அத்தியாயம்-3
டெக்சாஸ்- ஆஸ்டின்
ஏர்போர்டில் அமர்ந்து தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்த ரிஷன் கிருஷ்ணா
இந்தியாவுக்குச் செல்லும் விமான அறிவிப்பால் கலைந்தான் . அவன் தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு விமானத்துக்குச் செல்ல ஆயத்தம் ஆனான்.
ரிஷன் கிருஷ்ணா விமானத்தில் முதல் வகுப்புச் சீட்டில் அமர்ந்தான்.
சில வழிமுறைகளுக்கு பிறகு விமானம் புறப்பட்டது.
விமானம் மேலே பறக்கும் காட்சி ஒரு பிரமிப்பூட்டும் அனுபவம். வெண்மேகங்களுக்கு மத்தியில், பறவை போல உயரத்தில் செல்லும் விமானம், தொழில்நுட்பத்தின் அற்புதத்தையும், மனிதனின் கனவுகளையும் பிரதிபலிக்கிறது. பயணிகளுக்கு, ஜன்னல் வழியே பரந்த வானம், மேகக் கூட்டங்கள், சூரிய ஒளியின் பிரகாசம் ஆகியவை மறக்க முடியாத காட்சியைத் தருகின்றன. இது சுதந்திரத்தையும், எல்லைகளைக் கடந்து செல்லும் உணர்வையும் அளிக்கிறது.
கடந்த காலத்தின் நினைவுகளால் விமானப் பயனத்தின் இதத்தை கூட அவனால் ரசிக்க முடியவில்லை.
விமானம் புறப்பட்ட சில நொடிகளில் மீண்டும் அவன் நினைவலைகள் காயத்திரியை இரண்டாம் முறையாகச் சந்தித்த நிகழ்வுக்குச் சென்றது.
“சென்றாயப் பெருமாள் கோவில் திருவிழா”, முடித்து விட்டு ஞாயிறு அன்று பெங்களூரில் வேலைக்குச் சென்றான் ரிஷன் கிருஷ்ணா.
அதன் பின் சித்திரை மாதம் நடக்க இருந்த மதுரை சித்திரைத் திருவிழாக்கு தான் ரிஷன் கிருஷ்ணா அவன் வீட்டுக்குச் சென்றான்.
“மதுரை சித்திரை திருவிழா, உலகப் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய திருவிழாவாகும், இது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை மையமாகக் கொண்டு சித்திரை மாதத்தில் (ஏப்ரல்-மே) 12-16 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா, சைவ-வைணவ ஒற்றுமையைக் குறிக்கும் தனிச்சிறப்பு வாய்ந்தது, மேலும் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டு, தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
மதுரை சித்திரை திருவிழா முன்பு மாசி மாதத்தில் நடைபெற்று வந்தது. வேளாண் பெருமக்களால் அறுவடை காரணமாகப் பங்கேற்க முடியாததால், திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் (17-ஆம் நூற்றாண்டு) இது சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது. மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இணைக்கப்பட்டு, சைவ-வைணவ ஒற்றுமையை வெளிப்படுத்தும் விழாவாக உருவானது”.
ரிஷனின் குடும்பமும் சித்திரைத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டடியது.
ரிஷன் மதுரையில் இருந்த போது தான் அவன் கல்லூரி நண்பர்கள் கார்த்திக் மற்றும் ஷாஜித் ரிஷன் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
“டேய் மச்சான்! என்று அழைத்துக் கொண்டே கார்த்திக் மற்றும் ஷாஜித் வந்தனர்”.
“வாங்க டா … மாப்பிளைங்களா” என்று சந்தோஷமாக வரவேற்றான் ரிஷன்.
“டேய் மாப்ள… எப்படி டா இருக்க?” என்று சந்தோஷமாகக் கட்டி அணைத்தனர் நண்பர்கள்.
“ம்ம்ம்ம்… நல்லா இருக்கேன் டா.. நீங்க எல்லாரும் எப்பிடி இருக்கீங்க?” என்று சந்தோசம் பொங்க கேட்டான் ரிஷன்.
“எல்லோரும் நல்லா இருக்கோம் டா..” என்றான் கார்த்திக்.
“உன்னைத் தான் டா ரொம்ப மிஸ் பண்றோம். நாங்க எல்லாரும் சென்னையில் இருக்குறதால அடிக்கடி மீட் பண்ணிக்கிறோம்… நீ மட்டும் தான் பெங்களூர்ல இருக்க உன்னைப் பார்க்கிறது தான் அபூர்வம்” என்றான். ஷாஜித் ஆற்றமையாக.
“சரி டா விடு அதான் இப்போ பார்த்துடோம்ல” என்றான் ரிஷன்.
பல நாள் கழித்து நண்பர்களின் சங்கமம் கலை கட்டியது.
