மௌனத்தின் நேசம் – 12

அத்தியாயம் – 12

ராஜதுரையைத் திருச்சி காவல் நிலையத்திக்குக் கொண்டு சென்றனர்.

அவனைப் போக்சோ சட்டத்தில் கைது செய்ததால் அவனுக்கு ஜாமின் கூடக் கிடைக்காது.

அவன் மேல் FIR பதிவு பண்ணி மெஜிஸ்டிரேட் முன் ஆஜர்படுத்தி 15 நாள்கள் ரிமாண்டில் எடுத்தனர். அவன் செல்போனை கை பற்றினர். அதில் பல பெண்களை ரேப் செய்த வீடியோக்கள், பல பெண்களின் ஆபாசமான வீடியோக்கள் என்று நிறைய இருந்தது. இப்போ கைது செய்யக் காரணமாக இருந்த அந்த மைனர் பொண்ணை ரேப் செய்த வீடியோவும் இருந்தது. அது பலமான ஆதாரமாக இருந்தது. கண்டிப்பாக அவனுக்குச் சிறை தண்டனை கிடைக்கும்.

கதிரேசன், சரோஜா, நாகராஜன் எவ்வளவோ போராடியும் அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

கதிரேசன் மற்றும் சரோஜா தங்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.

நாகராஜன் திண்டுக்கலில் ரவீந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ள ஹாஸ்பிடலுக்குச் சென்றான்.

காஞ்சனா அழுது கொண்டே…

“மாமா அப்பாக்கு ஹார்ட் அட்டாக்ன்னு சொல்லுறாங்க” என்றாள்.

அவள் சொன்ன உடன் நாகராஜன் டாக்டரை பார்த்து விட்டு வந்தான்.

“என்ன டா.. சொல்லுறாரு டாக்டர்…” என்று கேட்டார் பாண்டி.

“ஏதோ டெஸ்ட் எல்லாம் எடுத்து இருக்காங்களாம் அது வந்ததுக்கு அப்பறம் தான் உறுதியா ஏதாவது சொல்ல முடியும் சொல்லுறாரு” என்றான்.

மாலா நாகராஜனிடம் வந்து “மாப்பிள்ளை சின்ன மாப்பிள்ளை….” என்று இழுத்தார்.

“அவனைப் போக்சோ சடத்தில் கைது பண்ணி இருக்குறனால ஜாமினில் கூட எடுக்க முடியல, 15 நாள் ரிமாண்ட்லா வச்சு இருக்காங்க” என்றான்.

அவர் காயத்திரியை பார்த்து கொண்டே… “இப்போ என்ன மாப்பிள்ளை செய்யுறது” என்று கேட்டார்.

“ம்ம்ம்ம் பார்க்கலாம் அத்தை மாமா நல்லா ஆகி வீட்டுக்கு வரட்டும் அப்புறம் என்னனு முடிவு எடுப்போம்” என்று கூறினான்.

ரவீந்திரன் டெஸ்ட் ரிசல்ட் முடிவுகள் வந்தது.. எதுவும் நல்லவிதமாக இல்லை அவருக்கு ஆபரேஷன் பண்ண முடியாத சூழ்நிலையில் தான் அவர் உடல் இருந்தது.

கிட்டத்தட்ட ஆறு இடங்களில் அடைப்புகள் இருந்தது அதுவும் நான்கு இடங்கள் இதயத்தின் முக்கிய இடத்தில் இருந்தது. ஆபரேஷன் செய்தால் கண்டிப்பாகப் பின்விளைவுகள் வேற மாதிரி இருக்கும்.

டாக்டர் அனைவரையும் அழைத்து டெஸ்ட் ரிசல்ட் பற்றிச் சொல்லி விட்டார். ஆபரேஷன் செய்ய முடியாது இப்போதைக்கு.. இன்னும் 24 மணி நேரத்துக்குள்ளே நினைவு திரும்பினால் நல்லது இல்லை என்றால் அவர் பிழைப்பது ரொம்பக் கஷ்டம் என்று சொல்லி சென்றார்.

அனைவரும் கலங்கி நின்றனர். மாலா உடனடியாகக் கடவுளை வேண்டி கொண்டார்.

காயத்திரி அழுது கொண்டே இருந்தாள்.

