மௌனத்தின்‌ நேசம் – 17

அத்தியாயம் – 17

அங்கு நிலவிய அமைதி ரிஷனை அதிகமாகப் பாதித்தது.

சில நிமிடங்கள் அவனும் அமைதியாய் இருந்தான்.

“மச்சி… இப்படி அமைதியா இருக்காத டா… கஷ்டமா இருக்கு டா” என்று ஷாஜித் ரிஷனிடம் சொன்னான்.

ரிஷன் கிருஷ்ணா அனைவரும் முகத்தினை ஒரு முறை பார்த்தான்.

பின் மெதுவாகப் பேச ஆரம்பித்தான்….

“என் வாழ்க்கையில சில பொண்ணுங்க எனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க ஆனா அவுங்க யார்கிட்டயும் வராத உணர்வு ஏன் அம்முவை பஸ்ட் டைம் பார்த்த போது எனக்குள்ள வந்துச்சு, ஹர்ஷினி ஷால்னு நினைச்சு ஏன் அம்மு ஷால்ல பிடுச்சேன், அப்போ அவ திரும்பி என்ன ஒரு பார்வை பார்த்த அந்தக் கண்களை சத்தியமா அவ்வளவு ஈஸியா என்னால மறக்க முடியல, அவளைத் திரும்பவும் ரெங்கநாதன் மாமா வீட்டில் வச்சுப் பார்த்தேன், என்னோட ரிலேட்டிவ்னு தெரிஞ்சது. மனசுகுள்ள அவ்வளவு சந்தோசம்… அங்க இருந்த கொஞ்ச நேரத்துல என் மனசு முழுக்க அவ மட்டும் தான் நிறைஞ்சு இருந்தா, அவ இல்லாம என்னோட லைப் முழுமை அடையாதுனு தோணுச்சு. அவ கூட மட்டும் தான் என்னால சந்தோசமா இருக்க முடியும்ன்னு தோணுச்சு. எஸ் ஐ லவ் ஹேர்

அடுத்து அம்முவை கார்த்திக் மேரேஜில் பார்த்த போது செம ஹாப்பி… சத்தியமா அவ அங்க இருப்பான்னு நினைக்கல, அவ கூட முதல் தடவையா பேசுனேன், அந்தக் கண்களில் தெரிஞ்ச காதல், அவ கூட இருக்கும் போது எனக்குள்ள வந்த உணர்வு, வேற யார்கிட்டயும் நான் பீல் பண்ணது இல்லை.

அவகிட்ட நான் ப்ரொபோஸ் பண்ணும் போது கூட நிறையப் பிரச்சனை வரும் அதை எல்லாத்தையும் நானும் பேஸ் பண்ண ரெடினா மட்டும் வீட்டில் சொல்லி பொண்ணு கேக்க சொன்னா.

வீட்டுல சொல்லி பொண்ணு கேட்டோம், ஆனா அவுங்க அப்பா ஜாதகத்தைக் காரணம் சொல்லி ரிஜெக்ட் பண்ணுனார், அதை விட கொடுமை ராஜதுரை கூட எங்கேஜ்மெண்ட்ன்னு அவளோட வீட்டில் எடுத்த முடிவு தான்.

நீங்க எல்லாரும் கேக்கலாம் இவளோ லவ் பண்ணிட்டு எப்படி ராஜதுரை கூட எங்கேஜ்மெண்ட் அப்போ ஏன் அமைதியாய் இருந்தேன்… யார் சொன்ன நான் அமைதியாய் இருந்தேன் நானும் அவனைப் போலீஸில் மாட்ட வைக்க எல்லா ஏற்பாடும் பண்ணி இருந்தேன். அவன் காரில் போதை பொருள் வச்சு இருக்கான்னு அன்னைக்கு அவனை அர்ரெஸ்ட் பண்ண என் நண்பன் மதன் திண்டுக்கல் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இருக்கான் அவன் கிட்ட ஹெல்ப் கேட்டு இருந்தேன். கண்டிப்பா அன்னைக்கு அந்த எங்கேஜ்மெண்ட் நடக்காமல் பண்ணி இருப்பேன். எனக்கு முன்னாடி வினு நேத்ரன் முந்திகிட்டான் மைனர் பொண்ணு ரேப் கேஸில் ராஜதுரை அரெஸ்ட் ஆனான்., எங்கேஜ்மெண்டும் நின்னுச்சு…. ஆனா அவுங்க அப்பா டெத் எதிர்பாக்கல. அதுக்கு அப்பறம் எங்க வாழ்க்கையில நிறைய நடந்தது. நான் அவ கிட்ட போன் கூடப் பேசுனது இல்லை ஆனா மனசுக்குள்ள அவ கூடப் பேசாம ஒரு செகண்ட் கூட இருந்தது இல்லை.

