மௌனத்தின் நேசம் – 10

அத்தியாயம் – 10

தன் தாய் பேசி விட்டுச் சென்றது.. அவள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது இரவு எல்லாம் தூங்க முடியாமல் தவித்தாள். மன உளைச்சல் காரணமாக அவளுக்குக் காய்ச்சல் வந்தது. மறுநாள் காலையில் காய்ச்சலோடு தான் எல்லா வேலைகளும் பார்த்தாள்.

காலை 10 மணிக்கு மேல் மாலா வெளியே சென்றார். காயத்திரி தன் தந்தையிடம் பேச நினைத்து இருந்தாள்,

அவள் அன்னை வெளியே சென்ற உடன் தந்தையிடம் பேச சென்றாள்.

அப்பா நான் கொஞ்சம் உங்க கிட்ட பேசணும்” என்றாள்.

ரவீந்திரனுக்கு அவள் என்ன பேச வருகிறாள் என்று தெரியும்.

“ம்ம்ம்ம் என்னனு சொல்லு மா?” என்றார்.

“அப்பா எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் பா வேற மாப்பிள்ளை பாருங்க பா” என்றாள்.

“ஏன் மா ராஜதுரைக்கு என்ன குறைச்சல் அவங்க அப்பாவோட பைனான்ஸ் கம்பெனிய பார்த்துகிறான், சொந்தமா வீடு இருக்கு, காசு பணம் நிறைய இருக்கு இதுக்கு மேலே உனக்கு என்ன வேணும்” என்றார் அப்பா.

“காசு பணம் மட்டும் முக்கியம் இல்லை பா கேரக்டரும் முக்கியம் பா… அவன் ஒரு பொம்பள பொறுக்கி பா” என்று ஆற்றாமையாகச் சொன்னாள்.

“காயத்திரி… வாயை அடக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளையை மரியாதை இல்லாம பேச கூடாது” என்று கோவமாகச் சொன்னார்.

“இங்க பாரு மா ராஜதுரை தான் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை நான் உங்க அம்மாக்குச் சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன்… அதுனால உன் மனச மாத்திகிட்டு ராஜதுரை கூட நல்லா வாழற வழிய பாரு” என்று அறிவுரை கூறினார்.

“அப்பா நேத்து உங்க மாப்பிள்ளை போன் பண்ணி என்கிட்ட அசிங்கமா போட்டோ எல்லாம் கேக்குறாரு அம்மா கிட்ட சொன்ன எடுத்து அனுப்பு அதுல என்ன தப்பு இருக்குனு கேக்குறாங்க…” என்றாள்.

இதைச் சொன்னாலாவது அப்பா மனசு மாறுவார் என நினைத்தாள் காயத்திரி.

அவள் அப்பா “இதுல என்ன மா இருக்கு இன்னும் கொஞ்ச நாளில் அவர் கூடத்தான் உனக்குக் கல்யாணம் உன்னைப் பார்த்து ரசிக்கக் கேட்டு இருப்பாரு… இந்தக் காலத்துல என்னென்னமோ நடக்குது சரியா.. அவர் கிட்ட அவருக்குப் பிடித்த மாதிரி இருடா மா தப்பு எல்லாம் இல்லை” என்றார்.

காயத்திரிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“சரிங்பா உங்க கிட்ட கடைசியா ஒன்னே ஒன்னு கேக்குறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க…” என்று கேட்டாள்.

“என்ன கேளு…” என்றார் யோசையாக.

“ஏன் ?அப்பா அம்மாக்கு என்ன பார்த்தா பிடிக்கல” என்று நீண்ட நாள் தன் மனதை அரித்த கேள்வியைக் கேட்டாள்.

சில நொடி மௌனதுக்குப் பிறகு….

