மேலே சென்ற ரிதுவை தாத்தா அவளிடம் எதோ பேச வேண்டும் என கூற போகையில் தடுத்த ஆதியை
“ஏன் பா? ” என்றார் வெற்று பார்வையாய்.
பாவம் அவருக்கு அவளின் சம்மதம் இதில் மிகவும் முக்கியம் என தோன்ற அதை அவளிடமே கேட்டுவிடலாம் என்று பார்த்தார்.
ஆனால் ஆதி தடுக்கவும் ஏன் என்று புரியாமல் கேட்டார்.
அதற்கு ஆதி “தாத்தா… அவ என் மேல உயிரே வெச்சிருக்கா…” சிறுது இடைவெளி விட்டு ” நானும் தான் தாத்தா… அவளுக்காக இவ்ளோ வருஷம் காத்திருந்தேன்… அந்த பிரச்னை மட்டும் வராம இருந்திருந்தா இந்நேரம் நாங்க லவ் பண்ணிட்டு இருந்துர்ப்போம்… ஆனா.. ” என்று இழுத்தவன் சுற்றிலும் பார்க்க
“டேய் ஆதி அதுலாம் ஒரு பிரச்சனைய டா… சின்ன பிஸ்கோத்து சண்டைக்கு இப்போ வரைக்கும் எங்கள பஞ்சாயத்து பண்ண வெக்கறியே டா ” என்றார் அம்மு பாட்டி
“அது உங்களுக்கு தெரியுது… அந்த பவுடர் மூஞ்சிக்கு தெரிலயே அத்தை… அப்டியே உங்கள மாதிரி இல்ல இருக்கா” என்று அவரது காலை வறினார் ஈஷா.
“சைக்கிள் கேப்ல நம்மள கிழிக்கிறளே… பேசாம இவளுக்கு பாயசம் வெச்சிரலாமா?? ” என கூற…
அவர் சொன்னதை கேட்டு சிரிக்க ஆரம்பித்த ஆதி… “அம்மு நீங்க மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சி வெளிய பேசிட்டு இருக்கீங்க… ஹா ஹா ஹா ” என்று சிரித்தான்
“அய்யயோ அப்படியா ” என அசடு வழிய ஈஷாவை பார்க்க. அவள் காளி வேஷம் போடாமலே போட்டது போல இருந்தாள்… அவளது முதுகில் திடீர் என கைகள் தோன்றுவதை போல உணர்ந்தவர் “அயோ ஆத்தா.. உன் புள்ளைய மன்னிச்சுடு மா” என்று அவளின் காலில் விழுந்தார்.. அவர் விழுந்ததில் பதறி இரண்டு அடி பின்னே நாகர்ந்த ஈஷா
“அச்ச்சோ அத்தை என்ன பண்றிங்க… எழுந்துருங்க ” என்று தர்மசங்கடமாக ஆதியையும், பார்த்தாவையும் பார்த்தார்.
அந்த கட்சியை பார்த்த ஆண்கள் இருவரும் இன்னும் வயிற்றை புடித்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
அப்போது வாசல் வழியே உளளே நுழைந்த மாதவ் இக்கட்சியை கண்டு… “ஈஷா இங்க என்ன மா நடக்குது ” என்று கேக்க.
“மாமா அது…” என தொடங்கும் முன்
“நான் சொல்றேன் தாத்தா ” என நடந்த அனைத்தையும் கூறினான்.
கீழே விழுந்த அம்மு மெதுவாக எழுந்து ஆதியை பார்த்து… “எல்லாம் சொல்லிட்டியா டா தங்கம்… இன்னும் ஏதும் மிச்சம் இருக்க பா ” என கேட்க.
“இன்னுமா… என்று யோசித்த ஆதி… “ஹான் தாத்தா பாட்டி ” என்று ஆரம்பிக்க
“அடேய் நான் உனக்கு என் பேத்திய தர மாட்டேன் டா…” என்று குண்டை போட்டார்
அதில் அதிர்ந்த மற்றவர்கள் அவரை ஒருசேர “வாட்?” என கேட்க
“ஹான் பயந்துட்டீங்களா…. இனிமே என்னை கலாய்க்கும் போது இது தான் ஞாபகம் வரணும் ” என்று இல்லாத காலரை தூக்கி விட்டு சொன்னார்.
“அம்மு உன்ன என்ன பண்றேன் பார்” என்று ஓடி வந்த ஆதி அவரை தூக்கி இரண்டு சுற்று சுற்றி கீழே விட்டான்.
“அட பாவி டேய் தெரியாம சொல்லிட்டேன் டா… தள்ளாடுறேன் பாரு டா புடி டா புடி டா ” என்று தள்ளாடி கொண்டே கூறினார்.