டெக்சாஸ் போன நிமிசத்தில இருந்து என் அம்மு கூட வாழ்ந்துட்டு தான் இருக்கேன், அந்த உணர்வு மட்டும் தான் என்னை உயிர்ப்போட இருக்க வச்சது. அவ லவ்வை சொல்லும் போது சொன்ன கவிதை அந்தக் குரலில் இருந்த காதல். அவளை நினைக்கும் போது எல்லாம் எனக்குள் வர பீல் இது மட்டும் தான் என் வாழ்க்கையில உயிர்ப்போட நடமாட வச்சது.

நீங்க கேட்டீங்கல 10 மாசமா நான் ஏன் யாருக்கூடயும் பேசல, போன் பண்ணலைன்னு…. பத்து மாசத்துக்கு முன்னாடி எனக்குக் கார் ஆக்ஸிடென்ட் ஆச்சு அதில் என்னோட இடுப்பு எலும்பு கிராக்… நான் ஆறு மாசம் பெட்ல தான் இருந்தேன். என்கூடவே இருந்து என்னைப் பார்த்துகிட்டது என்னோட நண்பன் மாதேஷ் அவன் ஒரு ஸ்ரீலங்கன். ஆக்ஸிடென்ட் ஆனா ஒரு மாசம் என்ன மயக்கத்துல தான் வச்சு இருந்தாங்க…. சத்தியமா என் காதல் மட்டும் தான் என்னைத் திருப்பவும் என்னை நடக்க வச்சது இப்போ இங்க உங்க முன்னாடி என்னை வர வச்சது. அவ மேல எனக்கு இருக்குற உணர்வுக்குப் பெயர் காதல்னா, ஆமாம் அந்தக் காதலால் மட்டும் தான் நான் இப்போ உயிரோட இருக்கக் காரணம்”.

“காதல் தந்த வலி தீரும்

காதலினாலே…

கண்ணீரோடு முத்தங்கள்

கலந்ததினாலே….

காயம் படும் வேலை

காதல் மருந்தாகும்…

காதல் மடி மீது

உயிரும் புதிதாகும்.!”

“இந்த வரிகள் எனக்கவே எழுதுன மாறி இருக்கும். ஒரு நாளைக்கு இந்த வரிகள ஐம்பது தடவையாவது கேட்பேன். ஐ லவ் யூ அம்மு.” என்று அனைத்தையும் சொன்னான் ரிஷன் கிருஷ்ணா.

மீண்டும் அமைதி நிலவியது.

ஹர்ஷினி ஓடி வந்து “சாரி அண்ணா” என்று கட்டி கொண்டாள்.

ரிஷன் மெதுவாக அவளை விலகி “நான் இப்போ நல்லா தான் இருக்கேன்” என்று சொன்னான்.

எங்கு இருந்த அனைவரும் கண்களில் கண்ணீர்.

வினு நேத்ரன் ரிஷனை அணைத்துக் கொண்டான்.

மச்சான்…. “உங்க அம்மு கிடைச்சாச்சு” என்றான்.

“டேய்…. எங்க இருக்கா?” என்று ஆர்வமாய்க் கேட்டான்.

“மச்சி…. சாரி டா ஒரு கோவத்துல அடுச்சுட்டேன். காயு இப்போ கன்னியாகுமாரியில் இருக்கா நாளைக்கு அவளைப் போய்ப் பார்க்கலாம்” என்று சொன்னாள் மதுமிதா.

“மச்சான் நாளைக்குக் காலையில் தூத்துக்குடி பிலைட் அங்க இருந்து கன்னியாகுமாரி போகலாம். இப்போ நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றான் விசாகன்.

ரிஷன் மனதுக்குள் இப்போவே பார்க்க வேண்டும் போல் இருந்தது ஆனால் அவன் உடல் அசதியாக இருந்தது ஆதலால் ரூமில் ரெஸ்ட் எடுக்கச் சென்றான்.

