மௌனத்தின் நேசம் – 20

அத்தியாயம் – 20

காயத்திரி மடியில் ரிஷன் படுத்திருந்தான். மிகவும் இதமாக உணர்ந்தான். நீண்ட நாள் ஆசை தன் அம்மு மடியில் படுக்க வேண்டும் என்பதெல்லாம், இன்று தான் நிறைவேறியது.

“அம்மு…. உன் போன் நம்பர் சொல்லு” என்று கேட்டான்.

“உங்களுக்கு வாட்சப்பில் அனுப்புறேன்” என்றாள் காயத்திரி.

“ம்ம்ம்ம்… சரி மா” என்றான் ரிஷன்.

காயு… “ஏன் நீ நாகராஜன் மேல இவ்ளோ கோவப்படுற” என்று கேட்டான் வினு நேத்ரன்.

“அவனைப் பத்தி யாரும் இங்க பேச வேண்டாம்” என்று சொன்னான் பார்த்திபன்.

“டேய்ய் எதுக்குக் கோவம் காரணம் கேக்குறோம்” என்றான் வினு நேத்ரன்.

பார்த்தா…. “கொஞ்சம் நேரம் அமைதியாய் இரு” என்றாள் காயத்திரி.

அண்ணா… “நான் வீட்டை விட்டு வெளியே வரதுக்கு அவனும் ஒரு காரணம்” என்று சொன்னாள்.

அப்போ… “காளிதாஸ் மாமா காரணம் இல்லையா?” என்று கேட்டான் விசாகன்.

“அவரும் தான் காரணம்” என்றாள் காயத்திரி.

“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு” என்றான் விசாகன்.

“அந்த ஆளு மேலே என்ன கோவம்ன்னு நானே சொல்லுறேன்” என்றான் பார்த்தா.

“ஆறு மாசத்துக்கு முன்னாடி எங்க காலேஜ்ல ஸ்டுடென்ட்ஸக்கு விவேகானந்தர் ராக் ட்ரிப் கூட்டிட்டு போனோம், டீச்சர்ஸ் நான், தங்கம், அப்பறம் இன்னொரு லேடியும் எல்லாரும் போனோம். அன்னைக்கு அந்த ஆள் நாகராஜனும் அங்க வந்திருந்தான், ஏதோ கம்பெனி மெம்பெர்ஸ் எல்லாம் ட்ரிப் வந்து இருப்பாங்க போல….

விவேகானந்தர் ராக்ல காயத்திரியை பார்த்து இருக்கான்” என்று சொல்லி நிறுத்தினான் பார்த்திபன்

அதுக்கு மேல அவனால் சொல்ல முடியவில்லை, காயத்திரியை பார்த்தான்.

அவளும் புரிந்துக்கொண்டு “அண்ணா நானே… சொல்லுறேன்” என்றாள்.

“ராக்ல என்னைப் பார்த்துட்டு என்னைத் தொடர்ந்து இருக்கான். நான் ட்ரிப் முடுச்சுட்டுக் காலேஜ் ஸ்டுடென்ட் எல்லாத்தையும் அவுங்க அவுங்க ஸ்டாபில் விட்டுட்டு நான் கடைசியா தான் வீட்டுக்கு வந்தேன்.

அவனும் என்னைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்துட்டான். வீட்டுல நான் மட்டும் தனியா இருக்குறத பார்த்திருக்கான்”.

காயத்திரி தனியாக இருப்பதை உணர்த்த நாகராஜன் தன் பலநாள் ஆசையைத் தீர்த்துக்க எண்ணினான்.

அதன் படி அவள் அசந்த நேரம் வீட்டுக்குள்ள நுழைந்தான். அவளுக்குத் தெரியாமல் ஒளிந்து நின்றுக்கொண்டான். காயத்திரி எப்பவும் போல் வீட்டுக்குள் அமர்ந்து வேலை செய்துக்கொண்டு இருந்தாள். அவள் அசந்த நேரம் அவள் வாயை அடைத்து விட்டு அவள் கையும் காலையும் கட்டி வைத்தான்.

சத்தியமாக காயத்திரி இதனை எதிர் பார்க்கவில்லை அதிர்ச்சியில் உறைந்தாள்.

