“நேத்து ஹோட்டலில் வச்சு கூட எனக்கு அவ மேல உரிமை இல்லைனு தான் சொன்னா.. இப்போ இப்படி பப்ளிக்கா அறிவிப்பு கொடுத்து இருக்கா! அவளுக்கு நிச்சயம் என் மேல் விருப்பம் இருக்குது.. அதை அவளே உணராமலோ, இல்லை தெரிந்தே அந்த உணர்வை தடுத்துக் கொண்டோ இருக்கா..
அவ இப்படி சட்டுன்னு ஓகே சொன்னது, நிச்சயம் என் காதலுக்கு கிடைத்த வெற்றி இல்லை.”
“ஒருவேளை ப்ரெஸ் பீப்பிளை சமாளிக்க சொல்லி இருப்பாளோ?”
“அவளுக்கா சமாளிக்கத் தெரியாது!”
சிறிது யோசித்த பிரவீன் காரணம் எதுவும் புலப்படாமல், “எப்படியோ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா தானே! அதை மட்டும் யோசி” என்றான்.
“அப்படி எல்லாம் சும்மா இருக்க முடியாதுடா”
“இப்போ என்ன தான் செய்யணும்னு சொல்ல வர?”
“காற்று உள்ள போதே தூற்றிக்கொள்”
“தெளிவா சொல்லுடா”
அடுத்து ருத்ரேஷ்வர் சொன்னதை கேட்ட பிரவீன், “இதைத் தான் கோர்த்து விடுறேன்னு சொன்னியாடா நல்லவனே!” என்று அழுதுவிடும் குரலில் கேட்டான்.
“சொன்னதை செய்டா”
“போலீஸ்கே ஸ்கெட்ச் போடுறடா.. கடைசி உன் ஆளு இதை எல்லாம் செய்யச் சொன்ன உன்னை விட்டுட்டு, இந்த ஏற்பாட்டை செய்ற எனக்கு சங்கு ஊதட்டும்!” என்று அவன் மிரட்டலாக நிறுத்த,
ருத்ரேஷ்வரும், “என்ன செய்வ?” என்று மிரட்டலாகவே கேட்டான்.
“என்ன செய்வேன்! ஒன்னும் செய்ய மாட்டேன்” என்று பிரவீன் இறங்கிய குரலில் கூற,
“அது! ஆனா மச்சி, சொன்னதை செய்யலைனாலும் உனக்கு சங்கு தான்” என்றான்.
“ரைட்.. என் கிரகம் டிஸ்கோ ஆட ஆரம்பிடுச்சு” என்ற பிரவீன், “அது ஏன்டா காதலிக்கிறவன் எல்லோரும் நண்பனையே பலி கொடுக்கிறீங்க?” என்று பரிதாபக் குரலில் கேட்டான்.
லேசாக சிரித்த ருத்ரேஷ்வர், “ஏன்னா நீங்க தான் எங்களுக்குனு நேர்ந்து விட்ட ஆடு” என்றான்.
“நல்லா வருவடா.. ரொம்ப நல்லா வருவ”
“தேங்க் யூ மச்சி”
“எதுக்கும் அங்கிள் கிட்ட ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிடு.”
“நான் பார்த்துக்கிறேன்.” என்றவன், “நான் வைக்கிறேன்.. ப்ரெஸ் பீப்பிளை வேற சமாளிக்கணும்.” என்றான்.
“ப்ரெஸ்ஸா!”
“மேடம் எப்படியும் அறிவிப்பு கொடுத்துட்டு, எஸ் ஆகி இருப்பாங்க.”
“ஏன் நீ கடைசி வரை பார்க்கலையா! ஓ.. மேடம் ஓகே சொன்னதும், உங்க உலகம் ப்ரீஸ் ஆகிடுச்சோ!” என்று கிண்டல் செய்ய,
கடுப்புடன், “மூடு” என்ற ருத்ரேஷ்வர், “அம்மு அறிவிப்பு கொடுத்துட்டு, ஏதோ பேச ஆரம்பிச்சா.. அதை கேட்கிறதுக்குள் நித்தி டிவியை உடைச்சுட்டா…” என்றான்.
“ஓ.. கல்யாணம் என்னோட பெர்சனல்னு சொல்லிட்டு அதையும் இந்த கேஸ்ஸையும் லின்க் செய்யாதீங்கனு சொல்லிட்டு, வந்ததுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு உள்ளே போய்ட்டா..”
“ஸோ ப்ரெஸ் பீப்பிள் நிச்சயம் விளக்கம் கேட்க வருவாங்க.. அப்பா கொடுத்த அறிவிப்பு லீக் ஆகி இருக்க கூட வாய்ப்பு இருக்குது.” என்றபோது அவனது அறையின் அகதொடர்பு தொலைபேசி அடித்தது.
“ஒரு நிமிஷம்டா” என்றுவிட்டு அதை எடுத்து பேசிவிட்டு வைத்தவன் கைபேசியில் பிரவீனிடம், “ப்ரெஸ் பீப்பிள் வந்தாச்சு.. ஆபீஸ்ஸில் பார்க்கலாம்” என்றான்.
ஆம்.. ருத்ரேஷ்வர் கூறியது போல், பைரவியின் நேரலை முடிந்ததும், செய்தியாளர்கள் ருத்ரேஷ்வரை நோக்கிப் படையெடுத்து இருந்தனர்.