காஞ்சனா தன் அன்னை அருகில் அமர்ந்து அன்னையைக் கட்டி கொண்டு அழுதாள்.

ஒரு நாள் முழுவதும் எந்த வித மாற்றும் இன்றிச் சென்றது. ரவீந்திரன் உடலில் முன்னேற்றம் எதுவுமின்றி இருந்தார்.

இரண்டாம் நாள் அதிகாலையில் அவர் பல்ஸ் ரேட் குறைந்து கொண்டே இருந்தது. டாக்டர் நம்பிக்கை இன்றிச் சொல்லி சென்றார்.

குடும்ப உறப்பினர் எல்லாம், ஐசியுவில் இருந்தனர். மாலா, காஞ்சனா, காயத்திரி எல்லாம் அழுது கொண்டு இருந்தனர்.

சில நிமிடத்திலேயே ரவீந்திரனின் ஆன்மா சிவனடி பதவியை அடைத்து.

“இறப்பு…மெல்லிய நிழல் போல வரும்,வாழ்வின் பயணத்தில் ஒரு மௌன இசை.காலம் தொடும் கையில் உயிர் மறையும்,ஆனால் நினைவுகள் என்றும் தங்கிடும். பூக்கள் உதிர்ந்து மண்ணில் கலந்தாலும்,

அவற்றின் நறுமணம் காற்றில் நீளுமே…. இறப்பு முடிவல்ல, ஒரு மாற்றம் தானே,ஆன்மாவின் பயணம் புதிய பாதையிலே…”

ஒரு நொடி போதும் உடலை விட்டு உயிர் பிரிய…. மனிதர்கள் ஆடும் ஆட்டம் தான் என்ன….!! என்ன…..!!.

ஹாஸ்பிடல் பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து விட்டு… வீட்டுக்கு ரவீந்திரனின் பூத உடலை எடுத்து வந்தனர்.

பாண்டி மற்றும் நாகராஜன் தான் எல்லா உறவினர்களுக்கும் தகவல் சொல்லினர்.

கதிரேசன், சரோஜா வந்திருந்தனர்.

சிறையில் இருக்கும் ராஜதுரைக்குக் கூடத் தகவல் சொல்லப்பட்டது.

ரெங்கநாதன், சாரதா வந்திருந்தனர்.

தீபாலக்ஷ்மியால் வர இயலவில்லை கல்யாண தேதி குறித்த பின் தீட்டு வீட்டுக்கு எல்லாம் செல்லக்கூடாது.

ஜெகதீஸ்வரனுக்கும் அதே நிலைதான்.

ரிஷன் ரவீந்திரன் இறப்பை கேட்ட நொடி முதல் காயத்திரியை நினைத்து வருந்தினான். இதனால் அவளுக்கு என்னவெல்லாம் தொல்லைகள் வருமோ என்று பயந்தான்.

ராஜதுரை உடன் நடக்க இருந்த நிச்சயம் நின்றது அவனுக்குச் சந்தோசம் தான் ஆனால் அவள் தந்தையின் இறப்பு மீள முடியாத துயரம்.

மாலா சுக்குநூறாக உடைந்து விட்டார். காஞ்சனா மற்றும் மகேஷ்வரி கத்தி கதறிக் கொண்டு இருந்தனர். மானஷா இதையெல்லாம் பார்த்து மிரண்டு போய் இருந்தாள். காயத்திரி தான் அவளைப் பார்த்துக்கொண்டாள். அவளுக்கும் தாங்க முடியாத துயரம் தான்.. அவள் தந்தையின் இறப்பை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனதளவில் நொறுங்கி போனாள்.

இறுதியாக ரவீந்திரன் உடலை எடுக்கும் நேரம் மாலாக்கு செய்யும் சடங்களைச் செய்தனர். எல்லாம் முடித்து அவரை அழைத்துக்கொண்டு உள்ளே செல்லும் போது… அங்கு நின்றிருந்த காயத்திரியை பார்த்து

“உன் கழுத்தில தாலி ஏற நினைச்சதுக்கு என்னோட தாலியா அறுத்து விட்டேல உனக்குச் சந்தோஷமா டி.. நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டி” என்று சாபமிட்டு சென்றார்.