“டேய் மாப்ள.. நம்ம செட்டில முதல் கல்யாணம் வந்துடுச்சு டா!” என்றான் ஷாஜித் குதுகலமாக.
“யாருக்கு டா?” என்று கேட்டான் ரிஷன் சுவாரஸ்யமாக.
“வேற யாருக்கு… எல்லாம் நம்ம கார்த்திக்கு தான்!” என்றான் ஷாஜித்.
கார்த்திக் அழகாக வெக்கப்பட்டுக் கொண்டு “ஆமாம் டா.. மச்சான் வர மே 12ஆம் தேதி கல்யாணம்” என்று சொல்லி தன் திருமண அழைப்பிதழ் தந்தான்.
ரிஷன் சந்தோஷமாக அழைப்பிதழ் பெற்றுக் கொண்டான்.
“டேய்ய் மச்சான் வாழ்த்துக்கள் டா கண்டிப்பா நான் கல்யாணத்துக்கு வருவேன். எல்லாரையும் பார்க்கணும் ரொம்ப நாள் ஆச்சு பார்த்து” என்றான்.
“டேய் மாப்ள நம்ம செட்டில வர முதல் கல்யாணம் அதனால செமையா என்ஜாய் பன்றோம் சரியா…” என்று ஷாஜித் சொல்லிக்கொண்டு நண்பர்கள் புறப்பட்டனர்.
மே 12 வர ஒரு வாரம் இருந்தால்… கம்பெனியில் ஒர்க் பிரேம் ஹோம்க்கு பெர்மிஸ்சன் கேட்டு வீட்டில் இருந்தே வேலை பார்த்தான்.
இடைப்பட்ட காலங்களில் காயத்திரி மேல் அவன் கொண்ட காதல் இன்னும் பலமாக உருப்பெற்றது.
சென்றாயப் பெருமாள் கோவில் திருவிழா முடித்து விட்டு வீட்டுக்கு வந்த உடனே ஹர்ஷினி போனில் இருந்த காயத்திரி போட்டோவை தன் போனுக்கு மாற்றிக் கொண்டான் அதை இப்பொழுதும் பார்த்துக்கொண்டு இருந்தான் ரிஷன்.
அவள் கண்களைப் பார்க்கும் போது எல்லாம் ஏனோ ஒரு விதமான ஈர்ப்பு உண்டானது ரிஷனுக்கு.
வீட்டில் இருந்த அந்த வாரம் முழுவதும் வேலை செய்வதும், தங்கையிடம் செல்ல சண்டை போடுவது, அன்னையிடம் கொஞ்சல், சில நேரங்களில் காயத்திரியின் போட்டோவை பார்த்து அவள் நினைவில் வாழ்வது என்று பொழுது ரம்மியமாகச் சென்றது ரிஷனுக்கு.
மே 11 திருமண மண்டபம்:
திண்டுக்கல்லில் ஒரு திருமண மண்டபத்தில் தான் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கார்த்திக்
வெட்ஸ்
ஸ்வேதா
பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம்.
கார்த்திக், ஷாஜித், ரிஷன் கிருஷ்ணா, வெங்கடேஷ், பாலாஜி மற்றும் மதுமிதா ஆறு பேரும் கல்லூரி நண்பர்கள்.
அனைவரும் கார்த்திக் திருமணத்தில் சந்தித்தனர். நண்பர்களின் சங்கமம், திருமணக் கொண்டாட்டம் என்று அந்த இடமே அதிர்ந்தது.
மணமகன் அறையில் கேலியும்,கிண்டல் என்று நண்பர்களால் கார்த்திக் திண்டாடினான்.
அதற்கு நேர்மறையாக மணமகள் அறை அமைதியாய் இருந்தது. ஸ்வேதாவின் தோழிகள் யாரும் அதிமாக வரவில்லை இரண்டு பேர் மட்டும் இருந்தனர் (காயத்திரி மற்றும் ஐரின்). அவர்கள் ஸ்வேதா கூடக் கல்லூரியில் இளங்கலையில் பாடத்தில் ஓன்றாகப் படித்தவர்கள்.
கார்த்திக்கின் நிச்சயதார்த்த விழா மாலை ஆரம்பித்தது.
மேடையில் காயத்திரியை பார்த்த நொடி ரிஷனின் கண்கள் அழகாக விரிந்தது. இன்பமாக அதிர்ந்தான். அவளை இங்குப் பார்ப்போம் என்று கனவில் கூட நினைக்கவில்லை. மனம் சந்தோஷத்தில் துளிக்குதித்தது.
காயத்திரி இளம்பச்சை நிற புடவையில் தேவதை போல் ரம்மியமாக இருந்தாள்.
ரிஷன் நீல நிற கண்கள் காயத்திரி மேல் ரசனையாகப் படிந்தது.