நாகராஜன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

“ஹாஹாஹா…. பல நாள் ஆசை டி உன்னைத் தொட்டு ரசிக்கனும்ன்னு அந்த ஆசை இன்னைக்குத் தான் நிறைவேற போகுது டி என் செல்லக்குட்டி” என்று அவளை ரசித்துக்கொண்டே கூறினான்.

காயத்திரியால் எதுவும் செய்ய முடியாமல் தவித்தாள். அவள் புடவை அணிந்திருந்தாள்.

நாகராஜன் அவள் அருகில் சென்று கீழ் உதட்டை பிடித்து வருடினான், காயத்திரி தலையை உளுக்கி தடுத்தாள்.

நாகராஜன் அவள் புடவை பின்னை கழட்டி அவள் மாரப்பை சேலையை உருவிவிட்டான். கைகளால் அவளைத் தடவி ரசித்தான். காயத்திரி துடித்தாள் செயலற்று இருந்தாள். கண்ணில் ஆசை மின்ன ஜாக்கெட் ஹூகை கழட்டினான்.

காயத்திரி மனதுக்குள் “தாத்தா என்னைக் காப்பாத்துங்க ” என்று வேண்டினாள்.

சரியாக அந்த நேரம் வில்லியம்ஸ் வர… காயத்திரி நிலைமையைக் கண்டு அதிர்ந்தார்.

நாகராஜனை பின் பக்கமாக மண்டையில் அடித்தார்.

அவன் மயங்கி விழுந்தான்.

காயத்திரி கை கட்டை கழட்டி விட்டார்.

காயத்திரி அறைக்கு சென்று ஆடையைச் சரி செய்துக்கொண்டாள். அப்பா… “அவனை வெளியே கொண்டு போடுங்க வேற எதுவும் பண்ண வேண்டாம்” என்றாள் காயத்திரி. மகேஸ்வரி மற்றும் காஞ்சனாவை மனதில் வைத்துக்கொண்டு சொன்னாள்.

வில்லியம்ஸ் அவருக்குத் தெரிந்த ஆள்களை வைத்து நாகராஜனை தூங்கி சென்று மூன்று நாட்கள் அவனை மயக்கத்தில் வைத்து மிரட்டி அனுப்பினார்.

“அன்னைக்கு மட்டும் வில்லியம்ஸ் அப்பா வரலைன்னு என்னோட நிலைமை…!!” என்று சொல்லாமல் நிறுத்தினாள்.

வினு மற்றும் விசாகன் சத்தியமாக இதனை எதிர் பார்க்கவில்லை. நாகராஜன் மேல் கொலை வெறி வந்தது.

ரிஷன் மனதுக்குள் பெரும் வலியை உணர்ந்தான். இன்னும் என்ன என்ன கஷ்டங்கள் அனுபவித்தாளோ என்று நினைத்து வருந்தினான்.

அமைதியாக இருந்தது அந்த இடம்.

சூழ்நிலையை மாற்ற நினைத்த மது….

“சரி எப்போ கல்யாணம்?” என்று கேட்டாள்.

காயத்திரி ரிஷனை பார்த்தாள்.

“என்னை ஏன் அம்மு பார்க்கிற?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான் ரிஷன்.

மதினி ஒன்னு சொல்லணும்… “அம்மா அப்பாவோட கடைசி ஆசை நீங்க மருமகளா வரணும் என்பதே, அண்ணாகிட்ட அப்பா சத்தியம் கூட வாங்கி இருங்காங்க…” என்றாள் ஹர்ஷினி.

“அம்மு… நான் இதை உன்கிட்ட சொல்லணும்….! “அப்பா எனகிட்ட சத்தியம் வாங்கும் போதும் நீ யாராக இருந்தாலும் உன்னைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சொன்னாரு. அந்த வார்த்தை என்னை யோசிக்க வச்சது அதுனால உன்னைப் பத்தி ஒருத்தர் கிட்ட விசாரிச்சேன் அவர் தான் நீ யாருன்னு எனக்குச் சொன்னாரு. உன்னைப் பத்தி அம்மா அப்பா கிட்டயும் அவர் தான் விருதுநகர் கலயாணத்துல வச்சு உன்னைப் பத்தி சொல்லி இருக்கார். அதுக்கு அப்பறம் அம்மா அப்பா நீதான் எங்க வீட்டுக்கு மருமகளா வரணும் என்று முடிவு எடுத்து இருக்காங்க” என்றான்.

