மௌனத்தின் நேசம் – 8

அத்தியாயம் – 8

காயத்திரியின் மெசேஜ் பார்த்த பிறகு ரிஷனின் மனம் நிலை இல்லாமல் தவித்தது. அவன் எதுவும் செய்ய பிடிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

ரிஷனின் போன் அடித்தது பாலாஜி தான் அழைத்து இருந்தான். ரிஷனும் அழைப்பை ஏற்று.

“ஹலோ சொல்லு டா” என்று சுரத்தை இல்லாமல் பேசினான்.

“என்ன டா உன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்று அக்கறையாகக் கேட்டான்.

“உடம்புக்கு எல்லாம் நல்லா தான் இருக்கு மனசு தான் சரி இல்லை” என்றான் ரிஷன் .

“என்ன டா மச்சான் என்ன விஷயம்” என்று கேட்டான் பாலாஜி.

காயத்திரி நியாபகம் இருக்கா உனக்கு? என்று கேட்டான்.

“ம்ம்ம்ம் காயத்திரி… என்று யோசித்தான். நம்ம கார்த்திக் கல்யாணத்துல பார்த்தோம்ல அந்தப் பொண்ணுதான” என்றான் பாலாஜி.

“ம்ம்ம் ஆமா டா அவள் தான்” என்றான் ரிஷன்.

“சரி அந்தப் பொண்ணுக்கு என்ன எதுக்கு அவளைத் தெரியுமானு இப்போ கேட்ட?” என்று கேட்டான் பாலாஜி.

“நானும் அந்தப் பொண்ணும் லவ் பண்ணுறோம், கார்த்திக் மேரேஜ்ல வச்சு தான் ப்ரொபோஸ் பண்ணேன்” என்று சொன்னான்.

“டேய்ய்ய்ய்ய்…. அப்போ அவள் உன்னோட ரிலேட்டிவ் இல்லையா!?” என்று அதிர்ச்சியாகக் கேட்டான் பாலாஜி.

“டேய் பக்கி அவள் என் மாமா பொண்ணு தான் பிடித்து இருந்தது லவ் சொன்னேன் அவளும் பொண்ணு கேட்டு வர சொன்னா வீட்டுல எல்லாருக்கும் சந்தோசம் அவளைப் பொண்ணு கேட்டு போனாங்க அதில் தான் பிரச்சனை” என்று வருத்தமாகச் சொன்னான் ரிஷன்.

“என்ன பிரச்சனை?” என்று கேட்டான் பாலாஜி.

“ஏன் மது உன்கிட்ட எதுவும் சொல்லலையா?” என்று கேட்டான் ரிஷன்..

“இல்லையே.. எதுவும் சொல்லலை” என்று யோசைனையாகச் சொன்னான் பாலாஜி.

ரிஷன் காயத்திரியை பற்றி அவன் காதல், அவள் வீட்டு சூழ்நிலை, இப்போது நடக்கும் பிரச்சனை எல்லாம் சொன்னான்.

“பாலாஜி… டேய் மச்சான் என்ன டா இப்படி எல்லாம்? சரி நீ இப்போ என்ன பண்ண போற” என்று கேட்டான்.

“தெரியல டா மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு” என்றான் ரிஷன்.

“டேய்ய் ரிஷன் நான் சொல்லுறதை செய்வியா பேசாம ஒர்க் பிரம் ஹோம்க்கு இன்போர்ம் பண்ணிட்டு நீ மதுரைக்குப் போ அப்பதான் எதுவும் எமெர்ஜென்சினா ஏதாவது பண்ண முடியும். கையோட சென்னைக்கு ட்ரான்ஸ்பரும் கேட்டு பாரு இங்க பக்கத்தில இருந்தா தான் நல்லது” என்று கூறினான் பாலாஜி.

பாலாஜி சொன்னது சரி என்று ரிஷனுக்குத் தோன்றியது.

“சரி டா நீ சொல்லுறதும் கரெக்ட் தான் நீ சொல்லுற மாதிரி பண்றேன்” என்றான் ரிஷன்.

பின் சில நொடிகள் பேசி விட்டுப் போனை கட் செய்தான்.

ரிஷன் அவன் ப்ராஜெக்ட் டிஎல்க்கு ஒர்க் பிரம் ஹோம்க்கும் மெயில் போட்டு விட்டுட்டு…. ஹையர் ஆபீஸியல் மெம்பருக்கு சென்னைக்கு ட்ரான்ஸபர் கேட்டு மெயில் செய்தான் .

