அத்தியாயம் – 1
டெக்சாஸ்- ஆஸ்டின்
இதமான பனிக்காலத்து மாலைப் பொழுதில்… சில்லென்றத் தென்றல் காற்று வீச, லேசானப் பனிச்சாரல் தூர டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரம் ரம்மியமாக இருந்தது.
ஆஸ்டின் நகரம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் இசைக்குப் பெயர்ப் பெற்ற நகரமாகும். “உலகின் நேரடி இசை தலைநகரம்” என்று அழைக்கப்படும்.
இந்நகரம் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தலைமையகமாகவும், பல தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாகவும் உள்ளது. கொலராடோ ஆற்றின் கரையில் அமைந்த இயற்கை எழில் கொஞ்சும் ஆஸ்டின், வாழ்க்கைத் தரம் மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளால் புகழ்பெற்றது.
ஆஸ்டின் நகரத்தின் பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தான் ரிஷன் கிருஷ்ணா.
அவன் பெயருக்கு ஏற்றார் போல் கிருஷ்ணனின் அழகைக் கொண்டு இருந்தான். ஆறடிக்கு மேல் நல்ல உயரம் கிரேக்க – ரோமானிய சிலைப் போல் உடல் அமைப்பு. கோதுமை நிறம், அனைவரையும் கவர்ந்தது இழுக்கும் நீல நிறக் காந்தக் கண்கள். அவன் கண்களில் ஒருவித ஈர்ப்பு விசை இருக்கும்.
ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையம் (Austin-Bergstrom International Airport,) அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரின் முதன்மை விமான நிலையமாகும்.
டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன்னில் உள்ள “Cognite” ஐடி மென்பொருள் நிறுவனத்தில் டி.எல் ஆகப் பணிபுரிகிறான். ரிஷனின் பல நாள் கனவு!! இன்னும் சொல்லப் போனால் அவனின் வாழ்நாள் லட்சியம் இந்தக் கம்பெனியில் வேலைப் பார்க்க வேண்டும் என்பதே ஆகும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குச் செல்கிறான்.
அதன் சந்தோஷம் அவன் முகத்தில் தெரிந்தது.
பெற்றோரை இழந்து டெக்சாஸ் வந்தான் இன்று தன் தங்கையைக் காண இந்தியாவுக்குச் செல்கிறான்.
அவனுக்கும் தங்கை ஹர்ஷினிக்கும் ஐந்து வயது வித்தியாசம்.
விமான நிலையத்துக்கு வந்து பதிவு செய்து அனைத்து வழிமுறைகளையும் முடித்து விட்டு விமான அறிவிப்புக்காகக் காத்துக் கொண்டு இருந்தான்.
மிகவும் களைப்பாக இருந்தது அதனால் காபிக் குடித்துக்கொண்டே… சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
முழு நாள் பயணம்.எப்போதும் அவனுக்குப் பயணப்பது என்றால் எரிச்சலாக இருக்கும் ஆனால் இன்றோ மிகவும் சந்தோசமா இருந்தான்.
ஏர்போர்ட்டில் ஒரு பெண்மணி தன் மகனை “டேய்ய் கண்ணா” என்று அழைத்தாள், அந்த வார்த்தையைக் கேட்ட நொடி முதல் அவன் மனதுக்குள் பல எண்ண அலைகள்.
அந்த எண்ண அலைகளில் கணம் அவனைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்வையே புரட்டிப் போட்ட நிகழ்வை எண்ணிய படி ஏர்போர்ட்யில் அமர்ந்து இருந்தான்.
அழகான சிறிய குடும்பம் அவனுடையது. அவன் சொந்த ஊர் மதுரை. அவன் தந்தை ஜெகதீஸ்வரன் தனியார் வங்கி மேலாளர். தாய் யசோதா இல்லத்தரசி. தங்கை ஹர்ஷினி. கல்லூரியில் மூன்றாம் ஆண்டுக் கணிணிப் பாடம் படிக்கிறாள்.