“நேற்று முன்னிரவில் உன் நேற்று முன்னிரவில். உன் நித்திலப்பூ மடியில். காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன். இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல் மனம் கலங்கி புலம்புகிறேன்; கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி.!!”
திருமண மண்டபத்தில் ஒலித்த பாடல் ஏனோ அவனுக்காகவே ஒலித்தது போலவே இருந்து ரிஷனுக்கு.
மேடையில் மணமகளின் தோழியாகக் காயத்திரி மற்றும் ஐரின் இருந்தார்கள்,
திண்டுக்கல்லில் திருமணம் நடைபெறுவதால் காயத்திரி அத்திருமணத்துக்கு வந்து இருந்தாள்.
வேறு ஊர்களில் நடைப்பெற்றிருந்தால் அவளால் சென்று இருக்க முடியாது. அவள் அன்னை விட்டு இருக்க மாட்டார்.
நிச்சயதார்த்த மோதிரம் மாற்றப்பட்டது. அந்த நிகழ்வுக்குப் பின் காயத்திரி மேடையில் இருந்து கீழே வந்தாள். ஐரின் மேடையில் நின்றுக்கொண்டாள்.
பின் வரிசையில் அமர சென்ற போது தான் அவள் கண்ணில் ரிஷன் கிருஷ்ணா பட்டான்.
அவனைப் பார்த்து நொடி இன்பமாக அதிர்ந்தாள் காயத்திரி.
சத்தியமா அவனை மறுபடியும் பார்ப்போம் என்று எண்ணவில்லை.
சில காலமாக அவள் கனவிலும், நினைவிலும் இம்சித்த அதே… நீல நிற கண்கள்.
அவனைப் பார்த்த பிறகு மனதுக்குள் இலட்சம் பட்டாம்பூச்சி பறப்பது போல் இன்பமான அவஸ்தை காயத்திரிக்கு.
ரிஷனின் கண்களும் காயத்திரின் கண்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது.
ரிஷனின் கண்கள் மின்னியது காதலால்.
“அவன் நீலக் கண்கள், காதல் பேசும்,
மௌனத்தில் மனதை…. மயக்கி நேசும்!! ஒரு பார்வையில் ஆயிரம் கவிதை, என் இதயத்தை….. அவன் கண்கள் கவ்வித்தழுவ நீலக் கடலில் முத்து போல் மின்னும், அவன் புன்னகை காதலை இன்னும் பின்னும். வார்த்தைகள் வேண்டாம், அவன் கண்கள் போதும், என் ஆன்மாவை….. அவை என்றும் காதல் கோதும்.”
ரிஷன் மெதுவாகக் காயத்திரியிடம் வந்து பேச துவங்கினான்.
காயத்திரி ரிஷனின் குரலை முதல் முதலில் கேட்கிறாள்.
இதயம் படப்பட என்று துடித்தது காயத்திரிக்கு.
“எப்படி இருக்கீங்க.. காயத்திரி” என்று கேட்டான் ரிஷன்.
அவன் இனிமையான குரல் காயத்திரியை மதி மயங்க செய்தது.
அவளால் பதில் தர முடியாமல் நிலை தடுமாறினாள்.
அவள் தடுமாற்றம் அவளில் அகத்தில் அழகாகத் தெரிந்தது அது ரிஷனை போதை கொள்ளச் செய்தது கண்கள் அழகாக விரிந்தது.
அவன் கண்களில் தெரிந்த மாற்றத்தால் அவள் பதில் கூறாமல் இருப்பதை உணர்ந்து
“ம்ம்ம் நல்லா இருக்கேன்” என்றாள் காயத்திரி.
“நீங்கள்! எப்படி இங்க?” என்று கேட்டாள் காயத்திரி.
கார்த்திக் என் கல்லூரி நண்பன் என்று கூறினான் ரிஷன் கிருஷ்ணா.
நீ? என்று கேள்வியாய் பார்த்தான் ரிஷன்.
அவன் பார்வையின் பொருள் புரிந்த,“ஸ்வேதா என் தோழி” என்று கூறினாள் காயத்திரி.
இருவரும் பின் இருக்கையில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
அவனுக்கு அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அதை எல்லாம் கேள்விகள் போல் கேட்டு தெரிந்து கொண்டான்.
“எந்த வருடம் படிக்கிறிங்க?” என்று கேட்டான் ரிஷன்.
“இறுதி வருடம்” என்றாள் காயத்திரி.
“எப்ப தேர்வு? எவ்வளவு பர்சன்டேஜ் வைத்து இருக்கீங்க?” என்று கேட்டான் ரிஷன்.
“வருகிற ஜூன் மாதம் தேர்வு , 92% என்று” சொன்னால் காயத்திரி பெருமிதமாக.
