மௌனத்தின் நேசம் – 11

அத்தியாயம் – 11

அன்று மாலை திரும்பவும் ராஜதுரை காயத்திரிக்குத் தொலைபேசியில் அழைத்தான்.

ரிங் முழுவதும் சென்று கட் ஆனது.

யோசணையாக இரண்டாம் தடவை அழைத்தான் சில பல ரிங் சென்ற பின்பு தான் எடுத்தாள்.

“ஹலோ என்ன டி போன் எடுக்க இவளோ நேரம் மா…?” என்று காட்டமாகக் கேட்டான்.

“கிட்சேனில் இருந்தேன் மச்சான் வரதுக்குள்ள கட் ஆகிடுச்சு” என்றாள்.

“ம்ம்ம்ம் சரி உனக்குச் சேலையோட போட்டோஸ் அனுப்பி இருக்கேன் பாரு” என்றான்.

அவளும் வாட்சப்பில் அனுப்பி இருந்த போட்டோவை பார்த்தாள்.

வெந்தைய கலர் புடவை அழகாக இருந்தது.

“ம்ம்ம்ம் பார்த்துட்டேன் மச்சான் நல்லா இருக்கு” என்றாள்.

“சரி டி இப்போ உடம்புக்கு எப்புடி டி இருக்கு பொண்டாட்டி ….” என்று கேட்டான்.

“இப்போ பரவாயில்லை மச்சான்… தூங்கி எழுந்ததுக்கு அப்பறம் கொஞ்சம் நல்லா இருக்கு” என்றாள் காயத்திரி.

“ம்ம்ம்ம் ஜூன் 14 உன்னைப் பார்த்துக்கிறேன்…. உடம்பைக் கவனமாக பார்த்துக்கோ” என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லி போனை வைத்து விட்டான் ராஜதுரை.

இரண்டு எங்கேஜ்மெண்ட் வேலைகளும் மும்முரமாக நடந்தது.

இடைப்பட்ட நாள்களில் காயத்திரி மனதளவில் ராஜதுரையோடு வாழ்வதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள்.

அதற்காக ரிஷனை மறந்து விட்டாள் என்று அர்த்தம் இல்லை ரிஷன் மேல் உள்ள காதல் இன்றும் உள்ளது. ஆனால் வீட்டை மீறி அவளால் எதுவும் செய்ய முடியாது அவள் எப்பொழுதும் ஒரு சூழ்நிலை கைதி.

கடவுள் மேல் உள்ள நம்பிக்கையிலும், தன் காதல் மேல் உள்ள நம்பிக்கையிலும் இந்த நிச்சயத்துக்குத் தயார் ஆனாள்.

ஜூன் 14 காலை 9.30 – 11 மணிக்கு தான் இரண்டு எங்கேஜ்மெண்டும்.

மதுரை ஜெகதீஸ்வரன் வீடு உறவினர்களில் வருகையால் ஜே.. ஜே.. என்று இருந்தது.

ஹர்ஷினியின் முகம் கல்யாண கலையால் மின்னியது.

சரியாகக் காலை 9 மணிக்கு எல்லாம் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து விட்டனர்.

ரிஷன் மனதுக்குள் கவலை இருந்தும் தன் அன்பு தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் சந்தோசமாகக் கலந்து கொண்டான்.

ஹர்ஷினியை மனைக்கு அழைத்து வந்தனர்.

வினு நேத்ரன் கண்களும், ஹர்ஷினியின் கண்களும் ரகசியமாகச் சந்தித்துக் கொண்டது.

வினு நேத்ரன் தன் புருவத்தை உயர்த்தி “அழகா இருக்க” என்று உதட்டசைவில் சொன்னான்.

மாப்பிள்ளையின் அத்தை முறையில் இருக்கும் பெண்மணி ஹர்ஷினிக்கு நலங்கு வைத்து விட்டு நிச்சயாதார்த்த புடவையை எடுத்து கொடுத்தார்.

