மௌனத்தின் நேசம் – 6

அத்தியாயம் – 6

ரிஷனின் தந்தை அக்னி நட்சத்திரம் முடியட்டும் அதன் பிறகு ஒரு நல்ல நாளில் பெண் கேட்டுப் போகலாம் என்று சொல்லி இருந்தார் அதனால் ஜீன் மாதம் ஐந்தாம் தேதி பெண் கேட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

யசோதா இந்தத் தகவலை காயத்திரிடம் தெரிவிக்கும் படி தொலைப்பேசியில் ரிஷனிடம் சொன்னார்.

ரிஷன் அன்று மாலை காயத்திரிக்கு “ஹாய்” என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.

சில மணிதுளிகள் கடந்து காயத்திரி பதிலுக்கு “ஹாய்” என்று அனுப்பினாள்.

உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் கால் பண்ணலாமா? என்று கேட்டான் ஏக்கமாக.

அவனுக்குக் காயத்திரியின் குரல் கேட்க வேண்டும் போல் இருந்தது. அவன் தொலைபேசியில் கூட அவளிடம் பேசுவது இல்லை. அவனுடைய தாய் சொன்ன விஷயங்களால் காயத்திரிக்குப் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்து அவளைத் தொலைப்பேசியில் கூடத் தொடர்பு கொள்ளவில்லை.

காயத்திரியும் ரிஷனிடம் பேச ஆசைப்பட்டாள். காயத்திரியின் பெற்றோர்கள் வெளியே சென்று இருந்ததால்

ஐந்து நிமிடம் கழித்துக் காயத்திரி அவனுக்குத் தொலைபேசியில் அழைத்து இருந்தாள்.

“ஹலோ…” என்றாள் காயத்திரி.

“ஹலோ!! சொல்லு மா” என்றான் ரிஷன்.

“எப்படி இருக்கீங்க மாமா?” என்று கேட்டாள் காயத்திரி.

“நல்லா இருக்கேன் மா” என்றான் ரிஷன். (மனதுக்குள் அவள் மாமா என்று அழைத்தை மிகவும் ரசித்தான்).

“நீ எப்படி இருக்க அம்மு?” என்று அக்கறையாகக் கேட்டான்.

( அவன் சொன்ன அம்மு அவள் மனதுக்குள் தித்திப்பாக இருந்தது).

“ம்ம்ம் இருக்கேன் மாமா” என்றாள் சற்று சலிப்பாக.

“என்ன விஷயம் மாமா?” என்று கேட்டாள்.

“ஜூன் 5 பெண் கேட்டு வருவாங்க வீட்டுல இருந்து” என்று ஆசையாகச் சொன்னான்.

“சந்தோசம் மாமா… நீங்க வரீங்களா ?” என்று கேட்டாள்.

“இல்லை டா அம்மு நான் பெங்களூரில் இருக்கேன். வேலை இருக்கு மா…” என்றான் ஏமாற்றமாக.

“நான் வர வேண்டும் என்று ஆசைப்படுறியா அம்மு” என்று கேட்டான் ஆவலாக.

“உங்கள் விருப்பம் மாமா., ஜூன் 5 எனக்கு எக்ஸாம் மாமா., நானும் வீட்டுல இருக்க மாட்டேன்” என்றாள் காயத்திரி.

“சரி அம்மு எக்ஸாம் எல்லாம் நல்லா பண்ணு உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என்னால உனக்கு மெசேஜ் கூட அனுப்ப பயமா இருக்கு” என்றான்.

“ம்ம்ம் தேங்க்ஸ் மாமா நான் சொல்லாமல் என்னைப் புரிஞ்சிகிட்டதுக்கு” என்றாள்.

“அம்மு “லவ் யூ லாட்” என்னால உனக்கு எப்பவும் பிரச்சனை வராது மா. கவனமாக இருந்துகோ எக்ஸாம் நல்லா பண்ணு “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி அலைபேசியைத் துண்டித்தான்.

அவனால் இதுக்கு மேல் பேச முடியவில்லை மனசு எல்லாம் அழுத்தமாக இருந்தது.

காயத்திரியும் தொலைப்பேசியைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் கண்களில் கண்ணீர் வந்தது.

அவளிடம் பாசமாகப் பேசம் இரண்டாம் நபர் ரிஷன் கிருஷ்ணா. தாத்தா மட்டும் தான் அவளிடம் பாசமாகப் பேசிக் கொண்டு இருந்தார்.

