மௌனத்தின் நேசம் – 7

அத்தியாயம் -7

அனைவரும் ஜோசியரை பார்க்க சென்ற உடன் வீட்டை பூட்டி விட்டு வந்து ரிஷனுக்கு அலைப்பேசியில் அழைத்தாள் காயத்திரி.

சில மணித்துளிகள் ரிங் சென்று கொண்டே இருந்தது கடைசி நிமிடம் தான் ரிஷன் அட்டன் செய்தான்.

“ஹலோ அம்மு… என்ன மா?” என்று டென்ஷன் ஆகக் கேட்டான்.

“மாமா… “என்று குரல் உடைய கூறினாள் காயத்திரி.

“என்ன ஆச்சு அம்மு ஏதும் பிரச்சனையா மா? குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு?” என்று மென்மையாகக் கேட்டான்.

“மாமா கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறதை கேளுங்க” என்றாள் காயத்திரி.

“சரி அம்மு சொல்லு என்று வரவழைக்கப்பட்ட பொறுமையுடன் கூறினான்” ரிஷன் கிருஷ்ணா.

மாமா “எங்க அக்கா ஓட சின்ன மாமனார் பையன் ராஜதுரை…. அவனுக்கு என்னைப் பொண்ணு கேட்டு வந்தாக என் வீட்டுக்கு இன்னைக்கு…. அப்பா ஜாதகம் பார்த்துட்டு மேற்கொண்டு பேசலாம்னு சொல்லி ஜாதகம் வாங்கி இருக்காரு அம்மா என்னையைப் பட்டு புடவை கட்டி அவன் முன்னாடி நிக்கச் சொல்லிட்டாங்க என்னால ஏதும் பண்ண முடியல மாமா” என்று கண்ணீர் குரலில் சொன்னாள்.

“எல்லாரும் இன்னைக்கு நாள் நல்லா இருக்குனு சொல்லி ஜாதகம் பார்க்க ஜோசியர் கிட்ட போய் இருக்காங்க” என்றாள் காயத்திரி.

ரிஷனால் அங்கு என்ன நடந்து இருக்கும் என்று புரிந்து கொள்ள முடித்தது.

“அம்மு… அப்பா கிட்டையும் என்னோட ஜாதகம் வாங்கி இருக்காங்க பார்க்கலாம் அம்மு” என்றான் ரிஷன்.

மாமா… “ராஜதுரை ஒரு பொம்பள பொறுக்கி அவனுக்குப் போய் என்னால முடியல… மாமா” என்றாள் காயத்திரி.

“அம்மு… கொஞ்சம் பொறுமையா இருமா கண்டிப்பா நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்கும் செல்லம்” என்றான்.

மாமா “உங்களுக்கு என்னோட வீட்டை பத்தி சரியா தெரியாது அம்மாவ மீறி எங்க அப்பாவால ஏதும் செய்ய முடியாது தாத்தா தான் என்ன படிக்க வச்சாரு எனக்கு வருமானம் வேணும்னு ரெண்டு கடை வாடகை எனக்கு வர மாதிரி பண்ணாரு பாட்டியோட சில நகைகளை எனக்குக் குடுத்தாரு அதுக்கே அம்மா பயங்கரமா பிரச்னை பண்ணாங்க அப்பா தான் ஏதோ சொல்லி பிரச்சனையை முடிச்சாரு. அம்மாக்கு அக்கா மட்டும் தான் புள்ள நான் இல்லை கண்டிப்பா ராஜதுரையைத் தான் அம்மா செலக்ட் பண்ணுவாங்க அப்பா ஏதும் செய்ய மாட்டாரு மாமா. சின்ன வயசுல இருந்து அம்மாக்கு என்ன பிடிக்காது மாமா. அக்கா தான் எல்லாம். தாத்தா இருந்த வரைக்கும் படிப்பு சப்போர்ட் பண்ணாரு பாசமா இருந்தாரு அவருக்கு அப்புறம் நீங்க தான் மாமா என்கிட்ட பாசமா பேசுனது. அக்கா அம்மா மனச கலச்சுடுவா மாமா எனக்குப் பயமா இருக்கு மாமா” என்று மனதில் உள்ளதை எல்லாம் ரிஷனிடம் கொட்டினாள்.

ரிஷனுக்குப் புரிந்தது காயத்திரியின் பயம்.

அந்த நேரம் ரிஷனுக்குச் செகண்ட் கால் வந்தது அவன் அன்னையிடம் இருந்து.

“அம்மு கால வெயிட் பண்ணு அம்மா கால் பண்ணுறாங்க கான்பீரன்ஸ் கால் போடுறேன்” சொல்லி அன்னையின் காலை அட்டன் செய்தான்.

