அத்தியாயம் – 18
மறுநாள் காலை அழகாக விடிந்தது.
ரிஷன் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள். இந்த மூன்று வருடங்களாகக் கற்பனையில் அவளுடன் வாழ்ந்து வருகிறான், ஆனால் இன்று அவளைக் காண செல்லும் நேரம் மனதுக்குள் பெரும் அழுத்தம் எதனால் என்று தெரியவில்லை.
அதே நேரம் காயத்திரி மனதுக்குள் இனம் புரியாத உணர்வு மனதுக்குள்ளும் சந்தோஷம் மற்றும் வருத்தம் என்று கலவையான உணர்ந்தாள். அன்று கல்லூரிக்கு விடுமுறை தினம். ஆதலால் வீட்டில் தான் இருந்தாள்.
*******************
ரிஷன் தினமும் செய்யும் காலை உடல் பயிற்சி செய்து முடித்தான். அவன் செல்போனயில் பாடல் பாடிக்கொண்டு இருந்தது. விசாகன் ரிஷன் அறையைத் தட்டி வீட்டு உள்ளே வந்தான்.
“குட் மார்னிங் மச்சான்” என்றான் விசாகன்.
“குட் மார்னிங் டா… என்னடா காலையில் வந்து இருக்க.?” என்றான் ரிஷன்.
“மச்சான் உங்க ரிப்போர்ட்டஸ் வேணும் ஜஸ்ட் சும்மா பார்க்கணும்” என்றான் விசாகன்.
“ஹாஹாஹா எனச் சிரித்து விட்டு உனக்கு மெயில் பண்றேன் டாக்டர்” என்றான் கிண்டலாக.
விசாகன் MS முடித்து விட்டுத் தூத்துக்குடியில் ஒர் ஹாஸ்பிட்டலில் வேலை செய்கிறான்.
“மச்சான் காலையில் 11 மணிக்குப் பிலைட் என்றான்” விசாகன்.
“ம்ம்ம்ம் சரி” என்றான் ரிஷன்.
சற்று நேரத்தில் வெங்கடேஷ், அவன் மனைவி இந்துஜா வந்து இருந்தனர்.
ரிஷனை கட்டி அணைத்தான் வெங்கடேஷ்.
“எப்படி டா இருக்க” என்றான் வெங்கடேஷ்.
“நல்லா இருக்கேன் டா” என்றான் ரிஷன்.
இந்துஜாவை ரிஷனக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“சாரி டா நேத்து நைட் வர முடியல” என்றான் வெங்கடேஷ் வருத்தமாக.
“டேய்ய் மச்சி விடு அதான் இப்போ வந்துட்டேல” என்றான் ரிஷன்.
ரிஷன் வெங்கடேஷ் கல்யாணத்துக்கு வரததால் அவர்களுக்குப் பரிசு வாங்கி வந்து இருந்தான் அதை அவர்களுக்குத் தந்தான்.
இந்து மாசமாக இருப்பதால் அவள் கன்னியாகுமாரி செலவில்லை. அவளை அவள் அன்னை வீட்டில் விட்டுச் சென்றான் வெங்கடேஷ்.
சென்னையில் டிராபிக் அதிகம் என்பதால் காலை 8 மணிக்கு எல்லாம் ஏர்போர்ட்க்கு கிளம்பினர்.
ஏர்போர்ட் பக்கத்தில் இருக்கும் ஹோட்டல் தான் காலை உணவு சாப்பிட்டனர்.
ரிஷன் கூடப் பாலாஜி, மது, ஷாஜித், வெங்கடேஷ், வினு, விசாகன் மற்றும் ஹர்ஷினி கன்னியாகுமாரிக்கு கிளம்பினர்.
மதியம் 1 மணிக்கு தான் தூத்துக்குடி வந்தனர். நேராக ஹர்ஷினி வீட்டுக்கு தான் சென்றனர்.
ரிஷன் ஹர்ஷினி மகள் மகிழ்மதி தூங்கி கொஞ்சினான். புது முகம் பார்த்து குழந்தை அழுததாள். தீபாலக்ஷ்மி குழந்தையைச் சமாதானம் செய்தார்.
அனைவரும் மதியம் உணவு சாப்பிட்டு விட்டு இன்னோவா காரில் கன்னியாகுமாரிக்கு புறப்பட்டனர்.
