அத்தியாயம் – 13
வீட்டுக்கு வந்த அனைவருக்கும் மிகுந்த அசதியாக இருந்ததால்….
அனைவரும் தந்தம் அறைக்குச் சென்று தூங்கினர்.
ரிஷன் மட்டும் தூங்க முடியாமல் தவித்தான். பல தடவை அந்த வீடியோவை பார்த்து விட்டான். ராஜதுரையின் குரலும், மாலாவின் குரலும் மட்டும் தான் பதிவாகி இருந்தது, ஆனால் வீடியோவில் முழுவதும் காயத்திரி மட்டும் தான் இருந்தாள் அவள் குரல் எதுவும் பதிவாகவில்லை…
அவன் மனதுக்குள் “ஒரு தாயால் எப்படி இப்படி எல்லாம் செய்ய முடிகிறது…” என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது…
பல நிமிடம் போராட்டத்துக்குப் பின் மெதுவாகக் கண் அயர்ந்தான் ரிஷன் கிருஷ்ணா…
*************************************
ரவீந்திரன் இறந்து இன்றோடு ஒரு வாரம் ஆகி இருந்தது.. மீதமிருந்த சடங்குகள் எல்லாம் ஐந்தாம் நாளே முடித்து விட்டு இருந்தனர்.
இந்த ஒரு வாரத்தில் மாலா காயத்திரியை வார்த்தைகளால் குத்தி கிழத்து விட்டார்.
கணவரின் இறப்பு, ராஜதுரையின் கைது எல்லாத்துக்கும் காயத்திரி தான் காரணம் என்று சொல்லி பேச கூடாத வார்த்தைகளால் அவளைப் பேசியிருந்தார். காஞ்சனாவும் அவளைக் கண்டபடி திட்டி கொண்டிருந்தாள். கொல்லி வைத்த காரணத்தால் நாகராஜன் வேலைக்குச் செல்லவில்லை. இன்னும் பதினாறு நாள் வரைக்கும் அவன் வீட்டுல் தான் இருக்க வேண்டும். மாலா மற்றும் காஞ்சனா காயத்திரியை பேசும் போது அவனுக்குச் சந்தோசமாக இருந்தது… அவனுக்கு இந்த ஒரு வாரத்தில் காயத்திரி மேல் இருந்த மோகம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவனுடைய இச்சையை இங்க இருக்கும் நாளுக்குள் தீர்த்துக் கொள்ள எண்ணியிருந்தான். சரியான சந்தர்ப்பம் அமைய காத்துக் கொண்டிருந்தவனுக்கு இன்று சந்தர்ப்பம் அமைந்தது.
இன்று மாலாவுக்குப் பிரஷர் அதிகம் ஆனதால் தூக்க மாத்திரை போட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்.
நாகராஜன் மாலாவின் மாத்திரையை எடுத்து காஞ்சனாவுக்குப் பாலில் கலந்து கொடுத்திருந்தான் அதனால் அவளும் தூங்கி கொண்டிருந்தாள். மாலாவின் அறை முன் கட்டில் இருக்கும். காயத்திரி அறை பின் கட்டில் இருக்கும். அவள் கத்தினால் கூட முன் கட்டில் இருக்கும் அறை வரை கேட்காது இதை எல்லாம் கணக்கிட்டு தான் நாகராஜன் மெதுவாகக் காயத்திரியின் அறைக்குள் சென்றான். காயத்திரி அசந்து தூங்கி கொண்டிருந்தாள். நாகராஜன் உள்ளே சென்ற நொடி மின்சாரம் தாக்கியது போல் உணர்த்தான்.
சத்தியமாக இப்படி ஒரு திருப்புமுனை வரும் என்று நினைக்கவில்லை. காயத்திரி அருகில் அவன் அன்னை மகேஷ்வரி படுத்திருந்தார்.
தாயை பார்த்த பின் நாகராஜன் அங்கிருந்து சென்று விட்டான். மனதின் ஏமாற்றத்தை அவனால் தாங்கி கொள்ள முடியாமல் தவித்தான்.
மகேஷ்வரி நாகராஜன் வந்துவிட்டு சென்றதை பார்த்துக் கொண்டுதான் இருந்தார். சில நாட்களாக நாகராஜனின் பார்வை காயத்திரியின் மேல் தப்பாகப் படிவதை அவர் கவனித்துத் தான் இருந்தார். இன்று ஏனோ மனதுக்குள் நெருடலாக இருந்த காரணத்தால் காயத்திரியுடன் தங்கி இருந்தார்..
