்தது.
காயத்திரி போனில் அழைத்தான், அவள் நம்பர் சுவிட்ச் ஆப் என்று வந்தது. உடனே பார்த்திபனுக்கு அழைத்தான் ரிஷன்….
“ஹலோ சொல்லுங்க எப்படி இருக்கீங்க” என்று கேட்டான் பார்த்திபன்.
“ம்ம்ம்ம் நல்லா இருக்கேன் காயத்திரி எங்க..? வீடு பூட்டி இருக்கு..?” என்று கேள்வியாய் கேட்டான்.
“தங்கம் வெளியே போய் இருக்கா… இருங்க நான் வரேன்” என்று சொல்லி கால் கட் செய்து விட்டு.
ஐந்து நிமிடத்தில் பார்த்திபன் வந்தான்.
“வாங்க” என்று அழைத்து விட்டு அவன் கிட்ட இருந்த சாவி கொண்டு வீட்டை திறந்துவிட்டான் பார்த்திபன்.
ரிஷன் உள்ளே சென்றான். பார்த்திபன் உள்ளே வந்து…. “தங்கம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா நீங்க வெயிட் பண்ணுங்க, நான் பக்கத்து வீட்டு பையனுக்கு மேத்ஸ் சொல்லி குடுத்துட்டு இருக்கேன் அதை முடுச்சுட்டு வரேன்” என்று சொல்லி சென்றான்.
ரிஷன் கிச்சன் சென்று காபி போட்டு குடித்துவிட்டுச் சோபாவில் படுத்திருந்தான்.
காயத்திரி நாற்பது நிமிடம் கழித்து வந்தாள். பார்த்திபன் அவளுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான் ரிஷன் வந்து இருப்பதாக.
காயத்திரி வீட்டுக்குள்ளே நுழையும் போது ரிஷன் சோபாவில் படுத்து போன் பார்த்துக்கொண்டு இருந்தான். டேபிள் மேல் காபி கப் இருந்தது.
காயத்திரி எதிர் சோபாவில் அமர்ந்தாள்.
ரிஷன் அவளைத் திரும்பி பார்த்தான், ரொம்பக் களைப்பாக இருந்தாள். எதுவும் பேசாமல் கிச்சனுக்குச் சென்று டீ போட்டுக் கொண்டு வந்து தந்தான்.
காயத்திரி அதனை வாங்கிக் குடித்தாள்.
“எங்க போய் இருந்த இவ்ளோ நேரமா…?” என்று கேட்டான் ரிஷன்.
“ம்ம்ம்ம்… டாக்டர் சரோஜினி கிட்ட செஷனுக்குப் போய் இருந்தேன்” என்று சொன்னாள்.
ரிஷன் அவளைப் புரியாமல் பார்த்தான்.
“Dr.சரோஜினி உளவியல் மருத்துவர், அவுங்கிட்ட தான் நான் இப்போ டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன், நம்ம மேரேஜ் லைப் கொஞ்சம் ஸ்மூத்தா போகுறதுக்கு” என்றாள் காயத்திரி.
“இது அவசியம் தேவை தானா..?” என்று கேட்டான்.
“ஆமாம்… கண்டிப்பா தேவை தான் என்னோட காயங்களை மறக்க, நம்ம வாழ்க்கையில அதனோட தாக்கம் இல்லாம வாழ நான் ஆசை படுறேன் அதுக்காகத் தான்” என்று கூறினாள் காயத்திரி.
ரிஷனால் எதுவும் பேச முடியாமல் மௌனமாக இருந்தான். அவனுக்குப் புரிந்தது ஏன் காயத்திரி இது எல்லாம் செய்கிறாள் என்று…. மனதுக்குள் தவித்தான்.
அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள் காயத்திரி
“சாரி… உங்கள ஹர்ட் பண்ண நான் இதைப் பண்ணல., நான் அன்னைக்குச் சொன்னதுக்கே நீங்க நார்மலா இல்லை.., ஒரு வேலை நம்ம மேரேஜ் அப்பறம் நான் எதுவும் ஹர்ஷா நடந்துட்டா உங்களை விட நான் தான் ரொம்பக் கஷ்டப்படுவேன் அதுக்குத் தான் டாக்டர் கிட்ட போனேன்” என்று சொன்னாள் காயத்திரி.
