அத்தியாயம் -2
ஜெகதீஸ்வரன் குடும்பமும், ரவீந்திரனும், ரெங்கநாதன் வீட்டுக்குள் வந்தனர்.
ரெங்கநாதன் ஒரு காவல்துறை அதிகாரி. மனைவி சாரதா ஒரு கல்லூரி பேராசிரியர். இரட்டை மகள்கள். வனிதா மற்றும் வனஜா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர்.
அவர்கள் உள்ளே வந்த பொழுது ரெங்கநாதனின் இரட்டை மகள்கள் பரதம் ஆடிக்கொண்டு இருந்தனர்.
“அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ.. ஆ…
நிலைபெயறாது
சிலைபோலவே நின்று.!!
நிலைபெயறாது
சிலைபோலவே நின்று.!!
நேரமாவதறியாமலே மிக
வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே
கண்ணா ஆ… ஆ…
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல்
எாியுதே..
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல்
எாியுதே..
திக்கைநோக்கி என்புருவம்
நெறியுதே…”
ஜெகதீஸ்வரன் குடும்பத்தினர் அனைவரும் அந்த நாட்டியதை ரசித்துப் பார்த்தனர் நாட்டியம் முடியும் வரை.
அவர்களின் வருகையை உணர்ந்த ரெங்கநாதனின் மனைவி சாரதா அனைவரையும் வரவேற்றார்.
வாங்க மாமா எப்படி இருக்கீங்க? என்று கேட்டார் சாரதா.
நல்லா இருக்கேன் மா என்றார் ஜெகதீஸ்வரன்
“உன் பொண்ணுங்களோட நாட்டியம் நல்லா இருந்தது மா” என்றார் மனநிறைவோடு.,
“பிள்ளைகள் பெயர் என்ன மா?” என்று கேட்டார் ஆர்வத்தோடே.
இவள் வனிதா மற்றும் இவள் வனஜா என்று அறிமுகம் செய்து வைத்தார் சாரதா.
வனிதா மற்றும் வனஜா வந்து அனைவருக்கும் வணக்கம் சொன்னார்கள்.
சாரதாவின் கண்கள் ஹர்ஷினி மேல் ஆர்வமாகப் படிந்தது.
ரவீந்திரன் அவர் மனைவி மற்றும் மகளை அழைத்தார்.
ரவீந்திரன் ஒரு விவசாயி, திண்டுக்கலில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சில பூர்வீக சொத்துக்கள் மற்றும் சில கடைகள் திண்டுக்கலில் உள்ளது. அங்கேயே சொந்த வீடும் உள்ளது. மனைவி மாலா இல்லத்தரசி. இரண்டு மகள்கள்.
மூத்த மகள் காஞ்சனா மாநிறம் +2 படித்து இருக்கிறாள். தாயின் ஜாடையில் இருப்பாள். சொந்த அத்தை மகன் நாகராஜனை காதல் திருமணம் செய்துகொண்டாள். நாகராஜன் Bcom படித்து இருக்கிறான். நத்தம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிப் புரிகின்றான். நாகராஜனின் தந்தை பாண்டி ஆட்டோ ஓட்டுனர், தாய் மகேஷ்வரி இல்லதரசி.
காஞ்சனா நாகராஜன் தம்பத்திகளுக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. பெயர் மானஷா.
ரவீந்திரனின் இளைய மகள் பெயர் காயத்திரி
அனைவரையும் கவரும் நல்ல நிறம் ஐந்தரை அடிக்கு மேல் உயரம். கலையான முகம்.அவள் கண்களில் ஒர் ஈர்ப்பு விசை இருக்கும்.. படிப்பில் ஆர்வம் கொண்டவள். ஆதலால் தான் அவள் அக்காளுக்கு இவளைக் கண்டால் ஆகாது.
அவர்களும் வந்தனர்….
மாலா… இங்க பார் ஜெகதீஸ்வரன் மாப்பிள்ளை வந்து இருக்கார் என்றார் ரவீந்திரன்.
அண்ணே வாங்க…மதினி வாங்க… என்றாள் மாலா வேண்டா வெறுப்பாக.
ரவீந்திரன் அவர் இளைய மகள் காயத்திரியை ஜெகதீஸ்வரன் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.“அவள் என்னோட சின்னப் பெண் காயத்திரி” என்றார்
“வணக்கம் மாமா…” என்று சொன்னாள் காயத்திரி.