காயத்திரி விக்கி போய் நின்றாள். அவள் அருகில் கூட யாரும் செல்லவில்லை. மீறி சென்றால் மாலாவின் ஏச்சு பேச்சுக்கு பயந்து அனைவரும் ஒதுங்கி கொண்டனர்.

மருமகன் என்ற முறையில் நாகராஜன் தான் இறுதி சடங்கை எல்லாம் செய்தான்.

அவருக்கும் கொல்லி கூட அவன் தான் வைத்தான்.

ரவீந்திரனின் அத்தியாயம் முடிந்தது.

**************************************

வினு நேத்ரன் ஹர்ஷினி கல்யாணத்துக்குச் சொற்ப நாள்களே இருந்தால் இரு குடும்பத்தார்களும் கல்யாண பணியில் மும்முரமாக இருந்தனர்

இன்று திருமண ஜவுளி எடுக்க அனைவரும் மதுரையில் உள்ள பிரபலமான ஜவுளி கடைக்கு வந்திருந்தனர்.

ஜெகதீஸ்வரன் குடும்பமும், செந்தில் நாதனின் குடும்பமும் அதில் விசாகன் மட்டும் வரவில்லை, இவர்களுடன் ரெங்கநாதன் மற்றும் சாரதாவும் இணைந்து காலை 10 மணிக்கெல்லாம் ஜவுளி கடைக்கு வந்து விட்டனர்.

பொதுவான நலம் விசாரிப்புக்குப் பின் ஜவுளி எடுக்கச் சென்றனர்.

வினு ஹர்ஷினியை ரசித்துப் பார்த்துக் கண் அடித்து விட்டுச் சென்றான்.

ஹர்ஷினி மனதுக்குள் “கள்ளன்” என்று செல்லமாகக் கொஞ்சி கொண்டாள்.

நல்ல நேரத்துக்குள் முகூர்த்த புடவையை எடுத்து விடலாம் என்று எண்ணி முகூர்த்த புடவை பார்க்க சென்றனர்.

தீபாலக்ஷ்மி தான் மருமகளுக்குப் புடவை எடுப்பேன் என்று சொல்லி புடவைகளை ஹர்ஷினி மேலே போட்டு பார்த்துச் செலக்ட் பண்ணி கொண்டு இருந்தார். ஹர்ஷினி அருகில் வினு நின்று இருந்தான்.

நான்கு புடவைகள் செலக்ட் செய்தார் தீபாலக்ஷ்மி.

லெவெண்டர் கலர், ஸ்கை ப்ளூ கலர், டார்க் ரோஸ், மற்றும் மெரூன் கலர் என்று நான்கு புடவைகள் இருந்தது.

அதில் லெவெண்டர் மற்றும் ஸ்கை ப்ளூ கலர் என்று இரண்டு புடவைகளை வினு நேத்ரன் செலக்ட் செய்தான்.

கடையின் ஊழியர்கள் வந்து ஹர்ஷினிக்கு இரண்டு புடவைகளைக் கட்டி ட்ரையல் பார்த்தனர்.

அதில் லெவெண்டர் கலர் புடவை தான் நன்றாக இருந்தது. அதனையே செலக்ட் செய்தனர்.

மாப்பிள்ளைக்குப் பட்டு வேட்டி சட்டை எடுத்தனர்.

அதன் பின் பெரியவர்கள் புடவை எடுக்க ஆரம்பித்தனர்.

கல்யாண ஜோடி தனியாக ஒதுங்கி கொண்டார்கள்.

ஹர்ஷினி “ பாவா காயத்திரி மதினி கிட்ட பேசுனீங்களா எப்படி இருக்காங்க…?” என்று அவசரமாகக் கேட்டாள்.

“ம்ம்ம்ம் இருக்கா அவளால என்னோட கூடச் சரியா பேச முடியல” என்று வருத்தமாகச் சொன்னான்.

“பெரியப்பா இறந்த அன்னைக்கு மாலா பெரியம்மா காயத்திரியை ரொம்பப் பேசிட்டாங்க… அவளுக்குச் சாபம் எல்லாம் வேற குடுத்து இருக்காங்க… சாரதா பெரியம்மா தான் சொல்லி சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க….” என்று ஆற்றாமையாகச் சொன்னான்.

“என்ன பாவா இதெல்லாம்…. எனக்கு என்ன சொல்லுறது தெரியலை” என்றாள்.

