மௌனத்தின் நேசம் – 21

அத்தியாயம் – 21

காயத்திரி சொன்ன வார்த்தையைக் கேட்டு நிலை இல்லாமல் தவித்தான். அவள் மனதுக்குள் இன்னும் என்ன என்ன காயங்கள் இருக்கிறது என்று யோசித்துக்கொண்டே ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தான். ரிஷனை தேடி காயத்திரி ஹாலுக்கு வந்தாள்.

அதே நேரம் பார்த்திபன் வீட்டுக்குள் வந்தான்.

காயத்திரி பார்த்திபனை பார்த்து…. “ என்ன காலேஜ் போகலையா நீ..?” என்று கேட்டாள்.

“நீ இல்லாம நான் மட்டும் காலேஜ் போய் என்ன பண்றது தங்கம்” என்றான் பார்த்திபன்.

“அது சரி உன் ஆளை பார்க்க போவேன்னு நினைச்சேன்” என்றாள் காயத்திரி.

“அது எல்லாம் ஈவினிங் பஸ் ஸ்டாப்ல வச்சுப் பார்த்துக்கிறேன்” என்றான் பார்த்திபன்.

காயத்திரி பேசிக்கொண்டே அவனுக்குத் தோசை போட்டுக்கொடுத்தாள்.

ரிஷன் அமைதியாய் இருப்பதைப் பார்த்த பார்த்திபன்…. “என்ன ரொம்ப அமைதியாய் இருக்கீங்க?” என்று ரிஷனிடம் கேட்டான்.

“ஒன்னும் இல்லை சும்மா தான் நீ சாப்பிடு” என்றான் ரிஷன்.

அந்த நேரம் ரிஷனின் நண்பர்கள், ஹர்ஷினி, வினு நேத்ரன், விசாகன் அனைவரும் காயத்திரி வீட்டுக்கு வந்தனர்.

காயத்திரி அனைவரையும் சாப்பிட அழைத்தாள்.

“இல்லை மா எல்லாரும் சாப்பிட்டோம்” என்றான் விசாகன்.

ஆதலால் அனைவருக்கும் காபி போட்டு கொடுத்தாள்.

“எப்போ மா வீட்டுக்கு வர”? என்று காயத்திரியிடம் வினு நேத்ரன் கேட்டான்.

காயத்திரி பார்த்திபனை பார்த்தாள்

“இந்த வாரம் சண்டே வரோம் அண்ணா” என்றான் பார்த்திபன்.

மச்சான்… “அம்மா, அப்பா கிட்ட உங்க கல்யாணத்த பத்தி பேசினேன் காயத்திரி வீட்டுக்கு வரும் போது எல்லாரும் சேர்த்து பேசலாம்னு சொன்னாங்க” என்றான் வினு நேத்ரன்.

“ம்ம்ம்ம் சரி அதான் சண்டே வாரங்களே அப்போ பேசிக்கலாம்” என்றான் ரிஷன்.

காயு… “நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்கக் கூடாது” என்று பிடிகையோடு கேட்டாள் மது.

“தப்பா எல்லாம் எடுத்துக்க மாட்டேன் கேளுங்க மது” என்றாள் காயத்திரி.

“நேத்து நாங்க வரும் போது நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தீங்களே….” என்று முடிக்காமல் நிறுத்தினாள் மதுமிதா.

“ஓஓஓஓ… அதுவா….. பார்த்தி ஓரு பொண்ணுகிட்ட லவ் சொல்ல டரியல் பார்த்துட்டு இருந்தோம்” என்றாள் காயத்திரி.

பார்த்திபன் காயத்திரியை முறைதான்.

“நான் ஒரு விஷயம் சொல்லிடுறேன் இங்க இருக்குற எல்லாத்துக்கும் பார்த்திபன் யாருன்னு நான் சொல்ல விரும்புறேன்” என்றாள்.

