மௌனத்தின் நேசம் – 5

அத்தியாயம் – 5

பாரம் ஏறிய மனதுடன் வீட்டை அடைந்தாள் காயத்திரி. அவள் பெற்றோர்கள் வெளியே சென்று இருந்ததால், தன்னிடம் இருக்கும் சாவி கொண்டு வீட்டை திறந்தாள்.

தன் உடைகளை மாற்றி விட்டு, சமையல் அறைக்குச் சென்று பாத்திரம் தேய்த்து வைத்துவிட்டு ,வீட்டை சுத்தம் செய்துவிட்டு, துணிகளைத் துவைத்து காய வைத்தாள்.

அனைத்து வேலைகளை முடித்துவிட்டு வந்து தன் அறையில் அமர்ந்து தன் காதலை பற்றிச் சிந்தித்தாள், அவளுக்குத் தெரியும் தாய் மற்றும் தமக்கை இருவரும் ரிஷனை கல்யாணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்று.‌ தன் தந்தையால் தாயை மீறி எதுவும் செய்ய முடியாது.

இந்தப் படிப்பு அவள் உடுத்தும் உடை, நகை மற்றும் வருமானம் எல்லாம் தாத்தாவால் அவளுக்குக் கிடைத்தது. அவரும் சென்ற வருடம் தான் காலமானார்.

அவள் தாத்தா தான் அவளைப் படிக்க வைத்தது. அவருக்குச் சொந்தமான இரண்டு கடைகளில் இருந்து வரும் வருமானம் காயத்திரிக்கு வரும் படி செய்து இருந்தார். அவர் மனைவியின் சில நகைகள் மட்டும் காயத்திரிக்கு தந்து இருந்தார்.

அவைகளுக்கு மாலா சன்டை போட்ட போது… ரவீந்திரன் உன் விருப்பப்படி தான் அவள் கல்யாணம் நடக்கும் என்று வாக்குறுதி அளித்துச் சமாதானம் செய்து வைத்து இருந்தார்.

இவை எல்லாம் அறிந்தும் ஏன் இந்தக் காதல் தனக்கு வந்தது என்று நினைத்து மருகினாள்.

அவளுக்குத் தெரியும் ரிஷன் வீட்டில் சொல்லி பெண் கேட்டு வாருங்கள் என்று அதன் பின் அவள் மனதில் பெரிய கேள்விக்குறி. பார்க்கலாம் என்ன நடக்கும் என்று நினைத்து விட்டு தன் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தாள்.

இன்னும் சில தினங்களில் அவளுக்குத் தேர்வு வருகிறது.

காலை உணவு முடித்து விட்டு மதுமிதா, பாலாஜி,ஷாஜித் மற்றும் வெங்கடேஷ் புறப்பட்டனர்.

அவர்கள் எல்லாம் சென்னையில் வெவ்வேறு தொழில்நுட்ப கம்பனியின் வேலை பார்கிறார்கள்.

ரிஷன் மட்டும் மதிய விருந்து சாப்பிட்டு கிளம்ப நினைத்தான்

ரிஷன் கிருஷ்ணா கார்த்திக் திருமணத்தை முடித்து விட்டு மதுரைக்குப் பஸ்ஸில் புறப்பட்டான்.

“உனக்காகத்தானே

இந்த உயிர் உள்ளது

உன் துயரம் சாய..

என் தோள் உள்ளது

முடியாமல் நீளும்

நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால்

என்ன அன்பே…

உன்னோடு நானும் வருவேன்”

என்ற பாடல் பஸ்ஸில் ஒலித்தது.

பாடல் கேட்ட நொடி காயத்திரி நினைவு தான்.

அவள் சொல்லி சென்ற மறைப்பொருளை பற்றிச் சிந்தித்துக் கொண்டே மதுரையை அடைந்தான்.

வீடு சென்று அடைகையில் மாலை ஆகி இருந்தது. லேசான மழை பொழிந்தது.