ஷாஜித் தான் கார் ஓட்டி கொண்டு சென்றான். ரிஷன் முன்னாடி சீட்டில் அமர்ந்து இருந்தான். ரிஷன் மனதுக்குள் ஒருமாதிரி அழுத்தமாக இருந்தது ஏன் என்று காரணம் தெரியவில்லை அவனுக்கு. அமைதியாய் கண்களை மூடி கொண்டு வந்தான்.
“மச்சி ஏன் டா ஒருமாதிரி இருக்க” என்று கேட்டான் வெங்கடேஷ்.
“ஒன்னும் இல்லை டா சும்மா தான்” என்றான் ரிஷன்.
“அண்ணா ஹெல்த்துக்கு ஒன்னும் இல்லை தான” என்று படபடப்பாகக் கேட்டாள் ஹர்ஷினி.
“உடம்புக்கு எல்லாம் ஒன்னும் இல்லை பாப்பா நான் நல்லா தான் இருக்கேன்” என்றான் ரிஷன்.
ஷாஜித் காரில் பாடல்கள் போட்டு விட்டான்.
அமைதியாக அனைவரும் அதைக் கேட்டுக்கொண்டு வந்தனர்.
****************
காயத்திரி வீட்டில் அமர்ந்து இருந்தாள். மனதுக்குள் ஒரு விதமான தவிப்பு…. ஏன் என்று யோசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். பழைய நினைவுகள் அவள் மனதுக்குள் வலம் வந்தது.
சென்ற வருடம் இதே நாளில் தான் மாலாவுக்கு நடந்தா அனைத்தையும் நத்தத்தில் குடி இருந்த காஞ்சனாவின் பக்கத்து வீட்டுப் பெண் மூலம் அறிந்து இருந்தாள். அதைத் தான் நினைத்தாள் இப்போது….
காயத்திரி வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு… காளிதாஸ் முழு நேரமும் போதையில் தான் இருந்தான்.
சில நேரம் உச்சக்கட்ட போதையில் பெண்களை நாடி சென்றான். அதிகமான போதை, தவறான சகவாசம் ரெண்டும் சேர்ந்து இரண்டு மாதத்தில் அவன் உயிரை பறித்தது.!
மாலா தனியாகத் திண்டுக்கலில் இருக்க முடியாமல் தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுத்து விட்டு, நத்தத்தில் இருக்கும் காஞ்சனா வீட்டுக்கு சென்று விட்டார்.
மகேஸ்வரி தன் அண்ணியைப் பார்த்துக்கொண்டார். வீட்டில் ரெண்டு ரூம் மட்டும் தான் இருந்தது அதனால் மாலா ஹாலில் தான் தங்கினார்.
திண்டுக்கல் வீட்டை வாடகைக்கு விட்டார் மாலா. அதன் வருமானத்தைக் கொண்டு மகள் வீட்டில் இருந்து வந்தார்.
சில மாதங்கள் சென்ற பின் ஒரு நாள் இரவு மாலாவுக்கு ஸ்ட்ரோக் வந்து வாய், கை, கால் எல்லாம் செயல் இழந்தது.
புடவை எல்லாம் விலகி அழங்கோலமாகக் கிடந்தார். பேச முடியாமல் எதுவும் செய்யமுடியாமல் கிடந்தார். பல மணி நேரம் அப்படியே தான் இருந்தார்.
மறுநாள் காலையில் பாண்டி தான் முதலில் பார்த்தார். உடனே மகேஸ்வரி அழைத்து வந்து மாலாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர். காஞ்சனா அழுதுக்கொண்டே இருந்தாள்.
டாக்டர் பரிசோதனை செய்து விட்டு அதிகமான பிரஷர் இருந்த காரணத்தால் மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் ஓட்டம் தடை பட்டுவிட்டது அதுனால் தான் மாலாவுக்கு ஸ்ட்ரோக் வந்து உள்ளது என்றார். அவரைக் குணப்படுத்த முடியாது வீட்டுக்கு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்ளும் படி கூறினார். வேற வழி இல்லாமல் மாலாவை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
அவருக்கு வாய் பேச முடியவில்லை. இடது காலும், வலது கையும் சுத்தமாகச் செயல் இழந்தது. இடது கையில் ஒரு மாறி இழுத்துக்கொண்டது. மொத்தமாக அவரால் எழுத்து நடக்கவோ, சாப்பிடவோ முடியாது படுக்கையில் தான் படுத்து இருக்க வேண்டிய நிலை. எல்லாத்துக்கும் வேறு ஒருவர் உதவியைத் தான் எதிர்பார்த்து காத்து இருக்க வேண்டிய நிலைமை. தன் நிலைமையை அறவே வெறுத்தார் மாலா.
