உயிர் தழுவும் விழியே – 19 (1)

உயிர் – 19

           “என்னம்மோவ் சொல்லுத? ஏத்தா என்னத்துக்கு இப்ப வந்தாக? இரு நா வாரேன்…” என்றவள் வேகமாக தன்னிடத்தில் என்ன பணம் இருக்கிறது என்று அலமாரியில் தேட ஆரம்பித்தாள்.

“என்னவா? எங்கினையோ ஒலாத்த போறதாட்டம் அம்புடுது?…” என்று மயில் உள்ளே வர,

“அத்தே…” என்றவள் அழுகையுடன்,

“அய்யன் வீட்டுல…” என்ற விழியை கை நீட்டி தடுத்தவர்,

“எல்லா தெரியும்த்தா. நீ இத்தத்தேன் செய்யுவன்னும் தெரியும். அதுக்குத்தான ஒன்னிய கங்காணிசிட்டே இருந்தேம். இந்தா நீயி போவ கூடாதுங்கேன். கம்மின்னு இங்கினயே கெட…” என்றார்.

“நீங்கல்லா என்னத்தா செம்மம்?…” என்று அவரின் முகம் நோக்கி கை நீட்டி பேசிய விழி,

“இங்காரும், எம்புருசனுக்காவத்தேன் கம்மின்னு இருந்தேம். அங்கன யே அய்யன் மானம் போவுது. நா பாக்க வேணாமா? நவுரு…” என்றாள் விழி ஆக்ரோஷமாக.

இவர்களிடம் பேசி பயனில்லை என்று தெரிந்துவிட்டது. இதற்கு மேலும் எந்த தயக்கமும் தேவை இல்லை என முடிவெடுத்துவிட்டாள்.

தனது நகைகளை எல்லாம் விற்றாவது சமாளித்துக்கொள்வோம் இப்போதைக்கு. பூமி வரட்டும் என்று கிளம்ப,

“சொல்லிக்கிட்டே கெடக்கேன். நா என்ன கூவயா? கம்மின்னு இருடிங்கேன்…” என்று விழியின் கையில் இருந்த பையை பிடுங்கியவர்கள் அவளை பிடித்து கீழே தள்ளிவிட்டு, அதையும் கண்டுகொள்ளாமல் வெளியேறினார்கள்.

“எத்தே மொத இந்த கதவ சாத்து. கொண்டிய போடு. போனாலும் போவா…” என்று யோகு சொல்ல உள்ளே வைத்து பூட்டிவிட்டார்கள்.

கீழே நிலைதடுமாறி விழுந்தவளுக்கும் சுளீரென்ற வலி. அங்கே கிடந்த உலக்கை மீது விழுந்திருந்தாள்.

வலியில் கண்ணீர் பொங்கியது. கட்டிலில் கிடந்த போனை எடுத்து பூமிநாதனுக்கு அழைக்க அதுவோ செல்லவே இல்லை.

தாய்க்கு அழைத்தாள் உடனே. தன்னை இப்படி அடைத்துவிட்டார்கள் என்று சொல்லவும் சிந்தாவால் அங்கே வரமுடியாது போக வடிவிடம் சொல்ல ஊரில் சிலர் வந்துவிட்டார்கள் மயிலின் வீட்டு வாசலுக்கு.

“எவனாச்சும் காலெடுத்து வெச்சானுங்க ஆம்பள இல்லாத வீட்டுக்குள்ள அகம்புடிச்சு நொழையுதாய்ங்கன்னு போலீசுல எழுதிருவேன்…” என்று யோகு மிரட்ட மயிலு ஒத்து ஊத ஒருவராலும் விழியை காப்பாற்ற முடியவில்லை.

“எத்தே கதவ தொற…” என்று அத்தனை தட்டு தட்டியும் பார்த்துவிட்டாள்.

செல்வியின் தாயும் தந்தையும் கூத்தபிரான் சென்ற கேதத்திற்கு சென்றிருக்க இங்கே கேட்பாரற்று வயிற்றை பிடித்தபடி கதவருகே அமர்ந்து அழுதபடி தட்டிக்கொண்டே இருந்தாள்.

மிரட்டி, கத்தி, கதறி, கெஞ்சி, மன்றாடி என எல்லாம் செய்தும் மனமிறங்கவில்லை.

தன்னுடலில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தில் இன்னுமே அதிர்ந்துபோக பயத்துடன் இறுக்கமாய் வயிற்றை பற்றிக்கொண்டு கால் நீட்டி அமர்ந்தாள்.

“சாமி, அய்யா போய்ராதய்யா…” என்று உருவம் கொள்ளாத உயிரிடம் கெஞ்ச ஆரம்பிக்க,

“இந்தா இங்க என்ன நாடவமாடி நடத்துதாவ, கம்மின்னு இல்ல. ஒன்னியவும் ஒ அப்பேன் வீட்டுக்கே அத்துவிட்டு அனுப்பிருவேன்..” என்று கதவருகே மயிலின் குரலில் வேகமாய் பரிதவ்ப்புடன் திரும்பினாள்.

“அத்தையாச்சும் செய்யித்தா. எந்த நகையும் வேணா. என்னிய விடு. எம்புள்ளயவாச்சும் காப்பாத்திக்கறேம். ஒஞ்சங்காத்தமே வேனாம்த்தா. போயிறேன்…” என்று கெஞ்ச மயிலிடம் பேச்சில்லை.