“என்ன படிக்கிற மா?” என்று கேட்டார் ஜெகதீஸ்வரன் சற்று ஆர்வமாக.
“ME கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன் மாமா” என்றாள் பணிவாக.
“எந்தக் காலேஜ் மா?” என்று கேட்டார் ஜெகதீஸ்வரன்.
“திண்டுக்கல் PSNA காலேஜ் தான் மாமா” என்றாள்.
ஹர்ஷினியை காட்டி அவள் என்னோட பொண்ணு ஹர்ஷினி… மதுரை பாத்திமா கல்லுரியில் BSC கம்ப்யூட்டர் சயின்ஸ் பைனல் இயர் படிக்கிறாள் என்று சொன்னார் யசோதா.
காயத்திரி மற்றும் ஹர்ஷினி சிநேகமாகப் புன்னகை புரிந்தனர்.
காயத்திரி கண்ட நொடி ரிஷன் கிருஷ்ணா உடம்பில் மின்சாரம் பாய்ந்தது. சற்று முன்னர் வரை இவளை தான் தேடிக்கொண்டு இருந்தான். இப்பொழுதும் அந்தக் கண்களில் ஒரு விதமான ஈர்ப்பு இருந்தது.
ஏனோ அந்த நொடி ரிஷன் மனதுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்தாள்.
“கண்டவுடன் காதல் எல்லாம் மாயே என்று எண்ணியிருந்தேன்.. உன்னைப் பார்த்த நொடி மாய வலையில்… நானும் சிக்கிக்கொண்டேன்…….❣️”
காதல் என்பது இதயங்களை இணைக்கும் ஆழமான உணர்வு. இது புரிதல், நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் வளர்கிறது.
காதல் ஓர் அழகான வார்த்தை அதை ஆழமாகப் பார்த்தால் அதன் சுவையே வேறு. பல காதல் வெற்றி பெறலாம். சில காதல் தோல்வி பெறலாம். இந்தக் காதல் வெற்றி பெற்றதா? இல்லை தோல்வி உற்றதா? என்று பார்க்கலாம்.
பெரியவர்கள் தனியாக அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
அனைவரும் பல கதைகள் பேசிக் கொண்டு இருந்தனர்.
சாரதா மெதுவாக யசோதாவிடம் “ஹர்ஷினி அடுத்து என்ன பண்ண போறா?” என்று கேட்டார்.
“மேல படிக்கணும் சொல்லிட்டு இருக்கா எக்ஸாம் முடுச்சுட்டு அப்பறம் தான் பாப்பா கிட்ட பேசணும்” என்றார் யசோதா.
சாரதா மனதுக்குள் ஒரு யோசனை ஓடிக்கொண்டு இருந்தது. அவருக்கு ஹர்ஷினியை தன் தங்கை மகனுக்குப் பேச எண்ணினார்.
காயத்திரி தனியாக அமர்ந்து இருந்தாள்.
ரெங்கநாதனின் இரட்டை மகள்கள் வனிதா மற்றும் வனஜா, வந்து காயத்திரி உடன் இணைந்தனர்.
ஹர்ஷினியும் அவர்களுடன் இணைந்தாள். வனிதா தன் தாயின் போனில் அனைவரும் சேர்த்து செலஃபீ எடுத்துக்கொண்டாள்.
ரிஷன் அமைதியாகத் தனி இடத்தில் அமர்ந்து அங்கு நடப்பதை போணை நோன்டிக்கொண்டே வேடிக்கை பார்ப்பது போல் காயத்திரியை பாராமல் பார்த்துக்கொண்டு இருந்தான் .
அவன் கட்டுப்படுத்த நினைத்த போதும், அவனின் நீல நிற விழிகள் மட்டும் நொடிக்கு ஒருமுறை காயத்திரியை வட்டம் அடித்துக் கொண்டு இருந்தது.
“உன் பார்வையில் விழுந்த நாள் முதல் என் துன்பங்கள் மறந்து போனது உன் கைவிரல் சேர துடிக்குது அன்பே.!! அன்பே.!!” ❤️❤️
என்று ரிஷன் போனில் ஒலித்தது.
பாண்டி தன் குடும்பத்துடன் ரெங்கநாதன் வீட்டுக்கு வந்தார்.
