அத்தியாயம் – 9
எக்ஸாம் எல்லாம் முடித்து விட்டு அவள் அறையில் அமர்ந்து இருந்தாள் காயத்திரி.
அவள் தொலைப்பேசிக்கு புது நம்பரில் இருந்து கால் வந்தது… யோசித்து கொண்டே அட்டென்ட் செய்தாள் காயத்திரி…
“ஹலோ” என்று மெதுவா சொன்னாள்.
மறுமுனையில் அமைதியாக இருந்தது.
“மறுபடியும் ஹலோ யாரு?” என்று கேட்டாள்.
“அம்மு” என்று கொஞ்சம் மென்மையாக அழைத்தான் ரிஷன்.
“பேசணும் அம்மு” என்றான் ரிஷன்.
“ம்ம்ம்ம் சொல்லுங்க” என்றாள். (அவள் மாமா சொல்லாததை வைத்து அவள் பேச கூடிய சூழ்நிலையில் இல்லை என்று புரிந்து கொண்டான்)
“அம்மு வர ஜூன் 14 சாரதா அத்தையோட தங்கச்சி பையன் வினு நேத்ரன்க்கும் ஹர்ஷினிக்கும் நிச்சயம், அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். உடம்பை பார்த்துக்கோ கவனமாக இருந்துகோ எப்பவும்” என்று சொல்லி தொலைப்பேசியைக் கட் செய்தான் ரிஷன் கிருஷ்ணா.
காயத்திரி கால்ஹிஸ்டரில் இருந்து நம்பரை டெலீட் பண்ணிவிட்டு அமைதியாக அமர்ந்து ஹர்ஷினியை தன் அண்ணன் கல்யாணம் செய்யப் போவதை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தாள். மனதுக்குச் சந்தோஷமாக இருந்தது.
சில நிமிடங்கள் கழித்து இன்னொரு புது நம்பரில் இருந்து கால் வந்தது. யோசைனையாகக் அந்த காலை அட்டன் செய்தாள்.
“ஹலோ பொண்டாட்டி… எப்படி டி இருக்க..?” என்று துள்ளலாக ஒரு குரல் கேட்டது.
“யாரு நீங்க?” என்று கேட்டாள் காயத்திரி.
“பொண்டாட்டி நான் யாருன்னு தெரியலை யா?” என்று அதிகாரமாய்க் கேட்டு விட்டு….”நான் ராஜதுரை பேசுறேன்” என்று சொன்னான்.
மறுமுனையில் மௌனம்.
“ஹலோ பொண்டாட்டி லைனில் இருக்கியா…??” என்று கத்தினான் ராஜதுரை .
“ம்ம்ம்ம் இருக்கேன் என்ன வேணும் உங்களுக்கு?” என்று பொறுமையை இழந்து கொண்டே கேட்டாள் காயத்திரி.
“என்ன கேட்டாலும் தருவியா…?” என்று விஷமமாகக் கேட்டான் ராஜதுரை .
அவன் கிட்ட இப்படிக் கேட்டது தன்னுடைய தவறு தான் என்று நினைத்து மௌனமாக இருந்தாள் காயத்திரி.
சத்தமாகச் சிரித்து விட்டு
“சரி சரி கோவாப்படாத பொண்டாட்டி, எனக்கு உன்னோட போட்டோஸ் வேணும்” என்று கேட்டான் ராஜதுரை .
“என்னோட போட்டோஸ்… எதுக்கு உங்களுக்கு.?” என்று யோசையாகக் கேட்டாள் காயத்திரி.
“ஏன் எதுக்குன்னு சொன்னாதா உன் போட்டோஸ் தருவியா?” என்று அதிகார தோரணையில் கேட்டான் ராஜதுரை .
“இந்தக் காலத்தில போட்டோஸ் வச்சு என்ன வேணுமின்னாலும் பண்ணலாம் அதனால தான் கேக்கிறேன்” என்று விளக்கமாகக் கூறினாள் காயத்திரி.
