மாலை 4 மணிக்கு கல்லூரி முடிந்ததற்கான மணி அடிக்க பட…
அணைத்து மாணவர்கள் வகுப்பைவிட்டு வெளியே வந்தனர்.
அந்த கேன்டீனில் ஆதியின் மீது மோதி நின்ற ரிது மன்னிப்பு கேட்க…
அவளை “ஹே நீ ரிதிமா தான? என்னை தெரியுதா? ” என கேட்ட பெண் குரல்.
முதலில் இது யாரு டா என பார்த்தவள்… “இல்லையே நீங்க யாரு? ” என அவளை புரியாத பார்வை பார்த்தவள் ஆதியை பார்க்க…
“நீ பேசிட்டு இரு…. நான் போய் காபி வாங்கிட்டு வரேன்” என்று சென்று விட்டான்.
‘இவன் என்ன இவ்ளோ கேஷுவல் ஆஹ் பேசுறான்… எனக்கு தெரியாம யாரும் இல்லையே… பட் இவள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு பார்க்காத மாதிரியும் இருக்கே ‘ என்று யோசித்தாள்.
அவள் யோசிப்பதை புரிந்து கொண்ட அப்புதிய பெண்… “இன்னும் ஞாபகம் வரலையா?”. என கேட்டாள்.
இவள் அமோதிப்பாக தலையாசைக்கவும்…”ம்ம்ம்ம் எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கும்… இப்டி பார்த்ததால ஞாபகம் இல்ல போல ” என்று அவளது தோற்றத்தைக் காண்பித்தாள்.
இன்னும் குழப்ப பார்வை பார்த்தாள் ரிது.
அவர்களுக்கான காபி கப்பை எடுத்து வந்த ஆதி.. “வாங்க அங்க டேபிள் காலியா இருக்கு அங்க போவோம்” என்று அழைத்தான்.
“இல்ல என்னோட பிரெண்ட்ஸ் வெயிட் பண்றங்க” என்று அவளது தோழிகளை கண் காட்டினாள் ரிது.
“அவங்க ல வெயிட் பண்ணுவாங்க உனக்கும் சேர்த்து தான் டீ வாங்கிற்கேன் மசாலா டீ ” என்க.
“உனக்கும் புடிக்கும் ல ரிது… வா உன்கிட்ட பேசி எவ்ளோ நாள் ஆச்சு… ஒரு டீ தான ஒரு அரை மணி நேரம் பேசிட்டு போ” என்றாள் அந்த புதியவள்.
ரிதுவுக்கும் அவள் யார் என அறிந்துகொள்ள வேண்டிருந்ததால் “சரி” என்று அவர்கள் பின்னே சென்று அமர்ந்தாள்.
அமர்ந்தவள்… அவளது தோழிகளுக்கு வெயிட் செய்யுமாரு மெசேஜ் அனுப்பினாள்.
“அப்பறம் ரிது நீயும் இங்க தான் படிக்கறியா” என்று கேட்டாள் அந்த புதியவள்.
“ஆம்..” என அவளை கூறுவதற்குள்.
” ஆமா ஆமா சும்மா பொழுது போல னு வரா.. படிக்க ல வரல ” என்றான் ஆதி குரலில் நக்கல் தொணிக்க .
அவன் கூறிய பதிலில் சிரித்த அந்த புதியவள்… ரிதுவை பார்க்க அவள் ஆதியை தீ பார்வை பார்த்தாள்.
“ரிது இன்னும் என்ன தெரியலையா? ” என்று பேச்சை மாற்றினாள்.
“இல்ல தெரில… யார் நீங்க? ” என்று கேட்க.
ஆதியை பார்த்து சிரித்தவள் ரிதுவை பார்த்து “நான் தான் மம்தா” என்றாள்.
“மம்தாவா? அதியோட கிளாஸ்மேட்?….”
“ஆமா ” என்று மம்தா.
“ஆனா அவ ரொம்ப லீன் ஆஹ் நல்லா இருப்பளே… நீங்க கொஞ்சம் பூசனாப்ல இருக்கீங்க” என்றாள் ரிது.
“ஆமா… எப்போமே ஒரே மாதிரி இருக்க முடியாது ல…”.