************************************

காயத்திரிக்கு அந்த இரவில் ஏனோ மனதுக்குள் இனம் புரியாத உணர்வு… அதன் தாக்கத்தால் அவள் பழைய நிகழ்வுகளை எண்ணினாள்.

காளிதாஸ் அவள் வீட்டுக்கு வந்த அந்த இரவே அவள் அன்னை “என் வீட்டுக்காருக்கு வருஷ திதி முடுஞ்ச உடனே உனக்கும் என் தம்பி காளிதாஸ்க்கும் கல்யாணம்”. இனிமேல் அவனுக்குத் தேவையானதை எல்லாம் நீ தான் பார்த்துகிற என்று அவள் அன்னை மாலா சொல்லி சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் அவள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

காளிதாஸ் காலையில் லேட்டாக தான் எழுந்து வந்தான்.

காயத்திரி கிட்சனில் சமையல் செய்து கொண்டு இருந்தாள். காளிதாஸ் அவளைப் பின் பக்கமாய் அணைத்தான்.

காயத்திரி பதறி விலகினாள்.

காளிதாஸ் எரிச்சல் அடைந்து “இப்போ எதுக்கு விலகுனா..?” என்று எரிச்சலாகக் கேட்டான்.

காயத்திரி எதுவும் பேசாமல் இருந்தாள்.

“டீ போட்டு எடுத்துட்டு என் ரூம்க்கு வா” என்று சொல்லி சென்றான்.

காயத்திரியும் டீ போட்டுக்கொண்டு காளிதாஸ் ரூம்க்கு சென்றாள்.

“மாமா… இந்தாங்க டீ” என்று கொடுத்தாள்.

காளிதாஸ் அவள் கையைத் தடவிக்கொண்டே டீயை வாங்கினான்.

காயத்திரி கிளம்பினாள்.

“ஏய்ய்ய் நில்லு யாரு கப் வாங்கிட்டு போவா? நான் டீ குடுச்சு முடிக்கிற வரைக்கும் நீ இங்க தான் நிக்கணும்” என்று சொன்னான்.

வேற வழி இல்லாமல் காயத்திரி அங்கு நின்று இருந்தாள்.

காளிதாஸ் அவளை அனு அனுவாகப் பார்த்துக்கொண்டே டீயை குடித்தான்.

“ஆமா… நான் உன்னைப் புடவை தானே கட்ட சொன்னேன் நீ ஏன் சுடிதார் போட்டு இருக்க?” என்று கேட்டான்.

“அது வந்து… வேலை பார்க்க சுடிதார் தான் ஈஸியா இருக்கும் அதான்” என்று சொன்னாள்.

“எனக்குத் தெரியாது நீ இப்போவே புடவை போய் மாத்திட்டு வர” என்று அதிகாரமாக சொன்னான்.

“சரிங்க மாமா மாத்திக்கிறேன்” என்று சொன்னாள்.

அவனும் டீ குடித்து விட்டுக் கப்பை கொடுத்தான். அவளும் வாங்கிக் கொண்டு கிட்சனுக்குச் சென்று கிட்சனில் இருந்த அவசர வேலைகளை முடித்து விட்டு அவள் ரூம்க்கு சென்று புடவையைக் கட்டி வந்தாள்.

அவள் ரூம்க்கு வெளியில் தான் காளிதாஸ் நின்று இருந்தான். காயத்திரி கதவை திறந்த உடனே காளிதாசை பார்த்த அதிர்த்தாள்.

“என்ன மாமா!….” என்று கேட்டாள் சந்தேகமாக.

“ஒன்னும் இல்லை நீ புடவை மாத்திரதை பார்க்க வந்தேன்…. ஆனா பார்க்க முடியலை..” என்று ஏமாற்றமாகச் சொன்னான்.

“மாமா…..” என்று அதிர்ச்சியாய் கத்தினாள்.

“இப்போ எதுக்குக் கத்துற…. அதான் எதுவும் பார்க்கலையே…” என்றான் காளிதாஸ்.

அதற்கு மேல் காயத்திரி எதுவும் பேசவில்லை. பேசி பயன் இல்லை என்று தெரிந்த பிறகு பேசுவது வீண் என்று மௌனமாக இருந்துக்கொண்டாள்.

காளிதாஸ் மேலும் மேலும் அவளிடம் சில்மிஷம் செய்து கொண்டே இருந்தான். மாலா எதையும் கண்டுகொள்வது இல்லை.