மாலாவுக்கு ரூம் இல்லாமல் காஞ்சனா அறையில் தான் தங்க வைத்தனர். மானஷா மாலாவை பார்த்துக் கொஞ்சம் பயந்தாள். அதனால் மானஷாவை மகேஸ்வரி கூடத் தங்க வைத்துக் கொண்டார். நாள் முழுவதும் யாராவது ஒருத்தர் மாலா கூடவே இருக்க வேண்டிய நிலைமை. நாகராஜன் தான் மிகவும் சிரமப்பட்டான், நாள் முழுக்க மாலா ரூம்லே இருப்பதால்.
இரண்டு நாள் பொறுத்த அவன் மூன்றாம் நாள் சண்டை போட்டான் காஞ்சனாவிடம்,
“ஏய்…. எப்போ பாரும் உங்க அம்மா ரூம்க்குள்ளவே இருந்த நான் என்ன பண்றது? எனக்குன்னு இடம் வேண்டாமா? நைட் கூட மனுஷன் பொண்டாட்டி கூட இருக்க முடியல” என்றான் நாகராஜன்.
“இதுக்கு மேல உங்க அம்மா இருந்தாலும் பரவில்லைனு நைட் உன்கூடத் தான் படுப்பேன்” என்று காஞ்சனாவிடன் சண்டை போட்டான் நாகராஜன்.
(அவனுக்குக் காயத்திரியை தொட விடாமல் மாலா செய்ததை வைத்து பழி வாங்குகினான்).
அதனால் வேற வழி இல்லாமல் ஹாலில் தங்க வைத்தனர்.
பாண்டி ஆட்டோ ஓடுவதால் நைட் குடித்து விட்டு லேட்டா தான் வருவார்.. அப்படி வரும் நேரத்தில் மாலாவின் புடவை எதுவும் விலகி இருந்தால் அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே நின்று இருப்பார். சில நேரம் கைகளால் திண்டவும் செய்வார். மாலா எதுவும் சொல்லவும், செய்யவும் முடியாமல் தவித்தார்.
ஒரு நாள் மகேஸ்வரி அதனைப் பார்த்து விட்டு பாண்டியை அழைத்துக்கொண்டு ரூம்க்கு சென்று விட்டார்.
மகேஸ்வரி காஞ்சனாவிடம் சொல்லி மாலாவை ஹோமில் சேர்க்க சொன்னார்.
காஞ்சனாகும் நாகராஜனால் பல இடைஞ்சல். காயத்திரி தொட முடியாமல் போனதை சொல்லி சொல்லி காஞ்சனாவிடம் தினமும் சண்டை போட்டான் நாகராஜன்
ஏய்… “பெருசா என்ன டி ஆசைப்பட்டேன். காயத்திரியை ஒரே ஒரு தடவ முழுசா பார்க்கணும், அவளைத் தொடணும் தானே அதுக்குப் போய் அம்மாவும், மகளும் ரொம்பப் பேசுனீங்க… இப்போ அவ இருந்து இருந்தா அவளே உங்க அம்மாவை பார்த்துக்குவா உனக்கும் கஷ்டம் இல்லை… நானும் அவளை வேணும் போது எல்லாம் தொட்டு இருந்து இருப்பேன். அவமூலமா ஒரு பையன பெத்து இருக்கலாம் எங்க எல்லாத்தையும் கெடுத்துவிட்டீங்க” என்று சொல்லி காஞ்சனாவிடம் சண்டை போட்டான்.
காஞ்சனா வேறு வழி இல்லாமல் ஹோமில் சேர்க்க ஒத்துக்கொண்டார்.
ஆனால் மாலாவை பல ஹோமில் வச்சுக்க முடியாது என்று சொல்லினர். அதனால் திருச்சியில் உள்ள ஒரு ஹோமில் கதிரேசன் மூலம் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தனர்.