“நீங்க யாரு கிட்ட கேட்டீங்க என்னைப் பத்தி?” என்று கேட்டாள் காயத்திரி.

“பங்கஜம் அப்பா கிட்ட” என்றான் ரிஷன்.

மச்சான்.. “என்ன சொல்லுறீங்க?” என்று கேட்டான் விசாகன்.

“காயத்திரி… ரவீந்திரன் மாமா மகள் இல்லை ஹாஸ்பிடல வச்சு வேற ஒருத்தவங்க மகளை மாத்தி இருங்காங்க. பங்கஜம் அவுங்க அம்மா தான் மாத்தி இருங்காங்க. ரவீந்திரன் மாமா பொண்ணு பிறந்து ஒரே நாளில் இறந்துடுச்சு. இந்த விஷயம் மாலா அவுங்களுக்குக் காயத்திரிக்கு ரெண்டு வயசா இருக்கும் போது தான் பங்கஜத்தோட அம்மா சொல்லி இருங்காங்க, அதுனால தான் காயத்திரி மேல் இவ்வளோ வெறுப்பு” என்று சொன்னான் ரிஷன்.

“அப்போ நிஜமாவே நீ மாலா பெரியம்மா பொண்ணு இல்லையா” என்று கேட்டான் வினு நேத்ரன்.

“இல்லை அண்ணா.. நான் அவுங்க பொண்ணு இல்லை நான் எங்க அம்மா மாறின்னு சொன்னாங்க, அவுங்களுக்குப் பதினாறு வயசு இருக்கும் போது யாரோ நாலு பேர் ரேப் பண்ணி இருக்காங்க அதுல பொறந்தவ தான் நான். நான் பிறந்த உடனே அவுங்களும் இறந்துட்டாங்க” என்றாள் காயத்திரி.

“காளிதாஸ் மாமா என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாங்க அவரைக் கன்னத்துல அடிச்சேன் அவரு போதைல இருந்ததுனால மயங்கிட்டாரு. அவுங்க அக்கா தான் கடைசியாய் நான் அவுங்க பொண்ணு இல்லைன்னு எல்லாத்தையும் சொன்னாங்க அதுக்கு அப்புறம் தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்தேன்” என்று சொன்னாள்.

“மனசுக்குள்ள நிறையக் காயம் அம்மா அப்பான்னு யாரும் எனக்கு இல்லைன்னு ஒரு ஆதங்கம். அந்த உறவு சம்பந்தப்பட்ட யாரும் எனக்கு வேண்டாம்ன்னு முடிவு எடுத்தேன். அதுனால தான் உங்க யாரு கிட்டையும் வராம தனியா இருக்க முடிவு எடுத்தேன்” என்று சொன்னாள்.

இறுதியாக “சிம்பிளா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்” என்று ரிஷன் கிருஷ்ணாவை பார்த்துச் சொன்னாள் காயத்திரி.

ரிஷனுக்கு அவள் நிலைமை புரிந்தது. அதனால்… “உன் இஷ்டம் தான் என்னோட முடிவு” என்று கூறினான்.

அனைவருக்கும் சந்தோசம்..

“அப்பா அம்மா கிட்ட பேசி ஒரு நல்லா நாள் பார்த்துக் கல்யாணம் தேதி குறிக்கலாம்” என்று சொன்னான் வினு.

நைட் லேட் ஆகிவிட்டது அதனால் அனைவரும் கிளம்பினர். ரிஷனுக்கு அம்முவை விட்டு செல்ல மனம் இல்லை வேற வழி இல்லாமல் கிளம்பினான்.

பார்த்திபன் ரிஷனிடம் சென்று “நீங்க வேணா இங்க தங்கலாம்ல” என்று கேட்டான்.

ரிஷன் காயத்திரியை பார்த்தான்.