ஹர்ஷினி புடவை மாற்ற சென்றாள்.

வந்த உறவினர் அனைவருக்கும் டீ, பலகாரம் தந்து நன்றாக விருந்தோமல் செய்தனர் பெண் வீட்டார்.

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஹர்ஷினி நிச்சயாதார்த்த புடவையில் மனைக்கு வந்தாள்.

பிஸ்தா க்ரீன் நிற புடவையில் மதுரை மல்லிகை சூடி, தங்க சிற்பம் போல் ராஜகுமாரி தோரணையில் மனையில் அமர்ந்தாள்

ஹர்ஷினியின் தாய்மாமா பிரபு அவளுக்கு மாலையிட்டார்.

வினு நேத்ரனும் மனைக்கு அழைத்து வரப்பட்டான்.

வினு நேத்ரன் பட்டு வேட்டி சட்டையில் ராஜகுமாரன் தோரணையில் மனையில் அமர்ந்தான்.

வினுவின் தாய்மாமா குமரவேல் அவனுக்கு மாலையிட்டார்.

பின் இரண்டு தாய்மாமார்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் நலங்கு வைத்து மரியாதை செய்து கொண்டனர்.

ஐயர் நிச்சய தாம்பூலம் வாசித்தார். வருகிற ஆணி மாதம் 3ம் தேதி பெரியவர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

வினு நேத்ரன் ஹர்ஷினின் கையை மெதுவா பற்றி “உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமா…?” என்று கேட்டான்.

ஹர்ஷினி வெக்கப்பட்டுக் கொண்டே… “சம்மதம்” என்று சொன்னாள்.

வினு நேத்ரன் மெதுவாக விரலை பற்றி மோதிரம் அணிவித்தான்.

ஹர்ஷினியும் வினு நேத்ரனின் விரலை பற்றி மோதிரம் அணிவித்தாள்.

ஜெகதீஸ்வரன், யசோதா, ரிஷன் மூவரும் கண்களும் கலங்கியது சந்தோசத்தில்.

வினு நேத்ரன்‌-ஹர்ஷினியின் நிச்சயம் சிறப்பாக முடிந்தது.

“கலகலக்குது கலகலக்குது

கொலுசு சத்தம் கலகலக்குது

எங்கள் வீட்டுக்குள்

தேவதை

வந்துவிட்டாள் பார்த்துக்கோ…

என் அண்ணன் தோள் மேலே

பூமாலையாக ஆனாளே…

அன்பாலே நம் வீட்டை

ஆளும் ராணி ஆனாளே…

அதிகாலையில்

சுப்பிரபாதம்

கேட்கும் இனிமேல்

நம் வீட்டில் எப்போதும்.!!”

கௌஷிக் விசாகன் தன் போனில் இந்தப் பாடலை ஒலிக்க விட்டான்.

பின் உறவினர்கள் அனைவரும் நலங்கு வைத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர்.

செந்தில் ராஜனுக்கும், தீபா லட்சுமிக்கும் தன் மகனை மணக்கோலத்தில் பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக இருந்தது.

அனைவரும் மனங்களும் நிறைந்த இருந்தது.

இந்த வைபவம் நடக்கும் இதே நேரத்தில்…

வேற ஒர் இடத்தில்… இன்னொரு வைபவம்.!!

ஜூன் 14 காலை எழுந்ததில் இருந்து காயத்திரி மனதுக்கு படப்பட என்று இருந்தது. இதோ விபரிதம் நடக்க இருப்பதாக அவளோட உள்ளுணர்வு சொன்னது.

எது நடந்தாலும் நடக்கட்டும் என்று நினைத்து மனதை தைரிய படுத்திக்கொண்டாள்.

ரொம்ப உறவினர்கள் எல்லாம் வரவில்லை, சொற்ப உறவினர்கள் மட்டும் வந்து இருந்தனர்.