மனோகருக்கு அவனது பத்திரிக்கை உரிமையாளரிடம் இருந்து கிடைத்த மண்டகப்படியினால் அவன் செல்லவில்லை. அவனுக்கு பதில் வேறொருவர் கூட்டத்தினருடன் இணைந்து கொண்டார்.
“பார்த்து பேசு” என்று பிரவீன் கூற,
“ஓகே டா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் கீழே செல்ல ஆயுத்தமான பொழுது, பைரவியிடம் இருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை எடுத்தவன், “சொல்லுங்க மிசஸ் ஈஸ்வர்” என்றான் உல்லாச குரலில்.
“என்ன மிஸ்டர் பைரவி! வீட்டின் நிலவரம் கலவரமா இருக்குதா?” என்று அவளும் உல்லாசக் குரலில் கேட்டாள்.
“நிலவரம் கலவரமா! போர்களமானு நேரில் வந்து பார்த்துக்கோ.. இப்போ லைவ் ப்ரெஸ் மீட் பாரு.”
“ரெண்டையும் பார்த்துட்டாப் போச்சு” என்றவள், “ஏன் இந்த திடீர் அறிவிப்புனு குழப்பம் வரலையா?” என்று கேட்டபடி அசோக்கை பார்த்தாள்.
ருத்ரேஷ்வரோ அலட்டிக் கொள்ளாமல், “என் அம்மு பத்தி எனக்கு தெரியுமே!” என்றான்.
“ஹ.ஹான்!”
“ஹான்”
“அப்படி என்ன கண்டு பிடிச்சீங்க?”
“ஒரே கல்லில் பல மாங்கா தட்டும் எண்ணம் தான்.. எந்த வீட்டில் இருந்து உன்னைத் துரத்தினாங்களோ, அதே வீட்டினுள் உரிமைப் பட்டவளா உள்ளே வரது.. உன்னை கண்ணீர் சிந்த வச்சவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுறது.. நித்யா என்னை விரும்புறது கூட ஒரு காரணம் தான்.” என்றவன்,
“என்ன சரியா?” என்று கேட்டான்.
“நாட் பேட்” என்றவள் ஒலிபெருக்கியை அணைத்துவிட்டு கைபேசியை காதில் வைத்தாள்.
“ஆனா உன் ஆழ் மனதினுள் நான் இல்லாம, கல்யாணம் என்ற முடிவை உன்னால் இவ்வளவு சுலபமா எடுத்து இருக்க முடியாது.” என்று உறுதியான குரலில் கூறினான்.
“பார்டா! மனசை படிக்கிற வித்தையை நீ கத்துகிட்டது எனக்கு தெரியாமப் போச்சே!” என்று அவள் நக்கலாகக் கூற,
அவனோ, “நீ நம்ம வீட்டுக்கு வந்ததும், நான் கத்துகிட்ட வித்தை எல்லாம் உனக்கு கத்து தரேன்.” என்று உல்லாசமாகக் கூறினான்.
“பார்க்கலாம்” என்று அவள் வரவழைத்த அலட்சியத்துடன் கூற,
“நம்ம கல்யாண அறிவிப்பை கொடுத்ததுக்காக டோக்கன் ஆஃப் கிப்ட்” என்று கூறி அழுத்தமாக முத்தம் கொடுத்தவன், “நேரில் நிறுத்தி நிதானமா உதட்டில் தரேன், அம்மு” என்று உல்லாசமும் கிறக்கமும் கலந்த காதலுடன் கூறினான்.
முதல் முறையாக எப்படி எதிர்விணை புரிவது என்று சற்றே திணறியவள், “ருத்ரா!” என்று அழைக்க,
“ருத்ரா இல்லை.. உன்னோட ஈஸ்வர்.. இது கூட நல்லா தான் இருக்குது.. உனக்கு மட்டும் ஈஸ்வர்.” என்றவன்,
“உனக்கு எப்படியோ! எனக்கு இது காதல் கல்யாணம் தான்.. உனக்குள் புதைந்து இருக்கும் உன்னோட மென்மையையும் காதலையும் ஒரு மொட்டவிழ்வது போல் அழகா வெளியே கொண்டு வருவேன்..
நீ மத்தவங்களோட உன்னோட ஆடுபுலி ஆட்டத்தை ஆடு..! நான் உன்னோடு காதல் ஆட்டத்தை ஆடுறேன்.. லவ் யூ ஸோ மச் அம்மு!” என்று கூறி, மீண்டும் ஒரு முத்தம் கொடுத்து அழைப்பைத் துண்டித்தான்.
சில நொடிகள் சுழலில் சிக்கியது போல் அமர்ந்து இருந்தவள், பின் சுதாரித்து தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த அசோக், “பழி வாங்க உன் வாழ்க்கையை பணையம் வைக்கப் போறியா?” என்று கேட்டான்.
“ருத்ரேஷ்வர் தான், அவனுக்கே தெரியாம அவனோட வாழ்க்கையை பணையம் வைத்து இருக்கிறான்.”
“இது விளையாட்டு இல்லை பைரவி” என்று அவன் கவலையுடன் கூற,
அவனை ஆழ்ந்து நோக்கியவள், “எதனால் நான் இப்படி இறுகினேன்னு உனக்கு நல்லாவே தெரியும்.. இப்போ சொல்லு.. இந்தக் கல்யாணத்தில் யார் வாழ்க்கை பணையம் வைக்கப் பட்டு இருக்குது?” என்று கேட்டாள்.