“ஏய்ய்ய் ரொம்பப் பேசாத உன்னை முழுசா பார்க்க போற நான் தான் டி உன் போட்டோஸ் கேக்குறேன்… பேசாம போட்டோஸ் குடு சுடிதார், புடவை , மாடர்ன் டிரஸ் இப்பிடி எல்லா விதமான ட்ரஸ்லயும் எனக்குப் போட்டோஸ் வேணும் சரியா..?” என்று அதிகாரமாச் சொன்னான் ராஜதுரை .
அவன் பேசுவதைக் கேட்டு காயத்திரிக்கு அருவருப்பாக இருந்தது. அமைதியாக இருந்தாள்.
“என்ன சத்தத்தைக் காணோம்” என்றான் ராஜதுரை .
“புடவை , சுடிதார் இருக்குற போட்டோ மட்டும் அனுப்புறேன் ஆனா எதுக்குன்னு சொல்லுங்க..” என்று பொறுமையாகக் கேட்டாள்.
“அதுவா… நம்ம நிச்சயத்துக்குக் கட்டவுட் வைக்கனும் அதுக்குத் தான்” என்றான் ராஜதுரை .
“சரி கொஞ்ச நேரத்தில் அனுப்புறேன்” என்றாள் காயத்திரி.
“ம்ம்ம்ம்… சரி அப்பிடியே கொஞ்சம் ஸ்பெஷல் போட்டோஸ்.. எனக்கு அனுப்பு” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டான் ராஜதுரை .
“ஸ்பெஷல் போட்டோஸ் னா….” என்று எதுவும் தெரியாத குரலில் கேட்டாள்.
“ஸ்பெஷல் போட்டோஸ் னா…. கொஞ்சம் இடுப்பு தெரியற மாதிரி, மராப்பு விலகி உன் நெஞ்சுக்குழி தெரியுற மாதிரி, புடவையைத் தூக்கி சொருகி உன்னோட கெண்டை கால் தெரியுற மாதிரி.. இதுக்கு மேல வேற இருந்தா கூட எனக்கு ஒகே தான்” என்று சொன்னான் ராஜதுரை .
“ச்சீ…. இப்படி அசிங்கமா பேச உங்களுக்கு வெக்கமாகவே இல்லையா?” என்று உஷ்னமாகக் கேட்டாள் காயத்திரி.
சத்தமாகச் சிரித்து விட்டு…. “வெட்கமாகவா…. இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுசா துணி இல்லாம பார்க்க போறவனே நான் தான் டி… இப்போ துணியோட தானே போட்டோஸ் கேட்டேன். அவன் அவன் துணி இல்லாம எல்லாம் போட்டோஸ் கேக்குறாங்க இதைக் கேட்டதுக்கு உனக்குக் கோவம் பொத்துகிட்டு வருது..” என்று பச்சையாக பேசினான்.
இதுக்கு மேல இவன்கிட்ட பேசுறது வேஸ்ட் என்று நினைத்து விட்டு…
“கட்டவுட் வைக்க மட்டும் போட்டோஸ் அனுப்புறேன்” என்று சொல்லி அலைப்பேசியைக் கட் செய்தாள் காயத்திரி.
அவள் கட் செய்த உடன் ராஜதுரைக்குக் கோபம் வந்தது உடனே அவளுக்கு திருப்பவும் அழைத்தான். காயத்திரி போனை எடுக்கவில்லை. இரண்டு மூன்று முறை அடித்து விட்டுப் பொறுமை இழந்து.. மாலா நம்பர்க்கு கால் பண்ணினான்.
மாலா கால் அட்டேன் பண்ணி…
“ஹலோ சொல்லுங்க மாப்பிள்ளை” என்று பணிவாகக் கேட்டார்.
“நான் காயத்திரி கிட்ட பேசணும் அவகிட்ட போனை தாங்க” என்று அதிகாரமாகச் சொன்னான்.
உடனே மாலா காயத்திரியை அழைத்தார்…
“ஏய் காயத்திரி இங்க வா” என்றார்..
