மௌனத்தின் நேசம் – 14

அத்தியாயம் – 14

மறுநாள் காலை அழகாக விடிந்தது…..

அதிகாலையிலே விழித்து விட்டான் வினு நேத்ரன், அவன் நெஞ்சில் தலை வைத்துத் துயில் கொண்டு இருந்தாள் ஹர்ஷினி. முகத்தில் அயர்வை தாண்டியும் சிறு புன்னகை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு. அவளை ரசித்துக் கொண்டே படுத்திருந்தான். சில மணித்துளிகள் கழித்து விழித்தாள் ஹர்ஷினி.

அவள் முழித்த உடன் அவளைக் கட்டி அணைத்து இதழில் முத்தம் வைத்தான். ஹர்ஷினி சினிங்கி கொண்டே… “பாவா வி..டு..ங்..க.. கோவிலுக்குப் போகணும்” என்றாள்.

“சரி சரி கண்ணம்மா போய்க் குளிச்சுட்டு வா” என்று கன்னத்தில் முத்தம் வைத்து விட்டுச் சொன்னான் வினு நேத்ரன்.

அதன் பின் இருவரும் சின்னச் சின்னச் செல்ல

சீண்டல்களுடன் குளித்து விட்டு தயாராகினர்.

கீழே உணவு தயாராகி இருந்தது.

புதுமன தம்பதிகள், விசாகன், சாரதா, ரெங்கநாதன் மற்றும் ரிஷன் காலை உணவு சாப்பிட்டனர்

அனைவரும் உணவு முடித்து விட்டு மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர்.

மதியம் விருந்து ரெடி ஆகி இருந்தது.

கோவிலில் இருந்து வந்த பின் மறுவீட்டு விருந்து சாப்பிட்டனர் அனைவரும்.

நல்ல நேரத்தில் வினு நேத்ரன் ஹர்ஷினி தூத்துக்குடி கிளம்ப ஆயுத்தம் ஆனார்கள்.

ஹர்ஷினி தாயை கட்டி கொண்டு அழுதாள்.

யசோதா “பாப்பா அழாதடா அங்க உன்னை எல்லாரும் நல்லா பார்த்துப்பாங்க” என்றார்.

ஹர்ஷினி கண்ணைத் துடைத்து விட்டு “உடம்பை பார்த்துக்கோங்க” என்று சொல்லி தாய் தந்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

ரிஷனிடம் சென்று அண்ணா “பார்த்துகோங்க” என்று கண்ணீர் மல்க சொல்லி விட்டு சென்றாள்.

ரிஷன் வினு நேத்ரணை கட்டி தழுவி “அவ சின்னப் பொண்ணு கொஞ்சம் பார்த்துக்கோ” என்றான்.

“மச்சான் கண்டிப்பா கண்ணம்மாவை நல்லாவே பார்த்துக்குவேன் நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம்” என்றான்.

யசோதா சாரதாவிடம் “பாப்பா சின்னப் பொண்ணு எதுவும் தப்புப்பண்ணா கொஞ்சம் சொன்னீங்கனா கண்டிப்பா புரிஞ்சுக்குவா” என்றார்.

“நீங்க கவலை படாதீங்க எங்க பொண்ணு மாதிரி பார்த்துகிறோம்” என்று உறுதி அளித்தார் சாரதா.

பின் அனைவரும் சொல்லி கொண்டு புறப்பட்டனர்.

காரில் சென்று கொண்டு இருக்கும் போது ஹர்ஷினியின் கைகளை வருடி அவளைச் சமாதானம் செய்தான் வினு நேத்ரன். அதன் பின் விசாகன் அவன் காலேஜில் நடந்த சுவாரசியமான விஷயகளைப் பேசிப்பேசி ஹர்ஷினியின் மனதை மாற்றினான்.

அவர்கள் சென்ற பின் வீடே வெறுமையாக இருந்தது. மூவரும் கனத்த மனதுடன் அமர்ந்திருந்தனர்.

இன்னும் இரண்டு நாளில் சென்னைக்குச் செல்ல இருக்கிறான் ரிஷன். அவனுக்குப் பெங்களூரில் இருந்து சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்திருந்தது. சென்னைக்குச் சென்று வேலையில் சேர வேண்டும்.

மாலை ஆகி விட்டது ஹர்ஷினி,வினு நேத்ரன் வீட்டுக்கு சென்று சேர்வதற்கு.