“முதல் குழந்தை பொண்ணாகப் பொறந்ததுக்கு அப்பறம் உங்க அவ்வா பொண்ண பெத்துட்டா இந்த வீட்டுக்கு ஒர் ஆண்வாரிசு பெத்துகாம எவனோ வீட்டுக்குப் போறதுக்குப் பொண்ண போய்ப் பெத்து வச்சு இருக்கானு எப்ப பாரும் சொல்லிட்டே இருந்தாங்க… அதுனால உங்க அம்மா தனக்குப் பையன் வேணும் நினைச்சு தான் ரெண்டாம் தடவையா மாசம் ஆனால்.. நீ உண்டான நாள் இருந்து தனக்குப் பையன் தான் பிறக்கும் நினைச்சு நினைச்சு அதுவே அவளுக்குள் ரொம்ப அழுத்தம் தந்துடுச்சு. அதனாலயே டெலிவரி டைமில் ரொம்பக் கஷ்டம் ஆகிடுச்சு…. அவ உயிரா இல்லை குழந்தையோட உயிரா ஒரு நிலைமை வந்துடுச்சு… ரொம்பச் சிரம்மப்பட்டுத் தான் உன்னைப் பெத்துகிட்டா.. டெலிவரிக்கு அப்பறம் கர்ப்பை ரொம்ப வீக் ஆகிடுச்சு. இன்னொரு குழந்தை பெத்துக்கவே கூடாதுன்னு டாக்டர் கண்டிப்பா சொல்லிட்டாங்க. மீறினால் உங்க அம்மா உயிருக்கு ஆபத்து வரும் டாக்டர் சொல்லிட்டாங்க.

ஆனா நீ பொண்ணுன்னு தெரிஞ்ச உடனே உங்க அம்மா மனசு உடைஞ்சு போய்டா… பையன் பொறக்கலைனு அவ மனச பாதிடுச்சு.. அவனால் இன்னோரு குழந்தை பெத்துக்கவே முடியாது தெரிஞ்சதுக்கு அப்புறம் அவ ரொம்ப ஒடிஞ்சு போய்ட்டா.

உங்க அவ்வா யாருமே உன்னைப் பார்க்க கூட வரல எல்லாமே உங்க அம்மா ஓட சித்தி அதான் பங்கஜம் சித்தியோட அம்மா தான் உங்க அம்மாவை பார்த்துக்கிட்டாங்க…

நீ பொறந்து ஒரு வாரத்துல உங்க அம்மாச்சி தவறிட்டாங்க அதுவும் உங்க அம்மாவை ரொம்பப் பாதிச்சுது…

உன்னை முதல் தடவ பார்க்க உன் தாய்மாமா வடநாட்டில் இருந்து வந்துட்டு போனாரு.. அவர் போய் ரெண்டு நாளில் அவரைப் போதை பொருள் கடத்துன குற்றத்திற்கு அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க… உங்க அவ்வா வேற பையன் பொறக்கலைன்னு உங்க அம்மாவை எப்ப பாரும் குத்தி காட்டி பேசிகிட்டு இருந்தாங்க எல்லாம் சேர்ந்து உன் மேலே வெறுப்பு வந்துடுச்சு.. இந்த அளவுக்கு வெறுப்பு வர காரணம் உங்க அவ்வா தான் பையன் பொறக்கலைனு தேவை இல்லாதது எல்லாம் பேசிடாங்க… நீயும் உங்க அவ்வா மாதிரி கலரா அவங்க ஜாடைல இருக்குறியா. அதனால் அவங்க மேல இருக்குற கோவம் எல்லாம் உன் மேலே வெறுப்பா வந்துடுச்சு” என்று விளக்கமாகச் சொன்னார்.

இது எல்லாம் ஒரு காரணமா நினைச்சா அம்மா என்ன வெறுக்குறாங்க… இல்லை கண்டிப்பா வேற ஏதோ இருக்கு இல்லாம இவளோ வெறுப்பு வராது.. ஒரு வேளை அப்பாக்குத் தெரியாமல் இருக்கலாம் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.

கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்

“உன்னை இந்த அளவுக்குப் படிக்க வச்சதே… உன் ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருக்குனு ஜோசியர் சொன்னதால தான் அவர் தான் உனக்கு 25 வயசு வரைக்குக் கல்யாணம் பண்ண வேண்டாம் என்று சொல்லி இருந்தாரு. இப்போ ஜாதகம் பார்க்க போய் இருந்த போது ராஜதுரைக்கும் அந்தத் தோஷம் இருக்கு ரெண்டு பேருக்கும் பொருத்தம் நல்லா இருக்கு. அது மட்டும் இல்லை இந்தக் கல்யாணம் நல்லா படிய நடக்கலைனா… எனக்கு ஏதோ பெரிய கண்டம் வரும்… கல்யாணம் நடந்தா மட்டும் தான் கண்டத்துல இருந்து நான் தப்பிக்க முடியும், அதுனால நீ ராஜதுரையைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும்.

