அத்தியாயம் – 19
அனைவரும் காயத்திரியை பார்க்க கிளம்பினர். அனைவரின் மனதுக்குள்ளும் நிறையக் கேள்விகள் இருந்தது. ரிஷன் சொல்ல முடியாத தவிப்பில் துடித்துக்கொண்டு இருந்தான். கூகிள் மேப் உதவுடன் காயத்திரி வீட்டுக்கு சென்றனர்.
அவர்கள் சென்ற வேளை காயத்திரி வீட்டில் முன்பு ஃபேசர் பைக் நின்று இருந்தது.
அனைவரும் யோசனையுடன் இறங்கினர். வீட்டுக்கு உள்ளே சென்றனர்.
அப்போது வீட்டுக்குள்ளேயே… இருந்து ஒர் ஆண் குரல் கேட்டது.
“தங்கம்… ஒரு மனுஷன் ப்ரொபோஸ் பண்ணா ரியாக்ட் பண்ணனும் இப்படி இருக்கக் கூடாது சரியா..” என்றான்.
“ஹாஹாஹா நீ பண்ணதுக்குப் பெயர் ப்ரபோசலா நல்ல வேலை சொன்ன” என்று ஒரு பெண் குரல் கேட்டது. அது காயத்திரியின் குரல் என்று அனைவரும் உணர்ந்தனர்.
“தங்கம் இது எல்லாம் நல்லா இல்லை இப்படி டோட்டலா டேமேஜ் பண்ணுற” என்றான்.
“டேய்ய் கொஞ்சவது நீ சொல்லும் போது லவ் பீல் இருந்ததா டா? ஏதோ தகவல் சொல்லுற மாதிரி சொல்லிட்டு இருக்க” என்றாள் காயத்திரி.
ரிஷன் முகம் மாறியது உள்ளே இருந்து வந்த பேச்சால்.
மது பொறுமை இழந்து காலிங் பெல் அடித்தாள்.
“டேய்ய் பெல் அடிக்குது போய் யாருன்னு பாரு” என்றாள்.
அந்த நபர் போய்க் கதவை திருந்து பார்த்தான்.
வெளியே இருந்த நபர்களைப் பார்த்து யோசனையாக
“என்ன வேணும்?” என்று கேட்டான்.
“இது காயத்திரி வீடு தானே” என்று கேட்டாள் மது.
“ம்ம்ம்ம்ம் ஆமா…. நீங்க எல்லாம்?” என்று கேட்டான்.
“நாங்க எல்லாரும் காயத்திரியை பார்க்க வந்து இருக்கோம்” என்றாள்.
“தங்கம் உன்னைப் பார்க்க தான் வந்து இருக்காங்க” என்று சொன்னான்.
காயத்திரி யோசனையாக வெளியே வந்தாள்.
மது மற்றும் ஹர்ஷினியை தான் முதலில் பார்த்தாள். அதன் பின் தான் எல்லோரையும் பார்த்தாள்.
“வாங்க….” என்று உள்ளே அழைத்தாள்.
எல்லோரும் உள்ளே வந்தனர்.
ஹாலில் இருந்த சோபாவில் ஹர்ஷினி, வினு மற்றும் ரிஷன் அமர்த்தனர்.
மற்ற அனைவரும் கீழே அமர்த்தனர்.
காயத்திரி அனைவருக்கும் குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள்.
மது அங்கு இருந்த புதிய நபரை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ஹர்ஷினி தான் முதலில் பேசினாள்.
“மதினி எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“ம்ம்ம்ம் நல்லா இருக்கேன் மா. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள் காயத்திரி.
“இந்த மூணு வருசத்துல எங்க யாரு நியாபகமும் உனக்கு இல்லை தானே” என்று ஆதங்கமாய்க் கேட்டான் வினு நேத்ரன்.
காயத்திரி முகத்தில் சிறு புன்னகை….
“ஒரு அண்ணனா உங்களோட நியாபகம் எனக்கு எப்பவும் இருக்கு. ஆனா.. கண்டிப்பா உங்களைத் தேடி நான் வந்திருக்க மாட்டேன். எனக்கு அந்த உறவுகள் யாரும் வேண்டாம் என்று முடிவு எடுத்து தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன்” என்று சொன்னாள் காயத்திரி.
“காயு.. இது யாரு?” என்று அந்தப் புதிய நபரை காட்டி கேட்டாள் மது.
காயத்திரி அந்த நபரை பார்த்தாள். இவ்வளவு நேரம் தள்ளி நின்று இருத்தவன் காயத்திரி பார்த்த உடன் அவள் அருகில் சென்றான்.
