எபிலாக்
ஊட்டியில் தேன் நிலவை முடித்துவிட்டு காயத்திரி மற்றும் ரிஷன் கிருஷ்ணா சென்னைக்கு வந்தனர்.
சென்னையில் விசா வேலைகளை ரிஷன் பார்க்க., மறுநாளே இருவருக்கும் விசா ரெடி ஆகி இருந்தது. அதனால் ரிஷன் டெக்சாஸ் செல்ல டிக்கெட் பார்த்தான். இன்னும் பத்து நாளில் விமானத்தில் டிக்கெட் இருக்க, டிக்கெட் போட்டு விட்டான் ரிஷன்.
ரிஷன் மற்றும் காயத்திரி டெக்சாஸ் செல்ல ஆயத்தமானார்கள்.
கன்னியாகுமாரி வீட்டை காலி செய்து குடுத்து விட்டாள் காயத்திரி.
இடையில் ஒரு நாள் தூத்துக்குடி வினு நேத்ரன் வீட்டில் தங்கினார்கள்.
பத்து நாள் சட்டென்று சென்றது.
இருவரும் இன்று இரவு டெக்சாஸ் கிளம்புகிறார்கள்.
வினு நேத்ரன், ஹர்ஷினி, ரிஷனின் நண்பர்கள், பார்த்திபன் அனைவரும் வழி அனுப்ப ரிஷன் கிருஷ்ணா மற்றும் காயத்திரி தங்கள் வாழ்க்கையை நோக்கி டெக்சாஸ்க்குப் பயணம் ஆனார்கள்.
20 மணி நேர பயணம்…. முதல் வகுப்புப் பயணச் சீட்டு ஆதலால் சற்றுச் சௌகரியமாக இருந்தது காயத்திரிக்கு.
மாலை நேரத்தில் தான் விமானம் டெக்சாஸ்க்கு சென்று அடைந்தது. தங்களுடைய லுக்கேஜ் எல்லாம் கலெக்ட் செய்து வெளிய வர ஒரு மணி நேரம் ஆனது.
குளிர் சற்று அதிகமாக இருந்ததால் காயத்திரிக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. கையுடன் கை தேய்த்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
வெளியே ரிஷனின் நண்பன் மாதேஷ் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.
ரிஷனை பார்த்த உடன் அவனைக் கட்டி அனைத்து திருமண வாழ்த்துத் தெரிவித்தான். காயத்திரிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றான்.
மாதேஷ்க்கு அங்கு வேலை இருந்ததால் ரிஷனிடம் காரை கொடுத்துவிட்டுச் சென்றான்.
காயத்திரியுடன் தனியாக முதல் கார் பயணம் அதை மிகவும் ரசித்தான் ரிஷன் கிருஷ்ணா.
மீண்டும் காரில் இரண்டு மணி நேரம் பயணம் ரிஷனுடைய வீட்டிற்குச் சென்றடைய.
சில மாதங்களுக்கு முன்புதான் ரிஷன் இந்த வீட்டை வாங்கி இருந்தான்.
ஹூஸ்டன் நகரத்தின் அருகில் உள்ள வுடலண்ட்ஸ் சோசியல் தான் ரிஷன் தங்கி இருந்தான்.
நான்கு படுக்கை அறை கொண்ட மூன்று மாடி வீடு. கீழே வரவேற்பறை, ஹால் மற்றும் பூஜை அறை.
முதல் தளத்தில் கிட்சன் டைனிங் ரூம் மற்றும் ஒரு பெட் ரூம். இரண்டாம் தளத்தில் இரண்டு படுக்கையறை மற்றும் ஜிம் போன்ற அமைப்பு. மூன்றாம் தளத்தில் ஒரு படுக்கையறை மற்றும் மினி தியேட்டர் போன்ற அமைப்பு.
இரவு நேரம் நெருங்கியதால் ஹூஸ்டனில் உள்ள பிரபல இந்திய உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு ரிஷன் மற்றும் காயத்திரி வீட்டுக்கு வந்தனர்.
காயத்திரி ரிஷனுடன் கை கோர்த்துக்கொண்டு வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்தனர்.
ஹாலில் ரிஷனின் பெற்றோர்கள் படம் பெரிதாக மாற்றப்பட்டிருந்தது. இருவரும் அவர்களை வணங்கி ஆசிப்பெற்றனர். குளிர் அதிகமாக இருந்ததால் ரிஷன் ஹீட்டரை ஆன் செய்து விட்டான்.
காயத்திரி பூஜை அறைக்குச் சென்று சிறியதாகப் பூஜை செய்து சாமி கும்பிட்டாள் அதன் பின் வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்தாள்.
