முதலில் சுதாரித்து, “ஒய் மாமா!” என்று அழைத்தவள், அவன் தன்னிலை அடையவும்,
“தழல் பட்சியை குளிர் நிலவா அப்புறம் மாத்தலாம்.. முதல்ல டாக்டர் கிட்ட பேசியதை சொல்லி முடி” என்றாள்.
விரிந்த புன்னகையுடன், “வாலு” என்றவன் தொடர்ந்தான்.
“என்ன தான் நீ ஸ்ட்ரோங் வில் பவரோட இருந்தாலும், இந்த வீட்டில் இருக்கும் போதும், அத்தை குடும்பத்தை பார்க்கும் போதும், உனக்கு பழைய நினைவுகளின் தாக்கம் இருக்கத் தான் செய்யும்னு சொன்னார்..
தினமும் அந்த இடத்தை கடந்து தான் போகணும் வரணும்.. அதான் உன் கிட்ட வேற வீட்டுக்கு போகலாமானு கேட்டேன்.. நீ எனக்காக யோசித்து வேணாம்னு சொன்னனு புரிந்தது..
சரி, அத்தை குடும்பத்தையாவது விலகி வைக்கலாம்னு நினைத்து கேட்டேன்.. இத்தனை வருஷம் சுதந்திரமா வாழ்ந்த வீட்டில் கைதி மாதிரி ஒரே அறையில் இருப்பதும், நீ சந்தோஷமா வாழ்றதை பார்ப்பதும், அவங்களுக்கு தண்டனைனு சொல்லி அதுக்கும் மறுத்துட்ட..
அதான் வீட்டில் கல்யாணத்தை வைக்கலாம்னு யோசிச்சேன்.. அதுவும் அந்த ஸ்பாட்லேயே மணமேடையை போடச் சொல்லி இருக்கிறேன்” என்றான்.
அவள் அதிகரித்த காதலுடன் அவனது கையை நெகிழ்ச்சியுடன் இறுக்கமாக பற்றிக் கொண்டு பேச்சற்று இருக்க,
அவளது மனநிலையை மாற்றும் நோக்கத்துடன்,
“நீ சொன்னதை டாக்டர் கிட்ட சொன்னேன்.. உன்னோட வில் பவர் பார்த்து அவரே பிரம்மிச்சு போயிட்டார்.. உன்னை பார்க்கணும்னு ஆசைபட்டார்.. நாளைக்கு நம்ம கல்யாணத்துக்கு வரார்” என்று பெருமையும் காதலுமாக கூறினான்.
“என்னை பார்க்கிறதுக்குனே வராரா?” என்று அவள் சிறு ஆச்சரியத்துடன் வினவ,
“ஆமா” என்றவன் விரிந்த புன்னகையுடன், “அவர் ஜாலி டைப்.. அவராவே ‘என்னப்பா எனக்கெல்லாம் கல்யாணத்துக்கு அழைப்பு கிடையாதா? அப்புறம் எப்படி ஏசிபி மேடமை நான் நேரில் பார்க்கிறது!’னு சொன்னார்..
‘உங்களுக்கு இல்லாமையா டாக்டர்! கல்யாணம், ரிசெப்ஷன் ரெண்டுக்கும் வாங்க’னு கூப்பிட்டு, இன்விடேஷனும் அனுப்பி இருக்கிறேன்.” என்றான்.
“கிரேட் பெர்சன்”
“ஹ்ம்ம்” என்றவன் தொடர்ந்தான்.
“முதல் நாளுக்கு அப்புறம் நீ தூக்கம் இல்லாம இருந்தியானு கேட்டார்..” என்றபடி அவளைப் பார்க்க,
மறுப்பாக தலை அசைத்தவள், “அந்த சம்பவத்தோட நினைவு வராம இல்லை. ஆனா தூங்குறதுக்கு முன்னாடி உன்னைத் தான் நினைச்சுப்பேன்.. காலையில் இருந்து உன்னோட பேசிய இனிமையான பொழுதுகளை நினைச்சுப்பேன்.” என்றவள்,
“சொல்லப் போனா முதல் நாளைத் தவிர, இங்கே வந்த அப்புறம் தான் ஆழ்ந்து தூங்குறேன்.. என்னோட வீட்டில் நல்லா தூங்கினாலும் தனியா இருக்க என்னை போட்டுத் தள்ள எவனும் வருவானோனு ஒரு அலர்ட் மோடில் தான் தூங்குவேன்.. ஆனா இங்கே தான் நீ இருக்கிறீயே” என்று விரிந்த புன்னகையுடன் முடித்தாள்.