“ம்ம்ம்ம் புரியுது… இன்னும் எத்தனை நாள் இருக்கு.?” என்று கேட்டான் ரிஷன்.
“இன்னும் டென் டேஸ் போகணும்” என்றாள் காயத்திரி.
அப்போது தான் பார்த்திபன் வீட்டுக்குள் நுழைந்தான். இட்லி மாவு வாங்கி வந்து இருந்தான்.
தங்கம்… “ டீ குடுச்சிட்டியா.? என்ன பண்ண டின்னருக்கு.? என்று கேட்டான் பார்த்திபன்.
“டீ குடுச்சிட்டேன்.., இட்லி போட்டுட்டு மச்சி., சிட்னி ஈவினிங் செஞ்சுட்டேன்” என்றாள் காயத்திரி.
“இப்போ பெயின் ஒகே வா..? இல்லை டேப்லெட் எதுவும் வாங்கிட்டு வரவா..?” என்று கேட்டான் பார்த்தி.
“ம்ம்ம்ம்… கொஞ்சம் ஓகே தான் நைட் ரெஸ்ட் எடுத்தா நார்மல் ஆகிடும்” என்றாள் காயத்திரி.
“என்ன ஆச்சு உனக்கு.?” என்று பதட்டமாகக் கேட்டான் ரிஷன்.
“பிரியட்ஸ்…. அதான் ஸ்டொமக் பெயின் வேற எதுவும் இல்லை” என்றாள் காயத்திரி.
“சரி நான் போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வரேன்” என்று சொல்லி சென்றாள்.
கிட்சனில் பார்த்திபன் இட்லி ஊத்திக்கொண்டு இருந்தான். ரிஷன் அவன் அருகில் சென்று….
பார்த்திபா… “மேரேஜ் புடவை எடுத்தாச்சு என்று போட்டோவை கட்டினான்” ரிஷன்.
“செர்ரி ரெட் நல்லா செலெக்ஷன்” என்றான் பார்த்திபன்.
காயு… “டாக்டர் கிட்ட போறது உனக்குத் தெரியுமா.?” என்று கேட்டான்.
ம்ம்ம்ம்… “தெரியும் என்ன காரணத்துக்குப் போறேன்னு தங்கம் சொன்னாள்” என்றான்.
“உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்…. தங்கம் காலேஜ்ல இருந்து ரிலியிவ் ஆக லெட்டர் கொடுத்துட்டா… இன்னும் டென் டேஸ் காலேஜ் இருக்கு அது வரைக்கும் அவனால லீவு போட முடியாது… இந்தச் செஷன் வேற போய்ட்டு இருக்கு அவள் வாழ்க்கைக்கு அது ரொம்ப ரொம்ப முக்கியம்… தங்கம் பட்ட கஷ்டம் அதிகம் அதை வார்த்தையால கூடச் சொல்ல முடியாது., அட்லீஸ்ட் இனி வர காலங்கள் தங்கம் சந்தோசமா இருக்கனும்னு நான் ஆசை படுறேன்..” என்றான் சொன்னான் பார்த்திபன்.
“கண்டிப்பா பார்த்திபா நான் அவளைச் சந்தோசமா பார்த்துக்குவேன்” என்று உறுதி அளித்தான் ரிஷன்.
“நீயும் டெக்சாஸ் வரியா டா உனக்கு இருக்குற திறமைக்கு நல்ல வேலை கிடைக்கும்” என்று அழைத்தான் ரிஷன்.
பார்த்திபன் சிரித்து விட்டு…. “இல்லை வேணாம்… என் ஆளு வீட்டுக்கு ஒரே பொண்ணு கொஞ்சம் லோயர் மிடில் கிளாஸ் பேமிலி தான், பாதர் ஹெல்பில் தான் எங்க காலேஜ்ல படிக்கிறா, என்னால அவளோட பேமிலி கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வர முடியாது அதுனால எனக்கு இந்த ஒர்க் போதும்” என்றான் பார்த்திபன்.
ரிஷன் புரிந்துக்கொண்டு அமைதியாய்ச் சென்று சோபாவில் அமர்ந்தான்.
