மின்னல் அதனின் மகனோ – 22 (3)

இந்தளவிற்கு அவன் துடித்திருந்தானால் தான் அசட்டுதனமாய் செய்த செயல் எந்தளவிற்கு அவனை தாக்கியிருக்க வேண்டும்? இவனை பெற என்ன பாக்கியம் செய்துவிட்டேன்?

அதே திகைப்புடன் அவனை திரும்பி பார்க்க அவனோ நிர்மலமான முகத்தோடு உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்.

“மாமா தூங்கிட்டாங்க டாக்டர்…” துவாரகா சொல்ல,

“ஹ்ம்ம் தூங்கட்டும். எழுப்பாத. பாவம் அவன். நேத்துல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்…” என தன் நண்பனை நினைத்து கவலைகொண்டாள்.

இவனுக்காகவேணும் துவாரகா இவனுடனே மகிழ்ச்சியாக நூறாண்டுகள் இருக்கவேண்டும் என கடவுளிடம் ப்ராத்தனை மேற்கொண்டாள்.

ஒருமணிநேரம் சென்று வீட்டிற்கு வந்து சேர கார் நின்ற ஓசையில் கண் விழித்தவன்,

“ஸாரிடா துவா. அசந்துட்டேன்…” என மன்னிப்பை யாசிக்க,

“நான் தான் மாமா தப்பு. நான் சொல்லாம போனதால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்? என்னை மன்னிச்சிடுங்க மாமா…” அவனின் மார்பில் சாய்ந்துகொண்டே அவள் கேட்க,

“அடடா போதும்யா உங்க ரொமான்ஸ். தாங்க முடியலை. முதல்ல காரை விட்டு கீழே இறங்குங்க…” என அங்கலாய்த்தபடி அஷ்மிதா இறங்க,

“இவளுக்கு பொறாமைடா. நீ வா. நாம உள்ள போய் பேசலாம்…” அதிரூபன் இறங்கி அவளை மெதுவாய் இறங்க சொல்ல,

“உங்களுக்கு முதல்லையே தெரியுமா மாமா? பாப்பா இருக்குன்னு…”

அவள் கேட்டதும் புன்னகைத்தவன் ஆமாம் என தலையசைக்க அஷ்மிதா அவர்கள் அருகில் வந்து,

“வீட்டுக்குள்ள போகலாமா இல்ல இங்கயே இப்பவே உனக்கு மொத்த ஹிஸ்டரியும் தெரியனுமா?…” என பொங்க அவளை கண்டு புன்னகைத்தாள் துவாரகா.

வாசல் அருகில் ஏற்கனவே சந்தோஷ், விஷால், அர்னவ் நின்றிருக்க அவர்களை பார்த்துவிட்டு அதிபனை பார்த்தவள் முகம் மாறிவிட்டிருந்தது.

“நீ உள்ள போ. நான் பேசிட்டு வரேன்…” என அனுப்பியவன் விஷாலை நோக்கி சென்றான்.

“முன்னாடியே வந்துட்டீங்களாடா?…” என கேட்டவன் அப்பொழுது தான் கேட் அருகே நின்றிருந்த செக்யூரிட்டியை பார்த்தான். வேறு ஆள் காவலுக்கு நின்றிருந்தான் அங்கே. அதிலும் ஒன்றுக்கு இரண்டாக.

“நான் தான் அண்ணா பழைய செக்யூரிட்டியை மாத்தினேன். இனி இவங்க தான் வருவாங்க. பகல்ல ரெண்டு பேர். நைட் ரெண்டு பேர். கார் கூட இன்னொன்னு புக் பண்ணியிருக்கேன் உங்க பேர்ல. ட்ரைவரும் மாத்தியாச்சு…”

விஷால் சொல்ல அவனை பார்த்து புன்னகைத்தான் அதிபன். சந்தோஷ், அர்னவ் இருவரும் தலையசைக்க,

“ஓகே அண்ணா. எதுனாலும் கால் பண்ணுங்க. நாங்க உடனே உங்களோட இருப்போம். கிளம்பறோம் அண்ணா…” என்றதும் தலையசைத்து விடைகொடுத்தான் அதிரூபன்.