காளிதாஸ் பகல் எல்லாம் சில்மிஷம் செய்வது, ராத்திரியில் போதையில் கற்பனையாக வாழ்வது என்று நாட்கள் கடத்திக்கொண்டே இருந்தான்.

அவன் வந்து ஒரு வாரம் ஆகி இருக்கும். அன்று இரவில் காளிதாஸ் போதையில் காயத்திரியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தான்.

காயத்திரி அவனைத் தடுத்துக் கன்னத்தில் அறைத்தாள். போதையில் இருந்தால் அவன் மயங்கி விட்டான்.

காயத்திரி மாலாவிடம் வந்து சொன்னதற்கு

“ஏய் இப்போ என்ன… பெருசா பேசுறா அதான் ஒன்னும் நடக்கலையே அப்புறம் எதுக்கு டி அவனை நீ கை நீட்டி அடுச்சு இருக்க ” என்று கோவமாகக் கேட்டார் மாலா.

“அம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் என்ன நடத்தாலும் பரவில்லை ஆனா இது தப்பும்மா” என்றாள் காயத்திரி.

“ஏய் சும்மா எதாவது பேசிட்டு இருக்காத.. உங்க அப்பன் மாதிரி வெள்ளை தோலை பார்த்து என் தம்பி மயங்கிட்டான்” என்றார் மாலா.

அப்பாவை பற்றித் தப்பா பேசுவதை கேட்ட உடன்

“அம்மா…நான் உங்க பொண்ணுமா!!?” என்றாள் காயத்திரி கோவமாக.

“அட சீய்…. வாயை மூடு யாரு நீ என் பொண்ணா? யாரு டி சொன்னது என் பொண்ணுன்னு, என் பொண்ணு பிறந்து ஒரே நாளல மஞ்சள்காமாலை வந்து இறந்துட்டா. பங்கஜம் சித்தியோட அம்மா தான் அந்த ஹாஸ்பிடல் இருந்த ஒரு குழந்தையை மாற்றி வச்சக்கலாம். நீ ரெண்டு வயசா இருக்கும் போது தான் இந்த உண்மையெல்லாம் சொன்னாங்க. நீ பொறக்கும் போது உங்க அம்மாவுக்குப் பதினாறு வயசு,உன்னை மாறி வெள்ளை கலர், அவளை யாரோ நாலு பேர் கெடுத்துட்டாங்க போல அதுல உருவான தான் நீ! உன்னைப் பெத்துட்டு அவ போய்ச் சேர்த்துட்டாள். என் சித்தி தான் எனக்குத் தெரியாம உன்னை மாத்தி இருக்காங்க. ஹாஸ்பிட்டல இருந்த நர்ஸும் உடந்தை. அப்பன் பேரு தெரியாம பொறந்தவ நீ, எப்போ இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சுச்சோ அப்போ இருந்து உன்னைப் பார்க்கும் போது எல்லாம் வெறுப்பா மட்டும் தான் இருக்கு” என்றார் மாலா.

இங்க பாரு… “ஒழுங்கா என் தம்பியை கல்யாணம் பண்ணிட்டு இரு… இன்னும் ஏழு வருஷம் கழுச்சு ராஜதுரை ரிலீஸ் ஆகிடுவான் அதுக்கு அப்பறம் அவனுக்கு நீ ஆசை நாயகியா காலம் முழுக்க இருக்கணும் ” என்று இன்னும் அசிங்கமாகப் பேசினார் மாலா.

காயத்திரி சத்தியமாக இப்படி ஒரு விஷயத்தை எதிர் பார்க்கவில்லை. மனசுகுள்ள ஏதோ ஒர் அழுத்தம். மாலா மேல் இருந்த பாசம் எல்லாம் காணாமல் போய் இருந்தது.

இதற்கு மேல் அவள் அங்கு இருக்க விரும்பவில்லை. மாலா தூக்க மாத்திரை சாப்பிட்டு படுத்து விட்டார்.