“சரி விடு உங்க அண்ணா என்ன சொல்லுறாங்க” என்று கேட்டான்.

“சென்னைக்கு ட்ரான்ஸபெர் கிடைச்சு இருக்கு அண்ணனுக்கு…. நம்ம கல்யாணம் வரைக்கும் ஒர்க் பிரேம் ஹோம் பார்த்துட்டு அப்பறம்மா போய் ஜாயின் பண்ணனும்ன்னு சொன்னாங்க, மதினி அப்பாக்கு இப்படி ஆனதுனால ஒரு வருஷம் எதுவும் செய்ய முடியாது தான அதான் வெயிட் பண்ணலாம் நினைக்கிறேன் என்று சொன்னாங்க” என்றாள் ஹர்ஷினி.

“ஓஓஓஓ ஆமா அது வேற இருக்கோ.. “என்று விரலால் நெற்றியை கிரிக்கொண்டே சொன்னான்.

இவர்கள் பேசி கொண்டு இருப்பதை ரிஷன் பார்த்தான். அவன் மனதுக்குள் காயத்திரி நியாபகம் தான் வந்தது. தங்கச்சி கல்யாணத்துக்குப் பட்டு வேட்டி சட்டை மட்டும் எடுத்துக் கொண்டான்.

அமைதியாக அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்று இருந்தான்.

ரிஷன் பார்ப்பதை பார்த்த வினு நேத்ரன் ஹர்ஷினியிடம்…

“என்ன உங்க அண்ணா நம்மளவே பார்க்கிறார் வா போய் என்னனு கேப்போம்” என்று சொல்லி ரிஷன் அருகில் சென்றனர் இருவரும்.

“என்ன மச்சான் எங்களையே பார்த்துட்டு இருக்கீங்க… என்ன என்னோட தங்கச்சி நியாபகமா…?” என்று கேட்டான் ( வினு நேத்ரன் ரிஷனை விட ஒன்றை வயது சின்னவன்).

ரிஷன் வினு சொல்லுவதைப் புரியாமல் நெற்றியை சுருக்கி பார்த்தான்.

“என்ன மச்சான் புரியலையா… காயத்திரி என்னோட தங்கச்சி” என்றான்

(மாலாவின் அன்னையும், தீபாலக்ஷ்மியின் அன்னையும், ஒன்றாகப் பிறந்தவர்கள்.)

அப்போது தான் ரிஷனுக்கு வினு நேத்ரன், காயத்திரியின் உறவு முறை நியாபகத்துக்கு வந்தது. வினுக்கு எப்படிக் காயத்திரியை பற்றித் தெரியும் என்று நினைத்து ஹர்ஷினியை பார்த்தான்.

ஹர்ஷினி…. “அண்ணா பொண்ணு பார்க்க வந்த போது நிச்சய தேதி சொல்லும் போது ஏன் தயங்குனிங்க என்று கேட்டாங்க அதான் மதினி பத்தி சொல்லிட்டேன்” என்றாள்.

“பாப்பா அவளோட நிலைமை தெரிஞ்சு இருந்தும் ஏன் மா….?” என்று கேட்டான்.

“மச்சான் காயத்திரி என்னோட செல்ல தங்கச்சி அவ சந்தோசமா இருக்கனும் தான் நானும் ஆசை படுறேன் இதனால காயுக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்னை நம்புங்க” என்று சொன்னான் வினு நேத்ரன்.

“வினு உங்கள நம்பாமல் இல்லை அவளுக்கு எதாவது ஒன்னுனா என்னால தாங்கிக்க முடியாது அதான்” என்றான் ரிஷன்.

“ இவ்வளவு லவ் பண்ணுறீங்க‌… அப்புறம் எப்படி மனசார அந்தப் பொம்பள பொறுக்கி நிச்சயம் பண்ண ஒதுக்கிட்டீங்க…?” என்று கேட்டான் வினு நேத்ரன்.

“வேற வழி இல்லை வினு எனக்கு” என்று வருத்தமாகச் சொன்னான்.

“உங்களுக்கு வேணா வழி இல்லாம இருக்கலாம் மச்சான் ஆனா அண்ணனா எனக்கு வழி இருந்தது… அதான் கட்டம் கட்டி அந்தப் பொறுக்கியை தூக்கி ஜெயிலுக்குள்ள வச்சேன்” என்று சொன்னான் வினு நேத்ரன்.

இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்….

“என்ன சொல்லுற நீ” என்று அதிர்ச்சி குறையாமல் கேட்டான் ரிஷன்.

மச்சான் ஷாக்கை குறைங்க… “என்னோட நண்பன் ஒருவன் திருச்சியில் அசிண்ட் கமிஷனராக இருக்கான் அவன்கிட்ட ராஜதுரையைப் பத்தி விசாரிக்கச் சொன்னேன் அப்போ இந்த மைனர் பொண்ணை ரேப் பண்ணது தெரிஞ்சுச்சு அதான் போக்சோல அர்ரெஸ்ட் பண்ணிட்டான்” என்று அசால்ட்டா சொன்னான்.

ஹர்ஷினிக்குச் சந்தோஷமாக இருந்தது.

“அவன் போனை போலீஸ் கைபற்றிப் பார்த்து இருக்காங்க அதில் அந்தப் பொண்ணை ரேப் பண்ண வீடியோ இருந்திருக்கு அதுனால கண்டிப்பா அந்த நாய்க்குத் தண்டனை கிடைக்கும்” என்று சற்றுக் காட்டமாகச் சொன்னான்.

அப்போது சாரதா ஹர்ஷினியை அழைத்தார்.

அவள் சென்ற உடன்

“மச்சான் உங்க கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்….. கொஞ்சம் பொறுமையா கேளுங்க ப்ளீஸ் மச்சான்” என்றான் வினு நேத்ரன்.

“என்ன விஷயம் வினு” என்று யோசனையாகக் கேட்டான் (மனதுக்குள் ஏதோ காயத்திரி பத்தி தான் விஷயம் என்று உணர்த்து கொண்டான்).

“ராஜதுரை போனில் நிச்சயத்தன்னைக்குக் காயுக்கு தெரியாம தப்பா வீடியோ எடுத்திருக்கான். ஆனா தப்பா எதுவும் ரெகார்ட் ஆகல…. அந்தப் பொறுக்கி பேசுனது ரெகார்ட் ஆகி இருக்கு உங்களுக்கு அந்த வீடியோவை அனுப்புறேன் நீங்களே பார்த்துக்கோங்க” என்று சொல்லி வீடியோவை ரிஷனக்கு அனுப்பி வைத்தான்.

ரிஷன் காதில் ப்ளூடூத் கனெக்ட் செய்து அந்த வீடியோவை பார்த்தான்…

(ராஜதுரை நிச்சயத்தன்று காயத்திரி ரூமில் எடுத்த வீடியோ தான் அது.)

“எப்படி வினு உங்க பெரியம்மாவால் இப்படி எல்லாம் நடந்துக்க முடியுது அவுங்க பொண்ணு தானா காயத்திரி” என்று ஆதங்கமாகக் கேட்டான் ரிஷன் கிருஷ்ணா.

வினு நேத்ரன் அமைதியாக இருந்தான்… அவனுக்குள்ளும் இந்தக் கேள்வி தான் ஓடிட்டு இருக்கு அந்த வீடியோ பார்த்தது முதல்….

வினு நேத்ரனை அழைத்தார் தந்தை. ஜவுளி வேலை எல்லாம் முடிந்து. மிச்ச வேலை எல்லாம் முடிச்சுட்டுக் கிளம்பலாம் என்றார்.

கல்யாண ஜவுளி எல்லாம் எடுத்து விட்டு அன்று நல்ல நாள் என்பதால் நகைக்கடைக்குச் சென்று தாலி வாங்கி விட்டு…

மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தாலி,புடவை வைத்து கும்பிட்டு விட்டு, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அவர் அவர் வீட்டுக்கு சென்றனர்.

வினு நேத்ரன் ஹர்ஷினியை பிரிய மனம் இன்றிச் சென்றான்.

ஹர்ஷினியும் அதே நிலையில் தான் இருந்தாள்.

ரிஷன், வினு இருவரின் சந்தேகம் சரியா…?

உண்மையில் காயத்திரி மாலாவின் மகளா…?

ஒரு தாயால் இப்படி எல்லாம் செய்ய முடியுமா…?

பார்க்கலாம்……

error: Content is protected !!