இந்தக் கல்யாணம் மட்டும் நல்ல படியா நடக்கலைன்னுவை என்னை நீ உயிரோட பார்க்க மாட்டா வேற ஏதாவது பண்ணலாம் நினைச்சா என்னோட பொனத்தைத் தாண்டி தான் நீ செய்யணும்” என்று மிரட்டலாகச் சொன்னார் ரவீந்திரன்.

“என்னைப் படிக்க வச்சுது எல்லாமே ஜாதகத்துல தோஷம் இருந்தனால என் மேலே உங்களுக்குப் பிரியம் எல்லாம் இல்லை… அப்படித் தானா அப்பா?” என்று கேட்டாள் காயத்திரி.

“ஆமா உனக்குத் தோஷம் இருந்தது அதான் நீ படிக்கக் கேட்ட… உங்க தாத்தாவும் உன்னைப் படிக்க வைக்கச் சொன்னாரு அதான். இங்க பாரு நீ ராஜதுரையைக் கல்யாணம் பண்ணாம வேற எதாவது பண்ணி என் பொண்ணு காஞ்சனா வாழ்க்கைல எதாவது பிரச்சனை வந்தது உன்ன நானே கொன்னு போட்டுவேன்” என்றார் ரவீந்திரன்.

“மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இப்படி இருந்தா நீ கட்டிட்டுப் போய்த் திருத்து. அதை விட்டுட்டுப் போட்டோஸ் கேக்குறது எல்லாம் விஷயம்னு பேசாத… அவருக்கு உன்னை ரொம்பப் பிடுச்சு தான் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டாரு அதுனால கொஞ்சம் அனுசருச்சு போ சரியா” என்று அறிவுரை சொன்னார் ரவீந்திரன்.

காயத்திரி மனசு மரத்து போய் விட்டது. எப்புடியும் ராஜதுரையோடு தான் தன் திருமணம் அதில் எதுவும் மாற்றம் ஆகாது தன்னோட மனசை இந்தத் திருமணத்துக்கு ஏற்றவாரு தயார் படித்திக்க நினைத்தாள் காயத்திரி. கடவுள் புண்ணியத்தில் எதுவும் நடந்தால் தான் உண்டு என்று நினைத்தாள் காயத்திரி.

சற்று நேரத்தில் மாலா வீட்டுக்கு வந்தார். ரவீந்திரனிடம் வந்து “மாப்பிள்ளை போன் பண்ணாரு இன்னைக்கு நாள் நல்லா இருக்காம் நிச்சயத்துக்குப் புடவை எடுக்க நம்மளை திருச்சிக்கு வர சொன்னாங்க” என்றார்.

சில நிமிடங்களில் இருவரும் திருச்சிக்கு கிளம்பினர். காயத்திரி தனியே விட வேண்டாம் என நினைத்து அவள் ஒன்று விட்ட சகோதரி பங்கஜம் இரண்டு தெரு தள்ளி இருக்கிறார் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து அவளுக்குத் துணையாக வைத்து விட்டு சென்றார்.

கிளம்புவதுக்கு முன்னால் காயத்திரியிடம்…

“இங்க பாரு பங்கஜத்தை உனக்குத் துணையாக வச்சுட்டு போறேன் ஏதாவது தப்பா பண்ண நினைச்ச ஊரு முழுக்க உன்னை நாரடிச்சுருவேன் பார்த்து கவனமா இருந்துக்கோ” என்று மிரட்டிச் சென்றார்.

அவர்கள் சென்ற உடன் பங்கஜம் டிவி பார்க்க ஆரம்பித்து விட்டார்.

காயத்திரி தன் அறையில் போய்ப் படுத்துக் கொண்டாள். உடல் அசதியாக இருந்ததால் தூங்கி விட்டாள்.

பங்கஜம் அடிக்கடி காயத்திரியை எட்டி பார்த்துக் கொண்டாள்.

அரைமணி நேரம் கடந்து மாலா போன் பண்ணி பங்கஜத்திடம் காயத்திரியை பற்றிக் கேட்டார், “அவள் தூங்குவதாகச்” சொன்னார்.

“சரி கவனமாகப் பார்த்துக்கோ” என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

இரண்டு மணி நேரம் கழித்துக் காயத்திரியின் போன் அடித்தது. ராஜதுரை தான் அழைத்து இருந்தான்.

தூக்கத்தில் இருந்த காயத்திரி போனை அட்டேன் செய்தாள்.

“ஹலோ” என்று மெதுவாகச் சொன்னாள்.