அந்த ஹோமை ஒர் ஆண் நடத்தி வந்தார். அவர் பெயர் மனோகரன். வயது 55 ஆகும்.
அந்த ஹோமில் 2 பெண்கள், 11 ஆண்கள் இருந்தனர்.
மாலாவை தனி அறையில் தான் தங்க வைத்தனர்.
காலையில் மற்றும் மாலையில் அவரைக் குளித்து ட்ரெஸ் மாத்தி விட ஒரு பெண் நர்ஸ் பெயர் கயல்விழி வந்து அணைத்து வேலையும் செய்வாள். மற்ற நேரம் எல்லாம் தனியாகத் தான் இருக்க வேண்டும். தனிமை அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றது.
காஞ்சனாவால் தாயை சென்று பார்க்க முடிவதில்லை. நாகராஜன் அதுக்கு அனுமதி அளிப்பது இல்லை. ஒரு தடவை காஞ்சனா நாகராஜனை மீறி சென்று பார்த்து வந்த போது பயங்கரமா சண்டை போட்டு டிவோர்ஸ் பண்ணிடுவேன்னு மிரட்டினான். காஞ்சனா அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல் இருந்துக்கொண்டாள்.
மாலாவை பார்க்க யாரும் வராமல் இருப்பாதாலும், அவரால் வாய் பேச முடியாது எனக் கண்டுகொண்ட சிலர் அவரிடம் சில்மிஷம் செய்தனர். மாலா ஏதும் செய்ய முடியாமல் தவித்தார். ஒரு நாள் நர்ஸ் கயல்விழி உதவுடன் உரிமையாளர் மனோகரனிடம் மாலா புகார் அளித்தார்.
அதன் பின் இன்னும் அதிகமாகச் சில்மிஷம் செய்தனர். மனோகரன் கூட மாலாவிடம் பாலியல் சிண்டல் செய்ய ஆரம்பித்தான்.
மனோகரன் நர்ஸ் கயலை கூப்பிட்டு “மாலா ஏது சொன்னாலும் வெளியே சொல்ல கூடாது மீறிச் சொன்னால் உன்னை வேலை விட்டு தூக்கிடுவேன்” என்று மிரட்டினார்.
கயலுக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம் அவள் குடும்பச் சூழ்நிலைக்கு, அதனால் கயல் வாய் மற்றும் காதையும் மூடி கொண்டாள்.
மாலா ஏதும் செய்ய முடியாமல் தவித்தார். யாரும் அவரைப் பார்க்க வரவில்லை. தன் கணவருக்குக் கூட வருஷ பூஜை செய்ய முடியவில்லை அவரால். கிட்ட தட்ட 10 மாதத்துக்கு மேல் பல இனல்கள் அனுபவித்து உடல் முழுவதும் புண் வந்து இறுதியில் வரகூடாத நோய் வந்து இறந்தார்.
இவை அனைத்தும் காயத்திரிக்கு தெரிய வந்த போது அவருக்குக் கடவுள் கொடுத்த தண்டனை என்று நினைத்துக்கொண்டாள். காயத்திரியின் போன் அடித்ததால் அவள் பழைய நினைவில் இருந்து கலைந்தாள்.
எஸ்தர் தான் அழைத்து இருந்தார் அவரிடம் பேசி விட்டு மாலை டீ போடா சென்றாள் காயத்திரி.
******************
ரிஷன் மற்றும் அனைவரும் மாலை பொழுதில் தான் கன்னியாகுமாரி வந்து அடைந்தனர்.
“ஷாஜி… எதாவது ஹோட்டல் பாருடா நைட் ஸ்டே பண்ணிட்டு மார்னிங் போய் அம்முவை பார்க்கலாம் இப்போவே லேட் ஆகிடுச்சு” என்றான் ரிஷன்.
“அண்ணா ஹோட்டல ரூம் போட்டுட்டு ரெப்பிரேஷ் ஆகிட்டு காயத்திரி மதினியை பார்க்க போகலாம்” என்றாள் ஹர்ஷினி.
“பாப்பா இப்போவே ரொம்ப லேட் ஆகிடுச்சு மா இந்த நேரம் போய் எப்படித் தனியா இருக்குற பொண்ணு வீட்டுல போய் நிக்க முடியும்” என்று கேட்டான் ரிஷன்.
“மச்சி மார்னிங் காயு காலேஜ் போய்டுவா” என்றாள் மது.