பின் அன்னைக்குத் தொலைபேசியில் அழைத்தான்.

“அம்மா வர ஜூன் 14 ராஜதுரை கூட நிச்சயதார்த்தம் என அம்மு மெசேஜ் பண்ணி இருந்தாள்” என்றான் ரிஷன்.

“என்ன டா கண்ணா சொல்லுற… என்ன டா பண்ண போற” என்று பரிதாவிப்பாய் கேட்டார் அன்னை.

“தெரியல மா இப்போதைக்கு நான் ஒர்க் பிரம் ஹோம் வாங்கிட்டு மதுரைக்கு வரேன் அங்க வந்து பேசிக்கலாம் அப்பா கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லிடுங்க” என்றான் ரிஷன்.

பாலாஜியிடம் பேசிய பிறகு மனசுக்குக் கொஞ்சம் தெளிவு கிடைத்தது அந்தத் தெளிவுடன் மதுரைக்குக் காரில் சென்றான் ரிஷன் கிருஷ்ணா.

அடுத்த நாள் காலை தான் ரிஷன் மதுரைக்குச் வந்து சேர்த்தான். மிகவும் களைப்பாக இருந்தான் மனதின் சோர்வு உடலிலும் பிரதிபலித்தது.

“வாங்க அண்ணா” என்றாள் ஹர்ஷினி ஆசையாக.

“ம்ம்ம்ம் எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணியா பாப்பா?” என்றான் அண்ணன்.

“80% பர்சன்டேஜ் வரும் அண்ணா” என்றாள் பாப்பா.

“அம்மா எங்க? “ என்று கண்களால் தேடிக் கொண்டே கேட்டான் ரிஷன்.

“அம்மா குளிக்கிறாங்க, இருங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்றாள் பாப்பா.

ரிஷன் சோபாவில் படுத்துக் கொண்டான்.

“அண்ணா இந்தாங்க காபி என்று தந்தாள்” ஹர்ஷினி.

“தேங்க்ஸ் பாப்பா” என்று சொல்லி குடித்தான் ரிஷன்.

“அண்ணா காயத்திரி மதினி நைட் எதுவும் போன் பண்ணாங்களா?” என்று கேட்டாள்.

“இல்லை மா நேத்து மெசேஜ் பண்ணி இருந்தா ஜூன் 14 நிச்சயதார்த்தம்னு சொன்னா” என்றான் ரிஷன்.

அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டே அவன் தந்தை அவன் அருகில் அமர்ந்தார்.

“என்னய்யா பண்ண போற?” என்று கேட்டார்.

“தெரியல பா யோசிக்கணும் என் காதல் மேல நம்பிக்கை இருக்கு எப்படியும் எங்களை அந்த காதல் சேர்த்து வைக்கும்” என்று அமைதியாகச் சொன்னான்.

“சரிய்யா பார்த்துக்கலாம் நாங்க எல்லாரும் உன் கூடவே தான் இருக்கோம் வருத்தபடாத ….

நீ போய்க் குளிச்சுட்டு வாய்யா வீட்டுக்கு ஒருத்தவங்க வராங்க” என்றார் ஜெகதீஸ்வர்.

“யாருப்பா… வரா?” என்று கேட்டான் ரிஷன்.

ஹர்ஷினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு…

“ரெங்கநாதன் வீட்டுல இருந்து வராங்கய்யா ஒரு சந்தோஷமான விஷயம் பேச” என்றார் தந்தை.

தந்தையை யோசனையாகப் பார்த்துக் கொண்டே தன் அறைக்குச் சென்றான் ரிஷன்.

ஹர்சினியை பெண் கேட்டு வருகிறார்கள். மாப்பிள்ளை பற்றி நன்கு விசாரித்து விட்டார் ஜெகதீஸ்வரன். அவருக்கும் யசோதாவுக்கும் முழுச் சம்மதம்.

தன் அறைக்குச் சென்ற உடன் லேப்டாப்பை திறந்து மெயில் எதுவும் வந்து உள்ளதா என்று பார்த்தான்.