அவர்களை அவன் வீட்டினுள் அழைக்கவே இல்லை. அவர்களும் உள்ளே வரவேண்டும் என நினைக்கவும் இல்லை. வந்தார்கள். சென்றார்கள்.

ஒரு பெருமூச்சுடன் உள்ளே செல்ல திரும்பியவனின் மொபைல் இசைக்க எடுத்து பார்த்தான்.  ராஜாங்கம் தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க அங்கிள்…” என அவரிடம் பேச,

“அதி ஆர் யூ ஓகே…” என சின்ன சிரிப்புடன் அந்த பெரியமனிதர் கேட்க அவரின் குரலில் அத்தனை அன்பு.

“எஸ் அங்கிள். இப்போ ஓகே தான். ஆனா…”

“சொல்லு அதி. இப்போ ஓகேனா?…”

“எப்பவுமே ஓகேவா இருக்கனும்னு நினைக்கிறேன் அங்கிள். என்னோட அப்பா இன்னொரு தப்பு செய்ய இனி நான் விடப்போறதில்லை…”

“வாட் யூ மீன் அதி?…” ராஜாங்கம் கேட்க,

“அப்பா இன்னும் மாறலை அங்கிள். நேத்து நான் அவ்வளவு பேசிட்டு வந்த பின்னாலையும் அவரோட ஆளுங்களை விட்டு எங்களை கண்காணிக்க வச்சிருக்கார். நம்பத்தகுந்த நியூஸ். துவாவை என் கண்ணுல பட்டுடாம பார்த்துக்கனும்ன்றது மட்டுமில்லாம அவங்கட்ட கிடைச்சா. ப்ச்…” அதி சொல்ல ,

“வாட்? உனக்கு எப்படி தெரியும் அதி?…” அதிர்ந்துபோய் ராஜாங்கம் கேட்க,

“அவர் எனக்கு அப்பா ஆகறதுக்கு முன்னால இருந்தே அரசியல்வாதி அங்கிள். அவர் கிரிமினில் மைண்ட்ல எனக்கும் கொஞ்சமாவது இருக்கும்ல. துவாவை எனக்கு மனைவியா என்னைக்கு நான் முடிவு பண்ணினேனோ அப்ப இருந்தே அவங்க க்ரூப்ல எனக்கான ஒரு ஆளை நான் தேர்ந்தெடுத்துட்டேன்…”

“அதி இதை நீ என்கிட்ட கூட சொல்லலை. வெரிகுட்…” ராஜாங்கம் பாராட்ட,

“அங்கிள் நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னதை இப்ப செயல்படுத்தனும். ஹெல்ப் பண்ணுவீங்களா?…” அதிபனின் வேண்டுதலில்,

“இதை நீ எனக்கு சொல்லனுமா அதி? கண்டிப்பா செஞ்சிடலாம்…” என அவனுக்கு வாக்களித்தவர்,

“ஈவ்னிங் வந்து நான் துவாவை பார்க்கறேன்னு சொல்லு அதி. டேக் ரெஸ்ட்…”

“இல்லை அங்கிள். ரெஸ்ட் எடுக்க முடியாது. என் மாமியாரை பார்க்க போறேன்…”

“அதி, நேத்து நீ கொஞ்சமும் தூங்கலை. உடனுக்குடனே எல்லாமே பண்ணனுமா? நாளைக்கு கூட பார்த்துக்கலாமே…” ராஜாங்கம் யோசனையாக சொல்ல,

“நோ அங்கிள். இன்னைக்கு, இப்பவே நான் கிளம்பனும். இனி எதையும் தள்ளிபோட போறதில்லை…” என ஸ்திரமாய் சொல்ல,

“ஓகே மை பாய். உனக்கு எப்பவும் பக்கபலமா நான் இருப்பேன். எப்பவும்…” என சொல்லி விடைபெற்றார் ராஜாங்கம்.