“என்ன டி சத்தமே இல்லாம பேசுற “என்று கேட்டான்.

“ம்ம்ம்ம்… தூங்கிட்டு இருந்தேன்” என்றாள்.

“ஓஓ சரி வீடியோ கால் வா நம்ம நிச்சயத்துக்குப் புடவை எடுக்கணும்” என்றான்.

“மச்சான்… நீங்களே செலக்ட் பண்ணுங்க நீங்க என்ன எடுத்தாலும் எனக்கு ஒகே தான்” என்றாள் காயத்திரி.

“ஏன் டி வீடியோ கால் ல வந்தா என்ன உனக்கு?” என்று கொஞ்சம் பொறுமையாகத் தான் கேட்டான். அவள் மச்சான் சொன்னதால் பொறுமையாக இருந்தான்.

“எனக்குக் காய்ச்சல் மச்சான் உடம்பு எல்லாம் வலிக்குது” என்றாள் தன்மையாக.

“ஓஓ அப்படியா… உண்மையாகத் தானே சொல்லுற… நான் எது எடுத்தாலும் நீ கட்டணும்” என்றான்.

“கண்டிப்பா மச்சான் நீங்க எது எடுத்தாலும் நான் கட்டிக்கிறேன்” என்றாள்.

“ம்ம்ம்ம் சரி உன்னோட சைஸ் என்ன சொல்லு” என்று ஹஸ்கி வாய்ஸ்யில் கேட்டான்.

“மச்சான் புரியல” என்று உண்மையாகவே புரியாத தன்மையில் கேட்டாள்.

“அதுவா… உன் இன்னர்ஸ் சைஸ் சொல்லு நம்ம நிச்சயத்துக்கு நான் வாங்கிக் கொடுக்கிறத்தை தான் நீ போடணும்” என்று அதிகாரமாகச் சொன்னான்.

அவன் இப்படித் தான் என்று தனக்கு நல்லா தெரியும் இதுக்கு மேல நான் தான் என்னை மாத்திக்கணும் என்று முடிவு எடுத்து விட்டு

மச்சான… “கொஞ்சம் பொறுங்க நான் பார்த்து சொல்லுறேன்” என்றாள்.

“ம்ம்ம்ம் சரி லைனில் இருக்கேன் பார்த்து சொல்லு” என்றான்.

அவள் பீரோ திறந்து புதுசா வாங்கி இருந்த பாக்ஸில் இருந்த நம்பரை பார்த்து சொன்னாள்.

அவள் சொன்ன உடன்…

“சும்மா சொல்ல கூடாது டி நீ சைஸ் சொன்னாத வச்சு அதைக் கற்பனை பண்ணி பார்க்கும் போதே சும்மா அள்ளுது டி பொண்டாட்டி…” என்று சொன்னான்.

காயத்திரி மௌனமாக இருந்தாள்

இதுக்கு மேல் அவள் பேச மாட்டாள் என்று நினைத்து… “உடம்பைப் பார்த்துக்கோ” என்று சொல்லி போனை கட் செய்தான்.

அவனுக்குத் தகுந்த மாதிரி நான் தான் மாறனும் இல்லனா வாழ்க்கை முழுக்கக் கஷ்டம். தாத்தா எனக்கு என்ன செய்யுறது தெரியல என்ன காப்பாத்துங்க என்று வேண்டி கொண்டு படுத்து கொண்டாள். இப்படிப்பட்ட ஒருத்தன் கூடத் தான் நான் வாழணுமா மாமா ஏதாவது பண்ணுங்க என்று ரிஷனிடம் மனதுக்குள் பேசிக்கொண்டு படுத்து இருந்தாள்.

**********************

இன்று ஹரிஷினிக்கும் நிச்சயப் புடவை எடுத்திருந்தார்கள். அதைப் பற்றிப் பேச வினு நேத்ரன் ஹரிஷினிக்கு போன் செய்தான்.

வினுநேத்ரன் நம்பரை ரிஷன் ஹரிஷினிக்கு கொடுத்து இருந்தான். அதுனால் வினு கால் பண்ணும் போது “பாவா” என்ற பெயரில் போன் வந்தது

“ஹலோ… நான் வினு நேத்ரன் பேசுறேன்” என்றான்.

“ம்ம்ம்ம் சொல்லுங்க…” என்றாள் ஹரிஷ்னி.

“எப்படி இருக்க?” என்று மென்மையாகக் கேட்டான்.