“என்னடி சொல்லுதா இவ?…” என யோகுவிடம் கேட்க,

“ஓ வம்சத்த வவுத்துல சொமக்கேன்த்தா. என்னிய விடு. வவுறேல்லாம் வலிக்குது…” என்று கதவை தட்டிக்கொண்டே அழ,

“எத்தே இவ நாடவம் போடுதா. அப்பன காப்பாத்தனுமில்ல. என்னத்த சொன்னா ஒன்னிய கரைக்கன்னு பாக்குதா. நம்பாத. மொத நீயி வா…” என்று கீழே அழைத்து சென்றுவிட விழிக்கு உயிரெல்லாம் வடிந்தது.

போனில் மீண்டும் மீண்டும் பூமிக்கும், வீரபாண்டிக்கும் அழைத்துக்கொண்டே இருந்தாள்.

கூத்தபிரானுக்கோ, துளசிக்கோ அழைக்க தோன்றாமல் போனது தான் விதியின் வசம்.

இன்னும் வலி அதிகமாக கண்ணீர் நிற்காமல் சென்றது. உதட்டை கடித்துக்கொண்டு அமர்ந்தவள் கைப்பேசியில் பூமியின் அழைப்பில் திடுக்கிட்டு பார்க்க,

“இந்தா வந்துட்டேம் விழி. ஆருக்கும் போனு போவலடி. இன்னும் அரமணிநேரத்துல அங்கன இருப்பேம்த்தா. ஒன்னுமாவாது. நாளைக்கு காச அனுப்பிருவாக. வெசனப்படாதடி…” என்று சொல்ல கண்ணீர் பொங்கியது.

அவன் ராசப்பன் வீட்டின் நடந்த பிரச்சனையை பற்றி பேசிக்கொண்டிருக்க விழியின் கேவல் பெரிதாய் வெடித்தது.

“விழி…”

“மாமா என்னிய அடச்சு போட்டுட்டாக. மாமா புள்ள மாமா…” என்று அவளின் பெருங்குரலில் அதிர்ந்து போனான்.

“என்னடி சொல்லுத?…” என்றவன் சத்தத்தில் நடந்ததை விழி சொல்ல,

“இப்ப பேசுதேம்டி…” என்று சொல்லி போனை செல்வியிடம் தர விழிக்கு மயக்கம் வரும்போல் ஆனது.

பேச முடியாமல் அவள் திணற யார் அழைத்துக்கொண்டே இருப்பது தெரிய அந்த அழைப்பை எடுத்தாள்.

“சிட்டு ஓ அய்யன் நம்மள எல்லா விட்டு போய்ட்டாருடி. நெஞ்ச புடிச்சுட்டு ஒக்காந்த மனுசென் சாஞ்சிட்டாருடி…” என்ற வடிவின் குரலில் அடிவயிற்றில் சுமந்த உயிரும் மொத்தமாய் வெளியேறியிருந்தது.

இரண்டு உயிர்களை ஒரேநேரத்தில் பறிகொடுத்தவளின் சத்தம் சத்தமின்றி அடங்க அங்கேயே மயங்கி விழுந்தாள் விழி.

மீண்டும் அவளுக்கு அழைப்பு சென்றதே தவிர எடுக்க விழி சுயநினைவில் இல்லை.

இங்கே மயிலுக்கு அழைத்து பூமிநாதன் பேச யோகு தான் பேசினாள் அவனிடத்தில்.

“அத்தேக்கு முடியல. பேச முடியாதுன்னுட்டாக…” என்று சொல்லி போனை வைத்துவிட மீண்டும் பூமி அவர்களுக்கு அழைக்கும் முன் அவனை அடைந்தது ராசப்பனின் மரண செய்தி.

அங்கேயே மூவரும் உடைந்துபோக நெல்லை வந்து சேர்ந்தவர்கள் அங்கிருந்து ஒரு காரை எடுத்துக்கொண்டு ஊர் வருவதற்குள் கூத்தபிரானுக்கு அழைத்து அனைவரையும் கிளம்பி வர சொன்னான்.

விழியின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்கவும் முடியாமல் ராசப்பன் வீட்டை தாண்டி செல்லும்பொழுதே அத்தனைபேரும் பார்க்கத்தான் செய்தார்கள்.

போன் செய்தும் விழி வராமல் இருக்க வீட்டிற்கு சென்று சொல்ல அத்தனை பயம்.

மீண்டும் எங்கே பூமியோ, வேறு யாருமோ அழைப்பார்களோ என்று போனையும் அணைத்து வைத்திருக்க விஷயம் மயிலுக்கும் யோகுவிற்கும் தெரியாமலே போனது.

பூமிநாதன் வந்த கார் வாசலில் நின்றதும் அத்தனை தெனாவட்டுடன் தான எதிர்கொண்டார் மயில்.

உயிரை காட்டி பயம்காட்டி வைத்திருக்க தன்னை எதுவும் செய்ய முடியாதென்று ஒரு இறுமாப்பு அவரிடத்தில்.

ஆனால் அவரை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை பூமி. அவனின் பின்னே செல்வியும் வீரபாண்டியும் கூட செல்ல,

“என்னத்தே இம்புட்டு அவதியா போறாக?…”

“அம்புட்டுக்கு அவ அழுதுருப்பா. நடிப்புக்காரி…” என்று தோளில் இடித்துக்கொண்டவர் வாசலுக்கு வர பண்ணையில் வேலை செய்பவர்கள் பூமிநாதன் வரவும் அங்கே நிற்க,

“என்னாலே, இங்கின என்ன பார்வை?…” என்றார் அதிகாரமாக.

“அம்மா ஒங்களுக்கு சேதி தெரியாதுங்களா? சிட்டு ஐயா தவறிட்டாருங்க…” என்றதும் மயில், யோகு இருவருமே அதிர்ந்துவிட்டார்கள்.  

“எப்ப? எந்நேரத்துக்கு?…” என மயில் கேட்க,

“செத்தமின்னதேன். அத்த சொல்லத்தேன்…”

error: Content is protected !!