*****************************

கதிரேசன், சரோஜா மற்றும் ராஜதுரை மூவரும் நத்தத்தில் உள்ள பாண்டியின் வீட்டுக்கு வந்தனர்.

வாங்க மாமா… வாங்க அத்தை.. என்று வரவேற்றாள் காஞ்சனா.

மகேஷ்வரி மற்றும் நாகராஜனும் வந்தவர்களை வரவேற்றனர்.

பாண்டி ஆட்டோ ஓட்ட சென்று இருந்தார்.

மகேஷ்வரி வந்தவர்களுக்கு டீ போட்டுக் கொடுத்தார்.

நாகராஜன் தன் தந்தைக்குத் தொலைபேசியில் அழைத்துச் சித்தப்பா வந்து இருக்கிறார் என்று தகவல் சொன்னான்.

சற்று நேரத்தில் அவரும் வந்து விட்டார்.

சில பொதுவான பேச்சுக்களுக்கு அப்புறம் ராஜதுரைக்குக் காயத்திரியை பெண் கேட்டு விவரங்களைப் பேச ஆரம்பித்தனர்.

அண்ணா… “நம்ம ராஜதுரைக்குக் காயத்திரியை வர ஜூன் 6 தேதி பெண் கேட்டுப் போகலாம் என்று நினைக்கிறோம் எல்லாரும் கண்டிப்பா வரணும்” என்று கூறினார் கதிரேசன்.

“ரொம்பச் சந்தோஷம் டா எல்லாரும் வந்துடுறோம்” என்றார் பாண்டி.

“சரி நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க நான் பக்கத்தில் இருக்குற கோவில் வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன் என்றார்” மகேஸ்வரி.

(பாண்டிக்கு ஜாதகத்தில் சில பிரச்சனை உள்ளதால் கோவிலில் சனி பகவானுக்கு விளக்கு போட்டுக் கொண்டு இருக்கார்)

“சரி பார்த்து போய்ட்டு வா” என்றார் பாண்டி.

மகேஸ்வரி கோவிலுக்குக் கிளம்பி சென்றார்.

“சித்தப்பா… ரவீந்திரன் மாமா ஜாதகம் கேட்பார் இந்தாக இந்த ஜாதகத்தைக் கொடுங்க என்று “டூப்ளிகேட் ஜாதகத்தைக்” கொடுத்தான்” நாகராஜன்.

“என்ன டா சந்தோசமா?” என்று ராஜதுரையிடம் கேட்டான் நாகராஜன்.

“கண்கள் மிண்ண ரொம்பச் சந்தோசம் டா” என்று மகிழ்ச்சியாகச் சொன்னான் ராஜதுரை.

நாகராஜன் ராஜதுரையைத் தனியாக அழைத்துச் சென்றான்.

“டேய் இந்தக் கல்யாணம் நல்லபடியாக நடந்தால் நான் கேட்கிறத நீ செய்யணும்! செய்ய முடியுமா?” என்று கேட்டான் நாகராஜன்.

“என்ன டா.. என்ன வேணும்? சொல் செஞ்சுடுவோம்” என்றான் ராஜதுரை.

நாகராஜன் சுற்றிப் பார்த்து விட்டு ராஜதுரையில் காதுக்குள் “என் மச்சினிச்சியை ஒரு தடவையாவது முழுசா தொட்டு அனுபவிக்கனும்” என்றான் ரகசியமாக.

ராஜதுரை சத்தமாகச் சிரித்துவிட்டான்…

“அவ்வளவு தானே ஒரு தடவை என்ன உனக்குத் தோணும் போது எல்லாம் நீ அனுபவிக்கலாம் சரியா டா” என்று சொன்னான்.

நாகராஜன் சந்தோசமாகச் “சரி டா இந்தக் கல்யாணம் நல்லபடியா முடியும் அது என் பொறுப்பு” என்று உறுதியளித்தான்.

சில பொதுப்படையான விஷயங்களைப் பேசி விட்டு மகேஷ்வரி வந்த உடன் ஜீன் 6 தேதி கண்டிப்பா வர வேண்டும் என்று அழைத்து விட்டு திருச்சிக்கு கிளம்பினர்.