இரண்டு மெயில் வந்து இருந்தது. ஒன்று சென்னைக்கு ட்ரான்ஸபர் கேட்டு இருந்த மெயில்க்கு ரிப்ளை மெயில் வந்து இருந்தது ஒன் வீக்கில் ட்ரான்ஸபருக்குப் பிராசஸ் பண்ணுறோம் என்றும் ஒர்க் பிரம் ஹோமுக்கு அப்ரூவலும் வந்து இருந்தது அதைப் பார்த்து விட்டுக் குளிக்கச் சென்றான்.

அவன் குளித்து விட்டு வரும் போது அவனுக்குப் பிடித்த சப்பாத்தியும் காளான் கிரேவியும் ரெடியாக இருந்தது.

“கண்ணா…” என்று சொல்லி அவன் தலையைக் கோதிவிட்டார் யசோதா.

ரிஷன் மெதுவாக அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

அனைவரும் ஒன்றாகச் சாப்பிட்டனர்.

ரிஷன் சோபாவில் படுத்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் எல்லாம் ரெங்கநாதன் அவர்கள் ஜெகதீஸ்வரன் வீட்டை அடைந்தார்.

அவருடன் அவரது மனைவி சாரதா, சாரதாவின் தங்கை தீபலட்சுமி, அவரின் கணவர் செந்தில் ராஜன், அவர்களின் ரெண்டு மகன்கள் வினு நேத்ரன் மற்றும் கௌஷிக் விசாகன் வந்து இருந்தார்கள்.

செந்தில் ராஜன் கவர்மெண்ட் ஸ்கூலில் கணித ஆசிரியர். மனைவி தீபலட்சுமி பிரைவேட் ஸ்கூலில் பயோலஜி டீச்சர்.

வினு நேத்ரன் மாநிறம், ஆறடி உயரம், கலையான முகம். அவன் பிரவுன் நிற கண்கள் அவன் முகத்துக்கு அழகாக இருக்கும். M.E சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில்‌ அசிஸ்டன்ட் இன்ஜினியராக வேலை பார்க்கிறான்.

கௌஷிக் விசாகன் மாநிறம், மதுரையில் MBBS நான்காம் ஆண்டு படிக்கிறான். அனைவரும் தூத்துக்குடியில் இருக்கிறார்கள். அங்கே சொந்த வீடும் சில பரம்பரை சொத்துக்களும் உள்ளது .

ஜெகதீஸ்வரன் யசோதா இருவரும் வந்தவர்களை அன்புடன் வரவேற்றனர்.

யசோதா அனைவருக்கும் டீ போட்டு கொடுத்தார்.

அனைவரும் ஹாலில் பேசி கொண்டு இருந்த போது ஹர்ஷினி மட்டும் ரூம்மில் இருந்தாள்.

ரெங்கநாதன் ரிஷனிடம் “என்ன மாப்பிள்ளை பெங்களூரில் இருந்து எப்போ வந்தீங்க? என்று கேட்டார்.

“இன்னைக்குக் காலை தான் வந்தேன் மாமா” என்றான் ரிஷன்.

“ஓ.. சரிய்யா வேலை எல்லாம் எப்படிப் போகுது?” என்று கேட்டார்.

“ம்ம் நல்லா போகுது மாமா… வனிதா, வனஜா எப்படி இருக்காங்க, அவங்களையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல” என்று கேட்டான் ரிஷன்.

“நல்லா இருக்காங்க மாப்பிள்ளை, இப்பதான் ஸ்கூல் ஓப்பன் பண்ணாங்க 10th லீவு போட முடியாது அதான் கூட்டிட்டு வரமுடியல..” என்றார் சாரதா.

“ஓஓஓஓ 10th போய்ட்டாங்களா என்று” சந்தோசமாக கேட்டார் ஜெகதீஸ்வரன்.

“ஆமா அண்ணா” என்றார் சாரதா.

“பெங்களூர்ல சாப்பாடு எல்லாம் செட் ஆகிடுச்சாய்யா” என்று கேட்டார் செந்தில் ராஜன்.

“ம்ம்ம்ம் செட் ஆகிடுச்சு மார்னிங் அண்ட் நைட் வீட்டுல செஞ்சுக்குவேன் மதியம் மட்டும் ஆபீஸ் கேன்டின்ல சாப்பிடுவேன் மாமா” என்றான் ரிஷன்.

“குக்கிங் எல்லாம் பண்ணுவீங்களா தம்பி நீங்க” என்று ஆச்சரியமாகக் கேட்டார் தீபாலட்சுமி.