ரவீந்திரன் தன் மூத்த மகள் குடும்பத்தை ஜெகதீஸ்வரன் மற்றும் யசோதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
மாப்பிள்ளை… இவள் என்னோட மூத்த மகள் காஞ்சனா… எங்க மாப்பிள்ளை நாகராஜன். இவர் என் தங்கச்சி மகேஷ்வரி, என்னோட மச்சான் பாண்டி. இவள் என்னோட செல்ல பேத்தி மானஷா என்றார்.
ஜெகதீஸ்வரன் அனைவருக்கும் பொதுவாக வணக்கம் சொல்லி அவர்களுடன் பேசலானார்.
சற்று தள்ளி அமர்ந்து இருந்தாள் காயத்திரி, அவளிடம் சென்று..“ஏய் இந்தா இவளை முதலில் பிடி…” என மானஷாவை கொடுத்தாள்.
“சும்மா நொய் நொய்னு அழுதுகிட்டே இருக்கா என்னால முடியல.. நீயே… பாரு…” என்று அதிகாரமாகச் சொன்னாள் காஞ்சனா.
காயத்திரி மானஷாவை வாங்கி மடியில் போட்டு தட்டி கொடுத்தாள். “சித்தி நன்னா வேன்னும்” என்றது.
காயத்திரி அவன் அக்காளிடம்
“பாப்பா தண்ணி கேட்கிறாள்” என்று சொன்னாள்.
“நான் எதுவும் கொண்டு வரல” என்று காஞ்சனா அலட்சியமாகப் பதில் தந்தாள்.
உடனே மாலா “ஏய் இங்க இருந்து வாங்கிக்கொடு அதைக் கூடச் சொல்லனுமா உனக்கு” என்றாள் காயத்திரியிடம் எரிச்சலாக.
காயத்திரி வனஜா விடம் சுடுத்தண்ணீர் கேட்டு வாங்கி
“ மானுக்குட்டி இந்தாங்க நன்னா… மெதுவா குடிக்கனும்” என்று பாசமாகத் தலையைத் தடவிக்கொடுத்தாள்.
ஹர்ஷினிமும் காயத்திரியுடன் உடன் இணைந்து பேச ஆரம்பித்தார்கள்.
காயத்திரி குழந்தையை மெதுவாகத் தட்டி கொடுத்தாள், பாசமான அரவனைப்பால் காயத்திரி மடியில் மானஷா அசந்து தூங்கினாள்.
காயத்திரி…ரிஷன் நீல நிற கண்கள் அவளை அடிக்கடி பார்ப்பதை கண்டுகொண்டாள்.
காயத்திரி மெதுவாக ஹர்ஷினிடம் “அது யாரு உங்க அண்ணாவா? என்ன பண்ணுறாங்க” என்று கேட்டாள்.
“ஆமாம் எங்க அண்ணா தான்,பெயர் ரிஷன் கிருஷ்ணா. பெங்களூரில ஐடி கம்பெனியில இரண்டு வருசமாக வேலை பார்க்கிறாங்க” என்றாள் ஹர்ஷினி
காயத்திரி மனதிலும் அந்த நீல நிற கண்கள் அழுத்தமாகப் பதிந்தது. அந்தக் கண்களில் தாக்கம் அவளுக்குப் புதிதாக எதையோ உணர்த்தியது.
“ஒர் ஆயிரம் பெண்களை கடந்த உன் காந்த விழிகள் என்னை மட்டும் விடாமல் தீண்டுவது ஏனோ..??❣️”
காயத்திரி மனதுக்குள் ஏனோ ரிஷன் மேல புது விதமான உணர்வு தோன்றியது. அவன் ஷாலை தவறாகப் பிடித்த போதும் தான் முதன் முதலாகப் பார்த்தாள், பார்த்த நொடி முதல் அவனின் நீலநிற கண்களைக் கண்டு அவன் மேல சின்னதாக ஈர்ப்பு வந்தது. அந்த ஈர்ப்புக்கு பெயர் காதல் என்றால்… ஆமாம் காயத்திரியும் ரிஷன் கிருஷ்ணா மேல் காதல் கொண்டாள்.
காஞ்சனா தன் தாய் மாலாவை தனியாக அழைத்தாள் ரகசியமாகப் பேசுவதற்கு.
இருவரும் சற்று தள்ளி தனியாகச் சென்று பேசினர்.
