மின்னல் அதனின் மகனோ – 1 (1)

மின்னல் – 1

                பகல் முழுவதும் வான் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடுதேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலைகதிர்களும் பொன்மஞ்சள் நிறம் தரித்து மேகங்களை மின்ன செய்துகொண்டிருந்தது.

பெங்களூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள உயர்ரக ஓய்வு விடுதியில்   கவிழ்ந்துகொண்டிருக்கும் இரவுக்காய் விளக்கொளியை ஒளிரசெய்து அந்த ஒளிவெள்ளமானது அவ்விடத்தையே பிரகாசமாக்கிக்கொண்டிருந்தது.

மழையே மழையே

என்மேலே வந்து விழவா விழவா
வெயிலே வெயிலே

உன் வேர்வை வலையை விரித்திடவா

என்ற பாடல் அந்த பார்ட்டி ஹால் முழுவதும் புயலென ஆக்கிரமித்து அங்கிருந்த இளைஞர்களை சுழற்றியடித்துக்கொண்டிருந்தது. அனைவரும் ஆட்டம் பாட்டமென ஆல்கஹாலினால் மிதந்துகொண்டிருந்தனர்.

அந்த அழகிய ரெசார்ட் விட்டு வெளியே வந்த அதிரூபன் ஆறடிக்கும் சற்றே அதிகமான உயரத்துடன் ஸ்டைலிஷ் லுக்கோடு பார்ப்பவரின் மனதை கவரும் விதமான அழகன்.

“தேங்க்ஸ் மச்சி, நீ வந்தது எனக்கு அவ்வளோ சந்தோஷம்…” தன் நண்பனை அணைத்து விடுவித்த ப்ரனேஷின் தோளில் தட்டிய அதிரூபன்,

“நீ என் க்ளோஸ் ப்ரெண்ட். உனக்கு வராம இருப்பேனா?…” என கூறி புன்னகைத்தவன்,

“உன்னோட ரிசார்ட் ரொம்ப அழகா இருக்கு. இன்னொரு முறை கண்டிப்பா வந்து ஸ்டே பண்ணனும்…” என அதிரூபன் சொல்ல,

“ஈஸிட், வித் ப்ளஷர். இருந்தாலும் நான் நினைத்ததே வேற. நீ நாளைக்கு கல்யாணத்துக்கு டைம்க்கு தான் வருவன்னு நினைச்சேன்…” என்றதும் அதிரூபனின் புன்னகை மேலும் விரிந்தது.

“உன் பிஸி ஷெட்யூல் அப்படி. நான் வேற என்ன நினைக்க?…” என சொல்லிக்கொண்டிருக்க,

“மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?…” என்று தள்ளாடியபடி வந்த தம்பி கவினேஷை பார்த்து முறைத்த ப்ரனேஷ்,

“அடங்கமாட்டியாடா நீ? உன்னை யாரு இங்க கூப்பிட்டா?…” என திட்டிக்கொண்டே அவனை உள்ளே அனுப்பிவிட்டு,

“சாரிடா, அவனுக்கு கொஞ்சம் ஓவராகிடுச்சு…” மன்னிப்பை கோரும் விதமாய் கேட்க, அதை கண்டுகொள்ளாதவனாய் சிறு புன்னகையோடு,

“ஓகே, நீ போய் மத்த ப்ரெண்ட்ஸ் எல்லோரையும் கவனி. நான் கிளம்பறேன். பார்த்து சேஃபா கிளம்புங்க எல்லோரும். கல்யாண மாப்பிள்ளை நீ. ஓவரா குடிச்சுடாதே…”

“கண்டிப்பா, நாங்க பார்த்துக்கறோம். நீ தான் உடனே கிளம்பிட்ட…” லேசாய் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்ல,

“நைட் பிஸ்னஸ் மீட் ஒண்ணு இருக்கு ப்ரனேஷ்…”

அதற்கு மேல் அதிரூபனை வற்புறுத்த முடியாது என தெரியும் என்பதால் அவனின் காரின் அருகே வரை வந்து விடைகொடுக்க அதற்குள் அதிரூபன் காரின் லாக்கை விடுவிக்க அவனின் மொபைல் இசைத்தது.

“நீ உள்ளே போ ப்ரனேஷ். நான் பேசிட்டு கிளம்பிடுவேன்…” தயக்கமாய் நின்றவனை கண்டு,

“அட கிளம்புடா, எனக்கு போக தெரியும். நீ போய் மத்தவங்களை கவனி…” அவனை அனுப்பிவிட்டு மொபைலை ஆன் செய்து காரில் சாய்ந்துகொண்டே பேச ஆரம்பித்தவன் பேசிக்கொண்டே சற்று தூரம் வந்துவிட்டான்.