அவன் மனதில் காயத்திரி சொன்ன காதல் கவிதை தான் நினைவுக்கு வந்தது முகத்தில் மந்தகாசமான புன்னகை தோன்றியது ரிஷனுக்கு.

வீட்டுக்குள் நுழைகையில் அவன்‌ தங்கை டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவன் வருவதைப் பார்த்து

“ அம்மா அண்ணா வந்துடாங்க” என்றாள் ஹர்ஷினி.

வா டா கண்ணா… “கல்யாணம் எல்லாம் நல்ல படியாக நடந்ததா..?” என்று கேட்டார் அன்னை பாசமாக.

“ம்ம்ம் நல்லா நடந்தது” என்றான் ரிஷன்.

“சரிய்யா… போய்க் குளிச்சிட்டு வாய்யா பார்க்க சோர்வாகத் தெரியர” என்றார் தந்தை.

தன் அறைக்கு வந்து குளித்து விட்டு

தன் லேப்டாப்பை திறந்தான் மேனேஜரிடம் இருந்து மெயில் வந்து இருந்தது.

அதனைப் படித்துப் பார்த்து விட்டு அவரைத் தொலைபேசியில் அழைத்தான்.

மேனேஜர்( பெயர்- நந்தகோபாலன்)

மற்றும் ரிஷனின் தொலைபேசி உரையாடல்.

“ஹலோ நந்தா குட் ஈவினிங்” என்றான் ரிஷன்.

“குட் ஈவினிங் ரிஷன் மெயில் பார்த்தியா.?” என்று கேட்டார்.

“இப்ப தான் பார்தேன் நந்தா” என்றான் ரிஷன்

“ஏரர் என்னன்னு பார்த்து சரி பண்ணி விட்டுறேன் நந்தா, நான் இன்னும் சில நாள் வீட்டில் இருந்து வேலை பார்க்கிறேன் உங்களுக்கு மெயில்ல ரிக்குவஸ்ட் அனுப்பி இருக்கேன்” என்றான்.

“சரி ரிஷன் பார்க்கிறேன் நீ ஏரர் என்னன்னு பார்த்து சரி பண்ணு” என்றார் நந்தா.

“சரி நந்தா “என்று சொல்லி அழைப்பை துடித்தான்.

வாட்ஸ் அப்பில் காயத்திரிக்கு தான் வீட்டுக்கு வந்து விட்ட செய்தியை அனுப்பினான்.

லேப்டாப்பில் தன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் ஏரரை கண்டு சரி செய்து தன் டீம் மேட்டுக்கு அனுப்பி வைத்தான்.

சில நிமிடத்தில் அவன் டீம் மேட் கேசவன் கால் செய்தான்.( ரிஷன் மற்றும் கேசவன் இருவரும் தான் ஒன்றாக ரூம் எடுத்து தங்கி உள்ளனர்)

ஹலோ… “என்ன டா மச்சி வீட்டுக்கு போய்ட்டு எங்களை மறந்துட்டியா?” என்றான் கேசவன்.

“இல்லை டா மச்சி பிரின்ட் மேரேஜ் அதான்” என்றான் ரிஷன்.

“சீக்கிரம் வா டா நீ இல்லாம ரொம்பப் போர்” என்றான் கேசவன்.

“ஹாஹா போர் அடிக்குதா? இல்லை சாப்பாடு ப்ரோப்லமா?” என்று கேட்டான் ரிஷன்.

“ஹாஹா உண்மை தான் மச்சி சாப்பாடு தான் ப்ரோப்லம்” என்றான் கேசவன்.

“சரி டா சீக்கிரம் வரேன் வீட்டுல கொஞ்சம் முக்கியமான வேலை எல்லாம் இருக்கு அதை முடுச்சுட்டு வரேன்” என்றான் ரிஷன்.

“சரி டா மச்சி பார்த்துக்கோ” என்றான் கேசவன்.