“காலேஜ்க்கா எதுக்கு??” என்று கேட்டான்.
“மச்சான் காயு காலேஜ்ல ப்ரோபஸ்சர ஒர்க் பண்ணுற என்றான்” வினு நேத்ரன்.
“ம்ம்ம்ம் ME படிச்சுட்டுக் காலேஜ் ப்ரோபஸ்சர்” என்று சொன்னான் ரிஷன்.
“மச்சான்… தப்பு ME படுச்சுட்டு இல்லை MBA படுச்சுட்டு” என்றான் விசாகன் திருத்தினான்.
“என்ன சொல்லுற MBA வா?” என்று அதிர்ச்சியாய் கேட்டான் ரிஷன்.
“மச்சி காயு வீட்டை விட்டு வெளியே வந்து அவளுக்குத் தெரிஞ்ச ப்ரோபஸ்சர் எஸ்தர் ஹெல்பில் நாகர்கோயில் காலேஜில் MBA முடுச்சுட்டு இங்க ஒரு காலேஜில் ப்ரோபஸ்சர ஒர்க் பார்க்கிறாங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் அவளைக் கண்டு பிடுச்சோம் டிடெக்டிவ் மூலமா” என்றான் ஷாஜித்.
“அண்ணா நாங்க யாரும் இன்னும் மதினியை பார்க்கல… ஒரு வேளை நாங்க பார்க்க போய் அவுங்க வேற எங்காவது போய்ட்டா கண்டு பிடிக்கிறது கஷ்டம். நீங்க வேற காண்டாக்ட் ஏதும் இல்லாம இருந்திங்க அதான் நாங்க யாருக்கு காயத்திரி மதினிக்கு கஷ்ட குடுக்கல” என்றாள் ஹர்ஷினி.
“அது மட்டும் இல்லை காயு வேற லைப் பத்தி யோசிச்சு இருந்த நாங்க போய் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு நினைச்சோம்” என்றாள் மது.
சற்று நேரம் அமைதியாய் இருந்தான் ரிஷன் அதன் பின்
“சரி போய்ப் பார்க்கலாம்” என்றான் ரிஷன்.
அந்த நேரம் சரியாக ஷாஜித் ஹோட்டல் முன்னாடி காரை நிறுத்தினான்.
நான்கு ரூம் போட்டனர். வினு ஹர்ஷினிக்கு ஒரு ரூம், பாலாஜி மதுக்கு ஒரு ரூம். விசாகன் ஒரு ரூம், ரிஷன், ஷாஜித்,வெங்கடேஷ் மூவரும் ஒரு ரூம் என்று எடுத்துக்கொண்டனர்.
அனைவரும் ரூம்க்கு சென்று ரெப்பிரேஷ் ஆகி விட்டு வந்தனர்.
ரிஷன் மதுவிடம் “காயுக்கு கால் பண்ணி நீயும் பாலாஜியும் கன்னியாகுமாரி வந்தோம் உன்னைப் பார்க்க வரோம்ன்னு சொல்லு” என்று சொன்னான்.
“மச்சி காயு நம்பர் இல்லை வீட்டு அட்ரஸ் மட்டும் தான் இருக்கு” என்றாள் மது.
ரிஷன் வேற ஏதும் சொல்லாமல் அமைதியானன்.
மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்!! ஏதோ ஒர் அழுத்தமான உணர்வு ஏன் என்று புரியாமல் தவித்தான்.
அனைவரும் காயத்திரி பார்க்க கிளம்பினார்கள்.
“பதறும் இதயம் தோண்டி எடுத்து…
சிதறு தேங்காய் போட்டு முடித்து….
உடைந்த சத்தம் உந்திடும் முன்னே…
எங்கே சென்றாய்.?? எவ்விடம் சென்றாய்.??
என்னைக் காணும் போது
கண்ணைப் பார்த்து சொல்லு.!!
கண்ணே என் போல
நீயும் காதல் கொண்டாயா..??”
காரில் சரியாக இந்த
பாடல் ஒலித்தது. ரிஷன் மனதிலும் இதே வரிகள் தான் ஓடியது.
ரிஷனை பார்த்தால் காயத்திரி என்ன செய்வாள்..??
இருவரின் மனங்களும் இணையுமா..??
பார்க்கலாம்..!!