அவள் வந்த உடன் “மாப்பிள்ளை உன் கிட்ட பேசணுமா ஒழுங்கா பேசு சும்மா பிகு பண்ணாத…” என்று சொல்லி போனை கொடுத்து விட்டு சென்றார்.
காயத்திரி போனை காதில் வைத்து ஹலோ சொன்ன உடன்
“ஏய் இங்க பாரு போனை கட் பண்ணுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத நான் போன் பண்ணா நீ எடுத்து தான் ஆகணும் இல்லனா என்னை வேற மாதிரி பார்ப்ப போய் உன் போனில் இருந்து எனக்குக் கால் பண்ணு” என்று அதட்டலாகச் சொல்லி காலை கட் செய்தான்.
காயத்திரி மாலாவின் போனை குடுக்க அம்மாவை தேடி சென்றாள்.
“அம்மா இந்தாங்க போன்…” என்று தந்துவிட்டுக் கொஞ்சம் தயங்கி கொண்டே”அம்மா எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்” என்று சொன்னாள்.
“அடிங்கழுதை கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுற அளவுக்கு வந்துட்டியா நீ” என்று சொல்லி தகாத வார்த்தைகளால் காயத்திரியை சத்தம் போட்டார்.
“இங்க பாரு டி ராஜதுரை தான் இந்த வீட்டு மாப்பிள்ளை சும்மா இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த வை உன்னை நடந்தை கெட்டவள் காலேஜில் பல பேரோடு படுத்தவள் அப்படின்னு ஊரு முழுக்க நானே சொல்லி உன்னை அசிங்க படுத்திடுவேன்” என்றார்.
தன் தாய் அப்படி சொல்லவும் அதிர்ச்சியில் கண்ணீர் வந்தது காயத்திரிக்கு…
“அம்மா ஏன்மா எப்படி எல்லாம் அசிங்கமா பேசுறீங்க.??” என்று கண்ணீர் குரலில் கேட்டாள்.
“இங்க பாரு சும்மா சீன் போடாத எனக்கு என் பொண்ணு காஞ்சனா வாழ்க்கை தான் முக்கியம். அதுனால ராஜதுரை தான் உன் புருஷன். அதை மனசுல வச்சு நடத்துக்க” என்றார் மாலா.
“இங்க பாரு மாப்பிள்ளை போன் பண்ண அவருக்குப் பிடித்த மாதிரி பேசு உன்னைக் கட்டிக்கப் போறவர் தானே கொஞ்சம் அப்படி இப்படிப் பேசலாம் தப்பு இல்லை சரியா சும்மா பிகு பண்ணிட்டு இருந்தேன்னு நான் சொன்ன மாதிரி உன்னை அசிங்க படுத்திடுவேன்” என்று மிரட்டி விட்டு சென்றார்.
வேற வழி இல்லாமல் ராஜதுரைக்கு அவளே கால் செய்தாள்.
“ஹலோ சொல்லுங்க” என்றாள் காயத்திரி.
“இங்க பாரு இனிமேல் கால் கட் பண்ணற வேலை எல்லாம் வச்சுக்காத நானா கட் பண்ணுற வரைக்கும் பேசணும், அதே மாதிரி நான் எப்போ கால் பண்ணாலும் நீ எடுத்து பேசணும் இல்லனு வை உன்னை அசிங்க படுத்திடுவேன்” என்று மிரட்டினான்.
“ம்ம்ம்ம் சரி இனிமேல் இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்’ என்று சொன்னாள் காயத்திரி.
“ம்ம்ம்ம் புரிஞ்சு நடந்துக்கோ… சும்மா சொல்லக்கூடாது டி உன்ன நினைச்சாலே உடம்பு எல்லாம் ஜீவ்வுனு இருக்கு” என்று போதை குரலில் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு காயத்திரிக்கு அருவருப்பாக இருந்தது. பேசாமல் மௌனமாக இருந்தாள்.
“ஏய்ய்ய் பேசுடி இப்படி பேசாம இருந்த உங்க அம்மாக்கு போன் பண்ணி நீ ஒழுங்கா பேச மாட்டேன்கிறனு சொல்லுவேன்’ என்று மிரட்டினான்.