“அம்மா காயத்திரி லைன்ல இருக்கா இருங்க கனெக்ட் பண்றேன்” என்றான்.

கான்பீரன்ஸ் கால் கனெக்ட் ஆனது.

“அம்மா” என்று அழைத்தான் ரிஷன்.

“என்ன டா கண்ணா

காயத்திரி கூடப் பேசிட்டு இருக்கியா?” என்று கேட்டார் யசோதா.

“அத்தை எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று பாசமா கேட்டாள் காயத்திரி.

“எல்லாரும் நல்லா இருக்கோம் மா என்ன விஷயம் “என்று தன்மையாகக் கேட்டார்.

ரிஷன் காயத்திரி வீட்ல நடந்த அனைத்தையும் சொல்லி விட்டான்.

“என்ன கண்ணா சொல்லுற ராஜதுரைக்கா.!?” என்று அதிர்ச்சியாகக் கேட்டார்

“அவன் ஐயோக்கியன் டா அவனுக்குப் போய்” என்று ஆற்றமையாகப் பேசினார் யசோதா.

“கண்ணம்மா… நாங்க இருக்கோம் எதுக்கும் பயப்படாத அவன் உனக்குத் தாலி கட்டுற கடைசி நொடி கூட ரிஷன் உனக்குத் தாலி கட்டலாம் சரியா. மனசை மட்டும் விட்டுடாத… என்னைக்கு இருந்தாலும் என்னோட வீட்டு மருமகள் நீதான்.!! என் மேல சத்தியம்” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசி விட்டு அலைபேசியைக் கட் செய்தார்.

அம்மு “இந்த ஜென்மத்தில் நீ மட்டும் தான் என் பொண்டாட்டி உன்னைத் தவிர நான் வேற ஒரு பெண்ணைச் சத்தியமா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் நம்ம காதல் கண்டிப்பா என்ன நடந்தாலும் நம்மளை சேர்ந்து வைக்கும் எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு எத்தனை வருஷம் ஆனாலும் உனக்காக நான் காத்து இருப்பேன் ஒரு வேலை நம்ம சேர முடியாத சூழ்நிலை வந்தா கூடக் கடைசி வரைக்கும் உன் நினைவுகளோடு நான் வாழ்வேன்” என்றான் ரிஷன்.

மாமா… “எதுக்கு இவ்ளோ பெரிய முடிவு.? உங்க காதலுக்கு நான் தகுதியானவதானா..? இப்போ கூட வீட்டை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை கைதி நான். எதுக்கு ஏன் மேல இவ்ளோ காதல் வச்சு இருக்கீங்க நீங்க.?” என்று கேட்டாள் காயத்திரி.

அம்மு…. “முதலில் ஒன்னு தெரிஞ்சுச்சோ…. காதலுக்குத் தகுதி ஒன்னு இருந்தா அது காதல் மட்டும் தான், வேற எதையும் தகுதினு சொல்ல முடியாது. உன்னைப் பார்த்தப் போது எனக்குள்ள வந்து உணர்வு வேற யார்கிட்டையும் வரலை அம்மு உன்னை மட்டும் காதலிக்கத் தோணுச்சு”.

அம்மு நம்ம காதல் மேல நம்பிக்கை இருக்குதா உனக்கு? என்று கேட்டான்.

“அது நிறையவே இருக்கு” மாமா என்றாள்.

“அப்ப பயப்படாம இருக்கனும் உங்க தாத்தா சாமியா இருந்து உனக்கு நல்லதே பண்ணுவாங்க நம்ம காதல் பெருமாள் கோவில வச்சு வந்தது கடவுள் துணை நமக்கு நிறைய இருக்கும் சரியா ஏது நடந்தாலும் அமைதியா மட்டும் இருந்துகோ உங்க அம்மாவை மீறி ஏதும் செய்யாத கண்டிப்பா நம்ம காதல் எல்லாத்தையும் மாத்தும் சரியா?” என்றான் ரிஷன்.

“சரிங்க மாமா கடவுள் மேல பாரத்தைப் போட்டு இருக்கேன்” என்றாள்.

ரிஷன் கடைசியா ஒன்னு கேக்குறேன் “என் மேல ஆணைய எந்த ஒரு தப்பான முடிவும் நீ எடுக்கக் கூடாது என்று சத்தியம் செய்யச் சொன்னான்”.

“நீங்க உயிரோட இருக்குற வரைக்கும் நான் எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்க மாட்டேன் மாமா உங்க மேல சத்தியமா” என்றாள் ஆணையாக.

“லவ் யூ மாமா” என்றாள் காதலாக.

சரி உன்னை நம்புறேன் அம்மு உடம்பப் பார்த்துக்கோ “லவ் யூ டி” என்று சொல்லி கால் கட் செய்தான்.