“கேம்பஸ் எதுவும் தேர்வாகி இருக்கீங்களா?” என்று கேட்டான்.
“இல்லை கேம்பஸ் அட்டன் பண்ணல” என்றாள்.
“ஏன்?” என்றான் ரிஷன் அதிர்ச்சியாக.
“குடும்ப சூழல் நிலை என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னாள்” காயத்திரி வருந்தமாக.
ரிஷனுக்குப் புரிந்தது அவன் அன்றே ரெங்கநாதன் வீட்டில் வைத்து அவளுடைய தாய் மற்றும் தமக்கை யின் நடவடிக்கைகளைப் பார்த்து புரிந்து கொண்டான்.
ரிஷன் காயத்திரிடம் அவள் ப்ராஜெக்ட் பற்றிச் சில கேள்விகள் கேட்டான்.
அவளும் அதற்குத் தகுந்த பதில்களை தந்தாள்.
அதற்குள் மதுமிதா ரிஷனை காணாமல் தேடிக் கொண்டே வந்தவள் அவனைக் கண்டு கொண்டாள்.
அவன் அருகில் ஒரு புதிய பெண் அமர்ந்து இருப்பதை பார்த்து யோசனையாக…
ரிஷன் அருகில் சென்று “டேய்.. மச்சி இங்கே என்ன டா பன்ற?” என்றாள் மதுமிதா.
ரிஷன் மதுவிடம் “இவள் பெயர் காயத்திரி என் உறவு” என்று சொல்லி காயத்திரியை மதுமிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான்
காயத்திரி இது மதுமிதா என் தோழி என்று சொன்னான் ரிஷன்.
இருவரும் சிநேகமாகப் புன்னகை புரிந்தனர்.
ரிஷனின் மற்ற நண்பர்களும் வந்தனர்.
காயத்திரி இது ஷாஜித், வெங்கடேஷ், பாலாஜி என் கல்லூரி நண்பர்கள் என்று அறிமுகம் செய்து வைத்தான் ரிஷன் கிருஷ்ணா.
நண்பர்களிடம் இவள் என் உறவு பெயர் “காயத்திரி” என்றான் ரிஷன் கிருஷ்ணா.
“இவள் என் உறவு” என்ற வார்த்தை காயத்திரி மனதை ஆழமாக உழுக்கியது.
“இவள் என் உறவு, இவள் என் உறவு, இளம்பச்சை மலர், இதயத்தில் நிறைவு, புன்னகையின் கதிர் காற்றில் அசையும். புடவையின் அழகு, கனவில் வந்து மனதைத் தொடும் மொழி…”
ரிஷனின் நண்பர்கள் உடன் இயல்பாகப் பேச தொடங்கினாள் காயத்திரி.
மதுமிதா மற்றும் காயத்திரி இருவரும் தொலைபேசி எண்களைப் பரிமாற்றிக் கொண்டனர்.
அனைவரும் உணவு சாப்பிட்டு முடித்தார்கள்.
காயத்திரி உணவு முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல புறப்பட்டாள்.
காயத்திரி அவள் தோழி ஸ்வேதாவிடம் காலையில் வருவாதாகச் சொல்லி விட்டுப் புறப்படப் போனாள்,
ரிஷன் மெதுவாக அவள் அருகில் வந்தான்,
மிக மெதுவாக “ நீ புடவையில் அழகாக இருக்கிறாய்” என்று ரசனையாகப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
காயத்திரி கன்னங்கள் அழகாகச் சிவந்தது.
“நன்றி” என்று சொன்னாள் காயத்திரி.
“இளம்பச்சை புடவை அணிந்தவள், புன்னகை மின்னும் முகிலவள். காற்றில் அசையும் தென்றலவள், கண்களில் ஒளிரும் கனவவள்..!!”
ரிஷன் கிருஷ்ணா அவள் தொலைபேசி எண்ணை கேட்டான்.
அவள் தயங்கி கொண்டே அவன் மேல் இருந்த நம்பிக்கையில் தொலைபேசி எண்ணை தந்தாள் காயத்திரி.
ரிஷனிடம் அவன் தொலைபேசி எண்ணையும் ஹர்ஷினி தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டாள் காயத்திரி.
பின் மெதுவாக ரிஷினிடம் கண் அசைவில் விடைப் பெற்று வீட்டுக்குப் புறப்பட்டாள் காயத்திரி.
“நெஞ்சை.!! பூப்போல் கொய்தவளே…. என்னை ஏதோ செய்தவளே…நெஞ்சைப் பூப்போல் கொய்தவளே…. என்னை ஏதோ செய்தவளே…”
ரிஷனின் காதலை காயத்திரி ஏற்பாளா…
கடவுளின் தீர்ப்பு தான் என்ன…?
பார்க்கலாம்….