“ம்ம்ம்ம்… பட் ரொம்ப டிஃபரெண்ட் ஆஹ் இருக்கீங்க…. இங்க என்ன பண்றீங்க? ஆதிக்கூட?” என்று கேட்டாள் ரிது.
“அது எதுக்கு உனக்கு?” என்று இடை புகுந்தான் ஆதி.
“சும்மா இரு ஆதி” என கூறியவள் தொடர்ந்து.
“நான் ஆதியை பார்க்க வந்தேன் மா… அப்பறம் சில விஷயம் பேச வேண்டி இருந்தது… லைப் மேட்டர்” என்று கடை கண்ணால் ரிதுவை பார்த்தாள்.
ரிது அவளை பார்த்து விட்டு ஆதியை ஒரு முறை பார்த்தவள் ” ஓ சரி நீங்க பேசுங்க எனக்கு டைம் ஆயிடுச்சு… ஒர்க் இருக்கு” என்று எழுந்து அவர்கள் பேசுமுன் சென்றுவிட்டாள்.
அவள் போவதையே பார்த்து கொண்டு இருந்தான் ஆதி “அவ வெளிய போய் நாலு நாள் ஆச்சு ஆதுமா” என்று கொஞ்சினாள் மம்தா.
“ஹே… அது ல இல்ல.. எதோ யோசிச்சிட்டு இருந்தேன்” என்று மாலுப்பினான் ஆதி.
“பாரா… என்கிட்டயே வா… அவ இன்னும் மாறல ஆதி அப்டியே தான் இருக்கா… உன்ன பாக்கிற பார்வைலயே தெரியுது” என்றாள் மம்தா.
“தெரியும்… அவ ஏன் அப்படி பார்த்தானும் தெரியும்” என்றான் ஆதி.
“அப்படியா ஏன்?”
“அவ இன்னும் நீ என லவ் பண்ற னு நெனச்சி தான் பாத்துட்டு போற” என்க.
“அதானே உண்மை…” என்றாள் மம்தா.
“ஹே லூசு … இப்போ நீ சொன்னதை மட்டும் விக்கி கேட்ருக்கணும்…. மகளே நீ செத்த” என்று சிரித்து கொண்டே சொன்னான் ஆதி.
“போ ஆது… அவன் செரியான கிறுக்கு… பார் எப்போ வரேன் னு சொன்னான் நாம வந்தே 2 ஹர்ஸ் ஆகுது இன்னும் வரல… கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல” என்று நொந்து கொண்டாள் மம்தா.
“வருவான்… அப்பறம் இந்த ஆது னு கூப்பிடறது ல அவ முன்னாடி கூப்டுறத… அப்பறம் என்னால அவளை ஜென்மத்துக்கும் சமாதானம் செய்ய முடியாது… நீ செஞ்ச ப்ரோமிஸ் ஞாபகம் இருக்கு ல?” என்றான் ஆதி.
“இந்த ஊற விட்டு போறதுக்குள்ள உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சுட்டு போறேன் ஒகே ஆஹ்?” என்றாள் மம்தா.
“அந்த தேவ இல்லாத ஆணி எல்லாம் நீ புடுங்க வேண்டாம்.. நீ அப்போ நடந்தது அவளுக்கு நான் சொல்லும்போது எக்ஸ்பிளைன் பண்ண போதும் மா தாயே” என்றான் ஆதி.
“சரி சரி ஓவரா பண்ணாத….அந்த கிறுக்குக்கு போன் பண்ணு லேட் ஆகுது…” என்றாள் மம்தா.
“போடறேன்” என்று போனை எடுத்து விக்கிக்கு அழைத்தவன் அந்த பக்கம் கூற பட்டத்தை கேட்டு… அதை அனைத்தவன்..
“இன்னிக்கு அவன் எதோ எமெர்ஜென்சினு பேக்டரிக்கு போயிருகானாம் நாளைக்கு பாப்போம்னு சொல்லிட்டான்” என்றான் ஆதி.
“இந்த எருமைக்கு இதே வேலைய போச்சு… சரி வா போலாம் லேட்டா போன அப்பா கேள்வி கேட்டே கொன்றுவரு” என்ற மம்தாவை அவளது வீட்டில் விட அழைத்து சென்றான் ஆதி.