மின்னல் அதனின் மகனோ – 19 (3)

“ஹ்ம்ம் கரெக்ட் தான். கண்டிப்பா உன்னை மிரட்டி கல்யாணம் செஞ்சிருக்க மாட்டேன்…” என்றவன் அந்த இடத்தில் நிறுத்தி அவளின் முகம் போன போக்கை பார்த்துவிட்டு,

“என்னோட உன்னை சேர்த்துட்டு உங்கம்மாவோடையும் பைட் பண்ணி, லவ் பண்ணி மேரேஜ் பண்ணியிருப்பேன்…” என்றதும்,

“மாமா…” என அவனின் கையை பற்றிக்கொள்ள,

“எனக்கும் ஆசைதான்டா. காதலிக்கிற பொண்ணோட மனசுக்கு பிடிச்ச இடங்களுக்கு போகனும். என்னோட விருப்பு, வெறுப்புகளை உன்னோட ஷேர் பண்ணிக்கனும். உனக்கு பிடிச்சதை எல்லாம் நான் தெரிஞ்சுக்கனும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிப்ட் குடுத்து நம்மோட கடைசி காலத்துல இதையெல்லாம் நினைச்சு நினைச்சு நாம சந்தோஷப்படனும். இப்படி அவ்வளவு ஆசைகள் எனக்குள்ளயும் இருந்தது…”

“நீ மட்டும் தைரியமா இருந்திருந்தா, இன்னைக்கு பேசினதை அப்போ பேசியிருந்தா  உன்னை போல உங்கம்மாவும் எங்க வீட்டை எதிர்த்து நின்னிருந்தா நம்ம கல்யாணம் நீ நினைக்கிறதை விட அருமையா பண்ணியிருந்திருக்கலாம். காதலிக்கிறது, காதலிக்கப்படறது இதுல இருக்கிற சுகம் இருக்கு பாரு…”

“மாமா…” என பேச வந்தவளின் இதழ்களில் கை வைத்து நிறுத்தியவன்,

“ஆனா உனக்கு தெரியாது துவா, எங்க என்னோட விருப்பம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சு அதனால உனக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு ஒவ்வொரு நாளும் நான் தவிச்சது. உனக்கு என்னை பிடிச்சிருந்தாலும் இந்த விஷயத்துல எந்தளவுக்கு நீ ஸ்டபனா நிப்பன்னு எனக்கு தெரியலைல. என்னால உன்னை காப்பாத்திட முடியும் தான். ஆனா அதுக்கு உங்கம்மாவே தடையா இருந்தாங்களே?…”

“வெளிப்படையா காதலை சொல்லமுடியாம, மனசுக்குள்ளயே ஒளிச்சுவச்சு, எந்த நிமிஷம் உனக்கு என்ன நடக்குமோன்னு பயந்து, எப்படி உன்னை என் வாழ்க்கைக்குள்ள கொண்டு வரன்னு யோசிச்சு ஹப்பா நான் பைத்தியம் ஆகாதது தான் குறை…”

“நீ நினைக்கலாம் உன்னோட சூழ்நிலையை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்னு. எஸ். என்னோட சூழ்நிலை அப்படித்தான் இருந்தது. நீ சொல்லு, உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணியிருந்தா நீ ஒத்துப்பியா? இல்லை உன் அம்மா தான் விடுவாங்களா? திரும்பவும் என் கண்ணுல படாம உன்னை ஒளிச்சுவைக்க தான் பார்ப்பாங்க. திரும்ப உங்களை நான் தேடி, கண்டுபிடிச்சு. இதுக்கு மேல முடியாதுன்னு தோணுச்சு…”

“அப்பா பண்ணினது தப்புதான்டா. ஆனா நான் சாக்கடை இல்லைடா…” குரலுடைந்து அவன் சொல்ல பேச்சிழந்து நின்றாள்.

ஏனோ இதை இப்போதே ஆரம்பித்துவிட்டவன் அவளின் முகமாற்றத்திலும் சஞ்சலத்திலும் பேச்சை நிறுத்தி,

“ஹேய் துவா…” என அழைக்க,

“மாமா, நான்…” தொண்டை அடைக்க அவனை கட்டிக்கொண்டவள் பேச முடியாமல் திணற அவளின் கண்ணீர் துளிகள் அவனின் சட்டையை நனைக்க ஆரம்பித்தது.