ரிஷன் MBA படித்து முடித்து விட்டுப் பெங்களூரில் ஐடி மென்பொருள் நிறுவனத்தில் பணிப்புரிந்த நேரம் தன் தாயின் அழைப்பு ஏற்றுச் சென்றாயப் பெருமாள் கோவில் திருவிழாகாக ஊருக்குச் சென்றான். அங்குத் தான் அவன் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தது.
“சென்றாயப் பெருமாள் கோவில் திருவிழா”,
வத்தலக்குண்டில் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோவில்….
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புராதனமான வைணவத் தலமாகும். இக்கோவிலில் மூலவராகச் சௌந்தரராஜப் பெருமாளும், தாயாராக ஆனந்தவல்லியும் வீற்றிருக்கின்றனர். இக்கோயிலின் முக்கியத் திருவிழா, பங்குனி மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) நடைபெறும் தேர்த் திருவிழா ஆகும், இது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பக்தர்கள் பெருமாளைத் தேரில் வீதியுல்லா தரிசித்து, பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவர். மற்றொரு முக்கிய விழாவாக ஆடி மாதத்தில் (ஜூலை-ஆகஸ்ட்) நடைபெறும் ஆடிப் பூர்ணிமா விழா, பக்தர்களை ஈர்க்கிறது. இவ்விழாக்களில் கல்வி, நினைவாற்றல் மற்றும் ஆன்மிகப் பலன்களை வேண்டி மக்கள் வழிபடுகின்றனர்.
ரிஷன் பெங்களூரியுள்ள தன் கம்பெனி வேலையில் இருந்து போது தன் தாயிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
போனை அட்டேன் செய்து பேசினான்.
ஹலோ… அம்மா…மா எப்புடி இருக்கீங்க? என்று ஆசையாகக் கேட்டான் ரிஷன் கிருஷ்ணா.
நல்லா இருக்கேன் டா கண்ணா.
நீ எப்படி டா இருக்க? என்றார் அம்மா பாசமாக.
நல்லா இருக்கேன் மா
பாப்பா, அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க? என்று கேட்டான் ரிஷன் கிருஷ்ணா.
எல்லாரும் நல்லா இருக்காங்க டா.
இந்த வாரம் சனிக்கிழமை “சென்றாயப் பெருமாள் கோவில் திருவிழா” நீ கண்டிப்பாக வரணும் என்றார் அம்மா.
அம்மா… நிறைய வேலை இருக்கு மா என்றான் ரிஷன் கிருஷ்ணா.
டேய் கண்ணா புருஞ்சுக்கோ டா. உனக்கு வச்ச வேண்டுதல் நீ தான் செய்யனும். அதுனால தான் அம்மா இவ்ளோ தூரம் சொல்லுறேன் கேளுடா கண்ணா நீ கண்டிப்பாக வரணும் என்றார் அம்மா.
சற்று யோசித்து விட்டு…
என்ன வேண்டுதல்? என்று கேட்டான் ரிஷன்.
உனக்குக் கேம்ப்ஸ்லா நல்ல வேலைக் கிடைச்சாக் கை நிறையச் சில்லறைக் காசுகளை உண்டியலில் போடுறேன், சொல்லி வேண்டுதல் வச்சேன் என்றார் அம்மா.
ம்ம்ம்ம்… சரி அம்மா புரியுது வெள்ளிக்கிழமை வரேன் என்றான் ரிஷன் கிருஷ்ணா.
சரி டா உடம்பப் பார்த்துக்கோ, நேரத்துக்கு சாப்பிடு, கவனமா வா என்றார் அம்மா.
நீங்களும், அப்பாவும் உடம்பப் பார்த்துக்கோங்க… பாப்பாவா கேட்டேன்னு சொல்லுங்க. ஒழுங்காப் படிக்கச் சொல்லுங்க என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் ரிஷன்.
சனிக்கிழமை காலை மதுரை வந்து சேர்ந்தான்.