இருவரும் சில நிமிடம் வேலையைப் பற்றிப் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தனர்.

இரவு வரை வேலை நீடித்தது.

ரிஷன் இரவு உணவை தன் குடும்பத்தார் உடன் அமர்ந்து கல்யாண வீட்டில் நடந்த சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே சாப்பிட்டான்.

ஹர்ஷினிக்குத் தேர்வு நடப்பதால் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டால்.

தன் தந்தை அறைக்குச் செல்லும் வரை காத்திருந்தான் ரிஷன், அவர் சென்ற உடன் தன் அன்னையிடம் பேச சமையல் அறைக்குச் சென்றான்.

அவர் அன்னை சமையல் அறையைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

ரிஷனுக்கு இதயம் லேசாகப் படப்பட என்று இருந்தது.

அம்மா… “உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்று பிடிகையோடு சொன்னான் ரிஷன்.

“என்னடா!! பிடிகை எல்லாம் பலமா இருக்கு, என்ன விஷயம்??” என்று கேட்டார் அன்னை.

“அம்மா… கார்த்திக் கல்யாணத்தில ரவீந்திரன் மாமா பொண்ணு காயத்திரியை பார்த்தேன்” என்று சூட்சமமாகச் சொன்னான்.

“காயத்திரி எப்படி… அங்க வந்தாள்?” என்று கேட்டார் அன்னை.

“அதுவா மணமகளுக்கு தோழியா வந்து இருந்தா மா..” என்றான் ரிஷன்.

“ஓ அப்படியா…” என்று சாதாரணமாகச் சொன்னார் அன்னை.

அம்மா…. என்று தயங்கினான் ரிஷன்.

“என்ன டா கண்ணா எதுக்குத் தயங்கிர அம்மா கிட்ட சொல்ல எதுக்குத் தயக்கம்” என்று பாசமாகக் கேட்டார் அன்னை

“அது வந்து மா” என்று தயங்கி கொண்டே…

“அம்மா நான் காயத்திரியை விரும்புறேன். அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அப்பா கிட்ட சொல்லி முறைப்படி பெண் கேளுங்க” என்று சற்றுத் தன்மையாகக் கூறினான்.

யசோதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சற்று நேரம் மௌனமாக இருந்தார்.

அம்மா என்று தொட்டு அழைத்தான் ரிஷன்.

யசோதா யோசித்தால்.

பின் மெதுவாக “அப்பா கிட்ட பேசுறேன், அப்பா என்ன முடிவு செய்வாரோ அதான் என் முடிவும்” என்று பிடிக்கொடுக்காமல் சொல்லி சென்றார் அன்னை.

ரிஷன் மனதுக்கு ஆயாசமாக இருந்தது. சரி பார்க்கலாம் என்று நினைத்து தூங்க தன் அறைக்கு நுழைந்தான்.

யசோதா தன் அறைக்குள் நுழைந்து யோசனையாகவே இருந்தார். அவர் முகம் பார்த்த ஜெகதீஸ்வரன்,

“என்ன மா ரொம்ப பலமா யோசிக்கிற” என்று கேட்டு அவர் கைகளுக்குள் யசோதா கைகளை வைத்தார்.

“இல்லை… கண்ணா ஒரு விஷயம் சொன்னான் அதான் யோசிக்கிறேன்” என்று கூறினார்.

“என்ன சொன்னான் உன் பிள்ளை” என்று கிண்டலாகக் கேட்டார் ஜெகதீஸ்வரன்.

யசோதா அவர் கண்களைப் பார்த்து கொண்டே…

“கல்யாணத்தில ரவீந்திரன் அண்ணே பொண்ணு காயத்திரியை ரிஷன் பார்த்து இருக்கான்” என்றார்.

“சரி அதுல என்ன இப்ப உனக்கு…. பொண்ணோட ப்ரண்டா வந்து இருப்பா” என்று சரியாகக் கணித்தார் ஜெகதீஸ்.