“பார்த்திபனும் நானும் MBA ஒன்ன படுச்சோம் இங்க நாகர்கோயில் காலேஜ்ல. பார்த்திபனோட சொந்த ஊர் காரைக்குடி. பார்த்தியோட அம்மா அவனுக்கு 16 வயசு இருக்கும் போது தவறிட்டாங்க, அவங்க அப்பா செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டார். அதை ஏத்துக்க முடியாம ஹாஸ்டல்ல போய்ப் படிச்சான். ஸ்கூல் முடிச்சதுக்கு அப்பறம் சித்தி வீட்டுக்குள் வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்க அப்பா 5 லட்சம் குடுத்து உன் வாழ்க்கையைப் பார்த்துக்கச் சொல்லிட்டாரு. யுஜி முடுச்சான்… கோல்ட் மெடலிஸ்ட் சென்னைல வேலை பார்த்துட்டே ME ஈவினிங் காலேஜ்ல படிச்சான். கம்பெனில ஒரு பொண்ணுனால பிரச்சனை அதான் வேலையை விட்டுட்டு இங்க நாகர்கோயில் வந்து MBA ஜாயின் பண்ணான். நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள் ஆனோம். அவன் என்னைத் தங்கம்னு சொல்லி கூப்புடுறதை பார்த்த எல்லாருக்கும் ரொம்ப வித்தியாசமா இருக்கும் ஆனா அதுக்குப் பின்னாடி ஒரு காரணம் இருக்கு….. பார்த்திபன் அம்மா பெயர் தங்கலக்ஷ்மி அவுங்க நியாபகமா தான் என்னைத் தங்கம்னு கூப்பிடுவான்” என்று விளக்கமாகச் சொன்னாள் காயத்திரி.

“அம்மு…. எதுக்கு இது எல்லாம்…. உன்மேல எனக்கு நம்பிக்கை இல்லைன்னு நினைக்கிறியா.?” என்று கேட்டான் ரிஷன்.

“இந்த விளக்கம் உங்களுக்கு ஆனது இல்லை… உங்கிட்ட சொல்ல நினைச்சு இருந்த நேத்து நைட்டே நான் சொல்லி இருக்க முடியும். இந்த விளக்கம் நாளைக்கு யாரும் என் பார்த்தியை ஒரு வார்த்தை தப்பா பேசிட கூடாதுன்னு தான் இதைச் சொன்னேன். இந்தக் காலத்துல ஒரு ஆணும் பெண்ணும் நாங்க நண்பர்கள் தான் சொன்னா அதை வேற மாதிரி தான் பார்க்கிறாங்க அதான் ” என்றாள் காயத்திரி.

காயத்திரி சொல்ல வருவதை அனைவரும் புரிந்துக்கொண்டார்கள்.

“மச்சி என்ன கிளம்புலமா இல்லை ஈவினிங்க…?” என்று கேட்டான் பாலாஜி.

“இல்லை டா கிளம்பலாம்” என்றான் ரிஷன்.

“இவ்ளோ தூரம் வந்துட்டு கோவிலுக்குப் போகாம கிளம்ப வேண்டாம் எல்லாரும் கோவிலுக்குப் போய்ட்டுக் கிளம்பலாம்” என்றாள் காயத்திரி.

அனைவரும் கன்னியாகுமாரி அம்மன் கோவிலுக்குக் கிளம்பினர்.

ரிஷன் இன்னோவா காரில் வந்தான்.

பார்த்திபன் காரில் காயத்திரி வந்தாள்.

“மச்சி… காயு கூட வரலாம்ல” என்று கேட்டான் ஷாஜித்.

“அம்மு பார்த்திபன் கூட வரட்டும்” என்றான் ரிஷன்.

“தங்கம்… அவர் கூட நீ போயிருக்கலாம்ல” என்று கேட்டான் பார்த்திபன்.

காயத்திரி பதில் சொல்லவில்லை மனதுக்குள் ரிஷனின் திடீர் மாற்றம் எதனால் என்று யோசிச்சுக்கொண்டு கோவில் வரை மௌனமாக வந்தாள். பார்த்திபனும் எதுவும் பேசாமல் கோவிலுக்கு வந்தனர்.