(மாலா சற்று நேரத்து முன் பிளாக்மெயில் செய்தது தான் நியாபத்துக்கு வந்தது)
காயத்திரி கொஞ்சம் பொறுமையாக… “இங்க பாருங்க நீங்க இப்படி எல்லாம் பேசுறது எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்று தன்மையாகச் சொன்னாள்.
“ஒரு மாதிரினா எப்படி பிடிக்காத மாதிரியா… இங்க பாரு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறது நான் தான் அதுனால உனக்குப் பிடிக்காட்டியும் பரவாவில்லை என்கூட நீ செக்ஸியா பேசித்தான் ஆகணும் புரியுதா… சரி எதுக்கு “ங்க.. ங்க..” னு பேசுற நான் உன்னைக் கட்டிக்கப் போறவேன் ஒழுங்கா முறை சொல்லி கூப்பிடு இன்னொரு தடவ முறை சொல்லாம.. “ங்க” னு சொன்ன நாளைக்குக் காலையில உங்க வீட்டுக்கே வந்து அடிப்பேன் உன்னைச் சரியா..” என்று மிரட்டல் குரலில் சொன்னான் ராஜதுரை.
“ம்ம்ம்ம் சரிங்க மச்சான்” என்றாள் காயத்திரி. (அவளால் ரிஷனை தவிர வேறு ஒருவனை மாமா என்று அழைக்க முடியவில்லை)
அவள் மச்சான் சொன்னதை ரசித்தான் ராஜதுரை.
“இன்னொரு தடவ மச்சான் னு சொல்லு டி” என்று ஆசையாகக் கேட்டான்.
“மச்சான்…” என்று எரிச்சலாகச் சொன்னாள் காயத்திரி.
“நீ மச்சான் னு சொல்லும் போது உன்னைக் கட்டி பிடுச்சு உன் உதட்டுல முத்தம் கொடுக்கணும் போல இருக்கு டி என் ஆசை பொண்டாட்டி” என்றான் ராஜதுரை.
காயத்திரிக்கு ஐயோ என்று இருந்தது எப்படா இவன் போனை வைப்பான் என்று இருந்தது.
“என்ன டி எதுவும் சொல்ல மாட்டேன்கிற… சரி விடு இன்னைக்கே எல்லாம் பேச முடியாது நீ மச்சான் சொன்னாதே போதும் ஒழுங்கா போட்டோஸ் அனுப்பு கட்டவுட் வைக்கணும் சரியா” என்றான்.
“ம்ம்ம்ம் சரிங்க மச்சான் அனுப்புறேன்” என்றாள்.
“ம்ம்ம்ம் போன் பண்ணா ஒழுங்கா எடு” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
காயத்திரிக்கு அப்பாடா என்று இருந்தது.
சில நிமிடங்கள் கழித்துச் சேரில் மூன்று புகைப்படமும், சுடிதாரில் ஐந்து புகைப்படமும் அனுப்பி வைத்தாள்.
சற்று நேரம் கழித்து மாலா வந்து…
“ஏய்ய்ய் மாப்பிள்ளை ஏதோ உன்கிட்ட ஸ்பெஷல் போட்டோஸ் கேட்டாராம் நீ அனுப்ப மாட்டேன்னு சொன்னியாம்” என்று கேட்டார் கோபமாக.
“அம்மா அவர் வேற மாதிரி கேக்குறாரு மா” என்று தயக்கமாகச் சொன்னாள்.
“வேற மாதிரி னா எப்படி..?” கேட்டார் அன்னை.
அவள் தயங்கிக் கொண்டே ராஜதுரை கேட்டதைச் சொன்னாள்.
அவள் அன்னை தனக்குச் சப்போர்ட் செய்வார் என்று எண்ணினாள்.
