அத்தியாயம் – 16
ரிஷன் சென்னை வந்தடைந்தான். பெற்றோர் இன்றி ஒரு வாழ்க்கை மனதை பிசைந்தது. ஆனால் வேறு வழி இல்லை இறந்தவர்கள் யாரும் மீண்டு வரபோவது இல்லை, அவர்கள் நினைவுகளுடன் நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆகவேண்டும். ரிஷனும் அவர்கள் நினைவுகளுடன் வாழ பழகிக்கொண்டான்.
மனதில் இருக்கும் வலிகளை மறைக்க அவன் தன் ப்ராஜெக்ட் ஒர்க்யில் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டான்.
ரிஷன் சென்னை வந்து ஒரு வார காலம் ஆகிருந்தது. அவனுக்கு மெயிலில் ஹூஸ்டன்னில் உள்ள காக்னிட் (Cognite) கம்பெனிக்கு இன்னும் ஒரு மாதத்தில் சேர சொல்லி நியமனம் ஆர்டர் வந்து இருந்தது. மனதுக்குள் சின்னச் சந்தோசம். உடனே தன் தங்கைக்குத் தொலைபேசியில் அழைத்தான்.
ஹர்ஷினி கால் அட்டன் செய்து….
“அண்ணா எப்புடி இருக்கிங்க?” என்று ஆசையாகக் கேட்டாள்.
“ம்ம்ம்ம் நல்லா இருக்கேன் பாப்பா… நீ, வினு, அப்புறம் வீட்டுல எல்லாரும் எப்புடி இருக்காங்க.?” என்று கேட்டான்.
“எல்லாரும் நல்லா இருக்கோம் சாப்பிட்டீங்களா நீங்க? “என்று கேட்டாள்.
“சாப்பிட்டேன் டா மா. உன் கிட்ட ஒரு முக்கியமா விஷயம் சொல்ல தான் கால் பண்ணேன்” என்றான்.
“என்ன அண்ணா என்ன விஷயம்” என்றாள்.
“அது ஹூஸ்டன்னில் உள்ள காக்னிட் (Cognite) கம்பெனிக்கு என்ன ஜாயின் பண்ண சொல்லி ஆர்டர் வந்து இருக்கு மா” என்றான் ரிஷன்.
“அண்ணா என்ன சொல்லுறிங்க!!! எப்போ அப்ளை பண்ணீங்க?” என்று கேட்டாள்
( அவளுக்குத் தெரியும் இந்தக் கம்பெனியில் சேர வேண்டும் என்பதே தன் அண்ணனோட ஆசை, லட்சியம் எல்லாம் என்று).
“அது… பெங்களூர்ல வேலை பார்க்கும் போது அப்ளை பண்ணேன், 20 நாள்கள் முன்னாடி தன் இன்டெர்வியூ அட்டேன் பண்ணேன். இன்னைக்குத் தான் ஜாயினிங் ஆர்டர் வந்தது, இன்னும் ஒரு மாசத்துல ஜாயின் பண்ண சொல்லி இருக்காங்க” என்று சொன்னான்.
“சரி அண்ணா ரொம்பச் சந்தோசம் நம்ம அம்மா அப்பாவோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும். ஏதும் அக்ரீமெண்ட் போட்டு இருக்காங்களா??” என்று கேட்டாள்.
“ஆமா மா 2 இயர்ஸ் அங்க கண்டிப்பா ஒர்க் பண்ணனும்” என்று சொன்னான்.
“சரி அண்ணா பாருங்க. விசா ஒர்க் ஸ்டார்ட் பண்ணுங்க” என்றாள் அன்பு தங்கை.
“சரி பாப்பா உடம்பைப் பார்த்துக்கோ” என்று கூறி கால் கட் செய்தான்.
அவன் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தைச் சொன்னான். வினு நேத்ரனுக்கும் கால் பண்ணி சொன்னான்.
அடுத்த நாளே விசாக்கு அப்ளை செய்தான். அவன் பெற்றோருக்கு முப்பதாம் நாள் சாமி கும்புட்டு விட்டு செல்ல திட்டமிட்டு இருந்தான்.