“அவன் என் நண்பன். பெயர் “பார்த்திபன்” என்றாள் காயத்திரி. (பார்த்திபன் பார்க்க நல்ல நிறம் கலையான முகம். ஆறு அடி உயரம். காயத்திரி வேலை செய்யும் கல்லூரியில் அவனும் ப்ரோபஸ்சர்).
ரிஷனால் எதுவும் பேச முடியாமல் அமைதியாய் இருந்தான். அவன் கண்கள் காயத்திரியின் கண்களைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தன.
பார்த்திபன் அனைவர்க்கும் டீ போட கிச்சன் சென்றான். இவ்வளவு உரிமையாய் அவன் செல்வதைப் பார்த்த அனைவருக்கும் மனதுக்குள் நெருடலாக இருந்தது. ரிஷன் மனதுக்குள் தவித்தான். காயத்திரி இல்லாத ஒரு வாழ்க்கை அவனால் கற்பனை கூடச் செய்ய முடியாது. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தது அந்த இடம்.
“காயத்திரி நாங்க எல்லாரும் ஏன் வந்து இருக்கோம்னு எதுவும் கெஸ் இருக்கா உனக்கு?” என்று கேட்டான் ஷாஜித்.
காயத்திரி அனைவரையும் பார்த்தாள்.
அந்த நேரம் பார்த்திபன் டீ கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்து விட்டு காயத்திரி அருகில் சென்று நின்று கொண்டான்.
காயத்திரி மெதுவாக.. “நீங்க எல்லாரும் கன்னியாகுமாரிக்கு வந்து இருக்கலாம்… என்னோட அட்ரஸ் கிடைச்சிருக்கும் அதுனால என்னைப் பார்க்க வந்திருக்கலாம்” என்று சொன்னாள்.
“இல்லை மதினி உங்களை பார்க்க தான் வந்தோம். அதுவும்..! எங்க அண்ணாவுக்கும் உங்களுக்கும் கல்யாணம் பேச வந்தோம்” என்றாள் ஹர்ஷினி.
காயத்திரி முகத்தில் எந்த மாற்றும் இல்லை. அமைதியாக இருந்தாள்.
“காயு.. ஏன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க?” என்று விசாகன் கேட்டான்.
“இந்த மூணு வருசமா காயத்திரியை நீங்க யாரும் தேடலை தானே இப்போ மட்டும் என்ன திடீரெனக் கல்யாணம்??” என்று கேட்டான் பார்த்திபன்.
“இல்லை நாங்க எல்லாரும் காயத்திரியை மூணு வருசமா தேடி கொண்டு தான் இருந்தோம். ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் காயத்திரி இங்க இருக்கறது தெரிஞ்சது. ரிஷன் இந்தியா வர வெயிட் பண்ணோம். அவன் நேத்து தான் வந்தான்” என்று விளக்கமாகச் சொன்னான் பாலாஜி.
பார்த்திபன் ஏதோ பேச வர அவனைத் தடுத்தாள் காயத்திரி.
“பார்த்தி.. நீ ஏதும் பேச வேண்டாம் அமைதியாய் இரு!” என்று சொன்னாள்.
“என்னைப் பேச வேண்டாம்ன்னு சொன்னா நான் வீட்டை விட்டு வெளியே போய்டவா??” என்று காட்டமாகக் கேட்டான்.
“டேய்ய்… நீ அவுங்க எல்லாத்தையும் குற்றம் சொல்லுற, நான் தான் யாரும் வேண்டாம்ன்னு முடிவு எடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தேன். அதைப் புரிஞ்சுக்கோ… நான் நினைச்சு இருந்தா என்னைக்கோ இங்க இருக்குற யார்கிட்ட வேணா போய் இருக்க முடியும்” என்று பொறுமையாகச் சொன்னாள் காயத்திரி.
“நீ போய் இருக்க முடியும்னா என்ன அர்த்தம்!!… இல்லை எனக்குப் புரியல” என்று குழப்பமாகக் கேட்டான் பார்த்திபன்.
“எங்க அண்ணா ரெண்டு பேரு நம்பரும், மது நம்பர், அவுங்க நம்பர் எல்லாமே எனக்குத் தெரியும் ஒரு கால் போதுமே!!” என்றாள்.
“ஒ…. எல்லாம் இருந்து தான் நீ அமைதியா இருந்தியா?” என்று கேட்டான்.
“அப்ப இத்தனை நாள் நான் தான் பைத்தியம் மாதிரி இருந்து இருக்கேன் அப்படி தானா..!?” என்று ஒரு மாதிரியான குரலில் கூறினான் பார்த்திபன்.