“ஹேய் இதென்ன இப்படி அழுகை. அழக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. ப்ச்…” அவளின் முகம் நிமிர்த்தி சொல்ல,

“ரொம்ப கஷ்டப்பட்டீங்களா?…”

“ஹ்ம்ம் இல்லைன்னு சொல்லமுடியாது. ஆனாலும் இப்ப ஓகே தான்…”

அவளை தேற்ற சொன்னாலும் அவனின் மனதில் அதன் தாக்கம் இன்னும் முணுக்கெனும் வலியை இன்னும் கொடுத்துக்கொண்டு தான் இருந்தது.

“ஓகே சாப்பிடலாம்டா. சூடு ஆறிடும்…” அவள் மேலும் பேசும் முன்னே இழுத்துக்கொண்டு வந்து அமர்த்தி அவளுக்கும் பரிமாறி தனக்கும் வைத்துக்கொண்டு வேறு பேச்சுக்களை பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

முடிக்கும் பொழுது போன் வர அதை அடுத்துப்பார்த்தவன் முகம் புன்னகையை பூசியது.

“அஷ்மி தான்…” என அதிபன் சொல்ல,

“சாப்பாடு எப்படி இருக்குன்னு கேட்க கூப்பிட்டிருப்பாங்க. நல்லா இருக்குன்னு சொல்லுங்க…” என்றாள் துவாரகா,

“ம்ஹூம், அதுக்கு கண்டிப்பா இல்ல…” என சொல்லிக்கொண்டே அவளின் அழைப்பை ஏற்றவன் ஸ்பீக்கரில் போட்டு,

“சாப்பாடு வந்திருச்சுடா அஷ்மி. சாப்ட்டோம். நல்லா இருந்தது. துவாக்கும் பிடிச்சிருந்தது…” என அவளுக்கு முன்னே இவன் சொல்ல,

“நீ சாப்பிட்டா என்ன சாப்பிடலைனா எனக்கென்னடா? நீ மட்டும் நல்லா கொட்டிக்கிட்டா போதுமா? நான் சாப்பிட வேண்டாமா?. ப்ரெண்ட்ஸ் கூட ஹோட்டல் வந்திருக்கேன்…” என பொரிந்து தள்ள,

“என்னாச்சு? கோவத்துல இருக்க போல?…”

“இங்க உன் தம்பி என்னவோ லவ் பெயிலியர் ஆனவன் மாதிரியே என்னை பார்த்து கடுப்பேத்துறான். நல்லா இல்லை. சொல்லிட்டேன். சிக்குனான் சிக்கன் டின்னர் தான் இன்னைக்கு என் ப்ரெண்ட்ஸ்க்கு…” என்றவள் போனையும் கட் செய்துவிட சிரித்தபடி மொபைலை வைத்துவிட்டு அவன் கை கழுவ எழுந்துகொண்டான்.

“என்ன மாமா நீங்க அவங்க இவ்வளோ கோவமா பேசறாங்க. நீங்க சிரிக்கிறீங்க? உங்க தம்பிக்கு வேற வேலையே இல்லையா? போன் போட்டு என்னனு கேளுங்க…” துவாரகா அஷ்மிதாவிற்காக படபடக்க,

“அவ இதை ஹேண்டில் பண்ணிப்பா. நீ இதை முடி…”

அவளிடம் சொல்லிவிட்டு சாவாகாசமாய் டைனிங் டேபிளை க்ளீன் செய்ய ஆரம்பித்தான்.

அவன் எண்ணியது போலத்தான் நடந்ததும். தன்னையே பார்த்துக்கொண்டு சாப்பிடாமல் அமர்ந்திருந்த விஷாலின் டேபிளை நோக்கி வேகமாய் சென்றாள் அஷ்மிதா.

“இங்க வா?…” என அவனின் முன்னால் சொடுக்கு போட்டு அழைக்க விஷாலின் நண்பர்கள் மொத்தமாய் எழுந்து அவளிடம் என்னவென கேட்க,

“டேய் அடங்குங்கடா. அவனைத்தான கூப்பிட்டேன். வந்த வேலையை மட்டும் பாருங்க. அதான்டா கொட்டிக்காங்க…” என்றவள்,

“உனக்கு என்ன மேளவாத்தியம் வச்சு அழைக்கனுமா? வேணும்னா தாரைதப்பட்டையை கூப்பிடுவோமா?…” என கேட்க சட்டென எழுந்துவிட்டான்.

