மௌனத்தின் நேசம் – 4

அத்தியாயம் -4

வீட்டுக்குச் செல்கையில் இரவு 10 மணி. ஆட்டோவுக்குப் பணம் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தாள் காயத்திரி.

வீட்டில் அவள் தாய் மாலா காயத்திரியை வசை பாடிக்கொண்டு இருந்தார்.

கல்யாணத்துக்குப் போனா வருவதற்கு இவ்வளவு நேரமா? யாரு இந்த வேலை எல்லாம் செய்வா? என்று பாத்திரம் தேய்த்துக் கொண்டே ஏசினாள்.

காயத்திரி கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.

உள்ளே வருகையில் தன் தாய் பேசியது எல்லாம் அவள் காதில் விழுந்தது.

மாலா காயத்திரி உள்ளே வருவதைப் பார்த்து… “ஏய் இந்தா புடவையை மாத்திட்டு வந்து வேலையைப் பார்” என்றாள் அதிகாரமாக.

காயத்திரி புடவையை மாற்றிவிட்டு வந்து தன் அன்றாடம் செய்யும் வேலைகளைப் பார்த்தாள்.

அவள் மனதில் எப்போதும் தோன்றும் கேள்வி இப்போது எழுந்தது,

“தன் தாய் தான் அவளைப் பெற்றதா இல்லை… வேறு யாரோ வா?”

வாழ்க்கையில் தாயிடம் பாசம், அரவணைப்பு, கொஞ்சல் போன்ற எதையும் பெறாதவள் அவள். அதிகாரம், ஆளுமை, கோபம், இவைகளை மட்டும் தான் அவளுக்குக் கிடைத்தது.

அவளுக்கு விவரம் தெரிந்த நாள் முதல் காலையில் எழுந்து சமையல் செய்ய வேண்டும், வீட்டு வேலைகள் அனைத்தும் அவள் தான் செய்ய வேண்டும் இதுதான் எழுத படாத விதி.

அவள் அக்கா ஒரு வேலை கூடச் செய்ய மாட்டாள் ராணி போல் இருப்பாள். அவள் தாய் அவளிடம் மட்டும் பாசமாக இருப்பாள்.

ஆதலால் தான் இந்தக் கேள்வி அவள் மனதில் எப்போதும் தோன்றும்.

“என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே

கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே…

தலை எழுத்தென்ன

என் மொதல் எழுத்தென்ன

தலை எழுத்தென்ன

மொதல் எழுத்தென்ன

சொல்லுங்களேன்..?”

கேள்வி தோன்றும் போது எல்லாம் இந்தப் பாடல் வரிகள் தான் காயத்திரி மனதுக்குள் வரும்.

காயத்திரிக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

அவள் அனைத்து வேலைகளையும் செய்து முடித்து வருகையில் இரவு 11.30 மணி.

மெதுவாக வந்து தன் படுக்கையில் படுத்தாள்.

அவள் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்து இருந்து.

அதனைத் திறந்து பார்த்தாள்.

ரிஷனிடம் இருந்து வந்து இருந்தது.

“வீட்டுக்கு போயிட்டையா மா..? என்று அனுப்பி இருந்தான்.

அதுக்குக் காயத்திரி “ ம்ம்ம்ம்ம், நான் வீட்டுக்கு வந்துட்டேன்.” என்று பதில் அனுப்பினாள்.

ரிஷன் பார்த்து விட்டுப் பதில் ஏதும் அனுப்பவில்லை.

காலை 7 மணிக்கு முகூர்த்தம் என்பதால் காலை 3.30 மணிக்கு அலாரம் வைத்தாள். அப்போது தான் அவள் சமையல் எல்லாம் செய்து வைத்து விட்டு கல்யாணத்துக்குப் புறப்பட முடியும்.

அவள் உடல் அசதியாக இருந்தாலும் அவளால் உறங்க முடியவில்லை.