காயத்திரி டிரஸ் மாற்றி விட்டு வர டின்னரும் ரெடி ஆகி இருந்தது. அனைவரும் அமைதியாகச் சாப்பிடனர்.
ரிஷன் மற்றும் பார்த்திச் சேர்ந்து கிட்சன் கிளீன் பண்ணினர். பார்த்திபன் காயத்திரிக்கு ஹாட் பேக் ரெடி பண்ணி கொடுத்து விட்டு அவன் வீட்டுக்குச் சென்றான்.
ரிஷன் வீட்டை பூட்டி விட்டு ரூம்க்கு வந்தான்.
காயத்திரி படுத்திருந்தாள்.
ரிஷன் ரெப்பிரேஷ் ஆகிவிட்டு அவனும் படுத்துக்கொண்டான்.
மறுநாள் காலையில் ரிஷன் எழுந்து காலைக்கு சாம்பார் வைத்துக் கொண்டு இருக்கும் போது பார்த்திபன் வந்துவிட இருவரும் சேர்ந்து மதியம் தக்காளி சாதம், உருளை கிழங்கு வறுவல் செய்தனர். காலைக்குத் தோசை மட்டும் சாப்பிடும் போது போட்டுக்க முடிவு செய்தனர்.
காயத்திரி லேட்டா தான் வந்தாள்.
பார்த்திபன் ரெப்பிரேஷ் ஆக வீட்டுக்கு சென்று இருந்தான்.
ரிஷன்… காயத்திரிக்கு டீ போட்டுக் குடுத்தான்.
“அம்மு… ஒரு ஒன் ஹௌர் மட்டும் பெர்மிஸ்சன் வாங்க முடியுமா? பிளவுஸ் ஸ்டிச் பண்ண குடுத்துட்டு உன்னைக் காலேஜ்ல ட்ரோப் பண்றேன்” என்று கேட்டான்.
“ம்ம்ம்ம் சரி இன்போர்ம் பண்றேன் டிபார்ட்மென்ட்ல” என்றாள் காயத்திரி.
“உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்…. மேரேஜ்க்கு அப்பறம் எங்க ஸ்டே அதைப் பத்தி எதுவும் சொல்லலை நீங்க, டெக்சாஸ் போக எப்படியும் ஒரு மாசம் ஆகும்ல கல்யாணத்துக்கு அப்பறம்” என்று கேட்டாள்.
“நீ இங்கயே தங்கிக்கோ.. நான் சென்னை அண்ட் இங்கன்னு மாறி மாறி ஸ்டே பண்ணிக்கிறேன்” என்றான் ரிஷன்.
காயத்திரி யோசைணையாகப் பார்த்தாள்.
“அம்மு… கண்டிப்பா நம்ம லைப் இங்க ஸ்டார்ட் பண்ண போறது கிடையாது, டெக்சாஸ் போய்ட்டு தான், எனக்கு ஒன் இயர் முன்னாடி சின்னதா ஆக்ஸிடென்ட் ஆச்சு அதுல ஹிப்ல கொஞ்சம் அடி சோ டெக்சாஸ் போய்ட்டு மெடிக்கல் செக்அப் பண்ணிட்டு தான் லைப் ஸ்டார்ட் பண்ணனும், சென்னைல ஒரு மாசம் வீடுப் பார்த்தா கூட வேஸ்ட் தான், நீ இங்கே இரு நான் விசா வேலையா சென்னை போகணும் அதுனால மாறி மாறி இருந்துகிறேன்” என்று விளக்கமாகச் சொன்னான் ரிஷன் கிருஷ்ணா.
“ம்ம்ம்ம் புரியுது” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குச் சென்றாள் அங்குச் சமையல் ரெடியா இருந்தது.
ரிஷனை பார்த்தாள்… “எல்லாம் ரெடி நீ ரெப்பிரேஷ் ஆகிட்டு வா தோசை மட்டும் போட்டுக்கலாம்” என்றான்.
காயத்திரி சென்று குளித்து ரெப்பிரேஷ் ஆகிவிட்டு வந்தாள்.
பார்த்திபனும் வந்து இருந்தான்.