“மச்சி.. என்ன டா இப்படிப் பேசுற” என்று குரல் உடைய கேட்டாள்.
“வேற எப்படி பேச சொல்லுற என்னை… ஆறு மாசத்துக்கு முன்னாடி அந்த நாள் நீ எப்படி இருந்தன்னு நியாபகம் இருக்கா?” என்று கேட்டான் பார்த்திபன்.
“பார்த்தா….” என்று குரல் உயர்த்தினாள் காயத்திரி.
“என்ன சவுண்ட் எல்லாம் பலமா வருது” என்று இடக்காகச் சொன்னான்.
“ப்ளீஸ் டா…” என்று கண் கலங்கினாள் காயு.
காயத்திரி கண் கலங்கியதை அவனால் தாங்க முடியவில்லை.
சில நொடிகள் மௌனம் மட்டுமே…
அங்க இருந்த அனைவருக்கும் குழப்பம் மட்டுமே எஞ்சியது.
“அதான் அவர் நம்பர் இருந்தது தானே… போன் பண்ணி பேச வேண்டியது தானே அப்பறம் எதுக்கு அமைதியாய் இருந்த” என்று கேட்டான்.
“அவர்… னா… யாரு டா??” என்று காயத்திரி சிறு புன்னகையுடன் கேட்டாள்.
“அதான் மூணு வருசமா நீ டெய்லியும் ஜெபிக்கிறியே ஒரு பெயர்!! அதை நான் வேற ஜெபிக்கினனுமா…” என்று எரிச்சலாகக் கேட்டான்.
காயத்திரி முகத்தில் விரிந்த புன்னகை.
“சிரிக்காத தங்கம் செமையா காண்டு ஆகுது எனக்கு” என்றான் பார்த்திபன்.
“ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்துக்கு அப்பறமும் எப்படி உன்னால அமைதியாய் இருக்க முடிஞ்சது??” என்று கேட்டான்.
“என்னுடைய சூழ்நிலை” என்று ஒர் வாரத்தையில் பதில் சொன்னாள் காயத்திரி.
“காயு நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருந்தா… எப்படி?” என்று இடையிட்டான் விசாகன்.
“பார்த்தா நைட் டின்னர்க்கு அரேஞ்சு பண்ணு” என்றாள் காயத்திரி.
பார்த்திபன் முறைத்தான்.
“டேய்ய் முறைக்காம போ” என்றாள் காயு.
“இரு உன்னை வந்து பேசிக்கிறேன்” என்று சொல்லி சென்றான் பார்த்திபன்.
அவன் சென்ற உடன் “இப்போ கேளுங்க என்ன தெரிஞ்சுக்கணும் உங்களுக்கு” என்றாள் விசாகனிடம்.
காயு… “உனக்கு மச்சானை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம்மா?” என்று கேட்டான் விசாகன்.
காயு சின்னச் சிரிப்புடன்… “உங்க மச்சான் யாரு?” என்று கேட்டாள்.
அங்கு இருந்த அனைவரும் குழம்பினர்.
“ஏன் காயு… உனக்குத் தெரியாதா என்னோட மச்சான் யாருன்னு?” என்று கேட்டான் வினு நேத்ரன்.
“உங்க மச்சான் ஹர்ஷினியோட அண்ணா” என்றாள் காயத்திரி தெளிவாக.
“அப்பறம் என்ன?” என்றான் விசாகன்.
மதினி… “என்னோட அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்குச் சம்மதம்மா?” என்று கேட்டாள் ஹர்ஷினி.
காயத்திரி பதில் கூறவில்லை. மௌனமாக நின்றாள்.
காயத்திரி மனசுக்குள் கோவம் இருந்தது ஆதலால் மௌனமாக இருந்தாள்.
“இந்த மௌனத்தை நாங்கள் எப்படி எடுத்துக்கிறது?” என்று கேட்டாள் மது.
இறுதியாக ரிஷன் பேசினான்.
“அம்மு…” என்று அழைத்தான் ரிஷன் கிருஷ்ணா.
“என்கிட்ட சம்மதம் கேக்கவா… இங்கு வந்து இருக்கீங்க?” என்று கேட்டாள் காயத்திரி.
ரிஷனுக்குக் காயத்திரியின் கோபம் புரிந்தது. அவளுடன் மனதுக்குள் வாழ்பவனுக்குப் புரியாதா என்ன!!!
அம்மு… “சாரி வீட்டுக்குள்ள வந்த உடனே நான் தான் பேசி இருக்கனும், உன் சம்மதம் கேட்டு நான் வரலை… நம்ம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கேட்டு வந்து இருக்கேன்” என்றான் ரிஷன்.