மதுரை, தமிழ்நாட்டின் முக்கிய நகரமும், பழமையான கலாச்சார மையமும் ஆகும். இது பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்ற வரலாற்றுச் சின்னங்களுக்குப் பெயர் பெற்றது. சங்க இலக்கியத்தில் “கூடல்” என அழைக்கப்பட்ட இந்நகரம், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா மற்றும் ஜல்லிக்கட்டு போன்றவை மதுரையின் கலாச்சார அடையாளங்கள். இன்று, மதுரை கல்வி, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவில் முக்கிய இடம் வகிக்கிறது.
மதுரையின் மன்வாசனை… அவன் உடலுக்குப் புத்துயிர் தந்தது.
வீட்டை சென்று அடைய காலை 7.30 மணி ஆனது. வீட்டுக்குள் சென்ற உடன் யசோதா அவனைக் கட்டி அணைத்தார்.
கண்ணா ரொம்ப மெழுச்சுட்டா டா என்றார் பாசமாக.
அவன் களைப்பாக இருப்பதைப் பார்த்து அவனுக்குக் காபி போட்டுக் கொண்டுதார்.
ரிஷன் காபியை ரசித்துக் குடித்தான். தாயின் கையால் கிடைத்த காபி அவனுக்குப் புத்துணர்ச்சியாக இருந்தது.
அவன் தந்தை வந்து…
“வா யா கால் பண்ணி இருந்தா கார் எடுத்துட்டுப் பஸ்ஸ்டாண்டுக்கு வந்து இருப்பேன்ல” என்று ஆதங்கமாய்க் கேட்டார்.
இல்லை பா… எனக்கும் கரெக்ட் டைம் தெரியல அதான். நம்ம ஊர்ல ஆட்டோல வரது கூட ஒரு சுகம் தான் பா என்று ரசனையாகச் சொன்னான்.
சரி யா… சரி யா… போய்க் குளிச்சுட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடு யா ஈவினிங் கோவில் போகணும் என்று சொல்லி சென்றார்.
ரிஷன் குளித்துவிட்டு வந்து பூரி, கிழங்கு, சாப்பிட்டு கொண்டே…
எங்க மா…நான் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு பாப்பா வா காணோம்? எங்க போய் இருக்கா? என்று கேட்டான்.
அவளுக்கு இன்னைக்குப் பிராடிகல் மாடல் எக்ஸாம் டா அதான் சீக்கிரமாவே காலேஜ் போய்ட்டா மதியம் வந்துடுவா என்றார் அன்னை.
ஓஓ… சரிங்க மா, நான் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கிறேன் என்றான்.
சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு சென்று தூங்கினான்.
தந்தை சொன்னது போல் மாலை கோவிலுக்குப் புறப்பட்டான் ரிஷன்.
அன்று மாலை அனைவரும் வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோவிலுக்குச் சென்றனர்.
“சென்றாயப் பெருமாள் கோவில் திருவிழா” பங்குனி மாதம் மூன்று நாள் திருவிழா.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும்.
வெள்ளிக்கிழமை இரவு சாமி மலை மேல் இருந்து ஊருக்குள் வருவார்,சனிக்கிழமை முழுவதும் கீழே உள்ள கோவில் இருக்கும். ஞாயிறு மதியம் மலை மேல் சென்று விடும்.
சனிக்கிழமை முழுவதும் திருவிழா கலைக்கட்டும்.
அன்று சனிக்கிழமை
திருவிழாவில், பெருமாள் மக்களுடன் மேளதாளங்கள், கொட்டுகள் முழங்க, வாணவெடிகள் போடப்பட்டு, ஆட்டம் பாட்டோடு ஊருக்குள் கொண்டு வரப்படுவார். எங்கும் தேவராட்டம், மயிலாட்டம் , ஒயிலாட்டம் , சேவையாட்டம், தப்பாட்டம் , கரகாட்டம் புராணங்களை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள், வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் விற்பனைக் கடைகள் என்று அந்தப் பகுதியே களைகட்டி இருந்தது.
அவன் மெரூன் நிற சட்டையும் சந்தன நிற பேன்ட்டும் அணிந்து இருந்தான்.
ஹர்ஷினி நீல நிற சுடிதார் அணிந்து இருந்தாள்.
அவர்கள் கோவில் உள்ளே செல்லும் போதே கூட்டம் அதிகமாக இருந்தது.