காயத்திரி மனதை திட படுத்திக் கொண்டாள் எது நடந்தாலும் அதுக்குத் தன்னைத் தயார் செய்தாள்.

தாத்தா படத்துக்கு முன்னாள் சென்று “என் வாழ்க்கையை நல்ல படியா அமைச்சு தாங்க” என்று மனமுருகி வேண்டிக்கொண்டாள்.

*****************************

அனைவரும் ஜோசியர் வீட்டை வந்து அடைந்தனர்.

ரவீந்திரன், மாலா, பாண்டி, காஞ்சனா, கதிரேசன் மற்றும் சரோஜா மட்டும் உள்ளே சென்றார்கள்.

வணக்கம் ஐயா என்றார் ரவீந்திரன்.

வணக்கம் என்றார் ஜோசியர்.

ஐயா என் பொண்ணுக்கு இரண்டு வரன் வந்து இருக்கு அதான் பொருத்தம் பார்க்க வந்தோம் என்று

ரவீந்திரன் காயத்திரி ஜாதகம், ரிஷன் மற்றும் ராஜதுரை ஜாகத்தைக் கொடுத்துப் பொருத்தம் பார்க்க சொன்னார்.

அவரும் பொருத்தம் பார்க்க ஆரம்பித்தார்.

மகேஷ்வரி மானஷா தூங்குவதால் காரில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்.

சற்றுத் தொலைவில் நாகராஜன் மற்றும் ராஜதுரை பேசிக் கொண்டு இருந்தார்கள்.

டேய் இன்னைக்கு அவளைப் புடவையில் பார்க்கும் போதே… சும்மா உடம்பு எல்லாம் ஜீவ்வுனு இருந்தது செம்ம அழகு டா உடம்பை முழுசா பார்க்கணும் அப்புடியே ஆசை தீரவரைக்கும் அனு அனு அனுபவிக்கனும் டா என்று பச்சையாகப் பேசினான் ராஜதுரை.

ஆமா டா செம்ம அழகு டா அவ. டேய் நான் கேட்டது நியாபகம் இருக்கா உனக்கு என்று ஆசை பொங்க கேட்டான் நாகராஜன்.

டேய் எல்லாம் மறக்கல கல்யாணம் மட்டும் நல்ல படியா முடியட்டும் பர்ஸ்ட் நைட்டே நம்ம ரெண்டு பேர் கூடத்தான். எல்லாம் பக்கவா பிளான் பண்ணிட்டேன் என்று சொன்னான் ராஜதுரை.

நாகராஜனுக்குச் சந்தோஷம் தாங்க முடியாமல் ராஜதுரையை அணைத்துக் கொண்டான்.

இரண்டு பேரும் காயத்திரியை எப்படி எல்லாம் அனு அனுவாக அனுபவிக்கலாம் என்று கற்பனை கோட்டை கட்ட ஆரம்பித்தனர்..

உள்ளே ஜோசியர் பொருத்தம் பார்த்து முடித்து விட்டு, ராஜதுரை ஜாதகம் தான் பொருந்தி உள்ளதாக 9 பொருத்தம் இருப்பதாகச் சொன்னார்.

அது மட்டும் இல்லை பொண்ணுக்கு இருக்குற தோஷம் ராஜதுரை ஜாதகத்தில இருக்கு அதுனால ராஜதுரை காயத்திரி சேர்த்தா மட்டும் தான் உங்க குடும்பம் சுபிக்க்ஷம் பெரும். இப்போ இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா பொண்ணு ஜாதகப்படி கண்டிப்பா குடும்பத்தில் பெரிய கண்டம் வரும் என்று சொன்னார்.

ரிஷனின் ஜாதகம் பொருத்தம் இல்லை என்று கூறிவிட்டார்.

ரவீந்திரன் மனதுக்குள் பயம் வந்து குடிக்கொண்டது.

ராஜதுரையை ஏற்கவும் முடியாமல், ஜோசியர் வார்த்தையை மீறவும் முடியாமல் தவித்தார்.

கதிரேசன் நிச்சயதார்த்த செய்ய நாள் குறித்துத் தரும் படி கேட்டார். ஜோசியர் பஞ்சாங்கம் பார்த்து

ஜீன் 14 நிச்சயதார்த்தம் செய்ய நாள் குறித்துக் கொடுத்தார்.

அனைவரும் சந்தோஷமாக வெளியே வந்தனர்.

கதிரேசன் “சரி மச்சான் வர ஜூன் 14 முறைப்படி வரோம்” என்று ரவீந்திரனிடம் சொன்னார்.