காஞ்சனா நேற்று இரவே வந்துவிட்டு இருந்தாள்.

மாலாவின் கண்கள் எல்லாம் காயத்திரி மேல் தான் இருந்தது.

காயத்திரி காலையில் குளித்துப் பிங்க் நிற பட்டு புடவையில், குந்தன் செட் நகை அணிந்து, மிதமான ஒப்பனையில் இருந்தாள்.

காஞ்சனா தன் அன்னையிடம் “அம்மா அவ எதுவும் பிரச்சனை பண்ண மாட்டா தானா?” என்று ரகசியமா கேட்டாள்.

“அவ எதுவும் பண்ண மாட்டாள்” என்று சொன்னார்.

“ம்ம்ம்ம் சரி மா எதுக்கும் கவனமாக இருப்போம். எதாவது நடந்தா என் புருசனுக்கு என்னால பதில் சொல்ல முடியாது” என்று கூறினாள்.

“ம்ம்ம்ம் சரி டி அந்தச் சிறுக்கி கூட நம்ம சுந்தரியை கூடவே இருக்கச் சொல்லி இருக்கேன்” என்றார்.(சுந்தரி பங்கஜத்தின் மகள்)

உறவுகள் படை சூழ மாப்பிள்ளை வீட்டார் காலை 9 மணிக்குப் பெண் வீட்டை அடைந்தனர்.

மாலா மற்றும் காஞ்சனா மாப்பிள்ளைக்கு ஆலம் சுற்றி வரவேற்றனர்.

ராஜதுரை பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக உள்ளே வந்தான்.

நாகராஜன் வந்த உடன் தன் மனைவி காஞ்சனாவை அழைத்து

காஞ்சி “காயத்திரி எதுவும் பிரச்சனை பண்ணலை தானே?” என்று கேட்டான்.

“அவள் எதுவும் பண்ணல மாமா அவ கூடச் சுந்தரி இருக்கா” என்றாள்.

“ம்ம்ம்ம் சரி சரி பார்த்துக்கோ” என்று சொல்லி சென்று ராஜதுரை பக்கத்தில் அமர்ந்தான்.

ராஜதுரை நாகராஜனிடம் “டேய் அவ ட்ரெஸ் மாத்தும் போது நானும் கூட இருக்கனும்” என்று சொன்னான்.

“டேய்ய் இத்தனை பேர் இருக்காங்க…. இப்போ போய் எப்படி டா ..? கொஞ்சம் பொறுத்துக்கோ இந்த நிச்சயம் முடுஞ்ச உடனே நான் எதாவது ஏற்பாடு பண்றேன் சரியா…” என்றான் நாகராஜன்

ராஜதுரைக்கு ஏமாற்றமாக இருந்தது. இருந்தும் விடாமல்

“சரி டா..‌. ஆனா நான் இப்போ காயத்திரி கூடப் பேசணும் அதையாவது செய்” என்றான் அதிகாரமாக.

“சரி இரு வரேன்” என்று சொல்லி சென்றான் நாகராஜன்.

மாலாவிடம் சென்று ராஜதுரையின் ஆசையைச் சொன்னான்.

மாலா…. “சரிங்க மாப்பிள்ளை இந்தா இப்பவே சின்ன மாப்பிள்ளையை அவ ரூம்க்கு கூட்டிட்டு போறேன்” என்று சொல்லி….

ராஜதுரையிடம் சென்று மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு காயத்திரியின் அறைக்குள் சென்றாள்.

காயத்திரி ராஜதுரை தன்னைப் பார்க்க வருவான் என்று நினைக்கவில்லை.

காயத்திரியிடம் “ஏய் மாப்பிள்ளை ஏதோ உன்கிட்ட பேசணுமா ஒழுங்கா பேசு” என்று சொல்லி ராஜதுரையை அறைக்குச் செல்ல சொல்லிவிட்டு சுந்தரியை அழைத்துக் கொண்டு வெளியே வந்து அறையை மூடி விட்டு சென்றார் மாலா.