“நல்லா இருக்கேன் நீங்க… வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க. நான்…. நல்லா இருக்கேன்” என்றான்.

“நம்ம நிச்சயத்துக்கு எடுத்த புடவை உனக்குப் பிடித்து இருக்கா.?” என்று ஆசையாகக் கேட்டான்.

“ம்ம்ம்ம் நல்லா இருக்கு எனக்குப் ரொம்பப் பிடித்து இருக்கு. எனக்குப் பிடித்த பிஸ்தா க்ரீன் கலரில் எடுத்து இருக்கீங்க” என்று ஆசையாகச் சொன்னாள்.

“உனக்குப் பிஸ்தா க்ரீன் ரொம்பப் பிடிக்குமா….?”என்று கேட்டான்.

“ம்ம்ம்ம் ஆமா பிஸ்தா க்ரீன், லைட் ப்ளூ, பேஸ்ட்ல் கலர் எல்லாம் ரொம்பப் பிடிக்கும்” என்றாள் ஹர்ஷினி.

“சரி நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என்ன படிக்க ஆசை படுற நீ” என்று கேட்டான் வினு.

“எனக்கு MCA படிக்கணும்” என்றாள் ஹர்ஷினி.

“சரி மா இங்க இருக்குற காலேஜ் சீட் ரிசர்வ பண்ணி வைக்கிறேன்” என்றான்.

“ரொம்பத் தேங்க்ஸ் என்னைக் கல்யாணத்துக்கு அப்புறம் படிக்க அல்லோ பண்ணுறதுக்கு” என்றாள் மனசார.

“ஹாஹாஹா என்று சிரித்து விட்டுத் தேங்க்ஸ் எல்லாம் வேணாம்… கல்யாணத்துக்கு அப்புறம் எனக்குப் பிடிச்ச மாதிரி தேங்க்ஸ் சொல்லு” என்று சூசகமாகச் சொன்னான்.

ஹரிஷ்னி அழகாக வெக்கபட்டுக் கொண்டாள்.

“எனக்கு உன்னோட 5 செமஸ்டர் மார்க்சீட், ஆதார் கார்டு டீடெயில்ஸ் எல்லாம் வாட்ஸாப் பண்ணு” என்றான் நேத்ரன்.

“ம்ம்ம்ம் சரிங்க அட்மிஷனுக்குத் தேவையான டாக்குமெண்ட் எல்லாம் அனுப்பி விடுறேன்” என்றாள்.

“நான் உன்கிட்ட ஒன்னு கேப்பேன் மறைக்காம என்கிட்ட நீ சொல்லணும்” என்று பீடிகையோடு கேட்டான்.

“என்னனு கேளுங்க எனக்குத் தெரிஞ்சு இருந்தா சொல்லுறேன்” என்றாள் ஹர்ஷினி.

“உன்னைப் பொண்ணு கேட்டு வந்த அன்று நம்ம நிச்சய தேதி சொல்லும் போது உங்க வீட்டில் ஏன் தடுமாறுனார்கள்” என்று கேட்டான்.

ஹர்ஷினி சில நொடிகள் மௌனமாக இருந்தாள்…

“நான் சொல்லுறதை எந்த அளவுக்கு நீங்க புரிந்து கொள்வீங்கனு எனக்குத் தெரியல ஆனால் எங்க குடும்பத்தில ஒருத்தர் என்ற நினைத்து இதை நான் சொல்லுறேன்….”

“ எங்க அண்ணா ஒருத்தவங்களை லவ் பண்ணுறாங்க, வீட்டுல எல்லாத்துக்கும் தெரியும் அண்ணணோட லவர்கும் வர ஜூன் 14 எங்கேஜ்மெண்ட் வேற ஒருத்தரோட அதுனால தான் அப்பா அண்ட் அம்மா ஜூன் 14 னு தேதி சொல்லும் போது தயங்குனாங்க…” என்று கூறினாள்.

“அந்தப் பொண்ணு நம்ம ரிலேட்டிவ் வா?” என்று கேட்டான் வினு நேத்ரன்.

“ம்ம்ம்ம் ஆமா உங்களுக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணு தான்” என்று சொன்னாள்.

“எனக்குத் தெரிஞ்ச பொண்ணா யாரு….?” என்று சிந்தனையாகவே கேட்டான்.