“உனக்கு அடுத்து பையன் பிறக்க வேண்டும் எனச் சாமிக்கிட்ட கேட்டு விபூதி வாங்கினேன் இந்தா பிடி” என்றார் மாலா.
“அட போ… மா இவளை பெத்துக்கவே பல தடவ ஹாஸ்பிடல் போய் ஊசி போட்டு கண்ட கண்ட மாத்திரை சாப்பிடு தான் பொறந்தா… இதுல இன்னோன்னு வேறையா?” என்றாள் காஞ்சனா சலிப்பாக.
“அதை எல்லாம் சாமி கிட்ட மனசார வேண்டி கேளு டி அவரு கொடுப்பாரு. நீ ஒன்னும் ஹாஸ்பிடல் எல்லாம் போக வேண்டாம்… சாமி மட்டும் கும்புடு டி போதும்” என்றார் மாலா.
“ஒரு பைய இருந்தா தான் டி உனக்கு நல்லது, உனக்கு ஆதரவா.. இருக்கும் அதுனால சிக்கிரமா பையன பெத்துகோ…” என்றார் மாலா சூட்சுமமாக.
அவள் பட்ட காயங்களைக் கொண்டு தன் மகளுக்கு மகன் வேண்டும் என்று நினைத்தார்.
“உங்க அவ்வா கிட்ட நான் வாங்குன பேசு எல்லாம் உனக்கு வேண்டாம் டி” என்றார் வருத்தமாக.
“சரி விடு மா பார்த்துக்கலாம்” என்றாள் காஞ்சனா.
“இப்போ நான் வேற ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன்” என்றாள் காஞ்சனா.
“என்ன டி முக்கியமா விஷயம்” என்று ஆவலாகக் கேட்டார்.
அதுவா.. மா “நம்ம காயத்திரியை கதிரேசன் மாமா பையன் ராஜதுரைக்குக் கேட்க ஆசைப்படுறாங்க” என்றாள் காஞ்சனா.
கதிரேசன் பாண்டியின் தம்பி. அவர் மனைவி சரோஜா. அவர்களின் ஒரே புதல்வன் ராஜதுரை. திருச்சியில் இருக்கிறார்கள்.
கதிரேசன் பைனான்ஸ் நிறுவனம் வைத்து உள்ளார். ராஜதுரை மாநிறம் ஆறடி உயரம் பார்க்க அழகன் கண்களில் எப்பொழுதும் ஒரு வசிய தன்மை இருக்கும். அவன் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தவன். அவன் தந்தையின் தொழிலை நடத்துக்கிறான். ராஜதுரையிடம் போதை பழக்கம் உள்ளது. பெண்கள் விஷயத்தில் சற்று மோசமானவன்.
காஞ்சனா என்ன டி சொல்லுர…
“இப்போ இந்த கல்யாணம் எல்லாம் தேவையா அவளுக்கு..? அவளை நான் கடைசி வரைக்கும் ஒரு வேலைக்காரி மாதிரி வீட்டோட வச்சுக்கலாமுன்னு என நினைச்சு இருக்கேன் நீ என்னா அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு வந்து இருக்கே..” என்று எரிச்சலாகக் கேட்டார் மாலா.
அம்மா கொஞ்சம் யோசிச்சு பேசுங்க…
“இந்தக் கல்யாணம் ரொம்பத் தேவைதான் மா. அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலை வைங்க… ஊரு நம்மால தான் மா தப்பா பேசும் மா” என்றாள் காஞ்சனா.
ராஜதுரைக்கு என்ன… “பைனான்ஸ் வச்சு நடந்துறான் காசு நிறைய இருக்கு, சொந்தமா பெரிய வீடு, கார், குடி, குட்டி சொகுசா வாழுறான். இப்படிப் பட ஒருத்தனுக்கு அவளை கட்டி குடுத்தா தான் நமக்கு நல்லது, நம்மளுக்கு அடங்கி இருப்பா” என்று மனசாட்சி இல்லாமல் பேசினாள் காஞ்சனா.
அம்மா இது மட்டும் இல்லை… “நாளை பின்ன என் புருஷனுக்கு வீட்டின் மூத்த மாப்பிள்ளைன்னு மரியாதை கிடைக்கும்,அப்ப தான் என் புருஷன் சந்தோஷம் படுவாரு.