காயத்திரி…. “அண்ணா உங்க மச்சானை கூட்டிட்டு போங்க” என்றாள்.

தங்கம்… “ஏன் அப்புடி சொல்லுற?” என்று கேட்டான் பார்த்தா.

“மச்சி… அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றாள் காயு.

“ஏன் இங்க இருந்த ரெஸ்ட் எடுக்க முடியாதா?” என்று இடக்காகக் கேட்டான் பார்த்திபன்.

பார்த்திபனை முறைத்தாள் காயத்திரி.

“நீங்க வாங்க இங்கே ஸ்டே பண்ணலாம்” என்று ரிஷனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

மற்ற அனைவரும் காலையில் வருவதாகச் சொல்லி ஹோட்டலுக்குக் கிளம்பினர்.

ரிஷன் மற்றும் பார்த்திபன் ஹாலில் அமர்ந்து இருந்தனர்.

காயத்திரி உள்ளே வந்து கிச்சனுக்குச் சென்று பால் காய்ச்சி கொண்டு வந்தாள்.

மூவரும் பால் குடித்தனர்..

பார்த்திபன்… “தங்கம் நான் கிளம்புறேன் வீட்டை பூட்டிக்கோ” என்றான்.

ரிஷன் குழப்பமாகப் பார்த்தான்.

“பார்த்திபன் … நான் எதிர் வீட்டுல தான் இருக்கேன்” என்று சொல்லி கிளம்பினான்.

ரிஷன் வீட்டை அடைத்து விட்டு கிச்சனுக்குச் சென்றான்.

அங்குக் காயத்திரி பாத்திரம் தேய்த்துக்கொண்டு இருந்தாள்.

ரிஷன் காயத்திரி அருகில் நின்றுக்கொண்டான்.

“அம்மு…. கோவமா?” என்று கேட்டான்.

“கோவம் எல்லாம் இல்லை. எப்படியும் நீங்க இங்க தான் ஸ்டே பண்ணுவீங்கன்னு தெரியும்” என்றாள்.

“நான் தேய்கிறேன் குடு” என்றான் ரிஷன்.

“இல்லை வேணாம் ரூம்ல டிரஸ் இருக்கும் போய் மாத்திக்கோங்க” என்றாள்.

ரிஷன் புரியாமல் அவளைப் பார்த்தான்.

“நீங்க ப்ரொபோஸ் பண்ண நாளை கொண்டாட மூணு வருசமா உங்களுக்கு டிரஸ் எடுத்து வச்சு இருக்கேன்” என்றாள் காயத்திரி.

ரிஷன் ரூம்க்கு சென்று கப்போர்டை பார்த்தான். சில ட்ராக், டிசர்ட் மற்றும்

கேயூசல் ட்ரெஸ் இருந்தது. ரெப்பிரேஷ் ஆகிவிட்டு ட்ராக், டிசர்ட் அணிந்துக்கொண்டான்.

வேலைகளை முடித்து விட்டு காயத்திரியும் ரூம்க்கு வந்தாள்.

“இங்க படுக்கலாமா…? இல்லை ஹாலில் படுக்கலாமா..?” என்று கேட்டாள் காயத்திரி.

“நான் கூட இருக்கறது கஷ்டமா இருக்கா அம்மு?” என்று கேட்டான்.

காயத்திரி ரிஷனை முறைத்து விட்டுப் பெட் ரெடி செய்தாள்.

“வாங்க படுக்கலாம்” என்று அழைத்தாள்.

ரூமில் தான் இருவரும் படுத்தனர்.

ரிஷன் மனதுக்குள் சந்தோசமாக இருந்தான். சில நிமிடம் கழித்து மெதுவாகக் காயத்திரி கையைப் பிடித்துக்கொண்டான்.

“தூக்கம் வரலையா?” என்று கேட்டாள்.

“ரொம்பச் சந்தோசமா இருக்கேன் அம்மு. கனவில் மட்டும் நடந்த விஷயம் இப்போ நிஜமா நடக்குதுமா ரொம்ப ரொம்ப ஹாப்பி” என்று உணர்ச்சி பொங்க பேசினான் ரிஷன்.