கூட்ட நெரிசலில் தன் தங்கச்சி சிக்கி தவிப்பதை பார்த்த ரிஷன்….
பாப்பா… “கூட்டம் அதிகமாக இருக்கு பார் அம்மா கூடவே போ” என்றான் ரிஷன்.
சரிங்க அண்ணா என்றாள் ஹர்ஷினி.
முதலில் வேண்டுதல் முடித்து விடலாம் என்று எண்ணி அவன் அன்னை ரிஷனிடம் ‘கண்ணா அப்பா கூடப் போய் உனக்கு வைத்த வேண்டுதலை முதலில் முடிச்சுடு வா’ என்றார்.
தந்தை அருகில் சென்று “தன் கை நிறையச் சில்லறைக் காசுகளை உண்டியலில் செலுத்தினான்” ரிஷன் கிருஷ்ணா.
அதன் பின் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.
தரிசனம் முடித்து விட்டு வந்து ஓர் இடத்தில் அமர்ந்தனர்.
சற்று நேரத்தில் சாமி ஊர்வலம் ஆரம்பம் ஆனது.
டேய்… கண்ணா சாமி ஊர்வலம் ஆரம்பிக்கப் போகுது பாப்பாவை கூட்டிப் போய்க் காட்டிட்டு வா யா என்றார் தந்தை.
ம்ம்ம் சரிங்க அப்பா என்று சொல்லி ஹர்ஷினியை அழைத்துக் கொண்டு சென்றான்.
சேவையாட்டம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது அதிகக் கூட்டம் இருந்ததால் பாதுகாப்புக்காகத் தங்கையயின் சுடிதார் ஷாலை கையில் பிடித்தான் ரிஷன் கிருஷ்ணா.
அண்ணா… “கூட்டம் அதிகமாக இருக்கு எதுவும் பார்க்க முடியல வாங்க அப்பா கிட்டப் போலாம்” என்றாள் ஹர்ஷினி.
ம்ம்ம்ம் சரி வா பாப்பா என்றான் ரிஷன் கிருஷ்ணா.
கூட்டத்தில் தங்கையின் ஷால் கை நழுவியது.
அப்போது தவறுதலாக வேறு நீல நிற சுடிதாரின் ஷாலை கையில் பிடித்தான் ரிஷன் கிருஷ்ணா.
“அந்தப் பெண் யாரோ தன் ஷாலை பிடித்து இழுப்பதை உணர்த்து அவனைத் திரும்பி பார்த்தது முறைத்தாள்.”
அந்தப் பெண்ணின் கண்ணில் தெரிந்த கணலில் அவன் கையில் இருந்த ஷால் தானாக நழுவியது. அவள் முகம் ரிஷனின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
எதிர் திசையில் இருந்து அண்ணா என்று அழைத்தாள் ஹர்ஷினி.
அவன் தங்கையின் குரல் கேட்டு அங்குச் சென்று தன் தங்கையைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுக்கொண்டே… கூட்டத்தில் அந்தப் பெண்ணைத் தேடினான்.
அவனால் அந்தக் கண்களின் விசை ஈர்ப்பில் இருந்து வெளிய வர இயலவில்லை. சில மணி துளிகள் அதன் தாக்கத்தில் இருந்தான் ரிஷன் கிருஷ்ணா.
வாழ்க்கையில் பல பெண்கள் பார்த்து உள்ளான் ஆனால் அந்தப் பெண்ணைப் பார்த்து நொடி அவன் மனதுக்குள் ஒரு புதுமையானா உணர்வு. இதுநாள் வரையிலும் யாரிடமும் தோன்றதா உணர்வு.
“கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ளத் துணிந்தேன்.!!”
என்று அங்குச் சென்ற ஒருவரின் போனில் ஒலித்த பாடல். ரிஷன் மனதுக்குள் அந்த வரிகள் இந்த நிமிடம் தானக்கானது போல் இருந்தது.