வேற நல்ல பெரிய இடமா படுச்ச மாப்பிள்ளை வந்தா… அந்தப் பையனை தான் எல்லோரும் மதிப்பாங்க… என் புருஷனுக்கு மதிப்பு போய்டும், உங்க மாப்பிள்ளை என்னை நம்ம வீட்டுக்கு விடவே மாட்டாரு என்னை மறந்துருங்க. நானும் என் பொண்ணும் அனாதை தான்” என்று மாலாவின் மனதை கலைத்தாள் காஞ்சனா.
(காஞ்சனா மாலாவின் செல்ல பிள்ளை. காஞ்சனா காயத்திரிக்கு எட்டு ஆண்டுகள் பெரியவள். இந்த இடைவெளியால் தான் அவர்கள் மனங்கள் ஒன்றவில்லை.அவர்கள் தாயும் ஒன்றுபட விடவில்லை.)
“நீ சொல்லுறது எல்லாம் சரி டி ஆனா அவ தான் ரொம்பப் படுச்சு வச்சு இருக்காளே… அப்புறம் எப்புடி டி??” என்றார் மாலா ஆற்றாமையாக.
“அதுக்குத்தான் அவளைச் சும்மா ஒரு டிகிரி படிக்க வைக்கச் சொன்னேன் எங்க கேட்டீங்க எல்லாம் தாத்தாவால வந்தது… ” என்றாள் காஞ்சனா எரிச்சலாக.
“சரி டி நான் அப்பா கிட்ட பேசுறேன் ஆனால் அப்பா ஜாதகம் பொருத்தம் பார்ப்பாரே… “என்று சம்மதம் தெரிவித்தாள் மாலா.
“அதை எல்லாம் என் புருஷன் பார்த்துக் கொள்ளார்” என்றாள் காஞ்சனா சந்தோஷமாக.
காஞ்சனா தாயின் சம்மதத்தை நாகராஜனிடம் சொன்னாள்.
நாகராஜனுக்கு மிகுந்த சந்தோஷம் அவன் மனதில் பல எண்ணங்கள் தோன்றின. இந்தத் திருமணத்தால் வரும் நம்மைகளை அவன் உள்மனது கணக்கிட்டு உவகைக் கொண்டது.
அங்கு நடந்த அனைத்தையும் ரிஷன் மற்றும் யசோதா பார்த்துக்கொண்டு இருந்தனர்.
பேசிக்கொண்டே இருந்ததில் அதிகாலை 4 மணி ஆகிவிட்டது.
மூன்று மணி நேரம் எல்லாரும் அங்குத் தான் இருந்தனர்.
ரிஷன் மனதுக்குள் காயத்திரி தான் மனைவியாக வர வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டான்.
ஜெகதீஸ்வரன் குடும்பம் அங்கு இருந்து கிளம்ப எண்ணினர்.
ஜெகதீஸ்வரன் ரவீந்திரன் மற்றும் ரெங்கநாதன் குடும்பத்தை அவர்கள் வீட்டுக்கு ஒர் நாள் வரும் படி ஆசையாக அழைத்தார்.
அவரின் அழைப்பை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொன்டனர்.
சாரதா கண்டிப்பா உங்க வீட்டுக்கு வருவோம் மாமா என்று மனதில் ஒரு கணக்கை வைத்துக் கொண்டு கூறினார்.
ஜெகதீஸ்வரன் குடும்பம் அனைவரிடமும் சொல்லி கொண்டு மதுரைக்குப் புறப்பட்டனர்.
ரிஷன் மற்றும் காயத்திரி மனங்களின் காதலின் விதை விழுந்தது.
அதனின் ஆழம் பின் வரும் இடங்களில் பார்க்கலாம்.
சில தாய்மார்கள் ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்று பாகுபாடு பார்ப்பார்கள் அது போலத் தான் மாலாவும், காயத்திரியை ஒரு போதை ஆசாமிக்குப் பெண் பித்தனுக்கு மணக்க சம்மதம் தெரிவித்தாள்.
தன்னைச் சுற்றி நடக்கும் எதுவும் அறியாத காயத்திரி காதல் உலகில் தடம் பதித்தாள்.
“கண்களின் பாஷை போதுமே…வார்த்தைகள் தேவையோ..!காதலுக்கு?❣️”
காதல் வெல்லுமா….? சதி வெல்லுமா…?
பார்க்கலாம்….