காயத்திரி மேல் அவருக்கு வெறுப்பும் இல்லை விருப்பமும் இல்லை அவள் ஒரு சக மனுசி அவ்வளவு தான். காயத்திரியிடம் இதைப் பற்றிச் பேச வேண்டும் என்று முடிவு செய்து விட்டு தூங்கினார்.
மறுநாள் காலை நாகராஜன் காயத்திரியின் வரவுக்காக ஆவலாகக் காத்துக்கொண்டு இருந்தான். இன்னும் அவன் மனதுக்குள் இருந்த மோகம் குறையவில்லை.. அவனால் நேற்று நடந்த ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை. அவளை ஒருதடவையாவது கட்டி அனைத்து உடல் முழுவதும் தடவி முத்தமிட வேண்டும் என்ற எண்ணம் அவனுள் கொழுந்து விட்டு எரிந்தது.
காயத்திரி விடிய காலை எழுந்த உடன்… மகேஷ்வரி அவளிடம் பேசினார்.
காயத்திரி “உன் மேலே எல்லாரோட பார்வை ஒரே மாதிரி இருக்காது…புறம்போக்கு நிலத்தைப் பட்டா போட தான் பார்ப்பாங்க… நீ தான் உன்னைப் பாதுகாத்துக்கணும்” என்று சொல்லி சென்றார்.
வெளியே வந்து நாகராஜனை இழுத்துக்கொண்டு மாடியில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றார்.
அவர் சொன்னது அவளுக்குப் புரிந்தது நாகராஜனின் பார்வை மாற்றத்தை அவளும் உணர்ந்து தான் இருந்தாள். பின் எழுந்து அன்றாட வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.
மகேஷ்வரி நாகராஜனை சத்தம் போட்டு “ஒழுங்கா உன் பொண்டாட்டி கூட வாழற வழிய பாரு தேவையில்லாத எண்ணத்தை விட்டுட்டு” என்று எச்சரித்தார்.
காலை உணவு நேரத்தில் காஞ்சனாவிடம் “ அப்பா இறந்தது கஷ்டம் தான் அதுக்குப் புருஷனை ஒழுங்கா கவனிக்க மாட்டியா… அவன் மனசுக்குள்ள கண்ட கண்ட நினைப்பு எல்லாம் வருது” என்று சூசகமாகக் காயத்திரியை பார்த்துக் கொண்டே சொன்னார்.
காஞ்சனா தன் அத்தை சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள்.
நாகராஜன் அம்மாவை “அம்மா தேவை இல்லாம பேசாதீங்க “ என்று அதட்டினான்.
“நீ தேவை இல்லாததைச் செய்யுற அதனால தான் தேவை இல்லாதை எல்லாம் பேசுறேன்” என்று சொன்னார்.
காஞ்சனா நாகராஜனை அழைத்துக் கொண்டு சென்று “மாமா…. என்ன மாமா… உங்களுக்கு எதுல குறை வச்சேன் அவகிட்ட போய் இருக்கீங்க” என்று கேட்டாள்.
நாகராஜனால் ஏதும் பேச முடியவில்லை. இப்பொழுது இந்தப் பிரச்னையை ஒத்திவைக்க நினைத்து… “இனிமேல் இந்த மாதிரி நடக்காது என்ன நம்பு” என்று உறுதி அளித்தான்.
காஞ்சனா அவனை நம்பி அமைதி ஆகிவிட்டாள்.
பதினாறு நாட்கள் வரை இருந்து விட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றனர் மகேஸ்வரியின் குடும்பம்.
**************************************
ஹர்ஷினியின் கல்யாண வேலைகள் எல்லாம் வேகமாக நடந்தது…
சில நாட்கள் கழித்து ரிஷன் அந்த வீடியோவை தன் அன்னையிடம் காட்டி விட்டான்.
யசோதா அதைப் பார்த்து அதிர்த்தார்….
“ஐய்யோ…. என்ன கண்ணா இது…. எப்படி டா ஒரு அம்மாவால் இப்படி எல்லாம் மனசாரப் பண்ண முடியுது” என்றார்.
“தெரியல மா அப்பாட்ட சொல்லி அவங்க உண்மையாவே அம்முவோட அம்மா தானான்னு விசாரிக்கச் சொல்லுங்க மா” என்றான்.