“ம் சரி தாங்க ஆனா கண்ணனுக்கு அந்தப் பொண்ணு மேல விருப்பம் போல, முறைப்படி பொண்ணு கேக்க சொல்லுறான்” என்று சொன்னார் யசோதா தன்மையாக.

ஓ.. என்றார் ஜெகதீஸ்.

“சரி நீ என்ன நினைக்கிற?” என்று தன் மனைவிடம் கேட்டார்.

அவர் மௌனமாக கணவரை பார்த்துக் கொண்டே இருந்தார். (ஆனால் மனதுக்குள் ஆசை இருந்தது காயத்திரியை மருமகளாக்க)

ஜெகதீஸ்வரன் சற்று நேரம் யோசித்தார்.

பின் யசோதா கைகளைக் தடவி கொண்டே… “உன் பிள்ளை ஆசைப்படி செய்யலாம்” என்றார்.

யசோதா கண்களில் கண்ணீருடன் தன் கணவரை அணைத்துக் கொண்டார்.

ஜெகதீஸ் மெதுவாக மனைவியின் தலையைத் தடவிக்கொண்டே…

“எனக்கும் காயத்திரியை முதல் முறை பார்த்த போது நம்ம மருமகளா வந்தா நல்ல இருக்கும் நினைத்தேன்” என்று கூறினார்.

யசோதைக்குச் சந்தோஷமாக இருந்தது.

பின் இருவரும் சில விஷயங்களைப் பற்றிப் பேசி விட்டு தூங்கினார்கள்.

ரிஷனால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. மனதுக்குள் அழுத்தமாக இருந்தது. காயத்திரியிடம் பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் அவள் குடும்பச் சூழல் நிலை பற்றி யோசித்து விட்டு அவளை அழைக்கவில்லை ரிஷன்.

மாலையில் அவன் அனுப்பிய குறுஞ்செய்திக்கு சரி என்ற கை குறியீடு மட்டும் அனுப்பி இருந்தாள். வேறு எதுவும் அனுப்பவில்லை ஆதலால் குறுஞ்செய்தி வாயிலாகப் பேச கூடத் தயங்கினான் ரிஷன்.

சில நிமிடம் தியானம் செய்து விட்டு வந்து தூங்க எத்தனித்தான் ரிஷன் கிருஷ்ணா.

மறுநாள் காலையில் யசோதா எழுந்து ஹர்ஷினிக்கும் காலை உணவு செய்து கொடுத்து விட்டு, கணவரின் தேவைகளை முடித்து விட்டு, அவருக்கு உணவு கொடுத்து வேலைக்கு அனுப்பி விட்டு , சோஃபாவில் கண்களை மூடி அமர்ந்து இருந்தார்.

ரிஷன் லேட்டாகத் தான் எழுத்து வந்தான்.

தன் தாய் சோஃபாவில் அமர்ந்து இருப்பதைப் பார்த்து விட்டு சமையல் அறைக்குச் சென்று டீ போட்டுக் கொண்டு வந்து தாய்க்கும் கொடுத்து விட்டு தானும் அருந்தினான்.

யசோதாவுக்கு அந்த டீ இதமாக இருந்தது.

அம்மா… என்று தயங்கினான் ரிஷன்.

“என்ன கண்ணா” என்றார் அன்னை.

“இல்லை நைட் நான் சொன்ன விஷயத்தை அப்பா கிட்ட பேசிடிங்களா…?”என்று தயங்கி கொண்டே கேட்டான்.

ரிஷன் முகத்தில் பதட்டம் மற்றும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. யசோதாவுக்கு அவனிடம் விளையாட ஆசை வந்தது.

“அப்பா கிட்ட பேசுனேன் டா கண்ணா அவர் வேற பொண்ணு பார்க்கலாம் காயத்திரி வேண்டாம்” என்று சொல்லி விட்டார் என்றார் அன்னை.