வீட்டுக்கு வந்துவிட்ட செய்தியை சொன்னாள்.

யசோதாக்கு கஷ்டமாக இருந்தது, இருந்தும் அவர் மனதினை மாற்றிக் கொண்டு அன்றைய வேலைகளைப் பார்க்கலானார்.

**************************************

இதற்கு இடையில் ராஜதுரையைக் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

போலீஸ் தரப்பில் வலுவான ஆதாரங்கள் இருந்ததால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.

கதிரேசன் சரோஜா மனம் உடைந்து போனார்கள்.

ராஜதுரையைத் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

**************************************

ரிஷன் சென்னை வந்தடைந்தான். தன்னுடைய வேலையில் சேர்ந்தான். புது ப்ராஜெக்டில் வேலை சற்று அதிகமாகத் தான் இருந்தது. இருந்தும் மனதுக்குப் பிடித்த வேலை விரும்பி செய்தான். ராஜதுரைக்குத் தண்டனை கிடைத்த விஷயம் வினுநேத்ரன் மூலம் ரிஷனுக்குத் தெரிய வந்தது.

நிச்சயத்துக்குப் பின் காயத்திரி ரிஷனை தொடர்பு கொள்ளவில்லை. காயத்திரியின் நினைவுகளுடன் வாழ்ந்து வந்தான் ரிஷன்.

அந்த வார இறுதியில் நண்பர்கள் கெட் -டு-கெதர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அனைத்து வேலையும் முடித்து விட்டு ரிஷன் தன் காரில் கெட்- டு-கெதர் நடக்கும் ஹோட்டலுக்குச் சென்றான்.

அங்கு ஷாஜித், வெங்கடேஷ், பாலாஜி, மதுமிதா வந்திருந்தனர். ரிஷன் அவர்கள் இருந்த டேபிளில் போய் அமர்ந்தான்.

“என்ன டா மச்சான் எப்படி டா இருக்க…?” என்று கேட்டான் ஷாஜித்.

“ம்ம்ம்ம்… நல்லா இருக்கேன் டா “என்றான் ரிஷன்.

“கார்த்திக் வரலையா டா” என்று கேட்டான் ரிஷன்.

“வந்துட்டு இருக்கான் டா” என்றான் பாலாஜி.

ரிஷன் ஒரு காபி ஆர்டர் பண்ணி குடித்தான்.

சற்று நேரத்தில் கார்த்திக் மற்றும் ஸ்வேதா வந்தனர். ஸ்வேதாவும் சென்னையில் இருக்கும் காலேஜில் MBA படிக்கிறாள்.

ஹர்ஷினியின் கல்யாண போட்டோஸ் காட்டினான் ரிஷன். அனைவரும் பார்த்தனர்.

“என்ன டா வேலை எல்லாம் ஓகே வா?” என்று கேட்டான் கார்த்திக்.

“ஒகே தான் டா ஒன்னும் பிரச்சனை இல்லை பர்ஸ்ட் கொஞ்சம் ஒர்க் பிரஷர் இருந்தது இப்போ எல்லாமே செட் ஆகிடுச்சு” என்றான் ரிஷன்.

“ரூம் எல்லாம் ஒகே வா? இல்லை எங்ககூட வந்து ஸ்டே பண்ணிக்கிறியா?” என்று கேட்டான் வெங்கடேஷ்.

“அதான் டா நானும் யோசிச்சுட்டு இருக்கேன் எனக்கு ரூம் செட் ஆகலை பேசாம லோன் போட்டு வீடு எதுவும் வாங்கலாமான்னு யோசிட்டு இருக்கேன்… பார்க்கலாம்” என்றான் ரிஷன்.

“டேய்ய் இப்போ வீடு வேண்டாம் மச்சான் இன்னும் ஒன் இயர் அப்பறம் யோசி இப்போ எங்க கூட வந்து ஸ்டே பண்ணிக்கோ” என்றான் ஷாஜித்.

“ம்ம்ம்ம் சரி டா அப்ப நான் உங்க கூடவே ஸ்டே பண்ணிக்கிறேன். ஆபீஸ்க்கு அரைமணி நேரம் தான் ட்ராவெல் ஒன்னும் பிரச்சினை இல்லை நாளைக்கு ஷிஃப்ட் ஆகிக்கிறேன் ” என்று சொன்னான் ரிஷன்.

“என்ன மச்சி காயு விஷயம் என்ன ஆச்சு” என்றாள் மதுமிதா.