காயத்திரி ரிஷன் கணத்தில் அறைத்தாள்.
அனைவரும் உறைந்தனர்.
“காயு…” என்று சத்தம் போட்டான் வினு நேத்ரன்.
காயத்திரி வினு நேத்ரனை பார்த்து “ இது எனக்கும் உங்க மச்சானுக்கு உள்ளது நீங்க யாரும் தலையிட கூடாது” என்றாள் காயத்திரி கோவாமாக.
“அம்மு சாரி இன்னும் ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ” என்றான் ரிஷன்.
“எதுக்கு அடிச்சேன்னு தெரியுது அப்படித் தானே…” என்றாள் கண்ணீருடன்.
“தப்பு தான் என்னை மன்னிச்சுடு என்று சொல்லி அவளைக் கட்டி அனைத்தான்” ரிஷன் கிருஷ்ணா.
காதல் கொண்ட மனங்கள் கண்களில் கண்ணீர் மட்டுமே வந்தது இருவருக்கும்.
அனைவருக்கும் சந்தோசம்.
சில நொடிகள் அங்கு எந்த ஒரு சத்தமும் இன்றி நகர்த்தது.
வெங்கடேஷ் போன் சத்தத்தில் தான் இருவரும் பிரிந்தனர்.
காயு… “ஒரு விஷயம் மட்டும் சொல்லு எதுக்கு மச்சானை அடிச்ச?” என்று கேட்டான் விசாகன் அதிர்ச்சியாக.
காயு சிரித்து விட்டு… “உங்க மச்சான் இத்தனை வருஷம் கழுச்சு என்னைப் பார்க்கிறாரு வந்த உடனே என்கிட்ட பேசாம… பார்த்திபன் மேல சந்தேகமா ஒரு பார்வை போச்சுல அது தான் என் கோவம் அதுக்குத் தான் அடிச்சேன்” என்றாள் காயத்திரி.
“நாங்க உள்ள வரும் போது நீங்க பேசிட்டு இருந்த விஷயம் அப்படி” என்றான் விசாகன் எரிச்சலாக.
விசாகா… “ உங்க மச்சானை நான் வேறு ஒரு பொண்ணு கூடப் பார்க்க கூடாத நிலையில் பார்த்தா கூடக் கண்டிப்பா நான் உங்க மச்சானை சந்தேகம் பட்டிருக்க மாட்டேன். எனக்குத் தெரியும் அவர் எப்படின்னு!! நாங்க பெருசா பார்த்துகிட்டதோ.., பேசுகிட்டதோ… இல்லை தான். ஆனால் அவுங்க காதல் சொன்ன நாள் இருந்து இப்போ வரைக்கும் அவரை நான் நினைக்காம இருந்தது இல்லை. இந்த மூணு வருசமா அவர் கூட மனசால வாழ்ந்துட்டு தான் இருக்கேன். எங்க காதல் மட்டும் தான் என்னை இப்போவரைக்கும் உயிரிப்போடு வச்சு இருக்கு” என்றாள் காயத்திரி.
சத்தியமாக இப்படி ஒரு காதலை அங்கு இருந்த யாரும் பார்த்தது இல்லை.
அனைவருக்கும் பிரம்மிப்பாக இருந்தது.
சரியாகக் காயத்திரி விசாகனிடம் பேசும் போது பார்த்தி நைட் டின்னர் வாங்கி வந்து இருந்தான்.
“தங்கம் டின்னர் ரெடி எல்லாரும் சாப்பிடலாம்” என்றான்.
அனைவரும் கீழே ரவுண்டாகச் சாப்பிட அமர்த்தனர்.
காயத்திரி மற்றும் பார்த்திபன் தான் பரிமாறினார்கள்.
காயத்திரி வீட்டில் கேசரி செய்து இருந்தாள் அதை முதலில் வைத்தாள்.
ரிஷன் சாப்பிடாமல் அமர்ந்து இருந்தான்.
காயத்திரி குழப்பமாக “ஏன் சாப்பிடல? காரமா இருக்கா?” என்று கேட்டு ரிஷன் தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டாள்.
பெருசா காரமாக ஒன்றும் இல்லை.
காயத்திரி சாப்பிட்ட பின் சின்னச் சிரிப்புடன் சாப்பிட ஆரம்பித்தான்.
காயத்திரி பொய் கோபத்துடன் ரிஷனை முறைத்தாள்.
அங்கு இருந்த அனைவரும் சிரித்து விட்டு சாப்பிடனர்.
அந்த நேரம் வினு நேத்ரன் போன் அடித்தது. அவன் தந்தை தான் போன் செய்தது. கால் அட்டன் செய்து பேசினான்.