“அம்மா… கூட்டம் அதிகமாக இருக்கு கொஞ்ச நேரம் கழித்துப் பாப்பாவை கூட்டிட்டு போறேன்” என்று சொல்லி விட்டு அவன் மட்டும் சாமி ஊர்வலம் பார்க்கச் சென்றான். மனதுக்குள் மீண்டும் அவளைக் காண வேண்டும் என்று ஆசைக் கொண்டான்.
அவன் சாமி ஊர்வலம் நடக்கும் இடத்திற்குச் சென்றான். அங்கு நடந்த நாடக மேடை அருகில் சென்று திருவிழாவை ரசித்தான் ரிஷன் கிருஷ்ணா.
ரிஷன் எல்லா இடத்துலையும் அவளைப் பார்வையாலே தேடினான்.
இரவு 12 மணிக்கு மேல் கூட்டம் குறைய ஆரம்பித்தது. போய் ஹரிஷினியை அழைத்து வந்தான்.
அவனும் தங்கை ஹரிஷினியும், புராணங்களை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள், வாண வேடிக்கை, வளையல் கடைகள், குழந்தைகளைக் கவரும் வகையில் கடைகள், என்று திருவிழாவை ரசித்துப் பார்த்தனர் இருவரும்.
சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த இருவரும், வளையல் கடை அருகில் சென்று அவன் தங்கை ஆசைப்பட்ட வளையல் வாங்கிக் கொடுத்துவிட்டு அவன் அன்னைக்கும் வளையல் வாங்கிக் கொண்டான்.
சற்று நேரம் இருவரும் நாடக மேடை அருகில் நின்று ராமாயணம் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தனர். ரிஷனின் கண்கள் அந்தப் பெண்ணைத் தேடியது. அவனால் அவளை பார்க்க முடியவில்லை.
இருவரையும் நாடக மேடை அருகில் பார்த்த ஜெகதீஸ்வரன்
“டேய் கண்ணா, பாப்பா… இங்கே வாங்க… ரெண்டு பேரும்” என்று அழைத்தார்.
தந்தை அருகில் புதிதாய் ஒரு நபர் இருப்பதைப் பார்த்த ஹர்ஷினி தாயின் அருகில் நின்று கொண்டாள். ரிஷன் யாரு இது புதிதாக? என்று யோசனையாக தந்தையைப் பார்த்தான்.
ஜெகதீஸ்வரன் அந்தப் புதிய நபரை தன் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தில்…
கண்ணா… “இவர் பெயர் ரவீந்திரன் தூரத்து உறவு,உனக்கு மாமா முறை” என்று அறிமுகம் செய்து வைத்தார் அவன் தந்தை.
வணக்கம்!! மாமா…
நல்லா இருக்குக்கீங்களா?? என்றான் ரிஷன் மரியாதையாக.
ம்ம்ம்ம் நல்லா இருக்கேன் தம்பி, என்ன பண்ணுறீங்க? என்று கேட்டார்.
அண்ணா பெங்களூரில்… ஐடி கம்பெனில வேலைப் பார்க்கிறான் என்றார் அம்மா பெருமையாக.
ரொம்பச் சந்தோஷம் மா தங்கச்சி என்றார் ரவீந்திரன்.
எங்க மச்சான்… வீட்டுல இருந்து யாரும் வரலையா.? யாரையும் காணல என்று கேட்டார் ஜெகதீஸ்வரன்.
உள்ளே கோவில் பக்கத்துல நம்ம ரெங்கநாதன் வீட்ல இருகாங்க மாப்பிள்ளை எல்லாரும் என்றார் ரவீந்திரன்.
அப்படியே வாங்க எல்லோரும் அங்கே போலாம். இங்க கூட்டமா இருக்கும் எப்பவும் என்றார் ரவீந்திரன்.
அங்குப் பொய்கால் குதிரை ஆட்டம் ஆடத் தயார் ஆகிக்கொண்டு இருந்தனர்.
ஜெகதீஸ்வரன் அவர் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு ரவீந்திரனுடன், ரெங்கநாதன் வீட்டுக்குச் சென்றார்.
ரிஷன் மனதில் பதிந்தப் பெண்ணை மீண்டும் சந்திப்பான…
பார்க்கலாம்…..