சேர்மேன் அறையில் இருந்து அவனது அடுத்த வகுப்புக்கு சென்றவன்…
வழியில் ரிது செய்த குறும்புகளை எண்ணி சிரித்து விட்டான்…
அவனை கிராஸ் பண்ணி சென்ற மாணவர்கள் பேராசிரியகள் இவனை ஒரு மாதிரியாக பார்த்து விட…அதை பார்த்தவன்
“சாரி ” என்று தொண்டையை செருமிவிட்டு அவனது வகுப்புக்கு சென்றான்.
கிளாசிற்கு சென்ற ரிது அடுத்த மல்லிகா ப்ரொபஸ்ஸோர் வகுப்புகளை கவனிக்காமல் அருகில் இருந்த தனது தோழிகளிடம் நடந்ததை கூறி…
ஆதியை வறுத்து கொண்டு இருந்தாள்.
போர்டில் எழுதி கொண்டு இருந்த மல்லிகா மேடம்
“யார் அங்க பேசிட்டு இருக்கறது?” என திரும்பியவர் கடைசி பெஞ்சை பார்க்க ரிது தீவிரமாக எதோ பேசி கொண்டு இருப்பது தெரிந்தது.
“மிஸ் ரிதிமா! நீங்க என்ன டிஸ்கஸ் பண்றீங்க னு தெரிஞ்சிக்கலாமா? சப்ஜெக்ட் பத்தி டவுட் னா என்கிட்ட கேளுங்களேன்?.
“என அவளை பார்க்க..திடீர் என கேட்ட குரலில்.
“ஆயோ பேய்” என கத்தி விட்டாள்.
அதில் இன்னும் டென்ஷன் ஆனவர்
“கெட் அவுட் யு போர்” என கிட்டத்தட்ட கீற்சிட்டார்.
நான்கு பேரும் அவர் அவர் பைகளை எடுத்து கொண்டு வெளியே செல்ல எழுந்தனர்…
நேஹா ரிதுவை முறைத்து “ஏன் டி இப்படி பண்ற… இந்த மேம் வேற ஒரு மாதிரியாம்.. நாம காலேஜ் முடிக்கற வரைக்கும் வெளிய தான் போல” என்று வருந்தினாள்.
நால்வரும் வெளிய வர
“ஜ ஜ ஜ ஜ ஜ அய்ய இந்த படிப்சு தொல்லை தாங்க முடில டா சாமி.. ” என்று கூறிய நேத்ரா…
“நான் எப்படி டி உங்களோட சேர்ந்தேன் எனக்கும் படிப்புக்கும் ஏணி வெச்ச கூட எட்டாது “.
“ப்ச் சும்மா புலம்பாத டி…” என்றாள் அச்சு.
“உனக்கு உன் கவலை… கிளாஸ்ல இருக்கவங்கள கவனிக்க முடிலனு” என கூற.
ரிதுவும், நேஹாவும் “என்ன டி சொல்ற? “என கோராசாக கேட்டனர்.
அக்ஷயா நேத்ராவை முறைக்க “அய்யயோ.. ஒளறிட்டேன் போலயே… சரி சமாளிப்போம்” என மூணுமூணுத்தவள் அக்ஷயாவை பார்க்க அவள் பயங்கரமாக முறைதாள்.
“அயோ இவ வேற முறைகேறாளே….. இல்ல டி… அவ தான் மல்லி மேம் கிளாஸ்ல நல்லா பேரு வாங்கணும்னு… அவங்க வந்த ஒடனே நோட்ஸ் எடுக்க ரெடி ஆயிட்டா அதான் சொன்னேன்…” என்று சமாளிக்க.
“ஹப்பாடா” என மனதில் நினைத்த அக்ஷயா…
“உன்ன அப்பறம் வெச்சிக்கிறேன் இரு” என நேத்ராவை பார்த்து கண்களால் பத்திரம் காட்டினாள்.
“இன்னிக்கு ஏன் கெதி அதோகெதி போலயே… அடியே நேத்ரா காலேஜ் பெல் அடிச்சதும் இந்த எடத்துல இருந்து எவ்ளோ சீக்ரம் முடியுமோ அவ்ளோ சீக்ரம் ஓடி போய்டணும்” என வாய்க்குள் பேசினாள்.
அவள் பேசும்போது அவள் அருகில் நின்று அதை கேட்டுக்கொண்டு இருந்தா ரிதுவை பாவம் அவள் கவனிக்க தவறினாள்… அதை சொல்ல சைகை செய்த அக்ஷயாவையும் அவள் கண்டுகொண்டாள் இல்லை.
அவளது காதை திருகிய ரிது அவள் அலறும் முன்”கத்துனா குத்திருவன்… மரியாதையா என்ன மேட்டர் னு சொல்லு இல்ல… அப்பறம் நடக்கறதே வேற” என மிரட்டவும் பயந்து போன நேத்ரா…
“சொல்லிடறேன் சொல்லிடறேன்.. நாம கிளாஸ்ல இருக்கான் ல கிரண் அவன நாம அச்சு சைட் அடிக்கிற இதை நான் காலைல 3rd ஹௌர் ல கண்டுபுடிச்சிட்டேன்… பிரேக் ல கேட்ட அப்போ உங்க கிட்ட சொல்ல கூடாது.. சொன்ன கொன்றுவன்னு சொன்னா அதான் சொல்லல” என மொத்தத்தையும் போட்டு உடைத்தாள்.
“அடி பாவி” என வாயில கை வைத்தனர் ரிதுவும், நேஹாவும்.
“உன்ன நம்பி சொன்னதுக்கு உன்னால என்ன பண்ணமுடியுமோ அத பண்ணிட்டியே டி… ரொம்ப நன்றி நேத்துமா” என பல்லை இழித்து கொண்டும் கடித்து கொண்டும் கூறினாள் அக்ஷயா.
“எல்லாமே சொல்லிட்டனா?” என கேட்டாள் நேத்து அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு.
“இன்னும் என்ன டி இருக்கு??” என நேஹா கேட்க.
முந்தி கொண்ட அக்ஷயா “அம்மா தாயி அவளோ தான் டி… வேற ஏதும் புதுசா இல்ல… அந்த நாயி தான் எல்லாம் சொல்லிட்டாளே…”என தடுமாறினாள்.
இப்பொது அவளது காதை பிடித்த ரிது “ஒழுங்கு மரியாதைய என்ன நடக்குது னு சொல்லுடி அப்பறம் இன்னிக்கு தான் நாம பேசறது லாஸ்ட் ஆஹ் இருக்கும்” என முடித்தாள்.
“எல்லாம் இவளால வந்தது…ப்ச்…அந்த கிரண் இருக்கான் ல அவன் எனக்கு ஃபர்ஸ்டு டே ப்ரொபோஸ் பண்ணான்”
“என ஃபர்ஸ்டு டேலாயவா?”.
“என்னாடி சொல்ற? அன்னிக்கே எப்படி? எங்க கூட தான இருந்த?”.