நாகராஜன் காஞ்சனாவிடம் பெண் கேட்டு போகும் தேதியை அவள் அன்னையிடம் சொல்ல வேண்டாம் என்று கூறினான்.

“சரிங்க மாமா நான் இந்த விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக்கிறேன்” என்றாள்.

தன் அன்னை மகேஷ்வரியிடமும் இதையே கூறி விட்டு வெளியே சென்றான்.

*************************************

ஜூன் 5 தேதி காலையில் இருந்து கொஞ்சம் பயமா இருந்தது காயத்திரிக்கு. இன்று அவளை ரிஷனுக்குப் பெண் கேட்டு வரும் நாள் கொஞ்சம் படப்பட என்று இருந்தது.

வழக்கம் போல் அனைத்து வேலைகளையும் செய்து விட்டு கல்லூரிக்குச் சென்றாள்.

ரிஷன் வீட்டில் இருந்து ஜெகதீஸ்வரன், யசோதா, பிரபு மற்றும் மஞ்சுளா நால்வர் மட்டும் மதுரையில் இருந்து நல்ல நேரத்தில் புறப்பட்டனர்.

காலை 10 மணிக்கு காயத்திரி வீட்டுக்கு சென்றனர்.

ரவீந்திரன் மற்றும் மாலா மட்டும் வீட்டில் இருந்தனர்.

வாங்க மாப்பிள்ளை வாங்க மா என்று எல்லாரையும் வரவேற்றார் ரவீந்திரன்.

மாலாவும் அனைவரையும் வரவேற்றார்.

மாலா டீ போட்டுக் கொண்டு வந்தது கொடுத்தார்.

(மாலா மனதுக்குள் எதுக்கு வந்த இருக்காங்கனு தெரியலையே விஷயம் இல்லாமல் வர மாட்டாங்களே காஞ்சனாகிட்ட சொல்லனுமா என்று யோசித்தார்)

சற்று நேரம் பொதுவாக விஷயங்களை மட்டும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

யசோதா தான் மெதுவாக ஆரம்பித்தார், “அண்ணா நான் உங்கிட்ட உரிமையா ஒன்னு கேட்டு வந்து இருக்கேன்” என்றார்.

“சொல்லு மா… என்ன விஷயம்” என்று யோசனையாகக் கேட்டார் ரவீந்திரன்.

“மச்சான் உங்க இரண்டாது மகள் காயத்திரியை என் பையன் ரிஷனுக்குக் பெண் கேட்டு வந்து இருக்கோம்” என்று கூறினார் ஜெகதீஸ்வரன்.

அதிர்ச்சியாக இருந்தது ரவீந்திரனுக்கு.

நெஞ்சே வெடித்து விட்டது மாலாவிக்கு.

சில மணித்துளிகள் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது அங்கு.

பின் ரவீந்திரன் மெதுவாக “மாப்பிள்ளை எனக்கு ஜாதகத்தில் மேல நிறைய நம்பிக்கை இருக்கு நீங்க தம்பி ஜாதகம் கொடுங்க பொருத்தம் இருந்தால் மேலே பேசலாம், இல்லை என்றால் நம்ம உறவு இப்படியே இருக்கட்டும்” என்று கூறினார் ரவீந்திரன்.

யசோதாவுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.

சரிங்க மச்சான்… “நீங்க ஜாதகம் பார்த்து விட்டு சொல்லங்க” என்று சொல்லி விட்டு ரிஷனின் ஜாதகத்தைத் தொலைப்பேசியில் இருந்ததை அவருக்கு அனுப்பி வைத்தார்.

சில நிமிடங்கள் இருந்து விட்டு புறப்பட்டனர் ஜெகதீஸ்வரன் குடும்பம்.

அவர்கள் சென்ற உடன் “இங்க பாருங்க அவளோட கல்யாணம் என்னோட விருப்பப்படி தான் நடக்கும் என்று எனக்குச் சத்தியம் செய்துக் குடுத்து இருக்கீங்க அதை மறந்துடாதீங்க” என்று கத்தி சொல்லி விட்டு உள்ளே சென்றார் மாலா.

ரவீந்திரன்னுக்குத் தலை பாரமாக இருந்தது ஆதலால் தோட்டத்துக்குச் சென்று விட்டார்.

உள்ளே வந்த மாலா காஞ்சனாவுக்குத் தொலைபேசியில் அழைத்தார்.