ரிஷன் சாப்பிட்டுக கொண்டு இருக்கப் பார்த்திபன் தோசை போட்டுக்கொண்டு இருந்தான்.
“நீயும் சாப்பிடு தங்கம் நான் சாப்பிட்டேன்” என்றான் பார்த்திபன்.
அவளும் சாப்பிட அமர்ந்தாள்.
பார்த்தி… “ நான் ஒன் ஹௌர் லேட்டா வரேன் டிபார்ட்மென்ட்ல சொல்லிட்டேன், ஹெட் ஆப் டிபார்ட்மென்ட் கிட்ட சொல்லிடு” என்று சொன்னாள்.
“சரி நான் சொல்லிக்கிறேன்” என்றான் பார்த்திபன்.
பார்த்திபன் ரிஷனிடம் சொல்லிவிட்டு காலேஜ்க்குக் கிளம்பினான்.
ரிஷன் கிச்சனை கிளீன் செய்துவிட்டு, இருவரும் ஒரு டிசைனர் வீட்டுக்கு சென்றனர்.
காரில் செல்லும் போது காயத்திரியிடம் டிசைன் காட்டி ஒகே வா என்று கேட்டுக்கொண்டான் ரிஷன். அவளுக்குப் பெருசா ஐடியா இல்லை என்றாலும் ரிஷனுக்காக ஒத்துக்கொண்டாள் காயத்திரி.
“ஹலோ.. நான் ரிஷன் கிருஷ்ணா நேத்து ஈவினிங் போன்ல பேசுனேன்” என்று அறிமுகம் செய்துக்கொண்டான்.
“சொல்லுங்க சார் உங்களுக்கு என்ன வேணும்” என்று டிசைனர் கேட்டார்.
“இது எங்க மேரேஜ் புடவை இதுல ஆரி ஒர்க் பண்ணனும், அண்ட் பிளவுஸ்ல இந்த டிசைன் வேணும்” என்று ஒரு டிசைனை காட்டி சொன்னான்.
“ம்ம்ம்ம் ஓகே சார் பண்ணிடலாம்” என்றார்.
“எனக்கு இன்னும் டென் டேஸ்ல வேணும் பண்ண முடியுமா?” என்று கேட்டான் ரிஷன்.
“கண்டிப்பா பண்ணிடலாம் சார் டென் டேஸ்ல சேரி அண்ட் பிளவுஸ் ரெண்டும் ரெடி பண்ணிடுறேன்” என்றார் டிசைனர்.
“எவ்வளவு அமௌன்ட் ஆகும்” என்று கேட்டான் ரிஷன்.
“13,500 ரூபாய் ஆகும் சார்” என்றான் டிசைனர்.
சரி என்று சொல்லி 8000 ரூபாய் செலுத்திவிட்டு…
பிளவுஸ் ஸ்டிச் பண்ண குடுத்து விட்டு, டென் டேஸ்ல கண்டிப்பா வேணும் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தனர்.
காயத்திரி சென்று காலேஜ்க்குச் செல்ல புடவை கட்டிக்கொண்டு வந்தாள்.
அவளை அழைத்துக்கொண்டு காலேஜ்க்குக் கிளம்பினான் ரிஷன்.
அம்மு… “ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத, இது நம்ம லைப், நம்ம தான் வாழ போறோம்…. என்னால உன்னைப் புரிஞ்சுக்க முடியும்” என்றான்.
“நீயும் பார்த்திபனும் ஒரு நாளைக்கு முன்னாடியே திருச்செந்தூருக்கு வந்துடுங்க” என்று சொன்னான்.
“ம்ம்ம்ம் சரி” என்றாள் காயத்திரி.
காயத்திரியை காலேஜ்ல் இறக்கிவிட்டு ரிஷன் சென்னைக்கு சென்றான்.
நாட்கள் வேகமாகக் கடந்தது இருவரும் திருமண தேதி வந்தது.
காயத்திரி…. பார்த்திபன் மற்றும் ரெங்கநாதன் குடும்பத்துடன் திருச்செந்தூருக்குச் சென்றுக்கொண்டு இருந்தாள்.
ரிஷன் – காயத்திரியின் திருமண நிகழ்வுகளை…..
பார்க்கலாம்….