காயத்திரிக்கு ஒரு மாதிரி இருந்தது தன் அன்னை செய்ததைப் பார்த்து. வேற வழி இல்லை இது தான் தன்னுடைய வாழ்க்கை என்று முடிவு எடுத்து விட்டு அமைதியாக நின்று இருந்தாள்.

ராஜதுரை காயத்திரியை தலை முதல் கால் வரை ரசித்து ரசித்துப் பார்த்தான்.

மெதுவாகக் காயத்திரி அருகில் சென்று அவள் கைகளைப் பற்றி வருடினான்…

காயத்திரிக்குக் கூச்சமாக இருந்தது…

பின் மெதுவாக அவள் பக்கத்தில் நெருங்கி நின்று அவள் காதில்…

“நீ நிச்சயாதார்த்த புடவை மாற்றும் போது நான் பார்க்கணும் டி…” என்று ஆசையாகச் சொன்னான்.

காயத்திரியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

“ஐயோ!!… என்ன சொல்லுறீங்க?” என்று கேட்டாள்

“என்ன டி பொண்டாட்டி… எதுக்கு இவளோ ஷாக் ஆகுற நான் வாங்கிக் குடுத்து இருக்கிற எல்லாமே…. உனக்குச் சரியா இருக்கா… இல்லையா… ன்னு நான் பார்க்க வேண்டாமா.?” என்று கேட்டான்.

காயத்திரிக்கு வார்த்தைகள் வரவில்லை…

“கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க தான பார்க்க போறீங்க மச்சான்… அதுக்குள்ள என்ன அவசரம்?” என்று கேட்டாள்.

“அது வரைக்கும் எல்லாம் எனக்குப் பொறுமை இல்லை.. நான் இப்போவே நீ புடவை மாத்தும் போதே எல்லாத்தையும் பார்க்கணும்” என்று பிடிவாதமாகச் சொன்னான்.

நேரம் போவதால் காயத்திரியை மனைக்கு அழைக்கக் காஞ்சனா கதவை தட்டினாள்.

காயத்திரி கதவை திறந்தாள்.

“உன்னை மனைக்குக் கூப்புடுறாங்க வா” என்று அழைத்துச் சென்றாள் காஞ்சனா.

ராஜதுரை காயத்திரியின் அறையில் அமர்ந்து கொண்டான். அவன் மனதில் காயத்திரியை “நான் தான் முதலில் முழுசா பார்க்கனும்… அப்படியே போனில் வீடியோ எடுத்து வச்சுக்கணும். டெய்லியும் அதைப் பார்த்து பார்த்து ரசிக்கணும். நாகராஜன் இரண்டாவாதான் இருக்கனும்” என்று அல்பத் தனமான ஆசை கொண்டான்.

காயத்திரி மனைக்குச் சென்று எல்லாரும் பொதுவாக வணக்கம் சொன்னாள்.

ராஜதுரையின் அத்தை காமாட்சி காயத்திரிக்கு நலங்கு வைத்து நிச்சயாதார்த்த புடவையை எடுத்துத் தந்தார்.

காயத்திரி புடவையை மாற்ற தன் அறைக்குள் வந்தாள். காயத்திரியின் அறையில் ராஜதுரை அமர்ந்து இருந்தான்.

காயத்திரி கூடவே வந்த காஞ்சனா மற்றும் மாலா ராஜதுரையைப் பார்த்து தயங்கினர். ராஜதுரை போனில் வீடியோ ரெகார்ட் போட்டு ரெடியாக இருந்தான்.

“மாப்பிள்ளை…” என்று தயக்கமாக அழைத்தார் மாலா.

“நான் காயத்திரி புடவை மாத்துறதை பார்க்கணும்” என்று பச்சையாகச் சொன்னான்.

