அத்தியாயம் – 15
ரிஷன் சென்னை வந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. ரிஷன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது அவனுக்கு ஒரு மெயில் வந்து இருந்தது. ஹூஸ்டன்னில் உள்ள காக்னிட் (Cognite) ஐடி மென்பொருள் கம்பெனியில் இருந்து இன்டெர்வியூ லெட்டர் வந்து இருந்தது. அவன் மூன்று மாதத்துக்கு முன் பெங்களூரில் வேலை பார்த்த போது அந்தக் கம்பெனிக்கு அப்ளை செய்து இருந்தான். இப்போதான் இன்டெர்வியூ லெட்டர் வந்து உள்ளது. சந்தோசமாக இருந்தது. அவன் லட்சியம் கனவு எல்லாம் அந்தக் கம்பெனில் வேலை பார்க்க வேண்டும் என்பதே ஆகும். இன்னும் இரண்டு நாளில் ஆன்லைனில் இன்டெர்வியூ சொல்லி இருந்தார்கள்.
ரெண்டு நாள்கள் கழித்து இன்டெர்வியூவை அட்டன் செய்து வெற்றிகரமாக முடித்தான் ரிஷன், இன்னும் 15 நாள்கள் கழித்து முடிவு சொல்லப்படும் என்று சொல்லி இருந்தனர்.
*************************************
விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவுக்குச் சென்று விட்டுக் காரில் வந்து கொண்டு இருந்தனர் ஜெகதீஸ்வரன் மற்றும் யசோதா. ஜெகதீஸ்வரன் உறவினர் திருமணத்தில் சந்தித்த ஒரு நபர் சொன்ன விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே கார் ஓட்டிக்கொண்டு இருந்தார்.
அவர்கள் கார் மதுரை பைப்பாஸில் வந்த போது ஒரு லாரி நிதானம் இன்றி வந்து அவர்கள் காரில் மோதியது.
இருவரும் சீட் பெல்ட் போட்டு இருந்தனர், இருந்தும் அவர்களுக்குப் பலத்த அடி. ஜெகதீஸ்வரன் தலை கண்ணாடியில் மோதியது அதனால் தலையில் பலமான அடி. நினைவை இழந்து இருந்தார். யசோதாக்குக் காலில் அடி, கண்ணாடி உடைந்து உடம்பில் பல இடத்தில் கீறி விட்டு இருந்தது, கழுத்தில் கண்ணாடி துண்டு குத்தி இருந்தது, காதில் ரத்தம் வந்தது ஆனால் அவருக்கு நினைவு இருந்தது. அங்கு இருந்தவர்கள் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருவரையும் ஐசியூ இருந்தார்கள். ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் நபர் ஜெகஸ்வரனுக்குத் தெரிந்தவர் அவர் தான் ரிஷனுக்குப் போனில் தகவல் சொன்னான். அவன் பதறி அடித்துக் கொண்டு விமானத்தில் மதுரைக்கு வந்து சேர்த்தான்.
அவன் வருவதற்கு மாலை ஆகி இருந்தது. ஜெகதீஸ்வரனுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. யசோதா காலில் எலும்பு முறிவு,இடது கைலும் பலத்த அடி. தொண்டையில் அடி பட்டதால் கட்டு போட்டு இருந்தார்கள். காதில் ரத்தம் வந்ததால் அவருக்குத் தலைக்கு MRI ஸ்கேன் எடுத்து இருந்தனர். அதன் ரிசல்ட் இன்னும் வரவில்லை.
ரிஷனை முதலில் தன் தாயை பார்க்க தான் அனுமதித்தார்கள். கண்ணகளில் கண்ணீர் உடன் சென்று தன் தாயை பார்த்தான். அவன் வரவை உணர்ந்து கண்களைத் திறந்தார்.
“அம்மா….” என்ற கதறல் உடன் அவர் பக்கத்தில் சென்றான் ரிஷன்.
அவன் கன்னத்தைத் தொட்டு தடவினார் அவரால் பேச முடியவில்லை. போன் என்று சைகையில் கேட்டார்.
அவன் தாயின் போனை தந்தான் அதில் “அப்பா எப்படி இருக்கார்” என்று டைப் செய்து காட்டினார்.
“அப்பாவை நான் இன்னும் பார்க்கலை அம்மா” என்று சொன்னான் ரிஷன்.
அவனைப் போய்த் தந்தையைப் பார்க்க சொன்னார்.
டாக்டர் கிட்ட அனுமதி கேட்டு தந்தையைப் பார்த்தான். இன்னும் அவருக்கு நினைவு திரும்பவில்லை.