“காயு வா எந்தக் காயு? என்ன விஷயம்?” என்று அதிர்ச்சியாகக் கேட்டாள் ஸ்வேதா.

“எல்லாம் உன் தோழி காயத்திரி தான்” என்று சொன்னாள் மது.

“அவளுக்கு என்ன?” என்று கேட்டாள் ஸ்வேதா.

“ஸ்வேதா…. காயத்திரியும் நானும் ரிலேட்டிவ். அவளும் நானும் லவ் பண்றோம். வீட்டுல சொல்லி பொண்ணு கேட்டோம் பட் அவங்க அப்பா ஒத்துக்கலை வேற ஒருத்தன் கூட எங்கேஜ்மெண்ட் பிக்ஸ் பண்ணிட்டாங்க. எங்கேஜ்மெண்ட் அன்னைக்கு அவனைப் போக்சோ சடத்தில் கைது பண்ணிட்டாங்க. அந்த ஷாகில் காயு அப்பாக்கு அட்டாக் வந்து இறந்துட்டாரு” என்று விளக்கமாகச் சொன்னான் ரிஷன்.

சில நிமிடம் மௌனம் நீடித்தது.

“போக்சோ சட்டத்தில் கைதுனா அப்படி என்ன தப்புப் பண்ணினான்” என்று கேட்டாள் மது.

“மைனர் ரேப்” என்றான் ரிஷன்.

“அண்ணா உண்மையாவே காயு உங்க ரிலேட்டிவ் வா?” என்று சந்தேகமாகக் கேட்டாள் ஸ்வேதா.

“ஆமா மா என்னோட ரிலேட்டிவ் தான்.. ஏன் நீ இப்படிக் கேக்குற மா?” என்று கேட்டான் ரிஷன்.

“அவளோட அம்மாவும், அக்காவும் ஒரு மாதிரி டைப் அதான்… காலேஜில் படிக்கும் போது ஒரு பையன் அவகிட்ட நோட்ஸ் வாங்குனதை பார்த்ததுக்கே ரொம்ப அசிங்க அசிங்கமா பேசுனாங்க… லவ் பண்ணுறானு தெரிஞ்சா அவ்ளோதான்” என்று சொன்னாள்.

“அவங்களா பத்தி நீ சொல்லுற எல்லாமே எனக்கும் தெரியும் மா….” என்று வருத்தமாகச் சொன்னான் ரிஷன்.

“சரி மச்சான் நீ இப்போ என்ன பண்ண போற காயு விஷயத்தில்” என்று கேட்டான் பாலாஜி.

“ஒன் இயர் அவுங்க வீட்டில் எந்த நல்லதும் பண்ண மாட்டாங்க.. இப்போ ஹர்ஷினியோட ஹஸ்பண்ட் காயத்திரியோட பிரதர் தான் சோ வெயிட் பண்ணலாம்ன்னு அப்பா சொல்லி இருக்கார் பார்க்கலாம்” என்றான் ரிஷன்.

“ம்ம்ம்ம் சரி டா” என்றான் பாலாஜி.

அதன் பின் அனைவரும் உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு விடைபெற்றனர்.

மறுநாள் ஷாஜித் மற்றும் வெங்கடேஷ் உதவியுடன் ரிஷன் அவர்கள் வீட்டுக்கு வந்தான். மூன்று பெட்ரூம் கொண்ட வீடு. அதில் ரிஷன், ஷாஜித், வெங்கடேஷ் மூவரும் தங்கினர். ரிஷனுக்கு ரூம் செட் ஆனதுக்கு அப்பறம் தான் கொஞ்சம் பிரீயாக உணர்ந்தான்.

**************************************

திண்டுக்கல் ரவீந்திரன் வீட்டுக்கு மாலாவின் தம்பி காளிதாஸ் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வந்து இருந்தான். அவன் வயது 52. தன் அக்கா நிலையைப் பார்த்துக் கண்ணீர் விட்டான்.

“என்ன அக்கா…? எப்படி அக்கா…?” என்று கேட்டான்.

மாலா நடந்ததைச் சொன்னார்.

“அக்கா சும்மா அவளை ராசி கெட்டவன்னு சொல்லாத அக்கா.. விடு எல்லாம் நம்ம நேரம்” என்று காயத்திரியை ரசனையாகப் பார்த்துக் கொண்டே.. சொன்னான் காளிதாஸ்.