“சரிங்க மாப்பிள்ளை…” என்று சொல்லி கதவை தாழ் வைத்தார் மாலா.

காயத்திரிக்கு அருவருப்பாக இருந்தது. கல்யாணம் முடிந்திருந்தால் கூட மனதுக்குப் பெருசாக தெரியாது இப்போ அவளால் எதுவும் செய்ய முடியாமல் நின்று இருந்தாள். மனதுக்குள் ரிஷனிடம் “மாமா ஏதாவது பண்ணுங்க என்னால் முடியல ப்ளீஸ் மாமா…..” என்று மன்றாடினாள் காயத்திரி.

“சீக்கிரம் டைம் ஆகுது டி மாத்து…” கண்கள் ஜொலிக்க, வாயில் எச்சி ஊற, கூறினான் ராஜதுரை.

காயத்திரி வேற வழி இல்லாமல் மனதைத் திடப்படுத்திக் கொண்டு… பின்புறம் திரும்பி நின்று புடவையின் பின்களைக் கழற்றினாள்.

“ஒழுங்கா முன்னாடி திரும்புனா என் சுண்டு விரல் கூடப்படாமல் வெளிய போவ… இல்லன்னு வை இங்கயே இப்பவே முதல் ராத்திரி நடக்கும்” என்று மிரட்டினான்.

காயத்திரி தன் நிலைமையை நொந்து கொண்டே முன்னாடி திரும்பினாள்.

“சீக்கிரமா டி… மாரப்புப் பின்ணைக் கழட்டு உன் நெஞ்சு குழியைப் பார்க்கணும்” என்று அவசர படுத்தினான்.

புடவை மாற்ற சென்ற அதே சமயம் காயத்திரி வீட்டு முன்னால் போலீஸ் ஜீப் வந்து நின்றது.

ஐந்து காவலர்கள் உள்ளே வந்தனர்.

உள்ளே இருந்த அனைவரும் ஸ்தம்பித்துப் போயினர்.

தலைமை காவலர் “இங்க ராஜதுரை யாரு..?” என்று அதிகாரமாகக் கேட்டார்.

“எதுக்கு ஐயா என்னோட பிள்ளையையா கேக்குறீங்க?” என்று கொஞ்சம் பயந்து கொண்டே கதிரேசன் கேட்டார்.

“உன் பையன் எங்கே.?” என்று கேட்டார்.

“உள்ளே இருக்கான்..” என்றார்

“கூப்புடு…” என்றார் காவலர்.

சரியாக மாரப்புப் பின் கழட்டும் போது கதவு தட்டப்பட்டது.

“யாரு…?” என்று எரிச்சலாகக் கேட்டான் ராஜதுரை.

“டேய்… வெளிய வா” என்று குரல் கொடுத்தார் தந்தை.

தந்தையின் குரல் கேட்ட உடனே யோசனையாகக் கதவை திறந்து வெளியே வந்தான் ராஜதுரை.

காயத்திரி மனதுக்குள் நிம்மதியாக உணர்ந்தாள்.

அவனைப் பார்த்த தலைமை காவலர் “ வா டா துரை உன்னை அர்ரெஸ்ட் பண்ண தான் வந்திருக்கோம்” என்று சொன்னார்.

சார் “என்ன எதுக்கு அர்ரெஸ்ட் பண்ணுறீங்க? நான் எந்தப் தப்பும் பண்ணல…” என்று பதட்டமாகச் சொன்னான் ராஜதுரை.

புடவையைச் சரி செய்து விட்டு காயத்திரி எட்டி பார்த்தாள்.

நாகராஜன் போலீஸிடம் சென்று… “என்ன காரணத்துக்கு அவனை அர்ரெஸ்ட் பண்ண வந்து இருக்கீங்க?” என்று கேட்டான்.