டாக்டரிடம் அவர் உடல் நிலையைக் கேட்டான். அதற்கு அவர் இன்னும் 24 மணி நேரம் கழித்துத் தான் சொல்ல முடியும்ன்னு சொன்னார். 24 மணி நேரத்துக்குள் அவருக்கு நினைவு திரும்ப வேண்டும் இல்லை என்றால் கொஞ்சம் கஷ்டம் தன் என்று சொன்னார் டாக்டர். ரிஷன் சற்று நிமிடங்கள் செயல் அற்று நின்று விட்டான்.
தனியாக இருப்பது அவனுக்குப் பயத்தைத் தந்தது அதலால் ரிஷன் வினு நேத்ரனுக்குப் போன் போட்டான்.
வினு நேத்ரன் கால் அட்டன் செய்து…
“மச்சான் சொல்லுங்க எப்புடி இருக்கீங்க” என்று கேட்டான்.
“வினு வீட்டுலையா… இருக்க?” என்று கேட்டான்.
தான் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல் வேற கேட்கவும் யோசனையுடன்.
“இல்லை மச்சான் இன்னும் வீட்டுக்கு போகல ஏன் மச்சான்?” என்று கேட்டான்.
“வினு அப்பாவுக்கும் அம்மாக்கும் ஆக்ஸிடென்ட் இங்க மதுரை வடமலையான் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க… பாப்பா கிட்ட மெதுவா சொல்லி கூட்டிட்டு வா” என்று குரல் உடைய சொன்னான்.
வினு நேத்ரன் அதிர்ச்சி ஆனான்.
“மச்சான் இப்ப அத்தை மாமா எப்படி இருக்காங்க” என்று கேட்டான்.
“அப்பாக்கு நினைவு இல்லை அம்மாக்கு காலில் எலும்பு முறிவு தொண்டையில் அடி” என்று சொன்னான்.
“ஏன் மச்சான் உங்களுக்குத் தெரிஞ்ச உடனே எங்களுக்குச் சொல்லி இருக்கலாம்ல நாங்க எல்லாரும் அப்பவே வந்து இருப்போம்ல” என்று கேட்டான்
“சாரி டா டென்ஷன்ல எனக்கு என்ன செய்யுறது தெரியல பிலைட் இருக்கவும் அப்படியே கிளம்பி வந்துட்டேன். எனக்கு மைன்டு ஸ்டரக் ஆகிடுச்சு. சாரி வினு” என்றான் ரிஷன்.
“சரி மச்சான் வந்துடுறோம் பார்த்துக்கோங்க” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
சற்று நேரத்தில் கௌஷிக் விசாகன் வடமலையான் ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்த்தான்.
ஐசியூ முன்னாடி தான் ரிஷன் அமர்ந்து இருந்தான்.
“மச்சான்….” என்று அழைத்துக் கொண்டே ரிஷன் அருகில் வந்தான்.
“விசாகா …. “என்று சொல்லி அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
இவளோ நேரம் மனதுக்குள் இருந்த தவிப்பு யாரும் இல்லாமல் தான் மட்டும் இருந்தது மனதின் பயம் எல்லாம் அந்த அணைப்பில் இருந்தது.
விசாகன் மெதுவாக ரிஷன் முதுவை தடவி கொண்டுதான்.
“டாக்டர் என்ன சொன்னாங்க மச்சான்” என்று கேட்டான்.
ரிஷன் டாக்டர் அவனிடம் சொன்னதை விசாகனிடம் சொன்னான்.
“மச்சான் இருங்க எங்க சீனியர் ஒருத்தர் இங்க தான் ஒர்க் பண்ணுறார் அவர் கிட்ட பேசுறேன்” என்று சொல்லி சென்றான்.
விசாகன் சீனியரிடம் பேசிட்டு விட்டு வந்தான்.
“மச்சான் மாமாக்குத் தலையில் அடி பட்டு இருக்கு அதுனால அவருக்கு நினைவு வந்தா தான் அவர் ஹெல்த் கண்டிஷன் பார்த்து டிரீட்மென்ட் குடுக்க முடியும். அத்தைக்குத் தொண்டையில் கண்ணாடி பீஸ் பட்டு தான் காயம் அதைத் தவிர அத்தைக்கு MRI ஸ்கேன் எடுத்து இருக்காங்க தலையில் லேசா அடிப்பட்டு இருக்கு அதுக்குத் தான் இப்போ மருந்து கொடுத்து இருக்காங்க” என்று விளக்கமாகச் சொன்னான்.