காளிதாஸ் அவன் தந்தையைப் போல் கருமை நிறம். 25 வருட ஜெயில் வாழ்க்கை அவனக்கு முரட்டுத் தோற்றத்தை தந்திருந்தது. அவனுக்குப் போதை பழக்கம் இப்போதும் உண்டு. காயத்திரியின் வெள்ளை நிறத்தை பார்த்து அவள் அழகில் மயங்கினான் காளிதாஸ்.

காயத்திரி டைனிங் டேபிள் அருகில் நின்று இருந்தாள்.

மாலா தன் தம்பி அவளை ரசித்துப் பார்ப்பதை பார்த்து “என்ன டா அவளை அப்படிப் பார்க்குற என்ன அவளைக் கட்டிக்கிறியா… ?”என்று கேட்டார் ரகசியமாக.

“அக்கா… நிஜமா தான் சொல்லுறியா?” என்று சந்தோசமாக் கேட்டான்.

“ஆமா டா நிஜமா தான் கேக்குறேன்” என்றார் மாலா.

“அக்கா…. கரும்பு திங்க கசக்குமா என்ன” என்று சந்தோசமாகச் சொன்னான் காளிதாஸ்.

“மாமாக்கு வருஷம் திரும்பட்டும்… வருஷ பூஜை முடிச்சுட்டு உனக்கும் அவளுக்கும் கல்யாணம்” என்றார் மாலா.

“அட போக்கா வருஷ பூஜை வரைக்கு நான் சும்மா அவளைப் பார்த்துட்டு தான் இருக்கனுமா?” என்று எரிச்சலாகக் கேட்டான் காளிதாஸ்.

“ஹாஹாஹாஹா என்று சிரித்த மாலா உன்னை யார் இங்க தடுக்கப் போற… அவ வீட்டை விட்டு மட்டும் வெளியே போகக் கூடாது, அதை மட்டும் பார்த்துக்கோ சரியா நீ சந்தோசமாக இருந்தா போதும் எனக்கு” என்று சொன்னார்.

“என் செல்ல அக்கா” என்று செல்லம் கொஞ்ச சொன்னான் காளிதாஸ்.

தன் அக்கா சொன்னதுக்கு அப்பறம் அவனுக்குத் தடை ஏது. மனதுக்குள் காயத்திரியை அசிங்கமாகக் கற்பனை பண்ணிக்கொண்டான் காளிதாஸ்.

“சரி டா போய்க் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” என்றார் மாலா.

“ஏய்ய்ய் இங்க வா… மாமா குளிக்கத் தேவையானது எல்லாம் எடுத்து கொடு” என்று சொல்லி தன் அறைக்குச் சென்றார்.

“வாங்க… “என்று அழைத்துச் சென்று குளிக்கத் துண்டு, சோப்பு எல்லாம் எடுத்து கொடுத்தாள் காயத்திரி.

அவள் கைகளைத் தடவி கொண்டே அதனை எல்லாம் வாங்கிக் கொண்டான் காளிதாஸ்.

காயத்திரிக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. தெரியாமல் பட்டதா… இல்லையெனில்… என்று யோசித்துக் கொண்டே உணவை எடுத்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள்.

காளிதாஸ் மனதுக்குள் இனிமையான உணர்வுடன் குளித்து விட்டு வந்தான்.

மாலா மற்றும் காளிதாஸ் சாப்பிட வந்தனர். காயத்திரி தான் பரிமாறினாள்.

அவள் பரிமாறும் போது இடுப்பில் கையை உரசினான் காளிதாஸ். சற்று ஒதுங்கி நின்று கொண்டாள்.

அதைப் பார்த்த மாலா “ஏய்ய்ய்…. இப்போ எதுக்குத் தள்ளி போய் நிக்கிற என் தம்பி பக்கத்தில் நின்னு அவனுக்கு என்ன வேணும்ன்னு கேட்டு பரிமாறு அவன் கை பட்டா நீ ஒன்னும் கருத்திர மாட்டா… போய் அவன் பக்கத்தில் நில்லு” என்று அதிகாரமாகச் சொன்னார் மாலா.

வேறு வழி இன்றிக் காளிதாஸ் பக்கத்தில் போய் நின்று கொண்டாள்.

“இங்க பாரு காஞ்சனா அப்பாக்கு வருஷ பூஜை முடுஞ்சதுக்கு அப்பறம் உனக்கும் என் தம்பிக்கும் கல்யாணம்” என்று சொன்னார்.