அவரிடம் பேசிவிட்டு வீட்டினுள் அவன் வர துவாரகா அவர்கள் அறையில் குளித்துக்கொண்டிருந்தாள். இன்னொரு அறையில் சென்று பரபரவென குளித்து கிளம்பியவன்,

“அஷ்மி, துவாவை பார்த்துக்கோ. நான் ஒரு முக்கியமான வேலையா போய்ட்டு வந்திடறேன்…” வேகமாய் கிளம்ப,

“அகிலா ஆன்ட்டிய பார்க்கவா அதி?…” அஷ்மி கேட்டதற்கு தலையை மட்டும் ஆட்ட,

“ஓகே பை…” என்றாள் அஷ்மிதா.

“துவா கேட்டா,…”

“முக்கியமான கால் வந்தது. கிளம்பிட்டான். வந்திருவான்னு சொல்லிடறேன். போதுமா?…” அஷ்மி அவன் ஆரம்பித்ததை முடிக்க அவளின் தலையில் லேசாய் கொட்டு வைத்தவன்,

“பை. பார்த்துக்கோ. ரெண்டு பேரும் சாப்பிடுங்க…” என்று சொல்லி  சென்றான்.

————————————————————–

அந்த மிகப்பெரிய கட்டிடத்தில் உள்ளே உள்ள அலுவலக அறையில் அகிலவேணியின் வரவிற்காக காத்திருந்தான் அதிரூபன். ஐந்துநிமிட நேரத்தில் சிவகாமியுடன் வந்து சேர்ந்தார் அகிலவேணி.

தன்னை பார்த்ததும் திகைப்பார் அதிர்வார் என இவன் எண்ணியிருக்க அவரோ மிக சாதாரணமாய் அவனை எதிர்கொண்டார். அதுவே ஒருபடபடப்பை கொடுத்தது அதிரூபனுக்கு.

அவனின் உன்னால் இருந்த சேரில் அமர்ந்த அகிலவேணி அவனை பார்த்திருக்க பேசாமல் இருந்தா சரிவராது என நினைத்தவன்,

“நல்லா இருக்கீங்களா அத்தை?…” என ஆரம்பித்தான்.

இப்பொழுது அவன் எதிர்பார்த்தது நடந்தது. அத்தை என்ற விளிப்பு அகிலவேணியிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த அவனை முறைத்தவர்,

“என்னை அத்தைன்னு கூப்பிட வேண்டாம் மிஸ்டர் அதிரூபன் ரத்தினசாமி…”

அழுத்தம் திருத்தமாய் அடக்கப்பட்ட கோபத்துடன் அகிலவேணி எச்சரிக்கை குரலில் சொல்ல அதில் புன்னகைத்தான் அதிரூபன்.

“உங்க வயசுக்கு நான் மரியாதை தரனுமே அத்தை…” என மீண்டும் அத்தை போட,

“அப்போ ஆன்ட்டின்னு கூப்பிடுங்க. இந்த உறவுமுறை எல்லாம் குப்பையில தூக்கி போடுங்க மிஸ்டர்…” இப்பொழுது சட்டென தன்னுடைய உணர்வுகளை மறைத்து கோபத்தை கட்டுக்குள் நிறுத்திவிட்டார் அகிலவேணி.

“ஆன்ட்டியை தான் அத்தைன்னு நான் தமிழ்ல சொன்னேன். நீங்க என்ன நினைச்சீங்க?…” அதிரூபன் கிடுக்கிபிடி போட வார்த்தையின்றி அவனை வெறித்தார் அகிலவேணி.

error: Content is protected !!