ரிஷன் லேசா புன்னகைத்துவிட்டு…

“BE படிக்கும் போது ஹாஸ்டல் சாப்பாடு ஒத்துக்கல அதுனால ரூம் எடுத்து வெளிய தங்கிருதோம் அப்ப சமைக்க தெரியாம ரொம்பக் கஷ்டமாக இருந்தது அதுக்கு அப்புறம் வீட்டுல லீவுக்கு வரும் போதும் எல்லாம் அம்மா கிட்ட கொஞ்சமா கொஞ்சமா கத்துக்கிட்டேன். இப்ப அதுதான் ரொம்ப உதவியா இருக்கு” என்றான் ரிஷன்.

நல்ல நேரம் போய்க் கொண்டு இருப்பதைப் பார்த்த தீபா அவர் கணவருக்குக் கண்களைக் காட்டினார்.

“சரி மச்சான் நாங்க வந்த விஷயத்தைப் பேசிடுறோம் என்று சொல்லி…..

என் மூத்த பையன் வினு நேத்ரனுக்கு உங்க பொண்ணு ஹர்ஷினிய பொண்ணு கேட்டு வந்திருக்கோம்” என்று சொல்லி முடித்தார்.

“ரொம்பப் சந்தோசம்… எனக்கும் யசோதாக்குச் சம்மதம் ரிஷன்கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டு சொல்லுறேன்” என்றார் ஜெகதீஸ்வரன்.

ஜெகதீஸ்வரன்.. “என்னய்யா உன் தங்கச்சிய பொண்ணு கேட்டு வந்து இருக்காங்க உன் விருப்பம் என்னய்யா” என்று அவர் மகனிடம் கேட்டார்.

“அப்பா இதுல என்னோட முடிவை விட எனக்கு ஹர்சினியோட விருப்பம் தான் முக்கியம், அவளுக்கு இப்போ தான் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சது மேலே படிக்க ஆசைப்படுறாளான்னு கேக்கணும்” என்று வெளிப்படையா பேசினான்.

யசோதாவிடம்… “ஹர்சினியை கூப்பிட்டு வா மா” என்று சொன்னார் ஜெகதீஸ்வரன்.

யசோதா உள்ள சென்று ஹர்சினியை கூட்டி வந்தார்.

ஹர்ஷினி சிம்பிள்லான சுடிதாரில் அழகாக இருந்தாள்.

ஹர்சினி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தாள். பின் ரிஷன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவள் கண்கள் வினு நேத்ரனை ரகசியமாகப் பார்த்துக் கொண்டது.

வினு நேத்ரன் ஹர்சினியை ஆர்வமாகப் பார்த்தான்.

“பாப்பா உன்னோட விருப்பம் என்ன டா மா சொல்லு” என்று கேட்டான் ரிஷன்.

“ம்ம்ம்… கொஞ்சம் தயங்கி கொண்டே இந்தக் கல்யாணத்துக்கு எனக்குச் சம்மதம் ஆனா நான் கல்யாணத்துக்கு அப்புறம் மேலே படிக்க ஆசைப்படுறேன்” என்றாள் தெளிவாக.

வீட்டில் அனைவருக்கும் சந்தோசம்..

“கல்யாணத்துக்கு அப்புறம் நீ படிக்கலாம் எனக்கு எதுவும் அப்ஜக்க்ஷன் இல்லை” என்றான் வினு நேத்ரன்

ரிஷனுக்குச் சந்தோஷம்…

ஹர்சினி வெக்கப்பட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

“ரொம்பச் சந்தோசம் என்ன வினு உனக்குப் பொண்ணைப் பிடித்து இருக்கு தானே பொண்ணு கூட எதுவும் தனியா பேசுறியா?” என்று வினு நேத்ரனிடன் கேட்டார் ரெங்கநாதன்.

வினு நேத்ரானுக்குப் பேச ஆசை இருந்தும் தனியாகப் பேச சங்கடப்பட்டுக் கொண்டு “இல்லை பெரியப்பா நீங்க மேல பேசுங்க எனக்குப் பொண்ண பிடித்து இருக்கு” என்றான் ஹர்ஷினியை ரசியமாகப் பார்த்து கொண்டு.

“அப்போ வர ஜூன் 14 நல்ல நாளா இருக்கு அன்னைக்கே நிச்சயம் வச்சுக்கலாமா? மச்சான்” என்று கேட்டார் செந்தில் ராஜன்.

ஜெகதீஸ்வரன் யசோதா இருவரும் ரிஷனை பார்த்துக் கொண்டே…

என்ன சொல்லுவது என்று தெரியாமல் இருந்தனர்.