(அவள் அன்னை எப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று ஓர் அளவுக்கு யூகித்து இருந்தாள் காயத்திரி.)

“அது மட்டும் இல்லை இனிமேல் அவனுக்கு என்ன வேணுமோ எல்லாமே நீ தான் பார்த்து செய்யுற சும்மா சிலுப்பிக்கிட்டு இருக்காத சரியா” என்றார் மாலா.

காயத்திரி எதுவும் பேசவில்லை இந்த ஒரு மாதத்தில் அவள் அன்னை பேசாத பேச்சு எல்லாம் பேசி விட்டு இருந்தார். எல்லா நாட்களும் அவளுக்கு நரகமாக இருந்தது இந்த ஒரு மாதத்தில்.

நாகராஜன் அவள் மேல் இச்சை கொண்டது தெரிந்த அன்று அதற்கும் அவள் தான் காரணம் என்று சொல்லி உடலில் சூடு வைத்திருந்தார். ராஜதுரைக்குத் தண்டனை கிடைத்த செய்தி அறிந்து ரொம்ப அசிங்கமாக பேசி இருந்தார்..

மாலா சாப்பிட்டு சென்று விட்டார்.

காளிதாஸ் மாலா சென்ற உடன் “ நீ இனிமேல் சுடிதார் எல்லாம் போடாத சேலை மட்டும் தான் கட்டணும்” என்றான்.

“ம்ம்ம்ம் சரிங்க மாமா” என்றாள் காயத்திரி.

“வா என் பக்கத்துல உக்காந்து சாப்பிடு” என்று அழைத்தான் காளிதாஸ்.

முதலில் மறுத்தாள். அவன் வற்புறுத்தவே அவன் பக்கத்தில் உக்காந்து சாப்பிட்டாள்.

அவள் தொடையின் மீது கை வைத்தான். அவள் மரம் போல் அமர்ந்து இருந்தாள். (மனதுக்குள் ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டு இருந்தாள். உணர்வுகள் மரத்துப் போய்விட்டது அவளுக்கு.)

தொடையில் இருந்த கை மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று அவள் இடுப்பை தடவியது.

“வேண்டாம் மாமா முறைப்படி தாலி கட்டிட்டு என்ன வேணுமோ பண்ணுங்க” என்றாள்.

“இதுக்கு இன்னும் 10 மாசம் இருக்கு அது வரைக்கும் எல்லாம் என்னால சும்மா இருக்க முடியாது இப்பவே எனக்கு வயசு அதிகம் நீ சொல்லுற மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாது. ஒழுங்கா இருந்துக்கோ இல்லன்னு வை அக்கா கிட்ட சொல்லிடுவேன்” என்று மிரட்டல் குரலில் சொன்னான் காளிதாஸ்.

அம்மாகிட்ட சொன்ன என்ன நடக்கும் என்று அவளுக்கு நன்றாவே தெரியும். இதற்கு மேல் அவள் ஏதும் சொல்லவில்லை.

காளிதாஸ் கையை இடுப்பில் வைத்துத் தடவி கொண்டே சாப்பிட்டான். அவள் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து அவளுக்கு ஊட்டி விட்டான். அவளால் மறுத்து கூற முடியாமல் சாப்பிட்டாள். அப்போதும் அவன் கை அவள் இடுப்பில் தான் இருந்தது.

சாப்பிட்டு முடித்த உடன் அவள் எழுந்து விட்டாள்.

“போதுமா இன்னும் கொஞ்சும் சாப்பிடு டி” என்றான் காளிதாஸ் அக்கறையாக.

(அவனுக்கு அவள் இடுப்பை தடவ வேண்டும்.)

“இல்லை மாமா எனக்குப் போதும்” என்று மறுத்துவிட்டு.

கிட்சேனுக்குள் சென்று பாத்திரம் கழுவினாள் காயத்திரி.

காளிதாஸ் அவன் கைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டான். அவள் இடுப்பின் மென்மை அவனைப் பித்தம் கொள்ளச் செய்தது. அவன் எப்போதும் பயன்படுத்தும் போதை சிகரெட் குடித்து விட்டு காயத்திரியை அசிங்கமா கற்பனை செய்து மனதுக்குள் சந்தோசம் அடைத்தான்.

காளிதாஸ் வருகையால் காயத்திரி வாழ்க்கையில் நிகழும் மாற்றம் தான் என்ன….?

விதியின் விளையாட்டு ஆரம்பம்….

பார்க்கலாம்….

error: Content is protected !!