காயத்திரியும் அதே நிலையில் தான் இருந்தாள்.

இருவரும் ஒருவர் முகத்தைப் ஒருவர் பார்த்துக்கொண்டு படுத்து இருந்தனர்.

“அம்மு…. மேரேஜ் முடுஞ்சு நீ டெக்சாஸ்க்கு தான் வரமாதிரி இருக்கும, பாஸ்போர்ட் இருக்கா?” என்று கேட்டான் ரிஷன்.

“ம்ம்ம்ம் இருக்கு. MBA படிக்கும் போது எடுத்தேன் விசாக்கு அப்ளை பண்ணனும்” என்றாள் காயத்திரி.

“எத்தனை நாள் இங்க இருப்பீங்க?” என்று கேட்டாள்.

“ரெண்டு மாசம் சென்னையில் தான் இருப்பேன் அம்மு” என்றான் ரிஷன்.

“லவ் யூ” என்றாள் காயத்திரி திடிர்ன்னு.

ரிஷன் சிரித்து விட்டு… “லவ் யூ அம்மு” என்றான்.

இருவரும் மனங்களும் நிறைந்து இருந்தது.

“பார்த்திபனை எப்படி உனக்குத் தெரியும் அம்மு?” என்று கேட்டான் ரிஷன்.

“நான் நாகர்கோவில MBA படிக்கும் போது அவனும் கூடப் படிச்சான். அப்படியே பிரின்ட்ஸ் ஆனோம் என்னைப் பத்தி எல்லாமே தெரியும் அவனுக்கு” என்றாள் காயத்திரி..

“ம்ம்ம்ம் நாங்க வீட்டுக்குள்ள வந்த போது பேசிட்டு இருந்தீங்களே…. அது என்ன?” என்று கேட்டான் ரிஷன்..

காயத்திரி மெதுவாகச் சிரித்து விட்டு….

“ஓஓ அதுவா!! பார்த்திபன் காலேஜ்ல ஒரு பொண்ணை லவ் பண்ணுறான் அவளுக்கு ப்ரொபோஸ் பண்ண என்கிட்ட ரிகர்சல் பார்த்துட்டு இருந்தான்” என்றாள் காயத்திரி..

“ஏய்ய்ய் என்ன சொல்லுற? இதுக்கு எல்லாம் ரிகார்சலா..? “என்று அதிர்ச்சியாகக் கேட்டான்.

“இதுக்கே ஷாக் ஆனா எப்படி? அவன் சொல்லும் போது கேட்டு இருக்கனுமே ஏதோ தகவல் சொல்லுற மாதிரி சொல்லிட்டு இருந்தான்” என்றாள் காயத்திரி.

“அவனுக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிக்கும் ஆனா லவ் பீல்லோட எல்லாம் பார்த்திபனுக்குப் பேச வரலை ரொம்ப ட்ரை பண்ணி பார்த்துட்டான்” என்று சொன்னாள் காயத்திரி.

“ம்ம்ம்ம் அம்மு…. உன்கிட்ட வந்து படுக்கவா?” என்று கேட்டான் ரிஷன்.

காயத்திரி பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி படுத்துக்கொண்டாள்.

ரிஷன் ஏமாற்றமாக உணர்ந்தான்.

காயத்திரி தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள். அவள் கண்களில் அழைப்பு இருந்தது..

ரிஷனுக்கு அது புரிய மெதுவாக நகர்ந்து பின் பக்கமாய் அவளை அணைத்துப் படுத்துக்கொண்டான்.

இருவருக்கும் நிறைவாக இருந்தது. சற்று நேரத்தில் இருவரும் தூங்கினர்.

மறுநாள் காலையில் ரிஷன் தான் முதலில் எழுந்தான். பால் காய்ச்சி டீ போட்டுக்கொண்டிருந்த நேரம் காயத்திரி வந்தாள் அவளுக்குக் கொடுத்தான்.

“அம்மு… இந்தா டீ” என்று கொடுத்தான் ரிஷன்

காயு அதனை ரசித்துக் குடித்தாள்.

