மின்னல் அதனின் மகனோ – 4 (3)

வெளியிலும் அரசியலிலும் எப்படி இருந்தாலும் தன் குடும்பத்திற்கும் தனக்கும் அவர் எத்தனை நல்ல மனிதர் என்பதை இப்பொழுதும் உணர்ந்தவனுக்கு கசப்பான முறுவல் தோன்றியது.

“சொல்லுங்கப்பா…”

“அதிபா மினிஸ்டரை பார்த்துட்டு வந்துட்டோம்பா…”

“ஹ்ம்ம்…”

“கண்டிப்பா வரேன்னு வாக்கு குடுத்துட்டார். நாளைக்கே எல்லோருக்கும் பத்திரிக்கை வச்சிடவேண்டியது தான். இன்னைக்கு சந்தோஷ்கிட்ட உனக்கும் மருமகளுக்கும் பத்திரிக்கை அனுப்பி வைக்கிறேன். காலைல வந்திடுவான். அங்க உன்னோட ப்ரெண்ட்ஸ்க்கு குடுத்திடு…”

“ஓகேப்பா…” என்றவன் மேலும் அனைவரின் நலம் விசாரித்துவிட்டு மொபைலை வைத்துவிட சந்தோஷ் அழைத்து தான் கிளம்பிவிட்டதாக சொல்ல அஷ்மிதாவின் ப்ளாட்டிற்கு நேராக வந்துவிடுமாறு சொல்லி வைத்து முடித்த பின் தான் கொஞ்சம் ஆசுவாசமானான்.

அவர்களிடம் பேசும்பொழுது ஏனோ தன்னையும் மீறி வார்த்தைகளை கொட்டிவிடுவோமோ என்ற எண்ணத்திலேயே பேச்சை சுருக்கிக்கொண்டான்.

காரின் வேகத்தை அதிகப்படுத்தியவன் ஹாஸ்பிட்டல் வந்து சேர இரவு பதினோரு மணியானது.

ஏனோ நெஞ்சம் படபடப்பாய் இருக்க காரை பார்க் செய்துவிட்டு வேகவேகமாய் நடையை எட்டிபோட்டவன் துவாரகாவின் அறைக்குள் வர அறையில் அஷ்மிதா இல்லாததை கவனித்தவன் துவாரகாவின் முகம் பார்த்து விலகிய விழிகள் அவளுக்கு ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸ் மீது சென்றது.

அதை பார்த்த கண்கள் தெறித்துவிடும் அளவிற்கு அதில் ஆத்திரம் கொப்பளிக்க,

“அஷ்மி…” என கத்தினான்.

அவனுக்கு பின்னாலேயே வந்துகொண்டிருந்தவள் அவனின் கத்தலில் வேகமாய் ஓடிவந்தாள்.

இரவு நேரம் ஆழ்ந்த அமைதி பரவிக்கிடந்த மருத்துவமனையில் இங்குமங்கும் இருந்த சில நர்ஸ்களும் டாக்டர்களும் ஓடிவர,

“என்னாச்சு அதி? ஏன் கத்தற?…” பதறிக்கொண்டு வந்தவளிடம் தன் கோபத்தை காட்டியவன்,

“இதுதான் நீ துவாவை கவனிச்சுக்கற லட்சணமா?…” என்று ட்ரிப்சை காண்பிக்க மொத்த செலைனும் காலியாகி அவளின் குருதி கொஞ்சம் கொஞ்சமாய் பாட்டிலினுள் மீண்டும் சென்றுகொண்டிருந்தது.

அதை பார்த்ததும் அதிர்ந்தவள் உடனடியாக அதை கவனிக்க அதற்குள் இன்னொரு நர்ஸ் பயத்துடன் உள்ளே நுழைந்தாள்.

“என்ன பவானி நீ? கொஞ்சம் பார்த்துக்கன்னு சொல்லிட்டு தானே போனேன். ஏன் இவ்வளோ கேர்லெஸ்?…” அஷ்மிதா கடிந்துகொண்டிருக்க,

“இல்ல டாக்டர் போன் பேச…” என்ற அப்பெண்ணை கொஞ்சமும் யோசிக்காமல் அறைந்தே விட்டான்.