கன்னியாகுமாரி அம்மன், இந்து மதத்தில் முக்கியமான தெய்வமாக வணங்கப்படும் பார்வதி தேவியின் ஒரு வடிவமாகும். இந்தியாவின் தென்முனையில் அமைந்த கன்னியாகுமாரியில் உள்ள பிரசித்தி பெற்ற கன்னியாகுமாரி அம்மன் கோயில் இவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இவர் கன்னி (குமரி) வடிவில், தவம் செய்யும் தேவியாகச் சித்தரிக்கப்படுகிறார். இந்தக் கோயிலில் அம்மன், மூக்குத்தி அணிந்து, கையில் ஜெபமாலையுடன் காட்சியளிக்கிறார், இது அவரது தனித்துவமான அம்சமாகும்.

புராணங்களின்படி, பாணாசுரன் என்னும் அரக்கனை அழிக்க, பார்வதி தேவி இங்குத் தவம் செய்ததாகவும், பின்னர்ச் சிவபெருமானை மணக்க விரும்பியபோது, அவரது திருமணம் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அவர் கன்னியாக நிலைத்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோயிலின் அருகே உள்ள கடல், மூன்று கடல்களின் (வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல்) சங்கமமாக உள்ளது, இது இந்த இடத்திற்கு மேலும் புனிதத்தை அளிக்கிறது.

அனைவரும் கன்னியாகுமாரி அம்மனை மனம் குளிர தரிசனம் செய்தனர்.

அண்ணா… “நீங்க வேணா மதினி கூட இருந்துட்டு வாங்க நாங்க மட்டும் கிளம்புறோம்” என்று சொன்னாள் ஹர்ஷினி.

“இல்லை மா எனக்கும் வேலை இருக்கு எல்லாரும் கிளம்பலாம்” என்றான் ரிஷன்.

ரிஷன் காயத்திரியை தனியா அழைத்து… “விசா வேலையா சென்னை போகணும் அதான் கிளம்புறேன், நீ சண்டே வரும் போது பாப்பா வீட்டுல இருப்பேன்” என்று கூறினான்.

“ம்ம்ம்ம்… சரி உடம்பப் பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு ஹர்ஷினியிடம் சென்றாள் காயத்திரி.

ரிஷன் மற்றும் அனைவரும் காயத்திரியிடம் சொல்லிவிட்டு தூத்துக்குடிக்கு கிளம்பினர்.

காயத்திரி மற்றும் பார்த்திபன் காலேஜ்க்கு லீவு என்பதால் விவேகானந்தர் ராக் சென்றனர்.

விவேகானந்தர் ராக்லில் நின்று முக்கடல் சங்கமத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள் காயத்திரி.

“தங்கம்… சண்டே அங்கே போகணும் அதுக்கு எதுவும் வாங்கணுமா?” என்று கேட்டான் பார்த்திபன்.

“ம்ம்ம்ம்… டிரஸ் வாங்கணும் ஈவினிங் போகலாம்” என்றாள் காயத்திரி.

தியானமண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு இருவரும் வீட்டுக்கு வந்தனர்.

ஈவினிங் இருவரும் சென்று ஜவுளி எடுத்துவிட்டு வந்தனர்.

தன் அண்ணன் மகளுக்கு ஒரு செயின் எடுத்தாள் காயத்திரி.

இரவு உணவு வெளியே முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர்.

இரவு 10 மணிக்கு மேல் ரிஷன் காயத்திரிக்கு கால் செய்தான்.

“ஹலோ அம்மு… நாங்க சென்னை வந்துட்டோம்” என்றான் ரிஷன்.

“ம்ம்ம்ம் சரி ரெஸ்ட் எடுங்க.. உடம்பப் பார்த்துக்கோங்க” என்றாள் காயத்திரி.

“சாப்பிட்டியா அம்மு?” என்று கேட்டான் ரிஷன்.

“ம்ம்ம்ம் சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“இப்போ தான் சாப்பிட்டோம்” என்றான் ரிஷன்.