நாட்கள் வேகமாக நகர்ந்து. இன்று ஜெகதீஸ்வரன், யசோதா இருவரும் முப்பதாம் நாள். மதுரையில் அவர்கள் வீட்டில் சாமி கும்பிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குடும்பத்தினர் அனைவரும் வந்து இருந்தனர். சில தினங்களுக்கு முன் தன் ஹர்ஷினி கர்ப்பமாக உள்ளார் என்று உறுதி ஆகி இருந்தது. அனைவருக்கும் சந்தோசம். ஹர்ஷினிக்கு ரொம்ப மகிழிச்சி. ரிஷனுக்குத் தன் பெற்றவர்கள் மீண்டும் பிறக்க இருக்கார்கள் என்று நினைத்துச் சந்தோஷத்தில் திளைத்தான்.
முப்பதாம் நாள் சாமி கும்பிட்டு முடித்தார்கள். இன்னும் மூன்று நாட்களில் ரிஷன் டெக்சாஸ் கிளம்புகிறான். அவனுக்குக் காயத்திரிடம் பேச வேண்டும் போல் இருந்தது. அதனால் வினு நேத்ரனிடன் காயத்திரிக்கு கால் பண்ண சொன்னான்.
“என்ன மச்சான் திடிர்ன்னு” என்று கேட்டான்.
“டெக்சாஸ் போறேன் இன்னும் மூணு நாள்ல அதான் அவகிட்ட சொல்லிட்டு போலாம்ன்னு, அம்மா அப்பா டெத் அப்போ மது போனில் இருந்து கால் பன்னேன் பட் சுவிட்ச் ஆப்ன்னு வந்தது அதான் இப்போ உன்னைக் கால் பண்ண சொல்லுறேன்” என்று விளக்கமாகச் சொன்னான்.
வினு காயத்திரிக்கு கால் செய்தான் ஆனால் போன் சுவிட்ச் ஆப் என்று தான் வந்தது.
“மச்சான் இப்பவும் போன் சுவிட்ச் ஆப்” என்று சொன்னான்.
ரிஷன் யோசைனையாக இருந்தான்.
“என்ன மச்சான்?” என்று கேள்வியாய் கேட்டான் வினு.
“தெரியல வினு மனசுக்கு ஏதோ தப்பாப்படுது அதான்” என்று சொன்னான் ரிஷன்.
“என்ன பண்ணலாம்?” என்று கேட்டான் வினு.
“அம்மா,அப்பா ரெண்டு பேரோட கடைசி ஆசை நான் காயத்திரியை தான் கல்யாணம் பண்ணனும் என்கிட்ட சத்தியம் வாங்கி இருக்காங்க” என்று சொன்னான்.
அவன் சொல்லும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் அங்குத் தான் இருந்தார்கள்.
“என்கிட்டயும் அத்தை கடைசியா காயத்திரி தான் இந்த வீட்டுக்கு மருமகளா வருனும்ன்னு சொன்னாங்க” என்று சொன்னான் வினு நேத்ரன்.
“அண்ணா நான் வேணா கார் எடுத்துட்டுப் போய்க் காயுவை பார்த்துட்டு வரவா” என்று கேட்டான் விசாகன்.
“இல்லை விசாகா வேண்டாம்” என்றான் ரிஷன்.
ரிஷன் சற்று யோசித்து விட்டு கார்த்திக்கு கால் செய்தான்.
“டேய் மச்சான் நான் ஸ்வேதா கிட்ட பேசணும்” என்றான்.
“இரு டா தரேன்” என்றான் கார்த்திக்.
“அண்ணா… “ என்று சொன்னாள் ஸ்வேதா.
“மா எனக்கு ஒரு ஹெல்ப் உங்க வீட்டில் இருந்து யாராவது காயத்திரி வீட்டுக்கு போக முடியுமா?” என்று கேட்டான்.
“ஏன் அண்ணா என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
“இல்லை மா அவ போன் சுவிட்ச் ஆப்லையே இருக்கு அதான் அவளுக்கு ஏதும் பிரச்சனையானு தெரிஞ்சுக்கணும்” என்று கேட்டான்.
“சரிங்க அண்ணா இருங்க காயு வீட்டுக்கு பக்கத்து வீடு பொண்ணு எனக்குத் தெரியும் அவ கிட்ட கேக்குறேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று சொல்லி கால் கட் செய்தாள்.