யாருமே எதிர்பார்க்காத இந்த செயலில் அனைவருமே ஸ்தம்பித்து போக ஒரு நிமிடம் என்ன செய்வதென தெரியாமல் பார்க்க அனைவரையும் வெளியேற சொன்னவள்,

“கால்ம்டவுன் அதி. அவங்க மேல தப்புனா நிர்வாகம் ஆக்ஷன் எடுக்கும். எங்க ஹாஸ்பிடல் நர்ஸை அடிக்க உனக்கு யாரு ரைட்ஸ் குடுத்தா?…”

அஷ்மிதா கோபப்பட ஒருநொடி தன்னை நினைத்தே வெட்கியவன் திரும்பி பார்க்க அரண்ட விழிகளோடு துவாரகா இவனையே பார்த்துக்கொண்டிருக்க, ‘என்ன செய்துவிட்டேன் இவள் முன்னால்?’ என நொந்துகொண்டவன்,

“டாக்டர்ஸ், நர்ஸ் இவங்களை நம்பிதானே பேஷண்ட தனியா விட்டுட்டு போறோம்.  அவங்க உயிர் மேல எத்தனை அலட்சியம் இவங்களுக்கு? இந்த பொண்ணை வேலையை விட்டு எடுக்கலை நான் சும்மா விடமாட்டேன். போன் பேசனும்னா வீட்லயே இருக்கவேண்டியதுதானே?…”

அப்பொழுதும் விடாமல் அவன் கத்திக்கொண்டிருக்க , ‘இவன் அடங்கமாட்டானே?’ என்ற பார்வையோடு அப்பெண்ணின் மீதும் கண்டனபார்வையை வீச,

“ஸாரி டாக்டர். பையனுக்கு உடம்புக்கு முடியலை. ஜுரம் ரொம்ப அதிகமா இருக்கறதால 4 ஹவர்ஸ் ஒன்ஸ் சிரப் குடுக்கனும்னு சொல்லியிருக்காங்க. ஹஸ்பண்ட் குடுத்துட்டாரான்னு கேட்க தான் கால் செய்ய போனேன்…”

“ரெண்டு வயசு பையன். என்னை கேட்டு அழறான். அதுதான் போன்ல சமாதானமா சொன்னேன். போகும்போது இவங்கட்ட சொல்லிட்டு தான் போனேன். செலைன் முடியபோகுது, ஸ்டாப் பண்ணிட்டு போறேன். வந்து போடறேன்னு…”

“இவங்கதான் மெதுவா ட்ராப்ஸ் விடுங்க. முடியறதுனா நானே பெல் அடிக்கறேன்னு. நானும் மெதுவா தான் ட்ராப்ஸ் வச்சிருந்தேன். ஆனா இவ்வளோ சீக்கிரம் எப்படி முடிஞ்சதுன்னு தெரியலை. இவங்க பெல்லும் அடிக்கலை. என்னை வேலையை விட்டு தூக்கிடாதீங்க ஸார். என் குடும்பம் கஷ்டப்பட்ட குடும்பம் ஸார். ப்ளீஸ்…”

அழுதுகொண்டே அப்பெண் எங்கே வேலை போய்விடுமோ என்ற பயத்தில் கெஞ்ச தவறு எங்கே நடந்திருக்கிறது என்று தெளிவாய் புரிந்தது. தான் செய்த தவறும் புரிய மௌனமாய் சென்று அமர்ந்துகொண்டான்.