“சரி அம்மு… ரெஸ்ட் எடு சண்டே பார்க்கலாம்” என்று சொல்லி போனை கட் செய்தான்.

நேற்று இருந்த இதம் இன்று இருவருக்கும் இல்லை மனதுக்குள் அழுத்தம். அவர்களுக்கு இடையில் ஒரு திரை உருவானது போல் தோன்றியது இருவருக்கும்.

காயத்திரி தன் அறையில் படுத்திருந்தாள்.. நேற்று ரிஷனுடன் இருந்த நினைவுகளை நினைத்துக்கொண்டு இருந்தாள். காலையில் தான் சொன்ன பிறகு தான் ரிஷனிடம் மாற்றும் என்று உணர்ந்துக்கொண்டாள். மனதுக்குப் பிடித்தவன் கூட ஒரு வாழ்க்கை அதைக்கூடத் தன்னால் இயல்பாக வாழ முடியவில்லை என்று ஒர் ஆதங்கம் காயத்திரி மனதில். இது தொடர்ந்தால் தன் வாழ்க்கையில் நிம்மதி போய்விடும் என்று தோன்றியத்தால் ஒரு முடிவு எடுத்து விட்டுக் கண் அயர்ந்தாள்.

****************

மறுநாள் முதல் ரிஷனுக்கு வேலை சரியாக இருந்தது. காயத்திரியின் பாஸ்போர்ட் வைத்து விசா அப்ளை செய்தான். அவனுக்கும் விசா நீடிப்பு வேலைகளைச் செய்தான்.

ரிஷன் காயத்திரியுடன் பேசினாலும் சாதாரண விஷயகளை மட்டும் பேசினான் அதைத் தாண்டி பேச ஆசை இருந்தும் அவனால் பேச முடியவில்லை ஒருவிதமான தயக்கம் இருந்தது அன்று அவள் சொன்ன பிறகு.

********************

சண்டே மார்னிங் காயத்திரி மற்றும் பார்த்திபன் இருவரும் கன்னியாகுமாரியில் இருந்து தூத்துக்குடிக்கு கிளம்பினர்.

ரிஷன் நேற்று இரவே தூத்துக்குடி வந்துவிட்டான்.

காலை உணவு ஹோட்டலில் சாப்பிடனர் இருவரும்.

காலை 11 மணி அளவில் கூகுள் மேப் உதவியுடன் வினு நேத்ரன் வீட்டுக்கு சென்றனர்.

தீபாலக்ஷ்மி காயத்திரியை கட்டி அணைத்து வரவேற்றார். சாரதாவும் இருந்தார்.

வினு நேத்ரன் பார்த்திபனை பற்றிச் சொல்லி இருந்ததால் அவனையும் வரவேற்றனர்.

காயத்திரி அனைவருக்கும் டிரஸ் கொடுத்து விட்டு, மகிழ்வதனி பாப்பாக்கு செயின் போட்டுவிட்டாள். மகிழ் குட்டி புதுமுகம் பார்த்து அழுதாள். அவளை ஹர்ஷினி சமாதானம் செய்தாள்.

ரெங்கநாதன்… “ஏன்டா மா இப்படி செய்த நாங்க எல்லாரும் இருக்கோம்ல ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்த?” என்று ஆதங்கமாய்க் கேட்டார்.

“அந்த நிமிஷம் உயிர் வாழ ஆசை இல்லை சித்தப்பா ஆனா செஞ்ச சத்தியத்தை மீறக் கூடாதுன்னு ஒரு காரணத்துக்காக மட்டும் தான் எல்லாத்தையும் விட்டுத் தூரமா போனேன்” என்றாள் காயத்திரி.

அவள் வார்த்தையைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்.

ரிஷன்… “அம்மு என்ன சொல்லுற நீ? என்னை பத்தி யோசிச்சியா நீ? நீ இல்லாம என்னால இருந்து இருக்க முடியுமா?” என்று கேட்டான்.

காயத்திரியிடம் மௌனம் மட்டுமே. அவள் மனதுக்குள் ஆயிரம் விஷயம் ஓடிக்கொண்டு இருந்தது.