“ம்ம்ம்ம் சரி டா தேங்க்ஸ்” என்றான் ரிஷன்.
விசாகன் சென்று யசோதாவை பார்த்து விட்டு வந்தான். அவருக்குத் தூங்குவதற்கு மருந்து கொடுத்து இருந்தால் அவர் தூங்கி கொண்டு இருந்தார்.
ரிஷன் மற்றும் விசாகன் ஐசியூ முன்பு அமர்ந்து இருந்தார்கள்.
சற்று நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து ஜெகதீஸ்வரன் கண் விழித்து விட்டதாக டாக்டரை அழைத்துச் சென்றாள்.
டாக்டர் சென்று அவரைப் பரிசோதனை செய்து கொண்டு இருந்தார்.
ஜெகதீஸ்வரன் ரிஷனை பார்க்க வேண்டும் என்று கூறினார்.
டாக்டர் வெளியே வந்து ரிஷனிடம் “ ஜெகதீஸ்வரன் கண்ணு முழுச்சுட்டார் தலையில் அடிப்படனால தலைக்குள்ள இருக்குற நரம்பு,ரத்தம் ஓட்டம் எல்லாம் எப்புடி இருக்குன்னு இனிமேல் தான் பார்க்கணும், இப்போ உன்னைப் பார்க்க வர சொல்லுறார் உள்ள போய்ப் பாருங்க” என்று சொல்லி சென்றார்.
ரிஷன் மெதுவாக உள்ளே நுழைந்தான்.
“ அப்பா…” என்று அழைத்தான்.
ஜெகதீஸ்வரன் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்து “உங்க அம்மா” என்றார்.
“அம்மா நல்லா இருக்காங்க… தூங்குறாங்க” என்று சொன்னான்.
ரிஷனை அருகே அழைத்தார். அவனும் அருகில் சென்றான்.
“எனக்கு ஒரு சத்தியம் பண்ணு” என்று கேட்டார்.
“என்ன பா எதுக்குச் சத்தியம்?” என்று குழப்பமாகக் கேட்டான்.
“நீ பண்ணு சாமி நான் எதுக்குனு சொல்லுறேன்” என்றார்.
“சரி பா சத்தியமா நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்” என்று அவர் கையில் சத்தியம் செய்தான் மகன்.
ஜெகதீஸ்வரன் தொண்டையைச் சரி செய்து கொண்டு “ காயத்திரி தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும், அவள் யாரோட மகளா இருந்தாலும் உன் பொண்டாட்டி அவ மட்டும் தான் இதை நீ மீற கூடாது” என்று கூறினார்.
“சரி பா அவளைத் தான் நான் கல்யாணம் பண்ணுவேன், அம்மு மட்டும் தான் என் பொண்டாட்டி எந்த ஒரு நிலையிலும் இதை நான் மீற மாட்டேன்” என்று வாக்குக் கொடுத்தான் ரிஷன் கிருஷ்ணா.
“பாப்பாவை பார்த்துக்கோ” என்று சொல்லி மீண்டும் மயக்கம் அடைந்தார்.
டாக்டர் மீண்டும் பரிசோதனை செய்து பார்த்து விட்டு மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லை அதான் இந்த மயக்கம் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணலாம் என்று சொல்லி சென்றார்.
விசாகன்.. “என்ன மச்சான் மாமா என்ன சொன்னாங்க” என்று கேட்டான்.
“அம்மாவை பத்தி கேட்டாரு வேற ஏதும் இல்லை” என்று சொன்னான் ரிஷன்.
ஆனால் மனதுக்குள் எதுற்கு இந்தச் சத்தியம் இப்போத என்ற யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.
சற்று நேரத்தில் வினு நேத்ரன் குடும்பத்தினர் அனைவரும் வந்தனர்.
ஹர்ஷினி ரிஷனை கண் கலங்க பார்த்தாள்.
“அம்மா” என்று கேட்டாள்.
“அம்மா தூங்குறாங்க, அப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நினைவு வந்து கண்ணு முழுச்சு பேசுனாரு இப்போ திருப்பவும் மயங்கிட்டார்” என்று சொன்னான்.
ஹர்ஷினி ஐசியூ கண்ணாடி வழியாக தந்தையைப் பார்த்தாள். தாயையும் சென்று பார்த்து வந்தார்.
விசாகன் திரும்பவும் அவன் சீனியர் டாக்டர் இடம் பேசிவிட்டு வந்தான்.