காயத்திரி மெதுவாக அவளுடைய பொருட்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள். அவள் நேரே அவள் காலேஜ் ப்ரோபஸ்சர் எஸ்தர் வீட்டுக்கு சென்றாள். எஸ்தர் ஒர் இளம் விதவை. அவள் மாமியார் மற்றும் மாமனாரோடு இருக்கிறார். அவர்கள் பெயர் மரியா மற்றும் வில்லியம்ஸ். காலேஜில் காயத்திரி மேல் பாசம் கொண்டு பேசும் நபர் எஸ்தர். அவர்கள் வீடு பழனி இருந்தது. காயத்திரி ஏற்கனவே அங்குச் சென்று இருக்கிறாள். எஸ்தர் கணவர் இறந்த நேரத்தில் கல்லூரி தோழிகள் உடன் எஸ்தர் வீட்டுக்கு சென்று இருந்தாள். ஆதலால் அந்த இரவில் அவள் பழனிக்கு சென்றாள். அந்த இரவில் தனியாகச் சென்றாள்.

நடு ஜாமத்தில் எஸ்தர் வீட்டுக்கு சென்று சேர்ந்தாள். எஸ்தருக்கு கால் செய்தாள் காயத்திரி.

“மேம் நான் காயத்திரி பேசுறேன் நான் உங்க வீட்டு முன்னாடி தான் இருக்கேன் மேம்” என்றாள்.

எஸ்தர் வந்து கதவை திறந்தார்.

காயத்திரி உள்ளே வந்தாள்.

“என்ன மா இந்த நேரத்தில்” என்று கேட்டார்.

காயத்திரி அனைத்தையும் அவரிடம் சொன்னாள்.

எஸ்தருக்கு பேச முடியவில்லை. அமைதியாகக் காயத்திரியை கட்டி கொண்டார்.

“சாப்பிட்டியா?” என்று கேட்டார்.

“இல்லை மேம் சாப்பிடலை” என்றாள்.

“சரி வா” என்று அழைத்துக் கொண்டு கிட்சேன் சென்று, பிரட் ஆம்லெட் போட்டு கொடுத்தார்.

காயத்திரி சாப்பிட்டாள். எஸ்தர் உடன் தங்கி கொண்டாள்.

மறுநாள் காலையில் மரியா மற்றும் வில்லியம்ஸிடம் காயத்திரியை பற்றி அனைத்தையும் சொன்னார் எஸ்தர். அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

வில்லியம்ஸ்… “இப்போ என்ன பண்ண போற எஸ்தர்” என்று கேட்டார்.

“தெரியலைப்பா காயத்திரி கிட்ட கேக்கணும்” என்றார்.

அந்த நிமிடம் காயத்திரி அங்கே வந்தாள்.

“எஸ்தர் காயத்திரிடம் இதுக்கு அப்பறம் என்ன செய்யப் போற” என்று கேட்டார்.

“மேம் நான் MBA படிக்க நினைக்கிறன்” என்றாள்.

வில்லியம்ஸூக்கு அவ்வளவு சந்தோசம்

“எஸ்தர் நானே காயத்திரியை படிக்க வைக்கிறேன். உனக்கு நாகர்கோயில் காலேஜ்ல வேலை கிடைச்சு இருக்குல அந்தக் காலேஜில் காயத்திரியும் எம்.பி.ஏ ஜாயின் பண்ணிக்கிட்டும்” என்றார்.

அதன் படி காயத்திரி நாகர்கோயில் காலேஜில் எம்.பி.ஏ படித்தாள். அவள் போன் நம்பரை மாற்றினாள்.

எஸ்தர் குடும்பத்தில் அவளும் ஒருத்தி ஆனால்.

இரண்டு வருடம் எம்.பி.ஏ படித்துவிட்டு, கன்னியாகுமாரியில் ஒரு தனியார் காலேஜ்ல அசிஸ்டன்ட்- ப்ரோபஸ்சராக வேலை செய்கிறாள்.

இந்த மூன்று வருடத்தில் அவள் வாழ்க்கை அமைதியாகச் சென்றது. ரிஷன் மேல் உள்ள காதல் இன்றும் அவள் மனதுக்குள்ள அப்படியே தான் இருக்கிறது. அவள் வாழ்க்கையில் கஷ்டத்தைச் சந்திக்கும் நொடி அவள் கண்களை மூடி ரிஷனை தான் நினைப்பாள், அந்தக் காதல் தான் அவளை வழிநடத்தும்.

காயத்திரி கண்மூடி இதை அனைத்தையும் நினைத்தாள். அவள் காதல் நினைவுகள் உடன் அப்படியே தூங்கினாள்.

காயத்திரி ரிஷனை பார்த்தாள் என்ன செய்வாள்….?

மாலாவின் நிலைமை என்ன ஆனது…?

பார்க்கலாம்.

error: Content is protected !!