“போச்செ… அடேய் படவா புடிடா…” என்று கூற
அவரை தங்கி கொண்ட ஆதி “என்ன அம்மு உங்கள நா ரொம்ப ஸ்ட்ரோங்னு ல நெனச்சேன் இப்படி தள்ளாடிட்டுட்டு இருக்கீங்க” என்று பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு கண்களில் குறும்பு மின்ன கேட்டான் ஆதி.
“ஏன் டா கேட்கமாட்ட… எப்படியாது உன்னையும் என் பேத்தியயும் சேர்த்து வெச்சிரலாம் னு நான் பாத்தேன்… ஆனா இப்போ டவுட் டவுட் டவுட்… ம்ம்க்குஹ்ம்ம்” என்றவர் அப்படியே போய் சோபாவில் அமர்ந்தார்.
“அய்யோ பாட்டி… தாங்கள் அப்பிடி கூறலாமா… உங்களை மட்டுமே நம்பி இருக்கும் இந்த அடியேனை நீங்கள் இப்படி கை விடலாமா… நெவெர்… ஸ்ஸ் அம்ரிதம்…” என்று சிவாஜியில் ஆரம்பித்து MGR ல் இமிடேட் செய்து முடித்தான் ஆதி.
அதை அனைவரும் ரசித்து சிரித்து கொண்டு இருந்தனர்.
“நீ மாறவே இல்ல ட கண்ண” என்றார் மாதவ்.
அவருக்கு ஒரு மயக்கும் சிரிப்பை அளித்து… “போங்க தாத்தா” என்று விரலை கடிதவன் கால் கட்டை விரலால் தரையில் கோலம் போட்டான்.
இது எதுவும் தெரியாத ரிது மேலே தனது அறைக்கு சென்றவள் உறங்கியே விட்டாள்.
கீழே த்ரிலோகும் ஆஃபிஸில் இருந்து வர அனைவரும் சிட்டவுடில் அமர்ந்து கொண்டனர்.
கூடவே ப்ளூட்டோவும் ஆதி வந்ததில் இருந்து அவனது காலடியில் இருந்து நகரவே இல்லை.
“அவ இன்னும் அதே நெனச்சிட்டு இருக்கா ஆதி… அது ஒரு சின்ன விஷயம் பட் இருந்தாலும் என்னால அவளை எப்படி கன்வின்ஸ் பண்றது இதுக்கு எப்படி ஒகே பண்ண வெக்கறது னு தெரில டா” என்றார் த்ரிலோக்.
“ம்ம்ம்ம் ” என்று மட்டும் சொன்னான் ஆதி
“அவ என் மேலயும் கோவமா இருக்கா ஆனா பேசறா… அது வரைக்கும் போதும் னு தோணுது… பேசாம இருந்தானா என்னால தாங்கிக்க முடியாது” என்று மிகவும் வருந்தி கூறினார்.
“ப்ச் விடுங்க மாமா உங்க மேல எந்த தப்பும் இல்ல… அன்னிக்கு நான் தான் கொஞ்சம் மெச்சூர்டு ஆஹ் பிஹேவ் பண்ணாம…. இப்போ அவளை இழந்துட்டு நிக்கிறேன்” என்று தலையை குனிந்து கொண்டு கூறினான்.. அவனது கண்ணில் இரு துளி கண்ணீர்.
அதை தாங்க முடியாத அம்மு “டேய் ஆதி.. அதுக்கு எதுக்கு நீ இப்படி இருக்க… அவ புரிஞ்சிப்பா டா.. அவளுக்கும் இப்போ மெச்சூரிட்டி வந்துருக்கு…. ஆஹ் உனக்கு தெரியுமா கொஞ்ச நாள் முன்னாடி அவ என்கிட்ட கேட்ட அம்மு ஆதி பாவம் ல நான் தான் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டேன்லனு… ரொம்ப வருத்த பட்ட டா… அவ உனக்கானவனு நாங்க எப்போவோ முடிவு பண்ணினது அதுனால நீ கவலை படாத”
“ம்ம்ம்ம் பாட்டி… நான்….. நான் அம்மா அப்பாவ ரொம்ப மிஸ் பண்றேன் பாட்டி.. என்னால ரிதுவையும் மிஸ் பண்ண முடியாது” என்றான் உடைந்த குரலில்.
அவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் ஆண்கள் அவனை பாவமாக பார்க்க… அம்முவும் ஈஷாவும் கண்கள் கலங்கி நின்றனர்.
“கவலை படாத ஆதி நாங்க இருக்கோம் ல ” என்று அவனை அணைத்து கொண்டார் மாதவ்.
என்ன நடந்திருக்கும்???