“அவங்க பெயர் காயத்திரி, கொஞ்ச நாளைக்கு முன்னாடி வத்தலைக்குண்டு பெருமாள் கோவில வச்சு தான் முதல் தடவ எங்க அண்ணா பார்த்தாங்க…” என்றாள் ஹர்ஷினி.

“யாரு காயத்திரி ரவீந்திரன்னா….” என்று ஷாக்காகக் கேட்டான் வினு நேத்ரன்.

“ம்ம்ம்ம் ஆமா அவுங்களும் அண்ணாவா விரும்புறாங்க” என்றாள்.

“ஏய்ய்ய் நிஜமா சொல்லுறிய காயத்திரியும் ரிஷனை விரும்புறாளா….?” என்று சந்தோசமா கேட்டான்.

“ஆமாங்க மதினியும் தான் லவ் பண்ணுறாங்க வீட்டுல இருந்து போய்ப் பொண்ணு கேட்டாங்க ஆனா ரவீந்திரன் மாமா ஜாதகம் பொருத்தம் இல்லனு சொல்லி தட்டி விட்டுட்டாங்க. ஜூன் 14 மதினிக்கு எங்கேஜ்மெண்ட் அதுனால தான் அண்ணா அன்னைக்குக் காலையில் பெங்களூரில் இருந்து மதுரைக்கு வந்தாங்க” என்று விளக்கமாகச் சொன்னாள்.

“யாரு கூட எங்கேஜ்மெண்ட் காயுக்கு” என்று கேட்டான் வினு நேத்ரன்.

( காயத்திரி வினு நேத்ரனுக்குத் தங்கை முறை வேணும் சின்ன வயசுல இருந்து தெரியும். அவளை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும் இன்னும் சொல்ல போனால் அவனோட செல்ல தங்கச்சி. மாலா மற்றும் காஞ்சனா பற்றி முழுசாகத் தெரியும் அவனுக்கு)

“ராஜதுரை கதிரேசன்” என்று கூறினாள் ஹர்ஷினி.

“ஏய்ய்ய்ய்ய் என்னமா சொல்லுற அந்தப் பொறுக்கியோடவா…” என்றான் அதிர்ச்சியாக.

ஹர்ஷினி அமைதியாக இருந்தாள்.

“ரிஷன் மச்சான் என்ன முடிவு எடுத்து இருக்காரு ஹர்ஷினி” என்று கேட்டான் வினு நேத்ரன்.

“ம்ம்ம்ம் தெரியல அண்ணா எதுவும் பேசல மதினி வீட்ட மீறி ஏதும் செய்யக் கூடாதுனு சொல்லி இருக்காங்க. அண்ணன் என்னோட காதல் மேலே நம்பிக்கை இருக்கு எங்கள் காதல் எங்களைச் சேர்ந்து வைக்கும்னு சொல்லிட்டு இருக்காங்க” என்றாள் மனசுடைத்து.

“ம்ம்ம்ம் சரி என்னால ஏதாவது பண்ணி இந்த எங்கேஜ்மெண்ட் டா ஸ்டாப் பண்ண முடியுமா பார்க்குறேன். கண்டிப்பா அந்தப் பொம்பள பொறுக்கிய என் தங்கச்சி கல்யாணம் பண்ண கூடாது” என்று சற்றுக் காட்டமாகச் சொன்னான்.

“உங்களால இந்த எங்கேஜ்மெண்ட் நின்னா நான் ரொம்பச் சந்தோசம் படுவேன்” என்று உணர்வுபுராணமாகச் சொன்னாள் ஹர்ஷினி.

“கண்ணம்மா கண்டிப்பா காயுக்கும் ரிஷனுக்குத் தான் கல்யாணம் நடக்கணும். அவங்க காதல் ஜெயிக்கணும். என்னோட ஆசை இது சரி பார்க்கலாம். நம்ம எங்கேஜ்மெண்ட் அப்போ உன்னை மீட் பண்ணுறேன்” என்று சொல்லி கால் கட் செய்தான்.

ஹர்ஷினி கடவுளிடம்

“ ஆண்டவா காயத்திரி மதினி எங்கேஜ்மெண்ட் நிக்கணும், எங்க அண்ணா கூடத்தான் கல்யாணம் நடக்கணும்” என்று மனம் உருகி வேண்டினாள்.

ஜூன் 14… யாரோட எங்கேஜ்மெண்ட் நடக்கும்…?

ஹர்ஷினியின் வேண்டுதல் பலிக்குமா…?

பார்க்கலாம்…..

error: Content is protected !!