தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 19.3

பைரவியும் அசோக் கூறிய விளக்கத்தை கூறியபடி ருத்ரேஷ்வருடன் சென்றாள்.

கதவை திறந்து அறையினுள் சென்ற ருத்ரேஷ்வர் ஆங்கிலேயர் பாணியில் இடைவரை குனிந்து, வெல்கம்” என்றான்.

புன்னகையுடன் அவள் உள்ளே வந்ததும் கதவை மூடியவன் அவளது கண்களை நோக்கியபடி, ரொம்ப அழகா இருக்க அம்மு.. அதுவும் இந்த மெஸ்மரைஸிங் ஐஸ்” என்றவன் கண்களை மூடி திறந்து,

ஓ காட்!” என்றபடி தன்னுள் ஆர்ப்பரித்த உணர்வுகளை கட்டு படுத்த முயற்சித்தான்.

ஆனால் முடியாமல், ஷல் ஐ கிஸ் யூ” என்று கேட்டேவிட்டான்.

தன்னுள் எழுந்த மெல்லிய படபடப்பை மறைத்த பைரவி, நேத்து அனுமதி கேட்டதா ஞாபகம் இல்லையே!” என்றாள்.

அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் தன்னவளின் இடையை பற்றி அணைத்தவன் அவளது காதுமடலை மீசை உரசியபடி கிறங்கிய கிசுகிசுப்பான குரலில்,

யுவர் ஐஸ் ஆர் மெஸ்மரைஸிங் மீ” என்றான்.

அவனது குரல் அவளை மாய உலகினுள் இழுத்துச் செல்ல, அவனது கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்தபடி கண்களை மூடினாள்.

அவளது விழிகளின் மீது முத்தமிட்டவன், கண்ணை திற அம்மு” என்றான்.

அவள் மென்னகையுடன் மறுப்பாக தலை அசைக்க,

விழியே விழியே! எனை மயக்கும் விழியே!” என்று ஈரம் திரைப்பட பாடலை அவன் காதலுடன் பாட ஆரம்பிக்க, சட்டென்று கண்களை திறந்தாள்.

(‘பேசும் விழியே’ என்றதை ‘எனை மயக்கும் விழியே’ என்று மாற்றி பாடினான்.)

அவள் கண்களை திறந்ததில் கண்கள் ஒளிர, அவளது விழிகளை பார்த்தபடியே பாடினான்.

விழியே விழியே! எனை மயக்கும் விழியே!

ஒரு பார்வை பார்த்தாய்..

மழையே மழையே! நெஞ்சில் மழையே!

தனியே தனியே.. வாழ்ந்தேன் தனியே..

இனிமே இனிமே.. நீ தான் துணையே!!” என்று பாடினான்.

நீ தான் மயக்குற மாமா” என்று அவள் சிறு நாணம் கலந்த கிறங்கிய குரலில் கூற,

சேர்ந்தே மயங்குவோமா!” என்றவன் அவளது செவ்விதழில் கவி பாட ஆரம்பித்து இருந்தான்.

அவளது இதழ் அவனை சுழலை போல் இழுக்க, மென்மையாக ஆரம்பித்த முத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிறு வன்மை கலந்தது.

அடிவற்றினுள் வண்ணத்துப்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வை கிளப்ப, அவளது கைகள் அவனது சிகைக்குள் நுழைந்து இறுக்கிப் பிடித்தது.

அவளது இதழ் தீண்டலிலும் நெருக்கத்திலும் உடம்பின் அனைத்து அணுக்களும் புத்துயிர் பெற்றது போல் உணர்ந்தவன், அவளது அங்கம் முழுவதும் வலம் வரத் துடித்த கரத்தை சிரமத்துடன் அடக்கி, இடையை சற்றே அழுத்திப் பற்றினான்.

அவனது பிடியின் அழுத்தத்தில் சட்டென்று மாய வலையின் பிடியில் இருந்து வெளியேறியவள், விலக நினைத்த மனதை அடக்கி, அவனது முத்தத்தை ரசிக்க முயற்சித்து வெற்றியும் பெற்றாள்.

சில நொடிகளே ஆனாலும், அவளுள் ஏற்பட்ட போராட்டத்தை உணர்ந்தவன், முத்தத்தை மென்மையாகி நிறுத்தி விலகி இருந்தான்.

தன்னவன் தன்னைக் கண்டு கொண்டு தனக்காக விலகியதில் அவன் மீது காதல் கூடினாலும், தன்னவன் தன்னால் உணர்வுகளை அடக்குவதில் வருத்தம் கொண்டாள்.

அவளது மனநிலையை அவளது கண்களில் படித்தவன் புன்னகையுடன் அவளது கன்னத்தை தட்டியபடி, காத்திருப்பதிலும் தனி சுகம் உண்டு” என்றான்.

பின், “தானா கனியும் கனியோட தித்திப்பு அதிகம்” என்று கூறி கண்சிமிட்டினான்.  

அப்பொழுது கதவு தட்டப்பட, அதுக்குள்ளே மணி நாலாகிடுச்சா!” என்றபடி மணியை பார்த்தவன் மணி 3.45 என்றதும் யோசனையுடன் கதவை திறந்தான்.

வெளியே நின்றிருந்த நரேன், சாரி ருத்ரா.. பியூட்டிஷியன் வந்துட்டாங்க” என்றான்.