“சரி சாமி அப்பா கிட்ட சொல்லி விசாரிக்கச் சொல்லுறேன்” என்றார் அன்னை.
நாட்கள் வேகமாக நகர்ந்தது. ஹர்ஷினியின் திருமண நாளும் வந்தது.
தூத்துக்குடியில் உள்ள மாப்பிள்ளையின் குலதெய்வ கோவிலில் தான் திருமணம். மற்ற சடங்குகள் எல்லாம் கோவில் பக்கத்துல உள்ள அவர்களின் சமுதாயக் கூடத்தில் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது.
ஆனி மாதம் 3ஆம் தேதி காலை 7 – 8.30 மணிக்குள் திருமணம்.
திருமணத்துக்கு முதல் நாள் இரவு ஹர்ஷினியால் தூங்க முடியவில்லை தன் பெற்றோரை பிரிவது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. இந்தத் திருமணத்தில் சந்தோசம் என்றாலும் இந்தப் பிரிவு கஷ்டமாக இருந்தது.
சில மணி நேரம் மட்டுமே தூங்கினாள்….
பின் 3 மணிக்கு எல்லாம் எழுந்து அழகு கலை நிபுணர்களால் தேவதை போல் தயாரானாள்.
அதிகாலை எல்லாம் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் அழைக்க வந்து விட்டனர்.
கண் கலங்க ஹர்ஷினி அவர்களுடன் காரில் புறப்பட்டாள்.
மற்ற அனைவருக்கும் வேன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அதில் அவர்களுடன் ரிஷனின் காரும் புறப்பட்டது.
சரியான நேரத்தில் மணமகள் கோயிலை வந்து அடைந்தாள்.
சாரதா மற்றும் தீபாலக்ஷ்மி இருவரும் ஆலம் சுற்றி மணமகளை உள்ளே அழைத்து வந்தனர்.
சாமிக்கு பூஜை செய்து ஹர்ஷினியின் முகூர்த்த புடவையை மூன்று சுமங்கலிகள் எடுத்து தந்தனர்.
ஹர்ஷினி புடவை மாற்ற சமுதாயக் கூடத்தில் உள்ள அறைக்குச் சென்றாள்.
அவள் சென்ற சில மணித்துளிகள் கழித்து வினு நேத்ரன் வந்தான்.
அவனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்தனர்.
ஹர்ஷினியும் சற்று நேரத்தில் வந்து அடைந்தாள்.
லெவெண்டர் நிற புடவையில் அழகாக இருந்தாள்
ஹர்ஷினியை ரசித்துப் பார்த்துக் கண் அடித்தான் வினு நேத்ரன்.
இருவருக்கும் காப்புக் கட்டபட்டது.
மணமக்களின் தாய்மாமாகள் வந்து மாலை அணிவித்தனர்.
சாமிக்கு பூஜை செய்து தாலியை அவர்கள் குலத்தின் பெரியவர் எடுத்து வினு நேத்ரனிடன் குடுக்க மங்கள வாதியங்கள் முழங்க அவன் வாங்கி ஹர்ஷினியின் கழுத்தில் மூன்று முடுச்சிட்டு தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான். அதன் பின் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். குலத்தின் பெரியவர் மெட்டி எடுத்துக் கொடுக்கக் கடவுள் சன்னதி முன் அமர்ந்து ஹர்ஷினி காலில் மெட்டியை அணிவித்தான்.
குலத்தின் பெரியவர் ஆசி வழங்கினார்கள்.
அவர்களின் பெற்றோர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டனர்.
ஜெகதீவரன் யசோதா தன் மகளைத் திருமணக் கோலத்தில் பார்த்துக் கண்ணில் ஆனந்த கண்ணீர் பொங்க ஆசிர்வாதம் செய்தனர். அதன் பின் மணமக்களைச் சமுதாயக் கூடத்துக்கு அழைத்து வந்து மற்ற சடங்குகள் செய்தனர்.
காலை உணவு சாப்பிட மணமக்கள் அமர்த்தனர். சாப்பிட ஆரம்பித்த நேரத்தில் விசாகன் வந்து அண்ணா “மதினிக்கு ஸ்வீட் ஊட்டி விடுங்க” என்றான்….