ஜெகதீஸ்வரன் வேற தேதி மாற்றலாம் என்று நினைத்து.

“மாமா வேற” என்று ஆரம்பிக்கும் போது..

“அப்பா….” என்று அழைத்தான் ரிஷன்.

“அந்தத் தேதியே இருக்கட்டும்” என்று கூறினான்.

“கண்ணா…” என்றார் அன்னை.

“அம்மா எனக்குத் தெரியும் பிக்ஸ் பண்ண தேதியே இருக்கட்டும்” என்றான் ஆணித்தரமாக.

“சரி ஜூன் 14 லாம் தேதி நம்ம நிச்சயம் வைத்து கொல்லலாம்” என்றார் ஜெகதீஸ்வரன்.

பெரியவர்கள் நிச்சயம் பற்றிச் சில விஷயங்களைப் பேசி ஆரம்பித்தனர்.

வினு மற்றும் கௌஷிக் ரிஷனிடன் பேசி கொண்டு இருந்தனர்.

ரிஷன் வினுவின் வேலையைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டான்.

வினு ரிஷனிடம் உங்க சிஸ்டர் போன் நம்பர் வேணும் என்று கேட்டான்.

ரிஷன் சிரித்துக் கொண்டே… ஹர்ஷினி நம்பரும் தன்னுடைய நம்பரும் கொடுத்து விட்டு வினு நேத்ரன், விசாகனுடைய நம்பரையும் வாங்கிக் கொண்டான்.

சில விஷயகளைப் பேசி விட்டு ரிஷனின் தாய் மாமா பிரபுக்குப் போனில் அழைத்து ஜூன் 14 நிச்சயத்தைப் பற்றிச் பேசி விட்டு கிளம்ப ஆயுதம் ஆனார்கள்.

யசோதா ஹர்ஷினியை அழைத்தார்.

தீபாலட்சுமி ஹர்ஷினியின் தலையில் பூ வைத்து உறுதி செய்துவிட்டு “போய்ட்டு வரோம் மருமகளே” என்று கூறினார்.

அனைவரும் சொல்லி கொண்டு கிளம்பினார்கள். வினு ஹர்ஷினி பக்கத்தில் சென்று “வரேன்” என்று ஹுஸ்கி வாய்ஸில் சொல்லி கண் அடித்து விட்டுச் சென்றான்.

ஹர்ஷினிக்கு ஜில் என்று இருந்தது.

அவர்கள் சென்ற உடன் “டேய் கண்ணா ஏன்டா ஒரே தேதிக்கு ஓகே சொன்ன” என்று ஆதங்கமா கேட்டார் அன்னை.

“அம்மா நம்ம அம்முவை பொண்ணு கேட்டு போனதை அவகிட்ட யாரும் இன்னும் சொல்ல…மறச்சு வச்சு இருக்காங்க கண்டிப்பா ராஜதுரை நம்ம வீட்டு மேல ஒரு பார்வை வச்சு இருப்பான் அதான் நம்ம வீட்டுலையும் விசேஷம்னா அவனுக்குப் பெருசா டவுட் வராது அம்முவும் பாதுகாப்பா இருப்பா அதான் அம்மா” என்று விளக்கமாக சொன்னான் ரிஷன்.

அவன் சொல்ல வருது அனைவருக்கும் புரிந்தது.

ஹர்ஷினி கல்யாண கனவுகளிள் மிதக்க ஆரம்பித்தாள் வினுவை நினைக்கும் போது இந்த பாடல் தான் அவள் மனதுக்குத் தோன்றியது…

“அவன் பார்த்ததுமே

நான் பூத்து விட்டேன்

அந்த ஒரு நொடியை…

நெஞ்சில் ஒளித்து வைத்தேன்.!!

நான் குழந்தை என்று

நேத்து நினைத்திருந்தேன்

அவன் கண்களிலே

என் வயதறிந்தேன்.!!”

வயதுக்குரிய அசைகளோடும், கண்களில் கனவு மின்ன வினு நேத்ரனை நினைத்தப்படி வலம் வந்தாள் ஹர்சினி.

ஜூன் 14…

காதலின் நிச்சயமா?..

தன் அன்புக்குரிய தங்கையின் நிச்சயமா?…

யாரு யாருக்கு?

பார்க்கலாம்…!!

error: Content is protected !!