அவங்களை அம்மு ரூமில் உட்கார வைத்து ஹாட் ஆர் கூல் ட்ரின்க் கொடு.. அஞ்சு நிமிஷத்தில் அம்மு வருவா” என்று கூறி அனுப்பினான்.

பின் பைரவியின் கையை பற்றியபடி இருவர் அமரும் மெத்திருக்கையில் அமர்ந்தவன், மனம் நிறைந்த புன்னகையுடன், ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்.. நீ?” என்றான்.

நானும் தான்”

ஹ்ம்ம்.. நீ காதலை சொன்ன தருணம்! அப்படி ஒரு பீல்.. எப்படி சொல்ல!” என்றபடி மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவன் புன்னகையுடன்,

வார்த்தையில் அதை முழுசா வெளிப்படுத்த முடியலை” என்றபடி விரிந்த புன்னகையுடன் அவளது கையை இறுக்கமாக பற்றினான்.

அவனது ஒவ்வொரு அசைவுகளையும், மகிழ்ச்சியையும் உள்வாங்கி அணுஅணுவாக ரசித்தவள் புன்னகையுடன், என்னால் உணர முடியுது” என்றாள்.

ஹ்ம்ம்” என்றபடி அவளது கண்களை சில நொடிகள் பார்த்தவன் கண்களை மூடித் திறந்தான்.

அவன் தனது உணர்வுகளை வெகுவாக கட்டுபடுத்துகிறான் என்பதை புரிந்து கொண்டவள், இவ்வளவு கன்ட்ரோல் செய்ய தேவையில்லை மாமா” என்றாள்.

மென்னகையுடன், பத்து வருஷ காத்திருப்பு.. அதான் இப்படி.. நான் சரி ஆகிடுவேன்டா” என்றான். 

தேவை இல்லைனு தான் சொல்றேன்.” என்றவளின் குரலில் தெரிந்த வருத்தத்தை அவனால் உணர முடிந்தது.

அவளது கன்னத்தை மென்மையாகப் பற்றிய படி, நீ ஒரு நொடி கஷ்டப்பட்டாலும் எனக்கு அது ரொம்ப வலிக்கும்டா!” என்றவன்,

நீ நினைக்கிற மாதிரி உன் மாமா அவ்ளோ நல்லவன்லாம் கிடையாது.” என்று கூறி கண்சிமிட்டினான்.

நம்பிட்டேன்” என்றபடி உதட்டை சுளிக்க,

நிஜம்டா” என்றான்.

அப்படினா இப்போ என்னை உன் மடியில் உட்கார வைத்து இருப்ப”

அவ்ளோ தானே!” என்றபடி நொடிப் பொழுதில் அவளை தூக்கி தனது மடியில் அமர்த்தி, இரு கரம் கொண்டு இடையை அணைத்து, கன்னத்தோடு கன்னம் உரசியபடி,  அவளது தோளில் நாடி பதித்தான்.

ஏய்!”

என்ன!” என்றபடி கன்னத்தோடு கன்னம் தேய்த்தவன், சாப்ட்” என்றபடி கன்னத்தில் முத்தமிட்டான்.

இருவரும் அமைதியாக அந்த நெருக்கத்தை ரசிக்க, அவள் கண்களை மூடியபடி அவன் தோளில் தலை சாய்த்தாள்.

நொடிகள் தாண்டி சில நிமிடங்கள் நீடித்த அந்த மோன நிலையை மனமின்றி கலைத்த ருத்ரேஷ்வர், பத்து நிமிஷமே ஆகிருச்சு” என்றபடி அவளை எழுப்பி தானும் எழுந்தான்.

அவள் விரிந்த புன்னகையுடன், லவ் யூ ஸோ மச், ருது மாமா” என்றபடி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவளது முதல் முத்தம் அவனுள் தித்திப்பாய் இறங்கியது.

விரிந்த புன்னகையுடன், காதலை சொல்லும் போது இங்கே தான் கிஸ் கொடுக்கணும்.” என்றபடி அவளது இதழில் மென்மையாக முத்தமிட்டு விலகினான்.

கிளாஸ் நம்பர் த்ரீ” என்று கூறி புன்னகையுடன் அவள் கண்சிமிட்ட,

குறும்பும் காதலும் நிறைந்த அவளது விழிகளை சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவன்,

உன்னை திரும்ப பார்த்த நொடியில் இருந்து இந்த கண்களை பார்க்க ஏங்கிட்டு இருந்தேன் தான்.. ஆனா இப்ப சொல்றேன்.. கொஞ்ச நாளுக்கு லென்ஸ் போட்டுக்கோ” என்றான்.

எப்போதுமே வீட்டில் இருக்கும் போது லென்ஸ் போட மாட்டேன்.”

மறுப்பாக தலை அசைத்தவன், தூங்குற நேரம் தவிர மத்த நேரமெல்லாம் லென்ஸ் போடு.. அதுவும் லைட் அணைச்சதுக்கு அப்புறம் ரிமூவ் செய்” என்றான்.

அவனை முறைத்தவள், இனி இருபத்தி நான்கு மணி நேரமும் இப்படி தான் இருப்பேன்.” என்று விட்டு வெளியே செல்ல,

இனி உன் பாடு திண்டாட்டம் தான், ருத்ரா” என்று வாய்விட்டே கூறியவன், புன்னகையுடன் வரவேற்பிற்காக கிளம்ப ஆரம்பித்தான்.

error: Content is protected !!