அவள் காதில் இன்னும் ரிஷனின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

அந்த நீல விழிகளின் மாயம் அவளை அதிகமாக இம்சை செய்தது. ஏனோ அந்த நொடியை நினைத்து அவள் மனம் இன்பத்தில் லயத்து இருந்தது.

அவள் விழிகள் மெதுவாக முடிக்கொண்டது.

விடியற்காலை 3 மணிக்கு விழிப்பு வந்தது காயத்திரி, தொலைபேசியில் மணியைப் பார்த்துக்கொண்டாள்.

அவளது மனம் மெதுவாக நேற்றைய நிகழ்வுகளை அசைப்போட்டது. அவள் முகத்தில் சிறு புன்னகை.

பின் மெதுவாக எழுந்து தன் அன்றாடப் பணிகளைச் செய்யச் சென்றாள்.

காலை 5.00 மணிக்குள் சமையல் வேலை எல்லாம் முடித்து விட்டு வீட்டையும் சுத்தம் செய்து வைத்தாள்.

பின் குளித்து ஆழமான மெரூன் நிற புடவையில், கழுத்துக்குச் சின்னச் சிவப்பு கல் அட்டிகை, பிரஞ்சு பிளேட் சிகை அலங்காரம் என்று மிதமான ஒப்பனையில் அழகாக இருந்தாள் காயத்திரி.

தன்னைக் கண்ணாடியில் பார்த்துப் போது மனதுக்குள் ரிஷனின் நீலநிற கண்கள் தன்னைப் பார்த்தால் எப்படி விரியும் என்று அழகான கற்பனை எண்ணம் ஆதலால் அவள் முகம் சிவந்தது.

காலை 6 மணிக்கு தன் தந்தையிடம் சொல்லி விட்டு ஆட்டோவில் திருமண மண்டபத்திற்கு சென்றாள்.

செல்லும் வழியில் ஓர் இடத்தில் நிறுத்தி மதுரை மல்லி வாங்கித் தலையில் சூடிக் கொண்டாள்.

மண்டபத்தில் நுழைகையில் ஸ்வேதாவின் தாய் காயத்திரியை வரவேற்று அவளை மணமகளின் அறையில் விட்டார்.

உள்ளே ஸ்வேதாவுக்கு அழகுக் கலை நிபுணர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

ஸ்வேதா வெளிர் நீல நிறப்புடவையில் ஏற்ற நகைகள் அணிந்து அழகாக இருந்தாள்.

காயத்திரி உள்ளே வருவதைப் பார்த்து

“ஏய்….. காயு பார்க்க செமையா இருக்க”!! என்று கண் அடித்தாள் ஸ்வேதா.

“சும்மா இருடி..” என்று அழகாக வெட்கப்பட்டாள் காயத்திரி.

காயு… “நீ வெக்கக்படும் போது செம கியூட்டா இருக்க டி” என்றாள் ஐரின்.

காயத்திரி மனதுக்குள் ரிஷனின் முகம் மின்னி மறைந்தது. அவனைப் பார்க்க மனம் ஆசைக் கொண்டது.

சிறிது நேரத்தில் மணமகளுக்கு சடங்கு செய்ய மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

காயத்திரி மெதுவாக வெளியே வந்து ரிஷனை தேடினாள்.

ரிஷன் சந்தன நிற சட்டையும் தங்க ஜரிகை கொண்ட வேட்டியும் அணிந்து மாடி விளிம்பில் இருந்து காயத்திரியை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவள் கண்களின் தேடல் அவன் காதல் கொண்ட மனதுக்கு ஜில் என்று இருந்தது.

“புடவை தலைப்பு ஒரு மாங்கனி

புன்னகை ஒரு தேன்கனி

கண்ணால் கண்ணால் கவி பாடவா

கைகோர்த்து நீ வா…”

என்ற பாடல் பின்னணியில் பாடியது.