காஞ்சனா தான் முதலில் நாகராஜனிடம் “ மாமா வர 14 தேதி ராஜதுரைக்குக் காயத்திரிக்கும் நிச்சயம்” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.

ராஜதுரைக்குச் சந்தோஷமாக இருந்தது.

நாகராஜன் ராஜதுரையை அணைத்துக் கொண்டான் சந்தோஷமாக.

கதிரேசன் குடும்பம் மற்றும் பாண்டி குடும்பம் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.

ரவீந்திரன் மற்றும் மாலா வீட்டுக்கு வந்தனர்.

காயத்திரி தான் கதவை திறந்து விட்டாள்.

ஏய்.. “வர 14 தேதி உனக்கும் ராஜதுரைக்கும் நிச்சயம்” என்று சொல்லி சென்றார்.

காயத்திரி கலங்கிய கண்களுடன் தந்தையைப் பார்த்தாள், அவரால் காயத்திரியை பார்க்க முடியாமல் உள்ளே சென்று விட்டார்.

ரவீந்திரன் மனசு உடைத்த நிலையில் அமர்ந்து இருந்தார். அவருக்குத் தெரியும் ராஜதுரையைப் பற்றிக் காயத்திரியை கட்டிக்கொடுக்க அவருக்கு விருப்பம் இல்லை. ஜோசியர் சொன்னது தான் அவர் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. காயத்திரி மேல் பாசம் எல்லாம் இல்லை அவருக்கு ஆனால் அவள் மேல் சின்னதாக ஒரு கரிசனம் இருந்தது. அவர் தந்தை இறந்து போது அவளைப் பார்த்துக்கொள்ளும் படி கூறி இருந்தார். அந்தக் காரணத்துக்காக மட்டும் தான் அவளுக்கு ராஜதுரையை மாப்பிள்ளையாக ஏத்துக்க முடியாமல் தவித்தார்.

ஆனால் எல்லாம் அவர் கையை மீறிச் செல்கிறது.

கடைசியாகத் தன் மனைவியிடம் பேசி பார்க்கலாம் என்று நினைத்து தன் அறைக்குள்ளே சென்றார்.

மாலாவின் பக்கத்தில் அமர்ந்தார்.

“மாலா உன் கிட்ட பேசனும்” என்று ஆரம்பித்தார்.

அவர் என்ன பேச வருவார் என்று மாலாவுக்கு நன்றாகவே தெரியும்.

அவர் ஆரம்பிக்கும் முன்னே..

“இங்க பாருங்க ராஜதுரை தான் என் மாப்பிள்ளை எனக்குச் சத்தியம் பண்ணி இருக்கீங்க அவ கல்யாணம் என்னோட விருப்பப்படி தான் நான் பார்க்குற மாப்பிளைக்குத் தான் கொடுப்பேனு அதுக்கு மேல அந்த ஜெகதீஷ்வரேன் பையனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணி கொடுக்க ஆசைப்பட்டிங்க நான் விஷம் குடுச்சுட்டு செத்து போய்டுவேன் என்று பிளாக்மெயில்” செய்தார் மாலா.

மாலா சொன்னதைக் கேட்டு ரவீந்திரன் ஆடிவிட்டார்.

மாலா உன் ஆசைப்படியே அவ கல்யாணம் நடக்கும் நீ ஏதும் தப்பான முடிவு எடுக்காத என்று பயந்து கொண்டு சொல்லி சென்றார். அவர் தந்தையிடம் கொடுத்த வாக்கை மீறி ராஜதுரையை வீட்டின் மாப்பிள்ளையாக முடிவு செய்தார். அவர்

மனதை மாற்றிக்கொண்டு தோட்டதுக்குச் சென்றார் ரவீந்திரன்.

காயத்திரி ரிஷனுக்கு ஜீன் 14 ராஜதுரையுடன் நிச்சயம் என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள்.

ரிஷன் பார்த்து விட்டு “நம்பிக்கையா இருப்போம் அம்மு கண்டிப்பா நல்லதே நடக்கும்” என்று உறுதி தருமாறு மெசேஜ் அனுப்பி இருந்தான்.

அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான். அவனுக்குத் தன் காதல் மேல் கொண்ட நம்பிக்கை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். மனதுக்குள் பெரும் வழியை உணர்ந்தான்.

“வலியென்றால்..

காதலின் வலிதான்

வலிகளில் பொிது

அது வாழ்வினும் கொடிது

உன்னை நீங்கியே

உயிா் கரைகிறேன்

வான் நீளத்தில்

என்னைப் புதைகிறேன்.!!”

ரிஷனின் நம்பிக்கை வெல்லுமா…

இல்லை ராஜதுரையின் சூழ்ச்சி வெல்லுமா…

பார்க்கலாம்.!!

error: Content is protected !!