“ஹலோ சொல்லு மா” என்றாள் காஞ்சனா.

“காஞ்சி எப்படி இருக்க மா” என்று பாசமாகக் கேட்டார் அன்னை.

“நல்லா இருக்கேன் மா என்ன விஷயம்” என்று கேட்டாள் காஞ்சி.

“தங்கம் இன்னைக்கு அந்தச் சிறுக்கி மகளை ஜெகதீஸ்வரன் பையனுக்குப் பெண் கேட்டு வந்து இருந்தாகக் கண்ணு” என்றார்.

“என்ன மா சொல்லுற அவளையா!!” என்று அதிர்ச்சியாகக் கேட்டாள் காஞ்சி.

“அப்பா என்ன சொன்னார்” என்று கேட்டாள்.

“அப்பா ஜாதகம் பொருத்தம் பார்த்துட்டு மேல பேசலாம்” என்று சொன்னார் என்றார் மாலா.

“அம்மா ராஜதுரைக்குத் தான் அவளைக் கலயாணம் பண்ணித் தரணும் இல்லை என்றால் என்னோட உறவை அத்துவிட்டுடுங்க” என்றாள் காஞ்சனா.

“செல்லம்! தங்கம்! என்னடா இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்ட அம்மா மனசு தாங்கல மா…. அப்பா செஞ்ச சத்தியத்தை வச்சு அந்தச் சிறுக்கிய உன்னோட ஆசைப்படி ராஜதுரை தான் கல்யாணம் பண்ணி வைப்பேன் கண்ணு என்னை நம்பு” என்று கண்ணீர் உடன் சொன்னார் மாலா.

“சரிங்க மா இந்த விஷயம் அவளுக்குத் தெரியாமல் பார்த்துக்கோங்க நான் மாமா கிட்ட இதைப் பற்றிப் பேசிடுறேன்” என்று சொல்லி தொலைப்பேசியை வைத்து விட்டாள் காஞ்சனா.

மாலா மனதுக்குள் ராஜதுரை தான் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்.

அதுக்காகச் சில திட்டங்களை மனதுக்குள் வகுத்துக்கொண்டார்.

எப்படி எல்லாம் காயத்திரி தன் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று திட்டப்படுத்திக் கொண்டார் மாலா.

காஞ்சனா உடனே நாகராஜனுக்குத் தொலைப்பேசியில் அழைத்தாள்.

ஹலோ மாமா… “இன்னைக்கு ஜெகதீஸ்வரன் பையனுக்குக் காயத்திரியை பெண் கேட்டு இருக்காங்க அப்பா ஜாதகம் பார்த்து விட்டு பேசலாம்னு சொல்லி இருக்கார் மாமா” என்று படப்பட என்ன சொன்னாள் காஞ்சனா.

“ம்ம்ம்ம் பார்த்துக்கலாம். என்கிட்ட சொல்லிடேல நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி தொலைப்பேசியை வைத்துவிட்டான் நாகராஜன்.

நாகராஜன் மனசுக்குள் சில திட்டங்களை வகுத்து விட்டு ராஜதுரைக்குத் தொலைப்பேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்லி ஜோசியரை பணம் கொடுத்து சரி செய்யச் சொன்னான்.

அன்று இரவே கதிரேசன் குடும்பத்தார் நத்தத்தில் உள்ள பாண்டி வீட்டில் தங்கினார்கள்.

யசோதா அன்று இரவு தன் மகனுக்குத் தொலைபேசியில் அழைத்துக் காயத்திரி வீட்டில் நடத்தை சொல்லி விட்டார்.

ரிஷன் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது சரி பார்க்கலாம் என்று நினைத்து விட்டு அமைதியாகக் காயத்திரியை நினைத்துக் கொண்டு படுத்து இருந்தான்

அடுத்த நாள் காலையில் கதிரசன் குடும்பத்தார் ராஜதுரைக்கு காயத்திரியை பெண் கேட்க கிளம்பினார்கள்.

காலை 9 மணிக்கு ரவீந்திரன் வீட்டுக்கு வந்தனர். அன்று காலேஜ் லீவு அதனால் காயத்திரி வீட்டில் தான் இருந்தாள்.

ரவீந்திரன் மற்றும் மாலா எல்லாரையும் வரவேற்றனர்.