வினுவும் ஸ்வீட் எடுத்து ஊட்டி விட்டான்…
“மதினி நீங்களும் ஊட்டுங்க” என்றான்….வெக்கப்பட்டுக்கொண்டே… ஸ்வீட் கொஞ்சம் எடுத்து ஊட்டி விட்டாள்…
போட்டோக்ராபர் அழகாக இந்த நிகழ்வுகளைப் படம் பிடிதார்..
சின்னச் சின்னக் கலாட்டா உடன் காலை உணவு முடிந்தது…
அதன் பின் நல்ல நேரத்தில் மணமகன் வீட்டுக்கு மணமக்கள் சென்றனர்…
ஆலம் சுற்றி மணமக்களை வரவேற்றனர். உள்ளே சென்று பூஜை அறையில் விளக்கு ஏற்றினாள் ஹர்ஷினி. பின் பால் பழம் கொடுக்கபட்டது. வனிதா மற்றும் வனஜா தான் பால் பழம் கொடுத்தனர். அடுத்துக் குடத்தில் சங்கு, மோதிரம் போட்டு மணமக்களை எடுக்கச் சொல்லினர்.
விசாகன் “அண்ணா விடாதீங்க நம்ம தான் வின் பண்ணனும்” என்றான்..
வனிதா,வனஜா “மதினி விடாதீங்க…” என்றாங்கள்.
ஹர்ஷினி சங்கையும்… வினு மோதிரத்தை.. எடுத்தனர்.
அனைவரும் கை தட்டினார்கள். அங்கிருந்த பாட்டி ஒரு வருசத்துல உன் மருமகள் தொட்டில் கட்டிடுவா என்று தீபாலக்ஷ்மியிடம் சொன்னார்.
ஹர்ஷினி அழகாக வெக்கப்பட்டாள். புதுப் பெண்ணைப் பால் காய்ச்சும் சடங்கை செய்யச் சொன்னார்கள். ஹர்ஷினியும் சாமி கும்பிட்டு பால் காய்ச்சினாள். மதியம் விருந்து முடித்து விட்டு வினு வீட்டில் இருந்து மணமக்கள் மதுரைக்கு மறுவீட்டுக்கு புறப்பட்டனர்.
மணமக்களுடன் விசாகன், சாரதா மற்றும் ரெங்கநாதன் உடன் பயணம் செய்தனர்.
மாலை மணமக்கள் மதுரையை அடைந்தனர். வந்தவர்களை ஆலம் சுற்றி வரவேற்றனர். பால் பழம் தந்தார்கள். மணமகள் வீட்டில் தான் இரவு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..
ரிஷன், வினு நேத்ரன், விசாகன் மொட்டை மாடியில் நின்று பேசி கொண்டு இருந்தனர்.
“என்ன மச்சான் என்னோட சிஸ்டர் கிட்ட இருந்து மெசேஜ் ஏதும் வந்ததா…?” என்று கேட்டான் வினு.
ரிஷன் அவன் போனை எடுத்து வினுவிடம் தந்தான்..
“என்ன மச்சான்” என்று அதிர்ச்சியாகக் கேட்டான்.
“நீயே பாத்துக்கோ… “என்று சொல்லி வாட்சப்பை ஓபன் பண்ணி தந்தான்.
கடைசியா ஜூன் 6 தான் மெசேஜ் வந்திருந்தது அதன் பின் ஏதும் இல்லை.
“மச்சான்…. இருங்க ஒரு நிமிஷம்” என்று சொல்லி விசாகன் போனில் இருந்து காயத்திரிக்கு அழைத்தான் வினு.
“போன் எடுக்கல ரிங் போய்க் கட் ஆகிடுச்சு” என்றான் வினு.
“ம்ம்ம்ம்” என்றான் ரிஷன்.
“அண்ணா மாலா பெரியம்மா இருந்தா காயு போன் எடுக்க மாட்டா …” என்றான் விசாகன்.
“விடுங்க.. என்னால காத்து இருக்க முடியும் அம்முவா என்கிட்ட பேசுவா எனக்கு என் காதல் மேலே நிறைய நம்பிக்கை இருக்கு” என்றான் ரிஷன் கிருஷ்ணா.
இவர்கள் மாடியில் பேசி கொண்டிருந்த அதே நேரத்தில் கீழே…
சாரதாவிடம் யசோதா ரிஷனின் காதலை பற்றிச் சொல்லி கொண்டு இருந்தார்.
யசோதா… “உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றார்.