‘ஆனா 16 வருஷத்துக்கு முன்னாடி உன்னை காக்க விட்டுட்டேனே!’ என்று மனதினுள் வேதனையுடன் கூறிக் கொண்டவன், அதை வெளியே கூறவில்லை.
ஆனாலும் அவனது கண்ணில் அதை படித்தவள், “பாஸ்ட் இஸ் பாஸ்ட் மாமா.. விடு” என்றாள்.
“போலீஸ்காரி பொண்டாட்டியா வந்தா கொஞ்சம் கஷ்டம் தான்.”
மனம் நிறைந்த மகிழ்ச்சியான சிரிப்புடன், “என்ன செய்ய! வசமா சிக்கிட்டியே மாமா.” என்றாள்.
அவனும் சிரிப்புடன், “ஹ்ம்ம்.. இந்த போலீஸ்காரியோட இதயத்தில் என்றும் கைதியா இருக்கத் தான் ஆசைபடுறேன்.” என்றான்.
“பின்றியே மாமா” என்றவள், “சரி சொல்லி முடி” என்றாள்.
அவன் செல்லமாக முறைக்க,
அவளோ புன்னகையுடனே, “எங்களுக்கும் ரோமான்ஸ் வரும்.. முதல்ல சொல்லி முடி” என்றாள்.
“உன்னோட ரோமான்ஸ் பார்க்கத் தானே போறேன்”
“நான் எப்போதுமே டாப் ஸ்டுடென்ட் மாமா” என்றபடி கண்சிமிட்டினாள்.
அவளிடம் மயங்கும் மனதை அடக்கியவன் எழுந்து ஒருவர் அமரும் இருக்கையில் அமர, அவள் சத்தமாக சிரித்தாள்.
“உன்னை கல்யாணத்துக்கு அப்புறம் கவனிச்சுக்கிறேன்” என்று அவன் மிரட்ட,
அதற்கும் சிரித்தபடி, “அம் வெயிட்ங்” என்று கூறி கண் சிமிட்டினாள்.
அவன் தலை கோதியபடி தனது உணர்வுகளை அடக்க, அவள் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.
“ஓகே.. டைவர்ட் செய்யாத” என்றவனை இடையிட்டு,
“எது? இதா உன்னை டைவர்ட் செய்யுது மாமா!” என்றபடி மீண்டும் கண்ணடித்தாள்.
“வாலு.. வேண்டாம்”
“நானா?”
“ஓ காட்!” என்றபடி கண்களை மூடி திறந்து மூச்சை இழுத்துவிட்டவன், அவள் முகம் பார்க்காமல் பேச ஆரம்பிக்கப் போக,
“மாமா என்னைப் பார்த்துப் பேசு” என்று சீண்டினாள்.
என்னவோ இத்தனை நாட்கள் இல்லாத வகையில் அந்த நொடி மனம் லேசாக இருக்க அவனை சீண்டுவது அவளுக்கு பிடித்ததோடு புது வித உற்சாகத்தை கொடுத்தது.
“ஓகே இப்போ செகண்ட் கிளாஸ்” என்றபடி எழுந்தவன்,
அவள் சுதாரிக்கும் முன் அவளது இடது கையை பற்றி இழுத்து எழுப்பியவன் அவளது இடையை பற்றியபடி இதழில் இதழ் பதித்து இருந்தான்.
அவள் அதிர்ந்து தன்னை அறியாமல் விலக நினைக்க,
அதை அவள் செயல் படுத்தும் முன் இதழ் பிரித்து காதலுடன் நோக்கியவன், கிசுகிசுப்பான குரலில் அவள் இதழை தன் இதழ் கொண்டு பட்டும் படாமல் உரசியபடி,
“பீல் இட் அம்மு” என்றான்.
அவனது அந்த குரல் அவளை வசியம் செய்ய, காதல் பேசிய அவன் விழிகளுடன் அவள் கட்டுண்டு இருக்க,
மெல்ல அவளது விழிகளை பார்த்தபடியே இதழ் அணைத்தான்.
ஆழி பேரலை தாக்கிய உணர்வில் அவள் கண்களை மூடியபடி அவனது இதழ் அணைப்பில் கரையத் தொடங்கினாள்.
தழல் தகிக்கும்…