ஹர்ஷினி ரிஷன் அருகில் அமர்ந்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள் அவள் கைகள் நடுங்கியது. ரிஷன் மெதுவாகக் கையைத் தட்டி கொடுத்தான்.
சற்று நேரத்தில் ரிஷனின் தாய்மாமா பிரபு வந்தார். ரிஷனிடன் அக்கா மாமா பற்றிக் கேட்டுக் கொண்டார்.
யசோதாவுக்கு விழிப்பு வந்தது.
ஹர்ஷினி உள்ளே சென்றாள்.
“அம்மா…” என்று கண்ணீர் குரலில் அழைத்தாள்.
யசோதா சிறிய புன்னகை புரிந்தார்.
ஹர்ஷினி அவர் கையைப் பற்றிக் கொண்டாள்.
யசோதா ஒன்னும் இல்லை என்பது போல் தலையை அசைத்தார்.
“அண்ணாவை வர சொல்” என்று டைப் செய்து காட்டினார்.
ஹர்ஷினி வெளியே வந்து விட்டாள்.
ரிஷன் உள்ளே சென்று
“அம்மா… அப்பா கண்ணு முழுச்சு பேசுனாரு உங்களைக் கேட்டார், இப்போ திருப்பவும் மயங்கிட்டார் டாக்டர் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க” என்று சொன்னான்.
யசோதா கண்களை மூடி திறந்தார் அதன் பின்
அவன் அன்னை போனில் “காயத்திரி தான் உன் பொண்டாட்டி வேற யாரையும் நீ கல்யாணம் பண்ண கூடாது என்மேல் சத்தியம்” என்று டைப் செய்து காட்டினார்.
“அம்மா முதல குணமாகி வீட்டுக்கு வாங்க நீங்களும் அப்பாவும் இருந்து எங்க கல்யாணத்தை நடத்தி வைங்க” என்று சொன்னான்.
யசோதா வினு நேத்ரனை பார்க்க விரும்பினார்.
ரிஷன் வினுவை உள்ளே செல்ல சொன்னான்.
யசோதா “காயத்திரி தான் என்னோட மருமகளா வரனும். பாப்பாவை நல்லா பார்த்துக்கோங்க” என்று டைப் செய்து காட்டினார்.
“அத்தை உங்களுக்கு ஒன்னும் இல்லை சீக்கிரம் வீட்டுக்கு வாங்க எல்லாம் நல்லா படியா நடக்கும்” என்றான் வினு நேத்ரன்.
யசோதா மயக்கம் அடைந்தார்.
டாக்டர் வந்து அவரைப் பரிசோதனை செய்தனர். ஆனால் அவருக்குப் பல்ஸ் லோ ஆனது. அதனால் அவரைச் சிசியூக்கு மாற்றினார்கள்.
அதே நேரத்தில் ஜெகதீஸ்வரனுக்குப் பிட்ஸ் வந்து அவரையும் சிசியூக்கு மாற்றினர்.
அனைவரும் சற்று பதட்டமவே இருந்தனர். ஹர்ஷினி ரிஷனின் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டாள். இருவருக்கும் மனசுக்கு நெருடலாக இருந்தது. ஏதோ நடக்கப் போகுது என்று இருவருக்கும் உள்ளுணர்வு சொல்லியது.
டாக்டர்கள் இருவருக்கும் டிரீட்மென்ட் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். சில மணிதுளிகள் ஜெகதீஸ்வரன் யசோதா போராடி அவர்கள் உயிரை நீத்தனர்.
“வாழ்க்கையில் ஒன்றாக இணைத்தவர்கள் ஒன்றாகவே…
இவ்வுலகை விட்டு சென்றனர்”
டாக்டர்கள் வெளியே வந்து “சாரி அவுங்க ரெண்டு பேரும் தவறிட்டாங்க” என்று சொன்னார்கள்.
ஹர்ஷினி ஓஓஓஓ என்று கத்தி அழுதாள்.
ரிஷன் கண்களில் கண்ணீர் உடன் தன் தங்கையைத் தட்டி கொடுத்தான்.
ஹாஸ்பிடல் வழிமுறைகள் முடித்து விட்டு
அவர்கள் உடல்களை அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கே எடுத்து சென்றனர்.
ஹர்ஷினி அழுது கொண்டே இருந்தாள்.
ரிஷன் மொத்தமாக உடைந்து இருந்தான். அவனால் அவர்கள் இறப்பை மனதால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தான். அவர்கள் இறுதியாகப் பேசியது மட்டுமே அவனுக்குள் ஓடியது. ஏன் எதற்கு என்று ஒன்னும் புரியாமல் தவித்தான்.