“ம்ம்ம்ம் சொல்லுங்க சம்பந்தி என்ன விஷயம்.?” என்றார் சாரதா.
“ரிஷன் நம்ம ரவீந்திரன் பொண்ணு காயத்திரியை லவ் பண்ணுறதா எங்க கிட்ட சொன்னான் நாங்களும் பொண்ணு எல்லாம் கேட்டு போனோம் ரவீந்திரன் அண்ணா தான் ஜாதகம் பொருத்தம் இல்லனு சொல்லிட்டாங்க” என்றார் யசோதா.
“காயத்திரி வீட்டுல இந்த லவ் விஷயம் தெரியுமா?” என்று கேட்டார் சாரதா.
“இல்லை அத்தை மதினி வீட்டில் யாருக்கும் தெரியாது நாங்களா தான் பொண்ணு கேட்டு வந்து இருக்கோம் என்று நினைச்சுட்டாங்க” என்றாள் ஹர்ஷினி.
அத்தை இந்த வீடியோவை பாருங்க என்று தன் போனில் இருந்த வீடியோவை கட்டினாள் ஹர்ஷினி.
சாரதா… அதிர்ச்சியில் உறைந்து போனார்.
“யசோதா… மாலா இதுக்கு மேலையும் பண்ணுவா அவளுக்குக் காயத்திரியை கண்டாளே பிடிக்காது ரொம்ப வெறுப்பா… இது எல்லாம் ஒரு விஷயமே இல்லை அவளுக்கு.
கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம்” என்றார் சாரதா.
அனைவரும் இரவு உணவு சாப்பிடனர்.
சாரதா லைட் க்ரீன் கலர் காட்டன் சாரீ குடுத்து ஹர்ஷினியை மாற்ற சொன்னார்.
ரிஷன் அறையில் வினு ரெடி ஆகி ஹர்ஷினியின் அறைக்கு அழைத்து வரப்பட்டான்.
ஹர்ஷினி மிதமான ஒப்பனையில் ரெடி ஆகி… கையில் பால் சொம்பு கொடுத்து அவள் அறைக்கு அழைத்துச் சென்றார் சாரதா.
உள்ளே வந்த ஹர்ஷினியை வினு வைத்த கண் எடுக்கலாம் பார்த்தான். நெற்றியில் குங்குமம்.. கழுத்தில் புதுத் தாலி, லைட் க்ரீன் சாரீ, காலில் மெட்டி அழகாக இருந்தாள்.
“பாவா இந்தாங்க பால்” என்றாள். கொஞ்சம் பதட்டமாக இருந்தாள்.
“இப்போ பால் வேண்டாம் உக்கார்” என்றான் வினு.
மெதுவாக வினு நேத்ரன் அருகில் அமர்ந்தாள் ஹர்ஷினி.
வினு அவள் கையோடு கை கோர்த்துக் கொண்டான். மெதுவாக இன்று ஈவினிங் மாடியில் நடந்தை சொன்னான்.
ஹர்ஷினியும் சாரதா அத்தையிடம் தன் அன்னை பேசிய விஷயங்களைச் சொன்னாள்.
வினு நேத்ரன் அவள் கைகளுக்குக் குட்டி குட்டி முத்தம் வைத்தான். அவளுக்குக் கூச்சமாக இருந்தது கையை இழுத்து கொண்டாள்.
வினு நேத்ரன் சிரித்துக் கொண்டே அவளை அணைத்தான், காதில் “கண்ணம்மா…. உனக்கு ஓகே வா” என்று கேட்டான்.
ஹர்ஷினி நேத்ரன் கண்களைப் பார்த்து வெக்க பட்டுக் கொண்டே “ம்ம்ம்ம்” என்று முனங்கினாள்.
அவள் இதழோடு இதழ் பொருத்தி அவள் தயக்கங்களை உடைத்தான்.
அதன் பின் வினு நேத்ரன் ஹர்ஷினியை தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து அவனும் வென்று அவளையும் வெற்றி பெற வைத்தான்.
“கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று படத் தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற…”
தன் இணையை வெற்றி பெற வைப்பதில் தான் ஒர் ஆணின் வெற்றியும் உள்ளது. இதனை உணர்ந்தால் வாழ்க்கை அழகாக மாறும்.
ரிஷனின் காத்திருப்பு
வெற்றி பெறுமா…?
அவன் நம்பிக்கை நடக்குமா…?
பார்க்கலாம்..