சில நிமிடங்கள் கழித்து ஸ்வேதா கால் செய்தாள்.
“ஹலோ அண்ணா…” என்று கொஞ்சம் டென்ஷனாகச் சொன்னாள்.
“என்ன மா… என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
“அண்ணா காயு வீட்டுக்கு அவளோட தாய்மாமா வந்து இருக்கார், அவர் வந்து ஒரு வாரத்துல காயு வீட்டை விட்டு போய்ட்டா, அவங்க அம்மா அவ எவனோடோவோ ஓடி போய்ட்டான்னு சொல்லிட்டு இருக்காங்கலாம் அண்ணா. இப்போ காயு காணாமல் போய் ஒரு மாசத்துக்கு மேல ஆச்சாம் அண்ணா” என்று விளக்கமாக ஸ்வேதா.
“சரி மா தேங்க்ஸ் நான் பார்த்துகிறேன்” என்று சொன்னான் ரிஷன்.
அங்கு இருந்தவர்களிடம்
“காயு வீட்டை விட்டுப் போயிடலாம். அவள் காணாமல் போய் ஒரு மாசத்துக்கு மேல ஆச்சாம், அவுங்க அம்மா அவ யாரோடவோ ஓடி போய்ட்டான்னு சொல்லுறாகலாம்” என்று ஒரு மாதிரி மரத்த குரலில் சொன்னான் ரிஷன்.
“என்ன தம்பி சொல்லுறீங்க” என்று அதிர்ச்சியாய் கேட்டார் தீபாலக்ஷ்மி.
“ஏன் யா திடீர்னு காயத்திரி இப்புடி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம்” என்று கேட்டார் ரெங்கநாதன்.
சில நொடிகள் மௌனமாக இருந்தான் ரிஷன்.
“மாமா… காயத்திரியோட தாய்மாமா வந்ததாகவும் அவர் வந்த ஒரு வாரத்துல காயு வீட்ட விட்டு வெளியே போய் இருக்கா” என்று சொன்னான்.
“யாரு காளிதாஸ் வந்து இருக்கான்னா” என்று கேட்டார் சாரதா.
“ஆமா அத்தை தாய்மாமான்னு தான் சொன்னா” என்று கூறினான் ரிஷன்.
அங்கு இருந்த பெரியவர்களுக்கு மாலாவை பற்றி நல்லாகவே தெரியும் அதுனால் காயத்திரி முடிவுக்கான விஷயகளை ஓரளவு யூகித்துக் கொண்டனர்.
“அண்ணா நீங்க கவலைப்படாமல் டெக்சாஸ் போங்க எப்படியும் நீங்க வர ரெண்டு வருஷம் ஆகும் அதுக்குள்ள காயத்திரி மதினியை கண்டு பிடுச்சடலாம் நம்ம அம்மா, அப்பா கடைசி ஆசை அவுங்க நம்ம வீட்டு மருமகளா வரணுங்கறது தான் அது கண்டிப்பா நிறைவேறும், அவுங்க நிறைவேர்த்தி வைப்பாங்க” என்று பெரிய மனுஷி போல் தன் அண்ணனுக்கு ஆறுதல் கூறினாள் ஹர்ஷினி.
ரிஷன் மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.
“நீ கவலைப்படாம போய்ட்டு வா யா எங்க டிபார்ட்மென்ட் ஆளுங்க வச்சு நான் கண்டு பிடிச்சறேன்” என்று சொன்னார் ரெங்கநாதன்.
“சரிங்க மாமா…” என்று கூறினான்.
அதன் பின் தன் பெற்றோர் படத்தின் முன் நின்று வேண்டிக்கொண்டு கிளம்பினான்.
வினுவை கட்டி அணைத்து “பாப்பாவை பார்த்துக்கோ” என்று கூறினான்
“ஹர்ஷினி கிட்ட கவனமா இரு கண்டிப்பா ரெண்டு வருஷம் கழுச்சு இந்தியா வந்துடுவேன். “இட்ஸ் மை ப்ரோமிஸ்” டா பாப்பா” என்று அவள் தலையைக் கோதி சொன்னான் ரிஷன்.