“அது…” என கூறி கார்டன் பக்கம் வந்தவள்,

“என்ன லுக் எல்லாம் பலமா இருக்கு?…”

“இல்லை அது வந்து…” விஷால் வார்த்தைகளை விழுங்க,

“என்னமோ நான் உன்னை லவ் பண்ணிட்டு கழட்டி விட்டுட்ட மாதிரியே பார்க்கற? இந்த தேவதாஸ் லுக் எல்லாம் வேற எங்கையாச்சும் வச்சுக்கோ. இல்ல ஈவ்டீஸிங்னு கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தள்ளிடுவேன்…”

“இல்ல சும்மா தான். அண்ணா ப்ரெண்ட் தானேன்னு…”

“அண்ணாக்கு தான ப்ரெண்ட். உனக்கில்லையே. இந்த கணக்கு பன்ற வேலையை காட்டின நீ வேற எந்த பொண்ணையும் கணக்கு பண்ண முடியாது. லாக்கப்ல கம்பிகளை தான் கணக்கு பண்ணனும்…”

அஷ்மிதா எரிந்துவிழ பதில் பேசாமல் நின்றான் விஷால். அவனின் முகமே கறுத்து சிறுத்து போனது.

‘எதார்த்தமாய் பார்த்ததற்காய் இவ்வளவு பேச்சு’ என அவனின் மனம் முரண்டினாலும் அந்த ஹோட்டலில் அஷ்மிதாவை பார்த்ததுமே அவனுக்கு நினைவு வந்தது எல்லாம் தன்னை திருமணம் செய்துகொள்ள நினைத்ததை சொன்னது தான்.

அவன் பார்த்தது வேண்டுமென்றோ இல்லை மீண்டும் அவள் சொன்னதை நிறைவேற்றும் என்னமோ அவனுக்கில்லை.

ஆனாலும் அவளை பார்த்தவுடன் இந்த ஞாபகம் வந்து அவளை பார்க்க தோன்றியது. ( நீ பார்த்தது விஸ்வாசத்துக்கு தெரிஞ்சது கண்ணை நோண்டி கைல குடுத்திருப்பான்)

“இல்லை இனிமே பார்க்கலை…” வேறு புறம் பார்த்துக்கொண்டே சொல்ல,

“வந்த இடத்துல நிம்மதியா சாப்பிட கூட முடியலை. போ போ…” என விரட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

விஷாலுக்கும் அதற்குமேல் அங்கிருக்கவே முடியவில்லை. நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

வரும்வழியில் அதிரூபனுக்கு போனை போட்டு அவனிடம் விஷாலை தாளித்து தள்ளிவிட்டாள் அஷ்மிதா.

சிரித்தபடி அனைத்தையும் கேட்டுவிட்டு மொபைலை வைத்தவனை துவாரகா பார்க்க அவளிடம் நடந்ததை கூறி இன்னும் சிரித்தான். துவாரகாவிற்கும் புன்னகை தான்.

“உங்க தம்பிக்கு வேணும் இது…” என சொல்ல,

“அவன் உன்னை அண்ணின்னு சொன்னான்…” என சிரிக்க,

“என்கிட்ட சொல்லட்டும் வாயை கிழிச்சிடறேன்…” துவாரகா காண்டாக,

“வர வர அஷ்மி கூட சேர்ந்து நீ டெரரா மாறிட்டு வர…” அதிரூபன் கேலி பேச,

“போதும். எனக்கு தூக்கம் வருது. வாங்க மாமா…”

“இல்லைடா இன்னுமொரு முக்கியமான கால் வரனும். வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீ தூங்கு வரேன்…” என்று அவளை அனுப்பியவன் சிறிதுநேரம் பார்த்துவிட்டு மாடிக்கு வந்தான்.

“அதுக்குள்ள தூங்கிட்டாளா?…” என பார்க்கும் பொழுதே அவன் எதிர்பார்த்த போன் வந்துவிட்டது. உடனே கட் செய்தவன் துவாரகாவை பார்க்க அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

வேகமாய் அறைக்கதவை பூட்டிவிட்டு பால்கனிக்கு வந்து நின்றவன் மீண்டும் அந்த எண்ணிற்கு அழைக்க,

“ஹ்ம்ம் சொல்லுங்க சிவகாமி…”

“ஸார், நீங்க சொன்ன மாதிரியே பண்ணியாச்சு…”

“எல்லா டாக்குமெண்ட்ஸ்லயும் சைன் வாங்கியாச்சா?. ஒன்னும் டவுட் வரலையே…”

“இல்லை ஸார். பக்காவா பண்ணியாச்சு. நோ டவுட். ஆனா சைன் வாங்கறதுக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு. ஆனாலும் வாங்கிட்டோம். அவங்களுக்கு எந்த டவுட்டும் இல்லை…”

“கஷ்டபடாம எதுவுமில்லை. வெரிகுட்…” என்றவன் மொபைலை வைத்துவிட்டு,

“மாமியாரே, யார்க்கிட்ட? நான் அதிபன்…” என மர்மமாய் புன்னகைத்தான்.

error: Content is protected !!