“பெரியப்பா கல்யாண தேதி குறிக்கத் தானே காயத்திரியை வர சொன்னிங்க இப்போ தேவை இல்லாம எதுக்குப் பேசணும்” என்று விசாகன் கேட்டான்.

“காயு… ரெஜிஸ்டர் மேரேஜ் வேண்டாம் கோவில வச்சு சிம்பிளா பண்ணிக்கலாம்” என்று தீபாலக்ஷ்மியின் கணவர் செந்திராஜன் சொன்னார்.

“எந்தக் கோவில் சித்தப்பா?” என்று கேட்டாள் காயத்திரி.

“அதை நீயும் ரிஷனும் முடிவு பண்ணுங்க” என்றார்.

காயத்திரி ரிஷனை பார்த்தாள்.

ரிஷன்…. “ மாமா திருச்செந்தூர் கோவில வச்சுக் கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படியே மகிழ் குட்டிக்கு காதும் குத்திடலாம்” என்று சொன்னான்.

“ம்ம்ம்ம் சரியா அப்படியே பண்ணலாம்” என்றார்.

“சித்தப்பா… பத்திரிக்கை எதுவும் அடிக்க வேண்டாம், மகிழ் குட்டி விசேஷத்துக்கு மட்டும் பத்திரிக்கை அடுச்சுக்கோங்க” என்றாள் காயத்திரி.( தாய், தந்தை பெயர் தெரியாத காரணத்தால் தவிர்த்தாள்)

அவள் எதனால் சொல்கிறாள் என்று புரிந்ததால் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

சாரதா ஜோசியரை அழைத்து நல்ல நாள் கேட்டார். இன்னும் 20 நாள் கழித்து ஒரு நல்ல நாள் வருது அதில் செய்யும் படி சொன்னார்.

அந்தத் தேதியை முடிவு செய்தனர்.

மதியம் விருந்து அமர்க்களபட்டது,

அனைவரும் பல கதைகள் பேசிக்கொண்டே சாப்பிடனர்.

ரிஷன் காயத்திரியை தனியாக அழைத்தான். மனதுக்குள் இன்னும் காயத்திரி சொன்ன வார்தைகள் மட்டுமே ஓடிக்கொண்டு இருந்தது.

பின்னாடி தோட்டம் போன்ற இடத்தில் அமர்ந்தனர் இருவரும்.

“ஏன் அம்மு… அப்படிச் சொன்ன.. உன்னால எப்படிச் சொல்ல முடிஞ்சது…?” என்று கேட்டான் ரிஷன்.

“நீங்க எல்லாரும் வெளியே இருந்து பார்க்கிறீங்க உங்களுக்குப் பெருசா தெரியாது…. ஆனா… நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று ஆதங்கமாய்ச் சொன்னாள் காயத்திரி.

“ராஜதுரையைக் கூட என்னால ஒருவகையில் ஒதுக்க முடியும், அவனோட கேரக்டர் அதுதான் பொண்ணுங்க விஷயத்துல மோசம் தான்., ஆனா காளிதாஸ்….. அவருக்கு 52 வயசு அவர் வந்த அன்னைக்கே அவுங்க அக்கா எனக்கும் அவருக்கும் கல்யாணம்ன்னு சொல்லிட்டாங்க… அவர் என்ன பண்ணாலும் தட்டி கேக்க யாரும் இல்லை… நாகராஜன் என்மேல ஆசைப்பட்டதுக்கே என்னை அவுங்க பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசிட்டாங்க, இடது காலில் சூடு போட்டாங்க.,