அவர்கள் உடலை பார்த்து அதைத் தான் கேட்டுக் கொண்டே இருந்தான்.
“ ஏன் ரெண்டு பேரும் திரும்பத் திரும்ப அம்மு தான் மருமகளா வரனும்ன்னு சொல்லிட்டு இருந்தீங்க..”
ரெங்கநாதன் மற்றும் சாரதா வந்தனர்.
வினு நேத்ரன் தான் எல்லா உறவுகளுக்குச் சொல்வது என்று எல்லாமே செய்தான்.
உறவினர்கள் வந்து அவர்களுக்கு இறுதி மரியாதை செய்தனர்.
ரிஷனின் நண்பர்கள் அனைவரும் வந்தனர். அவனைத் தாங்கி கொண்டனர். ரிஷன் பாலாஜியை கட்டி அனைத்து கதறி அழுதான்.
மறுநாள் அவர்களுக்கு இறுதி சடங்கை செய்தனர்.
ரிஷன் கிருஷ்ணா அவனை ஈன்ற பெற்றோருக்கு இறுதி மரியாதை செய்து அவர்கள் ஆன்மாவை சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தான்.
தன் பெற்றோர் இல்லாத வீடு ரிஷனின் உள்ளத்தைத் துடிக்க வைத்தது. குளித்து விட்டு வந்து ஹாலில் அமர்ந்தான்.
மதுமிதா அவனுக்கு உணவை ஊட்டினாள். ரிஷனும் சாப்பிட்டான்.
வினு நேத்ரனை அழைத்து “இன்னும் ரெண்டு நாள்லமாசம் பொறக்குது அது ரெடிப்பு மாசம் அதில் மிச்ச சடங்கு எல்லாம் செய்யக் கூடாதுன்னு ரெங்கநாதன் மாமா சொன்னாங்க… அதுனால நாளைக்கே எல்லாச் சடங்குகளும் முடுச்சுடலாம்” என்று சொன்னான்.
“ம்ம்ம்ம் சரி மச்சான் நான் பார்த்துக்கிறேன். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லி சென்றான்.
ரிஷன் ஹர்ஷினியை பார்க்க சென்றான். அவள் அழுது அழுது கிறங்கி தூங்கி இருந்தாள்.
மெதுவாகத் தன் அறைக்கு வந்து படுத்தான். மனம் நிலை இல்லாமல் தவித்தது. போனில் தன் பெற்றோர் போட்டோவை பார்த்துக் கொண்டே படுத்து இருந்தான்.
மறுநாள் எல்லாச் சடங்குங்களும் செய்து முடித்தனர்.
ரிஷன் ஹர்ஷினிடன் சென்று “பாப்பா அழுதுட்டே இருக்காத நம்ம கூடத் தான் எப்பவும் அம்மா அப்பா இருப்பாங்கச் சரியா… சீக்கிரமா உனக்குக் குழந்தையா பிறப்பாங்க… கவலை படாத” என்று ஆறுதல் சொன்னான்.
“ம்ம்ம்ம் சரி அண்ணா இனிமேல் நான் அழுக மாட்டேன்” என்று அழுது கொண்டே சொன்னாள்.
மற்ற உறவுகள் கிளம்பினர்.
வினு நேத்ரன் குடும்பம், ரெங்கநாதன், பிரபு மட்டும் ரிஷன் நண்பர்கள் பாலாஜி, மதுமிதா, ஷாஜித் வெங்கடேஷ் மட்டும் இருந்தனர்.
5ஆம் நாள் அனைவரும் ராமேஸ்வரம் சென்று அஸ்தி கரைத்து விட்டு வந்தனர்.
ரிஷன் நேத்ரனிடம் “ பாப்பா வா பார்த்துக்கோ” என்று குரல் உடைய சொன்னான்
வினு நேத்ரன் குடும்பம் தூத்துக்குடி சென்றனர்.
ரிஷன் வீட்டு சாவியைப் பிரபுவிடம் கொடுத்து “ மாமா தினமும் விளக்கு மட்டும் போடுங்க ஒரு மாசத்துக்கு” என்றான்
நண்பர்களுடன் சென்னைக்குச் சென்றான் ரிஷன் கிருஷ்ணா.
ஜெகதீஸ்வரன் யசோதா அவர்களின் இறுதி ஆசை நிறைவேறுமா….?
பார்க்கலாம்….