“உடம்பை பார்த்துக்கோங்க, போன் பண்ணுங்க, கவனமா இருங்க அண்ணா” என்று கண்ணீருடன் சொன்னாள் ஹர்ஷினி.
அவள் நெற்றில் முத்தம் வைத்துவிட்டுக் கண்களில் கண்ணீர் ததும்பா கிளம்பினான் ரிஷன்.
சென்னை சென்று அடைந்தான் ரிஷன். ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு அடுத்த நாள் தன் பயணத்துக்கு ரெடி ஆனான்.
தன் நண்பர்களிடம் காயத்திரியைத் தேட சொன்னான்.
மூன்றாம் நாள் அதிகாலை விமானத்தில் டெக்சாஸ்க்கு புறப்பட்டான் ரிஷன் கிருஷ்ணா.
மனம் முழுவதும் காயத்திரியை பற்றிச் சிந்தனை தான் இருந்தது.
டெக்சாஸ் வந்தடைந்தான் ரிஷன். டெக்சாஸ் மாகானத்தின் தலைநகரம் ஹூஸ்டன்.ஹூஸ்டன்னில் உள்ள காக்னிட் (Cognite) கம்பெனியில் சேர்த்தான்.
மனதில் இருக்கும் பல வலிகளை மறக்க அவன் தன்னை வேலையில் அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டான்.
அவன் டெக்சாஸ் வந்து எட்டு மாதத்தில் ஹர்ஷினி அழகான பெண் குழந்தையைப் பெற்று எடுத்தாள்.
வினு குடும்பத்தார்கள் அவளைச் சொந்த மகள் போல் பார்த்து கொண்டனர்.
வினு நேத்ரன் அவளை ராணி போல் பார்த்துக்கொண்டான்.
ஹர்ஷினி மகிழ்ச்சியாக இருந்தாள்.
அவள் குழந்தைக்கு மகிழ்வதனி என்று பெயர் சூட்டினார்கள்.
இரண்டு வருடத்தில் இந்தியா வரேன் என்ற ஹர்ஷினிடம் சொன்னவனால் சூழ்நிலை காரணமாகச் செல்ல முடியவில்லை. இப்போது மூன்று வருடம் கழித்து இந்தியா செல்கிறான். விமானத்தில் அமர்ந்து இருந்த நேரம் ரிஷன் மனதுக்குள் பழைய நிகழ்வுகளின் தாக்கத்தில் மூழ்கி இருந்தான்.
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த ரிஷன் கிருஷ்ணா…. விமானப் பனிப்பெண் குரலில் கலைந்தான் , அவனது நினைவலைகளும் தடைப்பட்டன….
விமானத்தின் கோ- பைலட் “இன்னும் சில நிமிடங்களில் இந்த விமானம் சென்னையில் லேண்ட் ஆக உள்ளது, அனைவரும் சீட் பெல்ட் போட்டுத் தம் தம் இடத்தில் அமரும் மாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அழகான தமிழில் சொன்னார்.
ரிஷனும் சீட் பெல்ட் போட்டுக் கொண்டு அமர்ந்தான். விமானம் சென்னையில் இரவு 9 மணிக்கு லேண்ட் ஆனது.
ரிஷன் மூன்று வருடம் கழித்துச் சென்னை வருகிறான். தன்னுடைய லுக்கேஜ் எல்லாம் கலெக்ட் செய்து வெளிய வர 40 நிமிடங்கள் ஆனது அவனுக்கு.
வெளியே அவனது நண்பர்கள் பாலாஜி, மதுமிதா மற்றும் ஷாஜித் காத்துக் கொண்டு இருந்தனர்.
ரிஷன் வெளியே வந்த உடன் ஷாஜித் தான் முதலில் பார்த்தான், அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
“டேய்ய் மச்சி எப்படி டா இருக்க?” என்று அரவரமாய்க் கேட்டான் ஷாஜித்.
“ம்ம்ம்ம் நல்லா இருக்கேன் டா. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?’ என்று கேட்டான் ரிஷன்.
மது அந்த நிமிடம் அங்க வந்து ரிஷன் கன்னத்தில் ஒர் அறை அறைத்தாள்.
ரிஷன் சிறு புன்னகை மட்டும் புரிந்தான்.