காயத்திரி அனைவரும் டீ போட்டுக் குடுத்தாள் ராஜதுரையின் பார்வை எல்லாம் காயத்திரி மேல் அழுத்தமாகவும், ஆசையாகவும் படிந்தது.

ஏனோ காயத்திரி மனதுக்குள் நெருடலாக இருந்தது.

மாலா தன் பேத்தியை மடியில் வைத்துச் செல்லம் கொஞ்சி கொண்டு இருந்தார்.

கதிரேசன் “மாப்பிள்ளை காயத்திரியை என் மகன் ராஜதுரைக்குக் கல்யாணம் பண்ணி கொடுங்க” என்று அதிரடியாகக் கேட்டார்.

அவர்கள் கேட்ட உடன் காஞ்சனாவை மனதில் வைத்து ரவீந்திரன் கொஞ்சம் நிதானமாக…

“மச்சான் ராஜதுரை ஓட ஜாதகம் தாங்க பொருத்தம் பார்த்துட்டு மேலே பேசலாம்” என்று சொன்னார்.

உடனே மாலா காயத்திரிய அழைத்துப் பட்டு புடவை கட்டி நகை போட்டு வர சொன்னார்.

மாலா சொன்ன உடன் ரவீந்திரனுக்குப் புரிந்து விட்டது ராஜதுரையைத் தான் மாப்பிள்ளையாக முடிவு பண்ணிவிட்டார் என்று இதற்கு மேல் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்று.

ராஜதுரையை நினைக்கும் போது அவர் மனதுக்குள் சரியான எண்ணம் இல்லை என்றாலும், காசு பணம் விஷயத்தில் அவன் சிறந்தவன் தான் என்று எண்ணினார்.

காயத்திரியை நினைத்து மனதுக்குள் வருந்த மட்டுமே முடிந்தது அவரால். அதுக்கூட அவர் தந்தைக்குக் கொடுத்த வாக்குகாக மட்டுமே.

காயத்திரியை காஞ்சனா உள்ளே கூட்டிச் சென்றாள். அக்கா நானே புடவை கட்டிட்டு வரேன் என்று சொன்னாள் காயத்திரி.

மனமே இல்லாமல் புடவை கட்டி ரெடியானாள். மனம் எல்லாம் வலித்தது. அவளுக்கு வேற வழி இல்லை கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால் தன் வாழக்கையைக் காப்பாற்றடும் என்று நினைத்து விட்டு வெளியே சென்றாள்.

ராஜதுரையின் கண்கள் காயத்திரியை துச்சாதனன் போல் மாறி துகில் உரித்தது.(ஐயோ என்ன அழகு புடவையில் பார்க்கும் போதே சும்மா ஜீவ்வு என்று இருக்கு இப்பவே மொத்தமா பார்க்கணும் போல இருக்கே… என்று மனதுக்குள் நினைத்தான்)

காயத்திரியால் அவன் பார்வை தன் மேல் படர்வதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

வேறு ஒருவன் முன்பு கல்யாணப் பெண் போல நிற்பது மனசுக்குள்ள நெருடலாக இருந்தது. காதல் கொண்ட மனது தவித்தது.

நாகராஜனின் பார்வையும் ரசனையாகக் காயத்திரி மேல் படிந்தது. (இந்தக் கல்யாணம் மட்டும் முடியட்டும் ராஜதுரைக் கிட்ட பேசுனா மாதிரி ஒரு தடவையாவது இவளை முழுசா தொட்டுப் பார்க்கணும்) என்று அசிங்கமா நினைத்தான் நாகராஜன்.

சில நாட்களாகவே… நாகராஜன் மனதில் இந்த எண்ணம் இருக்கிறது காஞ்சனாவுக்கும், மாலாக்குத் தெரியாமல் காயத்திரியை சைட் அடித்துக் கொண்டு தான் இருக்கிறான்.

பெண் கேட்கும் நிகழ்ச்சியைப் பெண் பார்க்கும் படலாமாக மாற்றி விட்டார் மாலா.

இன்னைக்கே நாள் நல்லா இருக்கு வாங்க எல்லாரும் போய் ஜாதகம் பார்த்து விட்டு வரலாம் என்று சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜோசியரிடம் சென்றார் மாலா.

ஜாதகத்தால் காயத்திரி வாழ்க்கையை மாற்ற முடியுமா….?

பார்க்கலாம்….

error: Content is protected !!