காளிதாஸ் வந்த நொடியில இருந்து அந்த ஒரு வாரத்துல…. சொல்ல கூட முடியாத அளவுக்குச் செஞ்சாரு… நைட் தூங்க முடியாது எங்க அவர் ரூம்குள்ள வந்துடுவாரோன்னு பயம், ரூமை லாக் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க., நிம்மதியா சாப்பிடக்கூட முடியாது பக்கத்துல உக்காந்து நோண்டிட்டே இருப்பாரு., புடவை தான் கட்டணும் வேற டிரஸ் எதுவும் போட கூடாது., கிச்சன்ல நிம்மதியா சமைக்க முடியாது., பாத்ரூம் போனா கூடக் கதவுக்கு முன்னாடி நிப்பாரு., எல்லாத்துக்கும் உச்சபச்சமா கடைசியா என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணாரு அப்போ தான் அடிச்சேன் அவுங்க அக்கா உண்மை எல்லாம் சொன்னாங்க… வாழ்க்கையே வெறுத்து போச்சு சாகவும் முடியாம கடைசியா எஸ்தர் மேம் வீட்டுக்கு போனேன். MBA படிச்சேன். என் வாழ்க்கைல என் கண்ணைப் பார்த்து பேசின ஆண்களை விடக் கழுத்துக்குக் கீழ பார்த்து பேசின ஆண்கள் தான் அதிகம்.

கன்னியாகுமரி வீட்டுல வச்சு நான் சொன்னதுக்கு அப்புறம் நீங்க கூட நார்மலா இல்லைத்தானே…

உங்க மேல தப்பு சொல்லலை ஆனா என்னோட காயம் என்னை நார்மலா இருக்க விடுமான்னு தெரியல பார்க்கலாம் வாழ்கை என்ன வச்சுயிருக்குன்னு” என்றாள் காயத்திரி.

ரிஷனால் ஏதும் பேச முடியவில்லை. அமைதியாய் இருந்தான். என்னச் சொல்லுறதுன்னு தெரியாமல் தவித்தான். அவளோட காயங்கள் பெருசு என்று புரிந்தது.

சற்று நேரத்தில் காயத்திரி கிளம்ப நினைத்தாள். அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

“மதினி… தங்கிட்டு போகலாம்ல” என்றாள் ஹர்ஷினி.

“இல்லை மா எக்ஸாம் வருது லீவு போட முடியாது” என்றாள் காயத்திரி.

“சாரதா சித்தி நீங்களே புடவை எல்லாம் எடுத்துடுங்க” என்றாள் காயத்திரி.

“அம்மு… என்ன இது? நம்ம கல்யாண புடவை எடுக்க நீ இல்லாம எப்படி?” என்று கேட்டான் ரிஷன்.

“செமஸ்டர் எக்ஸாம் வருது லீவு போடுறது கஷ்டம்., அதான் நீங்க எல்லாம் இருக்கீங்கல நீங்களே எடுங்க” என்றாள் காயத்திரி.

“பார்த்தி… கார் கீயை கொடு நான் டிரைவ் பண்றேன்” என்று கேட்டாள் காயத்திரி.

“தங்கம்…” என்று அதிர்ச்சியாய் அழைத்தான்.

“கொடுன்னு சொன்னேன்” என்றாள் அழுத்தமாக.

பார்த்திபன் கார் கீயை கொடுத்தான

காயத்திரி அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

காரில் பாட்டு போட்டு விட்டாள் காயத்திரி. மனதுக்குள் அழுத்தம் அதைத் தாங்க முடியாமல் தான் கார் டிரைவ் செய்தாள். பொதுவாக அவள் டிரைவ் பண்ண மாட்டாள், மனசு கஷ்டமாக இருக்கும் போது மட்டுமே டிரைவ் செய்வாள். இன்று பழைய நினைவுகளில் தாக்கம் அவளைத் தாக்கியது.

“ஏன் இந்தச் சாபங்கள்

நான் பாவம் இல்லையா…

விதி கண்ணாமூச்சி விளையாட

நான் காதல் பொம்மையா…?”

காரில் இந்த வரிகளைக் கேட்ட போது தனக்கான வரிகள் போல் தோன்றியது காயத்திரிக்கு. அவள் எடுத்த முடிவை செயல் படுத்த நினைத்தாள் காயத்திரி.

காலம் காயத்திரி காயத்தை ஆற்றுமா….?

காயத்திரி எடுத்த முடிவு என்ன….?

பார்க்கலாம்….

error: Content is protected !!