பேசி முடித்ததும் சுற்றிலும் பார்க்க, இயற்கை அழகு மொத்தமாய் குடிகொண்டதை போல அற்புதமாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கார்டனை ரசனையோடு பார்த்தான்.

“லவ்லி பிளேஸ்…” அவனின் அழுத்தமான இதழ்கள் மெலிதான முணுமுணுத்து  மெச்சுதலான பார்வையோடு ஒப்புக்கொண்டது.

சுற்றிலும் பார்த்தபடி அங்கிருந்து நகர சட்டென்று ஒரு சலசலப்பு. உடலில் தானாய் ஒரு விரைப்பு நொடியில் பரவ கண்கள் கூர்மையானது.

ஒவ்வொரு அடியாய் எடுத்துவைத்தவன் சத்தம் வந்த இடத்தை நோக்கி நகர்ந்து சட்டென மரத்தின் பின்னால் நின்றவனை இழுத்து முன்னிறுத்தினான்.

“விஷால் நீயா?…” அதிர்ந்தவன் விளக்குகளின் வெளிச்சத்தில் தெரிந்த அவனின் தோற்றத்தில் இன்னும் அதிர்ந்தான்.

தலைமுடி கலைந்து சட்டையின் ஒரு பகுதி கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது. கன்னத்தில் அடிவாங்கிய தடமும் கையில் யாரோ நகத்தால் பிராண்டிய ரத்த வரிகளும் தெளிவாய் தெரிந்தது.

“என்னடா இது? என்ன பிரச்சனை?…” ஆராய்ச்சியோடு கூடிய பார்வையில் விஷால் என்பவன் தான் ஆடிப்போனான்.

“அண்ணா, வந்து…” வார்த்தைகள் வராமல் தடுமாற உடல் நடுங்கியது.

“நீ எப்படி இங்க வந்த? நீ ப்ரெண்ட்ஸ் கூட கோவா ட்ரிப் போறதா தான சொன்னாங்க வீட்ல. இங்க என்ன பன்ற?…” கோபமான குரலில் வினவ அதற்குள் மேலும் இருவர் விஷாலின் அருகில் வர அவர்களையும் பார்த்து,

“சந்தோஷ்?…” இடுங்கிய கண்களோடு அதிரூபன் கேட்க நடுநடுங்கி போயினர் இருவரும்.

“அத்தான், நீங்க…” சந்தோஷ் விழிகளில் அவனை கண்டதும் அதிர்ச்சியோடு சிறு நிம்மதியும் பரவ அதை சட்டென கண்டுகொண்ட விஷாலுக்கு கோபம் கொந்தளித்தது.

சந்தோஷின் பின் நின்றிருந்த அர்னவ் அதிரூபனை நிமிர்ந்தும் பார்த்தானில்லை. பார்வை மொத்தமும் விஷாலிடமே மையம் கொண்டிருந்தது.

“அர்னவ் ஸ்பீக் அவுட்…” என்ற மிரட்டலில் உடல் வெடவெடக்க பதறியவன் வாய் திறக்கும் முன்பே விஷால்,

“நத்திங் அண்ணா, இங்க ப்ரெண்ட்ஸ் கூட வந்தோம். இன்னொரு ப்ரெண்டை பிக்கப் பண்ணிட்டு இங்க இருந்து அப்படியே கோவா கிளம்பறதா ப்ளான். வந்த இடத்துல கொஞ்சம் தகறாரா ஆகிடுச்சு. அது அடிதடி வரை போய்…” என,

“யார் அவன் உன் மேலையே கை வச்சவன்?…” கோபத்தில் உறுமிய அண்ணனை கண்டு உள்ளுக்குள் நடுக்கமே தான் என்றாலும்,

“அண்ணா, இது ப்ரெண்ட்ஸ் எங்களுக்குள்ள எதிர்பாராத விதமா நடந்தது. பெருசு பண்ண வேண்டாம். நீங்க டென்ஷன் ஆகாதீங்க. நாங்க மேனேஜ் பண்ணிப்போம்…” என்ற விஷால்,

“என்னங்கடா சைலன்ட்டா நிக்கிறீங்க? அண்ணாட்ட சொல்லுங்க… என தூண்ட,

“ஆமா அத்தான். பாவத்த. விட்ருங்க. பொழைச்சு போகட்டும்…” சந்தோஷ் பல்லை கடித்துக்கொண்டு பேச அதில் புருவம் உயர்த்திய அதிரூபன்,

“சந்தோஷ்…”

“அண்ணா அவனுக்கு கோவம் இன்னும் குறையலை. அதான் இப்படி பேசறான்…” விஷால் கொடுத்த தைரியத்தில் அர்னவ் வாயை திறக்க,

“இப்போ ட்ரிப்பை கண்டினியூ செய்யறீங்களா? இல்லை ட்ராப்பா?…”