“சொல்லுங்க அப்பா” என்றான் வினு.
“காயத்திரியை பார்த்தாச்சா எப்படி இருக்கா?” என்று கேட்டார்.
“ம்ம்ம்ம் பார்த்துட்டோம் நல்லா இருக்கா” என்றான் வினு.
“சரி ஒரு முக்கியமான விஷயம்” என்று சொன்னார்.
“என்னப்பா” என்று கேட்டான் யோசைணையாக.
“காஞ்சனா வீட்டுக்காரர் நாகராஜனுக்கு ஆக்ஸிடென்ட் திருச்சி ஹாஸ்பிட்டல வச்சு இருக்காங்கலாம் ரொம்பச் சீரியஸ் போல. எனக்கு இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் வந்தது” என்றார்.
“எப்படி பா ஆக்ஸிடென்ட்” என்று கேட்டான்.
“அது தெரியல டா. நாளைக்கு நான் மட்டும் போய்ப் பார்த்துட்டு வரேன்” என்று சொன்னார்.
“ம்ம்ம்ம் சரிப்பா. மகிழ் என்ன பண்ணுறா?” என்று கேட்டான்.
“குட்டி தூங்கிட்டடா” என்று சொன்னார்.
“சரி பா பார்த்துக்கோங்க நாங்க நாளைக்கு வந்துடுறோம்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
“யாருக்கு ஆக்ஸிடென்ட் பாவா?” என்று கேட்டாள் ஹர்ஷினி.
“அது காஞ்சனா அக்கா வீட்டுக்காரருக்கு” என்று சொன்னான் வினு.
“என்ன அண்ணா சொல்லுற!!” என்றான் விசாகன் அதிர்ச்சியாக.
“ஆமாம் டா ரொம்பச் சீரியஸ் போல திருச்சி ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணி இருக்காங்க. நாளைக்கு அப்பா போய் பார்க்க போறேன்னு சொன்னாரு” என்று சொன்னான் வினு.
அப்ப தான் காயத்திரி இருப்பதையே உணர்ந்தான் வினு நேத்ரன்.
ஏய்ய்ய்… “காயு என்ன நான் சொல்லிட்டு இருக்கேன் நீ அமைதியா இருக்க” என்று கேட்டான்.
“எவனுக்கோ ஆக்ஸிடென்ட் ஆனா நான் என்ன பண்றது” என்று கேட்டு விட்டு சாப்பிட்ட பத்திரங்களை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குச் சென்றாள்.
வினு மற்றும் விசாகன் அதிர்ச்சி ஆகினர்.
“டேய்ய்… பார்த்தா வா சாப்பிடலாம்” என்று அழைத்தாள் காயு.
“அந்த ஆளை பத்தி இங்க பேசாதீங்க.. அவன் எல்லாம் மனுஷனே கிடையாது” என்று கோவமாகச் சொல்லி சாப்பிட சென்றான் பார்த்திபன்.
ஏன் இந்தக் கோபம் என்று புரியாமல் குழம்பினர் இருவரும்.
மது பரிமாற இருவரும் சாப்பிட்டனர்.
ரிஷன் காயத்திரி அருகில் தான் அமர்ந்து இருந்தான்.
“உங்க போன் நம்பர் வேணும் எனக்கு” என்று ரிஷனிடம் கேட்டான் பார்த்திபன்.
ரிஷன் சிரித்துக்கொண்டு நம்பரை சொன்னான்.
“மச்சி… என்னன்னு சேவ் பண்ணுற?” என்று கேட்டாள் காயத்திரி.
“ம்ம்ம்ம்… “உன் புருஷன்னு” என்று எரிச்சலாகச் சொன்னான்.
“ஹாஹாஹா” என்று சிரித்தாள் காயு.
“சிரிக்காத ரொம்பப் பல்லு சுளுகிக்கப் போகுது” என்றான் கிண்டலாக.
சாப்பிட்டு விட்டு ஹாலில் அமர்த்தனர் அனைவரும்.
காயத்திரி கீழே அமர்த்தாள். ரிஷன் அவள் மடியில் படுத்துக்கொண்டான்.
காயு… “நாகராஜன் மேல உனக்கு என்ன கோவம்?” என்று கேட்டான் வினு நேத்ரன்.
காயத்திரி கோவத்துக்கு ஆனா காரணத்தைச் சொன்னாள். அங்கு இருந்த அனைவரும் ஸ்தம்பித்தனர்.
நாகராஜன் என்ன செய்தான்..??
ரிஷன் காயத்திரி கல்யாணம்…!!
பார்க்கலாம்…..