“நீ லீவ் எடுத்துக்கோ பவானி. டாக்டர்ட்ட நான் சொல்லிடறேன்…” அஷ்மிதா சொல்ல,

“நிறைய லீவ் ஆகிடுச்சு டாக்டர். ஏற்கனவே லாஸ் ஆஃப் பே…”

“இட்ஸ் ஓகே. நீ குழந்தையை போய் கவனி. மனசெல்லாம் அங்க இருக்க. நீ இங்க எப்டி நிம்மதியா இருப்ப? உன்னோட ஜாப்க்கு முதல்ல மன அமைதி தேவை. அது இல்லைனா இப்படி தான் சில நேரம் ஆகும். நீ லீவ் எடுத்துக்கோ. இந்த ஒரு தடவை உனக்காக நான் பேசறேன். லாஸ் ஆஃப் பே ஆகாது. ஓகே. நீ கிளம்பு…”

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்…” அவளின் கையை பிடித்து நன்றி சொல்லியவள் அதிரூபனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பிவிட அவன் எழுந்து துவாரகாவிடம் வந்தான்.

“எதுக்காக இப்படி பண்ணின? பதில் சொல்லு…” உணர்வற்ற குரலில் கேட்க,

“நீங்க அம்மாட்ட என்னை போக விடலை. அம்மாவும்… அம்மாவும்… உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா கண்டிப்பா கொன்னே போட்டுடுவார். அதுதான் எனக்கு என்ன பண்ணனு தெரியலை…”

அவள் சொல்லிய நிமிடம் அவளை அறைந்திருந்தான்.

“உனக்கென்ன பைத்தியமா அதி? என்ன புதுசா கை நீட்டிட்டு இருக்க? அதுவும் அவ இருக்கிற நிலையில்?…” அஷ்மிதா அவனை கட்டுக்குள் கொண்டுவர பார்க்க அவளை தள்ளிவிட்டவன் துவாரகாவின் அருகில் அமர்ந்து இழுத்து அணைத்துக்கொண்டான்.

முதலில் அவன் அறைந்ததில் பயத்தில் உடல் உதற பார்த்திருந்தவள் அவனின் அணைப்பிற்குள் அடங்கிய நொடி இன்னும் அதிகமாய் வெடவெடக்க ஆரம்பித்தாள்.

“என்னை விடுங்க. விடுங்க முதல்ல…” அவளின் விலகல் எதையும் கண்டுகொள்ளாமல் இன்னும் இறுக்க ஏற்கனவே துவண்டிருந்தவள் போராட தெம்பில்லாமல் தொய்ந்துபோனாள்.

“அவ்வளவு சீக்கிரம் என்னைவிட்டு போக உன்னை விட்டுடுவேனா?…”

அவனின் பேச்சுகள் காதில் விழுந்தாலும் பிடித்தமில்லாத அவனின் அணைப்பை தவிர்க்க லேசான எதிர்ப்பை அவளின் உடல் காட்டிக்கொண்டுதான் இருந்தது.

“சொல்லு, உன்னை விட்டுட்டு என்னை என்ன பண்ண சொல்ற?. மாட்டேன்…”

அவன் பேச பேச அவளின் இதழ்களோ விடுங்க என்று மட்டும் தான் தீனமான குரலில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

“என்னால முடியலை, வலிக்குது. ப்ளீஸ்…” மீண்டும் முனங்கலாய் சொல்ல,

“மாமான்னு சொல்லு விட்டுடறேன்…” மென்மையாய் அவன் கேட்ட நிமிடம் எங்கிருந்து அத்தனை பலம் வந்ததோ ஒட்டுமொத்த தைரியத்தையும் திரட்டியவள் ஒரே தள்ளாக தள்ளிவிட்டு கட்டிலின் பின்னே நகர்ந்து அமர்ந்துகொண்டாள்.

“சொல்லமாட்டேன். மாட்டேன். அம்மாவை கொன்னுடுவாங்க. சொல்லமாட்டேன். நீங்க போங்க இங்க இருந்து போங்க…”

அவளின் கதறல் அவ்வறை எங்கும் எதிரொலிக்க அதிர்ந்துபோய் பார்த்தான் அதிரூபன்.

“கொன்னுடுவேன்னு சொன்னாங்களா?….” புத்தி வேலைநிறுத்தம் செய்ய அச்சிறுபெண்ணின் ஒட்டுமொத்த வேதனையும் ஜீரணிக்கமுடியாமல் தனக்குள் உள்வாங்கிக்கொண்டிருந்தான் அதிரூபன்.

error: Content is protected !!