ரிஷன் மௌனமாகக் கேட்டுக் கொண்டான்.

ரிஷன் முகம் கசங்கியது. சோகமாக அந்த இடத்தை விட்டு தன் அறைக்கு வந்தான்.

மனம் வலித்தது சில நாள் காதல் என்றாலும் உண்மையாகக் காதலித்தான். அவனால் காயத்திரி தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை.

சிறிது நேரம் மௌனமாக இருந்தான்.

பின் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து வேலை செய்யத் தொடங்கினான்.

அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

கண்களில் கண்ணீர் வந்தது.

அவன் கண்ணீர் கண்ட அன்னை பதட்டமாக…

“டேய் கண்ணா… அம்மா சும்மா விளையாட்டுக்கு தான் அப்படிச் சொன்னேன். எங்களுக்கு முழுச் சம்மதம் காயத்திரியை மருமகளா வரதுக்கு” என்று சொல்லி அவனை அணைத்துக் கொண்டார்.

ரிஷன் அதிர்ச்சியாக அன்னையை பார்த்தான்.

“அம்மா உண்மையா தான் சொல்லுறீங்களா?” என்று கேட்டான்.

“ஆமாம் டா” என்றார்.

ரிஷன் சந்தோஷமாகத் துள்ளி குதித்துக் கத்தினான். தன் அன்னையின் கை பிடித்துச் சுற்றினான்.

அவனை இப்படிப் பார்க்க யசோதாவுக்கு அழகாக இருந்தது, இந்தச் சந்தோஷம் அவன் ஆயுள் முழுதும் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுனார்.

ரிஷன் இயல்புக்கு மாறி நேற்று மண்டபத்தில் அவன் காதல் சொன்னது மற்றும் காயத்திரியின் நிலை அவள் தந்த பதில் எல்லாவற்றையும் தன் அன்னையிடம் தெரிவித்தான்.

யசோதாவுக்கு அவள் குடும்பத்தில் நடப்பது மேன்பொக்காக அவருக்குத் தெரியும் ஆகையால் ரிஷன் சொன்னதை மௌனமாகக் கேட்டுக் கொண்டார். அவனுக்கும் காயத்திரி வீட்டை பற்றிச் சில விஷயங்களைச் சொன்னார்.

அப்பா வைகாசி பிறந்த பிறகு நல்ல நாள் பார்த்துப் பெண் கேட்டுப் போகலாம் என்று சொன்னார் என்று ரிஷனிடம் தெரிவித்தார்.

“நீ வர வேண்டாம் கண்ணா” என்று கூறினார்.

“ஏன் அம்மா?” என்று கேட்டான் அதிர்ச்சியாக.

சில காரணங்களால் தான் சொல்லுறேன் என்றார்

“பிரபு மாமா மற்றும் மஞ்சுளா அத்தை நாங்க மட்டும் போய்ப் பொண்ணு கேட்டு வரோம்” என்றார்.

( பிரபு மற்றும் மஞ்சுளா ரிஷனின் தாய்மாமன் மற்றும் அவரின் மனைவி. அவர்களுக்கு ஒரு பையன் லேட்டாகப் பிறந்தவன். இப்பொழுது ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்).

மனசுக்கு வருத்தமாக இருந்தாலும்…

“சரிங்க அம்மா நீங்க சொல்லுற மாதிரி செஞ்சுக்கலாம்” என்றான் ரிஷன்.

ரிஷன் ஒரு வாரம் மட்டும் ஓர்க் பிரம் ஹோம் வேலை பார்த்து விட்டு அதன் பின் ஒர்க் பிரம் ஹோம் கேன்சல் செய்து விட்டு பெங்களூருக்கு வேலைக்குச் சென்றான்.

பெண் கேட்கும் படலம் காயத்திரி வாழ்க்கையை மாற்றுமா….?

பார்க்கலாம்.!!

error: Content is protected !!