தன் தேடல் கிடைக்காத நிலையில் வாடிய முகத்துடன் காயத்திரி இருக்கையில் அமர்ந்தாள்.

ரிஷன் மெதுவாகப் படிகளில் இறங்கி வந்தான்.

அவள் கண் படும் இடத்தில் நின்று கொண்டான்.

காயத்திரியின் கண்கள் ரிஷனை கண்டு கொண்டது. முகத்தில் அழகாகப் புன்னகைத் தவழ்ந்தது.

உன்னை ஆயிரம்

உடைகளில்

பார்த்தாலும்…..

வேட்டி சட்டையில் உன்

இடது கை

மீசையை முறுக்கும்

அழகே தனி…❣️

ரிஷனின் கண்களும் காயத்திரி கண்ட நொடி அழகாக விரிந்தது அவள் கற்பனை செய்தது போலவே.

மதுமிதா வந்து காயத்திரி அருகில் அமர்ந்தாள். சந்தன நிற பட்டுப்புடவையில் அழகாக இருந்தால். அவள் எதிரே பாலாஜி நின்று இருந்தான்.

பாலாஜி மற்றும் மதுமிதா இருவர் காதலர்கள்.

இருவரும் கண்களில் காதல் மின்னியது.

“பெண்ணென்ற ஜாதியிலே

ஆயிரத்தில் அவள் ஒருத்தி

பொன் வைரம் கொடுத்தாலும்

போதாது சீர் செனத்தி

கல்யாணப் பந்தலிலே

நான் அவளை நேர் நிறுத்தி

பூமாலை சூட்டிடுவேன்

மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி

அன்றாடம் அலைந்து

எங்கேயும் தேடி

கண்டேனே எனக்கு

தோதான ஜோடி

வந்தாச்சு கால நேரம்

மாலையிடத் தான்”

என்று மண்டபத்தில் பாடல் ஒலித்தது.

இரு ஜோடிகள் தன் இணையைப் பார்த்தனர்.

மேடையில் திருமணச் சடங்குகள் ஆரம்பித்தது.

காப்பு கட்டுதல்: மணமகன்-

மணமகளுக்கு மஞ்சள் கயிறு கையில் கட்டப்படுவது, தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.

மாலை மாற்றுதல்: மணமகன்-மணமகள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி, ஒற்றுமையை வெளிப்படுத்துவர்.

தாலி கட்டுதல்:

மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி (மாங்கல்யம்) கட்டுவது, திருமணத்தின் மிக முக்கியமான சடங்கு.

சப்தபதி: மணமகள் மணமகனுடன் ஏழு அடிகள் எடுத்து வைப்பது, வாழ்க்கையின் ஏழு பயணங்களை ஒன்றாக எதிர்கொள்வதைக் குறிக்கும்.

அருந்ததி பார்த்தல்: மணமகன் மணமகளுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டுவது, விசுவாசத்தையும் நிலையான தாம்பத்யத்தையும் குறிக்கும்

கார்த்திக் ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டி தன்னில் பாதியாக ஏற்றுக்கொண்டான்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆரம்பித்தது.

காயத்திரி மதுவிடம்…

“நான் மேடைக்குப் போய்ப் பரிசு கொடுத்து விட்டு கிளம்புறேன்” என்றாள்.

“சாப்பிடலையா காயு?” என்றாள் மது.

“ம்ம்.. சாப்பிடனும் பரிசு கொடுத்து விட்டு சாப்பிட்டு தான் போகனும்” என்றாள் காயு.

மது பாலாஜியை கண்களால் அழைத்தாள்.

பாலாஜி மது அருகில் சென்றான்.

மது.. “காயு மேடைக்குப் போய்ப் பரிசு கொடுத்து விட்டு கிளம்புறேன் சொல்லுற நாம எல்லாரும் போய்க் கிப்ட் கொடுத்து விட்டு கிளம்பலாம், நம்ம எல்லாரும் சென்னை வரைக்கும் போகணும் ” என்றாள் பாலாஜிடம்.