மது கண்ணகளில் கண்ணீர் உடன் ரிஷனை அணைத்து கொண்டாள்.
“டேய்ய் ஏன் டா கடைசியா 10 மாசம் போன் இல்லை ஏதும் இல்லை என்ன தான் டா ஆச்சு??” என்று கண்ணீருடன் கேட்டாள் மது.
ரிஷன் ஏதும் பேசாமல் அவள் முதுகை தட்டி தந்தான்.
“வா டா டைம் ஆச்சுக் கிளம்பலாம்” என்று சொல்லி ரிஷன் மற்றும் மதுவை அழைத்துச் சென்றான் பாலாஜி.
காரில் செல்லும் போது ரிஷன் ஏதும் பேசவில்லை. அமைதியாய் கண்களை மூடிக்கொண்டு வந்தான்.
பாலாஜி அபார்ட்மெண்டுக்கு வந்தனர். ரிஷன், மது, ஷாஜித் மூவரும் வீட்டுக்கு சென்றனர்.
வீட்டில் ஹர்ஷினி,வினு நேத்ரன் மற்றும் கௌஷிக் விசாகன் காத்துக்கொண்டு இருந்தனர். குழந்தையைத் தன் அத்தையிடம் விட்டு வந்து இருந்தாள் ஹர்ஷினி.
ரிஷன் வீட்டுக்குள்ளே… நுழைந்தான்.
“ஹர்ஷினி! அண்ணா…” என்று கத்திக்கொண்டு சென்று அவனை அணைத்தாள்.
அவள் கண்ணகளில் கண்ணீர். ரிஷன் மெதுவாகத் துடைத்து விட்டான்.
“ஏன் அண்ணா… 10 மாசமா போன் பண்ணல?, உன் ஆபீஸ்ல கேட்டா சரியா பதில் இல்லை ஏன் அண்ணா என்ன ஆச்சு?, ஒரு வாரத்துக்கு முன்னாடி கால் பண்ணி இன்னைக்குச் சென்னை வரேன்னு மட்டும் சொல்லிட்டு வச்சுட்டீங்க.?” என்று சரமாரியாக கேள்வி கேட்டாள்.
ரிஷன் எதுக்கும் பதில் கூறவில்லை.
பாப்பா… “அம்மு கிடைச்சுட்டாளா??” என்று கேட்டான்..
அங்கு இருந்த அனைவரும் அமைதி ஆகினர்.
ரிஷன் அனைவரின் முகத்தைப் பார்த்தான்.
“ஏன் யாரும் பதில் சொல்லலை” என்று கேட்டான் ரிஷன் கிருஷ்ணா.
“நீ பதில் சொன்னியா… உன் தங்கச்சி கேட்டதுக்கு எல்லாம்” என்று கட்டமாகக் கேட்டாள் மது.
“மது… “என்று குரல் உயர்த்தி அழைத்தான் பாலாஜி.
பாலாஜி மட்டும் தான் அறிவான் ரிஷன் கடந்த 10 மாசம் எப்படி இருந்தான் என்று.
“ப்ளீஸ்…. பாப்பா…. என்கிட்ட எதுவும் கேக்காத, உனக்கு ப்ரோமிஸ் பண்ணேன் தானா கண்டிப்பா வருவேன்னு அதே மாதிரி நான் வந்துட்டேன்” என்று சொன்னான்.
ஹர்ஷினி அமைதியாய் இருந்தாள். கடந்த 10 மாசம் அவள் பட்ட கஷ்டம் அவள் மட்டுமே அறிவாள். அவளுக்கு இருக்கும் ரத்த உறவு என்றால் தன் அண்ணன் ரிஷன் மட்டுமே… அவனும் கடந்த 10 மாசம் எந்தத் தொடர்பும் கொள்ளாமல், கம்பெனியில் அவனைப் பற்றிக் கேட்டால் சரியா பதில் இல்லை.. என்ன ஆச்சு..? ஏது ஆச்சு..? என்று தவிச்ச தவிப்பு அவள் மட்டுமே அறிவாள்.
மௌனம் மட்டுமே ஆச்சி செய்தது அங்கே.!
ரிஷனுக்கு என்ன நடந்தது…..?
காயத்திரி கிடைத்தாளா….?
பார்க்கலாம்….