“ஓஓஓஓ அதுவா… துரை மைனர் பொண்ணை கெடுத்துட்டான் அந்த பொண்ணும் வாக்குமூலம் கொடுத்திருக்கா, அதான் இவனை போக்சோ சட்டத்தில் அர்ரெஸ்ட் பண்ணுறோம்” என்று சொல்லி ராஜதுரையை அர்ரெஸ்ட் பண்ணி கூட்டி சென்றனர்.

அங்கு இருந்த அனைவரும் சலசலத்து கொண்டனர்.

காயத்திரிக்கு ஒரு பக்கம் சந்தோஷமாகவும், ஒரு பக்கம் ஆற்றாமையாகவும் இருந்தது. இங்கு நடந்த விஷயத்தைத் தன்னால் தான் நடந்தது என்று தன் குடும்ப உறுப்பினர்கள் சொல்லுவார்கள் என்று நினைத்து ஆற்றாமையாக இருந்தது.

கதிரேசன், சரோஜா, நாகராஜன் மூவரும் பதறிக் கொண்டே போலீஸ் வண்டிக்கு பின்னே சென்றனர்.

ரவீந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஜோசியர் சொன்னது தான் நியாபகத்திற்கு வந்தது தனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்தார்…

சரியாக அந்த நேரம் அவர் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது….

உடம்பு எல்லாம் வேர்த்து வடிந்தது….

இதயத்தில் சுருக்கு.. சுருக்கு.. என்று வலியை உணர்ந்தார்…

உடனே மயங்கி சரிந்தார் ரவீந்திரன்.

காஞ்சனா தான் முதலில் பார்த்தாள்.. “அப்பா….” என்று கத்தி கொண்டே… அவர் அருகில் சென்றாள்.

உடனே மாலா ஐயோ “என்னாங்க…” என்று கதறிக் கொண்டு சென்றார்.

காயத்திரி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

உடனே ஆம்புலன்ஸ் வர வைத்து ரவீந்திரனை ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.

மாலா, காஞ்சனா, மகேஷ்வரி, பாண்டி, காயத்திரி, மானஷா ஆறு பேரும் ஹாஸ்பிட்டலில் இருந்தனர்.

ரவீந்திரன் ஐசியுவில் இருந்தார்.

டாக்டர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருந்தனர்.

சற்று நிமிடம் கழித்து டாக்டர் வந்து “மாசிவ் ஹார்ட் அட்டாக் 36 மணி நேரம் கழுச்சு தான் எங்கனால எதுவும் சொல்ல முடியும்” என்று கூறினார்.

மாலாவின் உலகம் இருண்டது…

காஞ்சனா டாக்டரிடம் “அப்பாவை குணப்படுத்த முடியாதா…?” என்று கேட்டாள்.

“சில டெஸ்ட் எடுத்து இருக்கோம் அதைப் பொறுத்து தான் முடிவு சொல்ல முடியும் இப்போ எதுவும் சொல்ல முடியாது” என்று கூறிவிட்டு சென்றார்.

காயத்திரியின் கண்கள் கலங்கியது. அமைதியாகத் தன் அத்தை மகேஷ்வரியின் கைகளைப் பற்றிக் கொண்டு நின்று இருந்தாள்.

இன்று நடந்த விஷயங்களால் மன நிம்மதி இழந்திருந்தாள். நிச்சயம் நின்றதால் சந்தோசம் பட முடியாமல் தந்தையின் நிலையால் மனம் உடைந்து போய் இருந்தாள்.

போலீஸ் ஜீப்பில் போய்க் கொண்டு இருந்த தலைமை காவலர் ஒரு நம்பர்க்கு “மிஷன் கம்ப்ளீடட்” என்று மெசேஜ் அனுப்பினார்.

ரவீந்திரன் உடல் நிலை என்னவாகும்…?

ராஜதுரையின் நிலைமை என்னவாகும்…?

யாரு ராஜதுரையை அர்ரெஸ்ட் பண்ண சொன்னது….?

பார்க்கலாம்….

error: Content is protected !!