நான் சாயும் தோள் -13

கல்லூரி முடிந்த உடன் தனது தோழிகளுக்கு விடை கொடுத்து தனது தார் ஜீப்பில் எரியவள்…

அதனை கிளப்பி கொண்டு வெளியே வந்தாள்…

வந்தவள் அந்த கல்லூரிக்கு கடைசியில் இருந்தா தெருமுனையில்  வண்டியை நிறுத்தி விட்டு உள்ளேயே அமர்ந்து இருந்தாள் அந்த கல்லூரி வாசலை பார்த்தப்படி.

20 நிமிடம் கழிந்த பின்னே மம்தாவை தனது பைக்கில் ஏற்றி கொண்டு வெளியே வந்தான் ஆதி.

“சச்சே… அவளுக்கு அவங்க அப்பா கார் வாங்கி தரலயா?? ஏன் இவனோட போறா?” என்று உள்ளே புகைந்தாள்.

அவர்கள் சென்றதும் இவள் தனது காரை இயக்கி கொண்டு சென்றவள் டிராபிக்யில் மாட்டி கொண்டாள்.

வழக்கமாக வீட்டுக்கு செல்லும் நேரத்தை விட அரை மணி நேரம் தாமதக தான் வீட்டுக்கு சென்றாள்.

அவளின் வண்டி சத்தம் கேட்டதும் pluto வெளியே ஓடி வந்தது.

அதன் பின்னோடு வந்தார் அமிர்த… “ஏன் ரிது இவ்ளோ லேட்டா வர?” என்று புன்னகை முகத்துடன் கேட்டார்.

“ப்ச் வழில டிராபிக்… அதுல மாட்டிகிட்டேன் ” என்றவள் அப்போது தான் அவரை கவனித்தாள்.

முகத்தில் மேக்கப் போட்டு, நல்லா அழகான பேஸ்டல் க்ரீன் வண்ணத்தில் ஆர்கான்ஸா துணியில் தைக்கபட்ட சல்வார் அணிந்து இருந்தார்.

காதோரம் ஒரு வெள்ளை தலியா பூவை வைத்து இருந்தார்.

“நீங்க ஏன் எங்கயோ வெளிய போற மாதிரி இப்டி ரெடி ஆயிரக்கீங்க?” என்றாள் புருவத்தை சுருக்கி.

“அதுவா… உனக்கு ஒரு சர்ப்ரைஸ்”என்றார் புன்னகை மாறாமல்.

“உங்களுக்கும் தாத்தாக்கும் வேற வேலையே இல்லையா எப்போ பாரு மொக்கையா ஏத்தாது சொல்ல வேண்டியது… என்ன விஷயம்? இங்கயே சொல்லுங்க எனக்கு வேலை இருக்கு” என்றாள் கடுப்புடன்.

அவளின் முகமற்றத்தை கவனித்தவர்.

“நீ ஏன் இப்டி கடுப்ப பேசுற… என்ன ஆச்சு? பசிக்குதா??” என்றார்.

“ப்ச் அதுலாம் ஒன்னும் இல்ல… நீங்க என்ன விஷயம்னு சொல்லுங்க “.

அந்த நேரம் ஈஷா வெளியே வந்தார் ” ஹே ரிது வந்து எவ்ளோ நேரம் ஆகுது… என்ன இங்க பாட்டியும் பேத்தியும் மீட்டிங் போட்டுட்டு இருக்கீங்க? ” என்றாள்.

“இல்ல ஈஷா புள்ளை முகமே சரி இல்லை அதான் என்ன னு கேட்டுட்டு இருந்தேன்… நீ வா ரிது உள்ள போலாம் ” என உள்ளே அழைத்து சென்றார்.

உள்ள சென்று அவளுக்கு பிடித்த.. “சேப்ஃ ஸபேஸ்” என்று அவளே பெயர் வைத்த சிங்கள் ரிக்லைனர் சோபாவில் சென்று கண்மூடு அமர்ந்தாள்.

“மா ஸ்ட்ரோங் ஆஹ் ஒரு பில்டர் காபி போடுங்க.. ரொம்ப தல  வலிக்குது” என்றாள்.

அப்போதும் கண்ணை திறக்கவில்லை. 