“ம்ம்… சரி வா ரிஷன், எல்லாரையும் வர சொல்லுறேன்” என்றான் பாலாஜி.

பாலாஜி ரிஷனிடம் சொல்லி அனைவரும் மேடைக்குச் சென்றனர்.

அனைவரும் கார்த்திக் ஸ்வேதாவுக்குத் திருமண வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

கார்த்திக் ரிஷனை ஸ்வேதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான், மற்ற அனைவரும் ஏற்கனவே ஸ்வேதாவுக்குத் தெரியும் ஆகையால் ரிஷனை மட்டும் அறிமுகம் செய்தான்.

ஸ்வேதா சிநேக புன்னகையுடம் “எப்படி இருக்கீங்க” என்றாள்.

ரிஷன் “நல்ல இருக்கேன் மா” என்றான்.

ரிஷன் மற்றும் அவன் நன்பர்கள் சேர்ந்து பரிசு கொடுத்தார்கள்.

ஸ்வேதா காயத்திரியை கார்த்திக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

காயத்திரி தன் பரிசை கொடுத்து திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்தாள்.

ரிஷன் மெதுவாகக் காயத்திரி அருகில் நின்றுக்கொண்டான்.

அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

மேடையில் இருந்து கீழே வந்து அனைவரும் காலை உணவு சாப்பிட சென்றார்கள்.

காயத்திரி அருகில் மது, அவள் அருகில் பாலாஜி, காயத்திரி மற்றொரு பக்கத்தில் ரிஷன், ஷாஜித், மற்றும் வெங்கடேஷ் அமர்ந்தார்கள்

காலை உணவு பரிமாறப்பட்டது. காயத்திரி மனதுக்கு இதமாக இருந்தது, ரிஷன் அருகில் அமர்ந்தது.

மெதுவாக மற்றும் மௌனமாகச் சாப்பிட்டாள். ரிஷனும் மெதுவாகச் சாப்பட்டான்.

சில நிமிடங்கள் கழித்து….

“ஏய் இங்க பார் ஒழுங்கா வேலை பார்க்க மாட்டியா” என்று ஒரு குரல் மண்டபத்தில் கேட்டது.

அதனைக் கேட்ட நொடி காயத்திரி மாலாவின் நியாபகம் தான் வந்தது.

தன் காதல் மட்டும் அவள் அன்னைக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்று

காயத்திரி மனதுக்குள் பயந்தாள். இந்தக் காதலால் தன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி நன்கு அறிவாள், தெரிந்தும் இந்தக் காதல் தேவையா… என்று தோன்றியது. ஆதலால் ரிஷனை தவிர்க்க முடிவு எடுத்தாள்.

திருமண உணவு நன்றாக இருந்தது.

சாப்பிட்டு விட்டு கடைசி இருக்கையில் அமர்ந்தார்கள்.

காயத்திரி மதுவிடம் சொல்லிவிட்டு செல்ல எத்தனித்தாள்.

காயத்திரியின் விலகலை உணர்ந்த ரிஷன் அவளிடம் தன் காதலை சொல்ல முடிவு செய்தான்.

ரிஷன் கிருஷ்ணா… காயத்திரிடம் தனியாகப் பேச ஆசைப்பட்டான். ஆதலால் அவளைச் சற்றுத் தூரத்தில் இருந்த இருக்கைக்கு அழைத்துச் சென்றான்.

காயத்திரி மனம் படப்பட என்று அடித்துக் கொண்டது தன்னிடம் காதலை சொல்ல வேண்டாம் என்று நினைத்தாள்.

“நினைப்பது எல்லாம் நடத்து விட்டால் எப்படி?!”

ரிஷன் கிருஷ்ணா மெதுவாக அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே

“விழிகளிலே உன் தேடல்..

செவிகளிலே உன் பாடல்..