ரிஷன் தாங்கள் வந்து சேர்ந்ததை ஹர்ஷினிக்கும் தன் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தான்.
காயத்திரி பார்த்திபனுக்குக் கால் செய்து பேசினாள்.
இருவருக்கும் மிகவும் அசதியாக இருந்ததால் தங்கள் அறைக்குச் சென்று தூங்கினர்.
புது இடம் மற்றும் புதுச் சூழ்நிலை காரணமாகக் காயத்திரி இரவு தூங்க சற்று சிரமப்பட்டாள். மெடிடேஷன் செய்த பிறகு தான் தூங்கினாள்.
மறுநாள் காலையில் ரிஷன் தான் முதலில் கண் விழித்தான். அருகில் தன் மனைவியைப் பார்த்து ரசித்துக் கன்னத்தில் முத்தமிட்டான்.
மெதுவாக எழுந்து தன் அன்றாடம் செய்யும் உடல் பயிற்சி செய்தான்.
கிட்சன் சென்று டீ போட்டு குடித்து விட்டு காலை உணவாகச் சப்பாத்தியும் காளான் குருமாவும் செய்து வைத்தான். காயத்திரி மெதுவாக எழுந்து வந்தாள்.
“குட் மார்னிங் டியர்” என்றான் ரிஷன்.
“குட் மார்னிங்” என்றாள் சோம்பலாக.
ரிஷன் டீ போட்டு கொடுக்கக். காயத்திரி டீ குடித்து விட்டு ரிஷன் தோளில் சாய்ந்து கொண்டாள். ரிஷன் அவள் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு “அம்மு இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு ஆபிஸ் உன்னோட பிளான் என்ன.?” என்று கேட்டான்.
காயத்திரி சற்று யோசித்து விட்டு….
“உங்க கம்பெனியிலே ஜாயின் பண்ணிக்கிறேன் வேக்கன்சி பார்த்து சொல்லுங்க” என்றாள்.
ரிஷனுக்குச் சந்தோஷம்…. அவள் முகம் நிமிர்த்தி இதழில் முத்தமிட்டான்.
“சரி அம்மு நான் வேகன்ஸி பார்த்து சொல்றேன் இன்டர்வியூக்கு ரெடி ஆகிக்கோ” என்றான்.
சின்னச் சின்னச் செல்ல சீண்டல்களுடன் குளித்துவிட்டு வந்து இருவரும் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டு விட்டுப் பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கினார்கள்.
ரிஷனு டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்ததால் ஹாஸ்பிடல் சென்று தன் உடல் நிலையைப் பரிசோதித்தான். டாக்டர் அவன் உடல்நிலை சீராக உள்ளதாகச் சொன்னார். அதன் பின் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.
ரிஷன் சோர்வாக இருந்ததால் சென்று படுத்து விட்டான். காயத்திரி மதிய உணவை தயார் செய்தாள்.
காயத்திரி கிட்சனில் வேலை செய்து கொண்டு இருந்த போது ரிஷன் அவளைப் பின்பக்கமாக அணைத்தான். காயத்திரி முதலில் அதிர்ந்தாலும் ரிஷனை உணர்ந்த பிறகு காதலுடன் அவன் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள்.
“ஓய் என்ன தூங்கலையா.? “ என்று கேட்டாள் காயத்திரி.
“ நீ இல்லாம தூக்கம் வர மாட்டேங்குது நீ வா சேர்ந்து தூங்கலாம்” என்று அழைத்தான் ரிஷன்.
காயத்திரி மெல்ல சிரித்து விட்டு
“ லஞ்ச் ரெடி கிருஷ்ணா சாப்பிட்டுப் படுக்கலாம்” என்றாள்.
ஒருவருக்கொருவர் மதிய உணவை ஊட்டி விட்டுக்கொண்டே சாப்பிட்டனர். ரிஷன் கிச்சனை கிளீன் செய்தான்.
காயத்திரியை அணைத்து அவள் காதில் “ ஐ நீட் யூ அம்மு” என்றான்.
காயத்திரி வெட்கத்துடன் சிரித்துத் தன் சம்மதத்தைத் தெரிவிக்க…. ரிஷன் உதட்டில் முத்தமிட்டு அவளுக்குள் சரண் புகுந்தான்.
குளிருக்கு முதலில் சிரமப்பட்டாலும் அதன் பின் அந்த ஊரின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.
இந்த ஒரு வார காலத்தில்
ரிஷணுடன் சந்தோஷமாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்தாள். ரிஷன் அவளை இன்டர்வியூக்குத் தயார்படுத்தினான்.