ஆனால் மாலா “இதுல என்ன டி இருக்கு எல்லாம் தப்பு ஒன்னும் இல்லை இன்னும் கொஞ்ச நாளில் அவர்கூடப் படுக்கத் தானே போற அவர் பார்க்குறதுல தப்பு இல்லை போட்டோஸ் எடுத்து அனுப்பு சும்மா அலடிக்காத… இதவிட வேற மாதிரி கேட்டாலும் அனுப்பு அவர் பார்த்து ரசிச்சா நீ ஒன்னும் குறைஞ்சு போய்டமாட்டா… சும்மா என் உடம்பக் காட்ட மாட்டேன் அப்படி இப்படினு இதாவது சொல்லிட்டு வேற யாராச்சும் உன் மனசுல நினைச்சேன்னு வை என் கிட்ட இருக்குற உன்னோட போட்டோவை நானே அசிங்கமா ரெடி பண்ணி ஊரு முழுக்க அனுப்பி வச்சுருவேன் ஒழுங்கு மரியாதையா மாப்பிள்ளை கேக்குற மாதிரி போட்டோஸ் அனுப்பி வை அவர் கூட ஒழுங்கா பேசு…” வந்துட்டா பெரிய இவளாட்டம் என்று கத்தி விட்டு சென்றார்.
காயத்திரி மனதால் செத்துவிட்டாள். உலகத்தில் இப்படி ஒரு தாய் யாருக்கும் இருக்க மாட்டார்கள். கண்களில் கண்ணீர் வந்தது.
ரிஷனை மனதில் வைத்துக் கொண்டு அவளால் ராஜதுரைக்குப் போட்டோ அனுப்ப முடியவில்லை.
சாட்சிக்கார காலில் விழுகிறதை விடச் சண்டைக்கார காலில் விழுகலாம் என்று முடிவு எடுத்து ராஜதுரைக்குப் போனில் அழைத்தாள்.
“ஹலோ மச்சான்” என்றாள்.
“சொல்லு டி என் ஆசை பொண்டாடி” என்றான் ராஜதுரை.
“மச்சான் நான் சொல்லுறதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்றாள் காயத்திரி.
“ம்ம்ம்ம் சொல்லு” என்றான்.
‘இன்னும் கொஞ்சம் நாளில் நமக்குக் கல்யாணம் ஆகப் போகுது தான… இந்தப் போட்டோஸ் எல்லாம் வேணாம் மச்சான் கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கோங்க ப்ளீஸ் மச்சான் இந்தப் போட்டோஸ் எல்லாம் வேண்டாம்” என்று மன்றாடும் குரலில் கூறினாள்.
“இங்க பாரு என்னால கல்யாணம் வரைக்கும் எல்லாம் பொறுமையா இருக்க முடியாது வேணா ஒன்னு பண்ணலாம் நிச்சயம் வரைக்கும் நான் பொறுமையா இருக்கேன் அதுக்கு அப்புறம் நான் கேக்குற மாதிரி எல்லாம் எப்போ கேட்டாலும் நீ போட்டோஸ் எடுத்து அனுப்பனும் சரியா… இதுக்கு நீ ஒத்துக்கிட்டா மட்டும் தான் இப்போ உன்னை விடுவேன் இல்லனு வை திரும்பவும் உங்க அம்மாக்கு போன் போடுவேன்” என்று மிரட்டலாகக் கூறினான்.
அவளுக்கு வேற வழி இல்லாமல்…
“சரி மச்சான் நிச்சயம் முடுஞ்சதுக்கு அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன்” என்று வாக்கு கொடுத்தாள் காயத்திரி.
“ரொம்பச் சமத்து டி” என்று செல்லமாகச் சொல்லி போனை வைத்தான் ராஜதுரை.
இப்போதைக்குப் போட்டோஸ் அனுப்ப வேண்டாம் என்று சந்தோசம் பட்டுக்கொண்டாள் காயத்திரி.
காயத்திரிக்கு இதுக்கு மேலே சோதனை வருமா…?
ராஜதுரையின் ஆசைக்கு அடிபணிவளா காயத்திரி..?
மாலாவின் ஆசைப்படி காயத்திரி கல்யாணம் நடக்குமா..?
பார்க்கலாம்…..