“ட்ராப் தான் அத்தான். ஊருக்கு கிளம்பறோம். இந்த சுட்சுவேஷன்ல ட்ரிப் போக வேண்டாம்னு தோணுது…” மற்ற இருவரையும் முந்திக்கொண்ட சந்தோஷ் முடிவாக சொல்லிவிட,

“குட். நானும் அதைத்தான் நினைச்சேன். கிளம்புங்க. பர்ஸ்ட் ஹாஸ்பிடல் போய் பர்ஸ்ட் எய்ட் முடிச்சுட்டு போகலாம். கம் ஆன்…” அதிரூபன் முன்னே நடக்க,

“அத்தான் நீங்க கிளம்புங்க. உங்களுக்கு பிஸ்னஸ் மீட் இருக்கு தானே? நாங்க பார்த்துக்கறோம். கார்லயே மெடிக்கல் கிட் இருக்கே. நத்திங் வொர்ரி…” சந்தோஷ் கூற,

“ஆர் யூ சூர்…” என்க,

“எஸ் அத்தான். நாங்க பார்த்துக்கறோம். நீங்க மீட்டிங் முடிச்சிட்டு அப்டியே இன்விடேஷன்ஸ் கொடுத்துட்டு வாங்க. இப்பவே முடிச்சா தானே? இல்லைனா திரும்ப வந்து குடுக்க வேண்டியதாகிடும்…” என சந்தோஷ் சொல்ல,

“ஆஹாங், அவ்வளோ பெரிய மனுஷனா நீ?…” என சிரிப்போடு கேட்க,

“பின்ன? மாப்பிள்ளை நீங்களாச்சே. அம்மா சொல்லியிருக்காங்க அத்தான். கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னால இருந்து நீங்க எங்கயும் வெளில போகக்கூடாதுன்னு. பந்தக்கால் ஊன்றிட்டா நோ அவுட்டிங். சோ இன்னும் ஒன் மந்த் தான் இருக்கு. அதுக்குள்ள உங்க ஷெட்யூல் எல்லாம் முடிச்சிடுங்க…” என,

“டேய் அதுக்குன்னு நீங்களா எப்டி ட்ரைவ் பண்ணி?…”

“அத்தான், இங்கயே ட்ரைவர் கிடைப்பாங்க. நான் அதுக்கு ஏற்பாடு செஞ்சிடறேன். சோ நீங்க வொர்ரி பண்ணிக்க வேண்டாம்…” மீண்டும் உறுதியாய் கூறியவனின் தோள் தட்டிய அதிரூபன்,

“பார்த்து போகனும். ஸ்லோவா ட்ரைவ் பண்ண சொல்லு. ட்ரைவர் டீட்டய்ல்ஸ் எனக்கு சென்ட் பண்ணிடு…” என சொல்லி மற்ற இருவரையும் பார்த்து,

“வலிக்குதாடா?…” குரல் இறங்கிப்போய் ஒலித்தது. அவனின் பாசத்தில் கண்கள் கசிய,

“இல்லைண்ணா, வலியெல்லாம் இல்லை. பாருங்க காயமும் அவ்வளவா இல்லையே. சின்னப்பிள்ளைங்க சண்டை மாதிரி லேசா தான்…”

அண்ணனின் கவலை பொறுக்காமல் தம்பிகள் மாற்றி மாற்றி சமாதானம் செய்ய சந்தோஷிற்கு தான் எரிச்சலாய் போனது.

“கிளம்பலாம் அத்தான்…” எரிச்சல் மண்டிய மனதை காட்டாமல் அமைதியாய் சொல்ல,

“ஓகே பாய்ஸ். டேக் கேர்…” என்று சொல்லி அதிரூபன் கிளம்பவும் தான் மூவருக்கும் சென்ற உயிர் திரும்பி வந்ததை போல் இருந்தது.

தன் அண்ணனின் கார் கிளம்பி செல்லும் வரை பொறுமையாக நின்றிருந்த விஷால் கார் அவ்விடத்தை விட்டு வெளியேறிய நொடி பரபரப்பாகிவிட்டான்.

“இன்னைக்கு விடக்கூடாதுடா. எங்க ஒளிஞ்சிருந்தாலும் இன்னைக்கு கண்டுபிடிச்சு ஒருவழி பண்ணாம விடமாட்டேன்…” ஆத்திரத்தில் பொங்கிக்கொண்டே தேட,

“டேய், டேய் மடையனுங்கடா நீங்க. இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சும் இங்க இருந்து எஸ்கேப் ஆகாம வந்து என்னை பிடிச்சுக்கோன்னு இங்கயே காத்திட்டு இருப்பாங்களாக்கும்? இந்நேரம் பறந்திருக்கமாட்டாங்க…”

error: Content is protected !!