ரிஷன் வேலைக்குச் சென்ற இரண்டாம் நாளே காயத்திரிக்கு இன்டர்வியூ செய்து தன் டீமில் இணைத்துக் கொண்டான். அவன் டீமேட் அனைவருக்கும் தன் மனைவியை அறிமுகம் செய்து வைத்தான்.
அதன் பின் இருவரும் வாழ்க்கையும் அழகான ஓவியம் போல் சென்றது.
*********************
பார்த்திபன் கோவை பி.எஸ்.ஜி பொறியியல் காலேஜில் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட்யில் ப்ரொபசராகச் சேர்த்தான். வனிதா மற்றும் வனஜா அவன் தான் ப்ரொபசர்.
காயத்திரியை மிகவும் மிஸ் செய்தான். இடம் மாற்றம் அவன் பழைய காதலை மறக்க உதவியது. வாழ்க்கையில் புதிய பயணத்தைத் தொடங்கினான்.
கற்பிக்கும் கலையை மிகவும் ரசித்துச் செய்தான். அவன் வேலைக்குச் சேர்த்து ஒரு மாதம் கடந்திருந்தது.
அவன் கூட வேலை செய்யும் ப்ரொபசர் குணா உடன் நல்ல நட்பு கிடைத்தது.
பார்த்திபன் மற்றும் குணா இருவரும் ஒரே வயது. குணா திருமணம் ஆனவன். குணாவின் மனைவி சித்ராவும் அதே காலேஜில் தான் பயோடெக்னாலாஜி டிபார்ட்மென்ட்யில் அசிஸ்டன்ட் ப்ரொபசராக வேலை செய்கிறாள்.
சித்ராவின் நெருகிய தோழி மலர்வதணி. அவளும் பயோடெக்னாலாஜி டிபார்ட்மென்ட்யில் அசிஸ்டன்ட் ப்ரொபசர். சித்ரா மற்றும் மலர்வதணி ஒரே காலேஜில் படித்த தோழிகள். அவர்கள் நட்பு இன்று வரை தொடர்கிறது.
காலேஜில் மதிய உணவு நேரத்தில் குணா, சித்ரா, பார்த்திபன், மற்றும் மலர்வதணி நால்வரும் ஒன்றாகச் சாப்பிடுவார்கள். பார்த்திபன் மற்றும் மலர்வதணிக்கு இடையே நல்ல நட்பு தொடங்கியது.
**************************
ஆறு மாதத்துக்குப் பிறகு…..
காயத்திரி ஆபீஸ் வேலையில் இருந்த போது லேசாகத் தலை சுற்றியது சின்னத் தடுமாற்றத்துடன் அவள் வேலையைத் தொடர்ந்தாள் இருந்தும் அவள் மனதிற்குள் சின்னதாக ஒரு சந்தேகம் ஆதலால் ரிஷனுக்குத் தெரியாமல் பிரக்னன்சி கிட் வாங்கிட்டு வந்து பரிசோதனை செய்து பார்த்தாள். ரிசல்ட் பாஸிட்டிவ் என்று வந்தது. மனதுக்குள் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள். அதனைப் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டாள்.
அதன் பின் பிரக்னன்சி கிட்டை கிஃப்ட் ட்ராப் செய்து ரிஷனின் டேபிளில் வைத்தாள்.
ரிஷன் முக்கியமான மீட்டிங்யில் இருந்தான். தன்னுடைய டி.எல் க்கு லீவுக்கு ஈமெயில் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டாள்.
ரிஷன் மீட்டிங் முடித்துவிட்டு வர மாலை நேரமானது. அவன் தன்னுடைய டேபிளை வந்து பார்க்கும்போது ஒரு கிஃப்ட் பேக் இருந்ததால் யோசனையுடன் அதனைத் திறந்து பார்த்தான்.
உள்ளே பிரக்னன்சி கிட்டில் இரண்டு கோடுகள் வந்து பாசிட்டிவ் என்று இருந்ததைப் பார்த்து துள்ளிக் குதிக்காத குறையாக மகிழ்ச்சியில் தத்தளித்தான். கண்களால் காயத்திரியை தேடினான். அவளைக் காணாமல் தன் டீமேட்டிடம் கேட்டான் அவள் வீட்டுக்கு சென்றதை அறிந்த பின் அவனும் வீட்டுக்கு புறப்பட்டான்.
ஆரவாரமாக வீட்டுக்குள் நுழைந்து காயத்ரியை தேடினான் அவள் தங்களுடைய ரூமில் தூங்கிக் கொண்டிருந்தால் அவள் கன்னத்தில் முத்தமிட்டு கிட்சன் சென்று சமையல் வேலைகளைச் செய்தான்.