இரண்டுக்கும் நடுவிலே

இதயத்தின் உரையாடல்

காதலுக்கு விலையில்லை

எதைக் கொடுத்து நான் வாங்க

உள்ளங்கையில் அள்ளித்தர

என்னை விட ஏதுமில்லை

யாரை கேட்டு வருமோ

காதலின் ஞாபகம்

என்னைப் பார்த்த பிறகும்

ஏன் இந்தத் தாமதம்

ஏன் இந்தத் தாமதம்

நீ எப்போ சொல்வாய்

காதல் சம்மதம்..!!♥️

என்று பாடி தன் காதலை தெரிவித்தான் ஆசையாக.

காயத்திரியின் கண்கள் கலங்கியது.

ரிஷனின் கண்களைப் பார்த்து,

அவளால் தன் மனம் அறிய பொய் சொல்ல முடியவில்லை. மௌனமாக நின்று இருந்தாள்.

தன் அன்னையைப் பற்றிப் பயம் இருந்தும். எது வந்தாலும் எதிர் கொள்ளத் துணிந்து

தன் காதலை சொல்ல தயாரானாள். அவள் வாழ்க்கையில் தனக்கென்று ஆசைப்பட்ட உறவு ரிஷன் மட்டுமே அதனால் தான் தன்னுடைய காதலைச் சொல்ல முடிவு செய்தாள்.

சில நிமிடங்கள் மௌனமே நீடித்தது.

“கருமேகம் சூழ…

சில்லென்று காற்று

இதயம் தீண்ட..!!

மிதமான சாரல்

பொழிய….

உன் கையோடு கைகோர்த்து

நீண்ட தூரம் பயணம்

செய்தல் வேண்டும்….!!!❣️😘”

என்று கவிதையாக தன் காதலினை சொல்லி,

என் வாழ்க்கையில் எதுக்குமே நான் ஆசைப்பட்டதே இல்லை. ஆனால் உங்கள் மீது ஏனோ முதல் பார்வையிலே காதல் கொண்டேன்.

நம் காதல் வெற்றி பெற பல போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். அதுக்குத் தயார் என்றால் வீட்டில் சொல்லி

முறைப்படி பெண் கேட்டு வாருங்கள் என்றாள் காயத்திரி தன்மையாக.

அவ்வளவு ஈஸியா நம்ம காதல் வெற்றி பெறாது நிறையப் போராடனும் எல்லாத்துக்கும் நீங்கள் ரெடியா இருந்தா மட்டும் வீட்டில் சொல்லுங்க என்றாள்.

ரிஷன் கிருஷ்ணா சந்தோஷமாக அதை ஏற்றுக் கொண்டான்.

அவன் கண்கள் மின்னியது காதலால்.

“கண்டிப்பா அவ்வளவு ஈஸியா நானும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன். கண்டிப்பா என்ன நடந்தாலும் கடைசி வரைக்கும் போராடுவேன். ஒரு வேலை நான் தோல்வி அடைந்தால் கூட இறுதி வரைக்கும் உன் நினைவுகளோடு வாழ்வேன்” என்றான் ரிஷன் உறுதியாக.

ரிஷன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு காயத்திரி மனதில் பாரம் ஏறியது அதுக்கு மேல் அங்கு இருக்க விரும்பாமல் ரிஷனிடம் இருந்து விடைப்பெற்று வீட்டுக்கு சென்றாள்.

காயத்திரி மனதுக்குள் ரிஷனின் காதலை பார்த்து பிரம்மிப்பாக இருந்தது. ஒருவனால் இப்படிக் கூடக் காதலிக்க முடியுமா? இந்தக் காதலுக்கு நான் பொருத்தம் ஆனவள் தானா? என்று பல கேள்விகள் அவளுக்குத் தோன்றியது.

அவர்கள் காதல் வெற்றிப் பெற்றதா?

இல்லையா …?

காயத்திரி கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமா…?

பார்க்கலாம்….!

error: Content is protected !!