அவள் செய்வதை எல்லாம் அந்த வீட்டில் இருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல்.

அருகிலிருந்த அம்முவை  கை முட்டியில் இடித்து அவளைப்போய் அழைக்குமாறு சொன்னார் ஈஷா.

“ம்ம்ம்ம் போறேன் ” என்று அவளது அருகில் ஒரு பயத்துடனே சென்றார் அம்மு.

“இவ வேற நைசாஹ் நம்மால கோர்த்துவிட்டுட்டாளே ” என ஈஷாவை முறைத்தவர்.

ஈஷா அவளை கூப்பிடுமாறு சைகை செய்யவும்… சுற்றி இருந்தவர்களை பார்த்து

“அது ஒன்னும் இல்ல… டிராபிக் ல மாட்டிக்கிட்டளாம்  அதான் தல வலிக்குதாம் ” என்று அங்கு இருந்தவர்களுக்கு சிரித்து சமாளிக்க.

“ஆனா அவ எனக்கு முன்னாடியே கிளம்பிட்டாளே.. அப்பறம் எப்படி டிராபிக்ல மாட்டினா… நான் வந்த அப்போ ஏதும் அப்படி இல்லையே ” என்றான் ஆதி.

திடீர் என மிகவும் பரீட்சையமான குரல் கேட்க “ஆது” என அவளது நெஞ்சில் உரசி கொண்டு இருந்த டாலரில் கை வைத்தவள் கண்ணை பட்டேன திருந்து பார்த்தாள்.

அவளது எதிரில் பார்த்தசாரதியும் ஆதியும் அவளை புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தனர்.

ஆதியும் அவளை பார்த்து குறும்பாக புன்னகைதான்.

சட்டென எழுந்து நின்றவள் “தாத்தா நீஙக எப்போ வந்திங்க?” என்றாள் பார்த்தாவை நோக்கி.

“இப்போ தான் டா… மாதவ் கிட்ட பேசணும் அதான்” என்றார் மேலும்

“நீ ஏன் டா இவ்ளோ டையர்டா இருக்க.. ஏன் லேட்டா ஆஹ் வந்த ” என்று கேட்டார் அவளின் சோர்ந்து போன முகத்தை பார்த்து.

“வேற என்ன போய் எங்காவது கஃபே ல அவ பிரெண்ட்ஸ் ஓட சாப்டுட்டு ஊற சுத்தி பார்த்துட்டு வந்துருப்பாங்க மேடம்” என்றான் ஆதி ஒரு கள்ள சிரிப்புடன்.

“ப்ச்… உங்களை கேட்டாங்களா” என்று அவனிடம் எரிந்து விழுந்தவள் பார்த்தாவை நோக்கி… “ஏன் பிரண்ட்ஸ் ஆஹ் ட்ரோப் பண்ணிட்டு வந்தேன் தாத்தா வழில டிராபிக் ல மாட்டிக்கிட்டேன்… அதான்” என்றாள் சாதாரண குரலில்.

அவளது தாயிடம் திரும்பியவள் “மா எனக்கு காபி மேல அனுப்புங்க நான் ரூமுக்கு போறேன் ” என்று தனது பையை எடுக்க போனவளை.

“ரிது குட்டி நீயும் இரு டா உங்கிட்டயும் பேசணும் ” என்ற தனது தாத்தாவின் கையை தொட்டவன் வேண்டாம் என்று தலை அசைத்தான் ஆதி.

“நீ ரூம்க்கு போ டா நான் அனுப்பறேன் ” என ஆதியை கவனித்த அம்மு பாட்டி கூறினார்.

“ம்ம்ம்” என கூறியவள் நேராக அவளது அறைக்கு செல்ல படிகளை ஏறி அவளின் அரை கதவை திறந்து மூடும் வரை பொறுமையாக இருந்த ஆதி “அவளுக்கு இப்போ சொல்ல வேண்டாம் தாத்தா… நானே நேரம் வரும்போது சொல்றேன்” என்றான்.

“ஏன் பா? என கேட்டவர்… அவன் கூறிய பதிலை கேட்டு பெருமூச்சு விட்டு

“சரி டா கண்ண, பட் எங்கள காக்க வெக்காத” என்று கூறினார்.

தொடரும்

error: Content is protected !!