மறுநாள்க்கு காயத்ரிக்கு செக்கப் செய்ய டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினான்.
ரிஷன் கிட்சனில் வேலைச் செய்வதை பார்த்த காயத்ரி அவனைப் பின்பக்கமாக அணைத்தாள்.
அவளைத் திருப்பி இதழோடு இதழ் பொருத்தி அவன் முழுச் சந்தோஷத்தையும் அதில் காட்டினான் ரிஷன்.
“அம்மு எப்ப டெஸ்ட் பண்ண.?” என்று கேட்டான்.
“ இன்னைக்கு மதியம் லேசா தலை சுத்துற மாதிரி இருந்துச்சு அத வச்சு தான் டெஸ்ட் பண்ணி பார்த்தேன்” என்றாள்.
“எத்தனை நாள் டிலே அம்மு” என்று கேட்டான் ரிஷன்.
“ 50 டேஸ் ஆகுது கிருஷ்ணா” என்றாள் காயத்திரி.
“ நாளைக்கு டாக்டர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன் போய்ச் செக் பண்ணி பாத்துக்கலாம் அதுக்கப்பறம் எல்லாத்துகிட்டயும் சொல்லலாம் அதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் அம்மு” என்றான் ரிஷன் கிருஷ்ணா.
ரிஷன் காயத்திரிக்கு ஊட்டி விட அவளும் இரவு உணவை சாப்பிட்டாள்.
மறுநாள் ரிஷன் மற்றும் காயத்திரி டாக்டரிடம் சென்று ஸ்கேன் செய்து பார்த்தனர் குழந்தை நன்றாக உள்ளது என்று டாக்டர் சொன்னார் காயத்ரி கொஞ்சம் வீக்காக இருப்பதால் சத்து மாத்திரைகள் மட்டும் சில உணவுகளைப் பரிந்துரை செய்தார்.
வீட்டுக்கு வந்த உடன் தன் நண்பர்களுக்கும், ஹர்ஷினிக்கு வாட்ஸ் அப்பில் வி ஆர் பிரகனண்ட் என்று அனுப்பினான்.
காயத்திரியும் பார்த்திபனுக்குக் கிட்டின் போட்டோவை அனுப்பி வைத்தாள்.
அன்றும் இரவே அனைவரும் போன் செய்து ரிஷன் மட்டும் காயத்திரியிடம் சந்தோஷமாகப் பேசி தன் வாழ்த்துக்களைச் சொன்னனர்.
இருவரும் கம்பெனியில் பேசி சில நாட்களுக்கு மட்டும் வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிக் கொண்டனர்.
டாக்டரின் பரிந்துரைப்படி காயத்திரிக்கு சத்தான உணவுகள் மட்டும் பழங்களைசா சாப்பிட வைத்தான்.
வாந்தி தலைசுற்றல் போன்ற உபாதைகளால் சிரமப்படும் போதெல்லாம் ரிஷன் அவளைக் குழந்தை போல் தாங்கிக் கொண்டான்.
சாப்பிட கஷ்டப்படும் போதெல்லாம் பல கதைகள் பேசி காயத்திரியை தாயைப்போல் பார்த்துக் கொண்டான்.
**************************
காயத்திரியின் ஒன்பதாம் மாதத்தில் ரிசனின் டீம் மேட்ஸ் அனைவரும் சேர்ந்து சின்னதாக வளைகாப்பு செய்தனர்.
வளைகாப்பு முடிந்து இரண்டு நாளிலே காயத்திரிக்கு வலி வந்து விட…..
காயத்திரி தன் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்தாள். ரிஷன் தன் குழந்தைகளைக் கையில் வாங்கியவுடன் தன்னுடைய பெற்றோர்களே மீண்டும் பிறந்தது போல் உணர்ந்தான்.
மயூரா தாக்ஷயிணி.
பரிஷித் மயூரன்
என்ற பெயரை தேர்வு செய்து தன் குழந்தைகளுக்குச் சூட்டினர்.
வாழ்க்கையில் பல கஷ்டங்களைச் சந்தித்த காயத்திரி பல தடைகளைத் தாண்டி தன் காதலன் ரிஷனை திருமணம் செய்து வாழ்க்கையில் இனிமையான பக்கங்களைப் பார்த்து, உணர்ந்து, ரசித்து, இன்று தன் இரு செல்வங்களுடன் உலகில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தாள் காயத்திரி.
மௌனமாகத் தொடங்கிய அவர்களின் நேசம் இன்று ஆர்ப்பரிக்கும் கடலில் ஒளிரும் முழு நிலவை போல் பிரகாசமாக ஒளிர்ந்தது….
மௌனத்தின் நேசமாய்
நிறைந்தது.!!
********************