“மார்னிங் என்ன வேணும் உங்களுக்கு?” என்று ரிஷனிடன் கேட்டாள் காயத்திரி.

“உன் இஷ்டம் எதுவா… இருந்தாலும் எனக்கு ஓகே தான்” என்றான் ரிஷன்..

“அம்மு உன்கிட்ட ஒன்னு கேக்கணும்…ஏன் என்னை மாமான்னு சொல்லாம பேசுற இப்போ எல்லாம்” என்று கேட்டான்.

“காளிதாசை மாமா என்று தான் கூப்பிட வேண்டிய கட்டாயம் வேற வழி இல்லை எனக்கு, அவனைக் கூப்பிட்ட முறையை வச்சு உங்கள கூப்பிட பிடிக்கல அதான் அந்த வார்த்தை சொல்லாமல் பேசுறேன்” என்றாள் காயத்திரி.

ரிஷனுக்குப் புரிந்தது அதற்கு மேல ஏதும் பேசவில்லை.

அந்த நேரம் பார்த்திபன் வந்தான்.

காயத்திரி கிச்சன் சென்று டீ போட்டுக்கொடுத்தாள்.

பார்த்திபா… “காலேஜ்க்கு லீவு சொல்லிடு” என்றாள்.

“ம்ம்ம்ம் சரி தங்கம்” என்றான்.

பார்த்திபன் டீ குடித்து விட்டு, ரிஷனிடன் ரெப்பிரேஷ் ஆகிட்டு வரேன் என்று சொல்லி வீட்டுக்குச் சென்றான்.

காயத்திரி கிச்சனில் இருந்தாள். ரிஷன் வந்து அவள் அருகில் நின்று கொண்டான்.

“நான் முறை சொல்லாம பேசுறது கஷ்டமா இருக்கா?” என்று கேட்டாள் காயத்திரி.

“கஷ்டமா இல்லை சடனா அந்த வார்த்தை சொல்லாம பேசுற அதான் எதுவும் காரணம் இருக்கா என்று தெரிஞ்சுக்கக் கேட்டேன்” என்று சொன்னான் ரிஷன்.

“பெயர் சொல்லி கூடக் கூப்பிடு இப்படி எதுவும் இல்லாம மொட்டையா பேசாத” என்றான் ரிஷன்.

“கிருஷ்ணான்னு கூப்பிடவா.?” என்று கேட்டாள் காயத்திரி.

“ம்ம்ம்ம் எனக்கு ஓகே” என்றான் ரிஷன்.

“சரி சாம்பார் செய்றேன். தோசை போட்டுக்கலாம் கிருஷ்ணா” என்றாள் காயத்திரி.

“லவ் யூ டி” என்றான் ரிஷன்.

காயத்திரி சாம்பார் செய்ய வேலைகளை ஆரம்பித்தாள். ரிஷனும் அவளுக்கு உதவி புரிந்தான். இருவரும் சேர்த்து சாம்பார் வைத்துத் தோசை போட்டு சாப்பிடனர்.

கிருஷ்ணா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் “ கிச்சனல வேலை செய்யும் போதும் பின் பக்கமா வந்து என்னைக் கட்டிப் பிடிக்காதீங்க! என்னால சில காயங்களை மறக்க முடியல” என்றாள் காயத்திரி.

ரிஷன் சத்தியமாக அதிர்த்து விட்டான். காயத்திரியிடம் இத்தனை எதிர் பார்க்கவில்லை. அவள் மனநிலை புரிந்தது, இருந்தும் இவை எல்லாம் ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கும் சாதாரண விஷயங்கள். அப்படி இருக்க எல்லா விஷயத்தையும் யோசிச்சு யோசிச்சுச் செய்வது என்பது கஷ்டம் தானே.

அவள் மனதில் இன்னும் எத்தனை காயங்கள் உள்ளது என்று தெரியாமல் தவித்தான். ஒரு காதலனாய் வார்த்தைகள் இன்றி உறைந்தான் ரிஷன் கிருஷ்ணா.

காயத்திரி காயங்களால்… ரிஷன் காயத்திரி வாழ்க்கை எப்படி இருக்கும்?

பார்க்கலாம்…..

error: Content is protected !!