தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 8.4

ஸோ உன் வீட்டு ஆள் தான் கொலையாளி”

அப்படி தான் நினைக்கிறேன். ஆனா வேற யாரும் இருக்கக் கூட வாய்ப்பு இருக்குமோனு சின்ன டவுட்டும் இருக்குது”

என்ன பாசமா!”

அவளை தீர்க்கமாக பார்த்தவன், நான் கொலையாளிக்கு துணை போவேன்னு நினைக்கிறியா?” என்று கேட்டான்.

வெளி ஆள்னு ஏன் சந்தேகம்?”

கலைச்செல்வி இறந்ததில் இருந்து இன்னையவரைனு பார்த்தா கிருஷ்ணா, நரேன் அண்ட் அவங்க அப்பா மூனு பேருமே என்னைப் பார்க்க பாக்ட்ரி வந்து இருக்காங்க.. அஞ்சு நாள் முன்னாடி கிருஷ்ணா பிஸ்னெஸ் விஷயம் பேச வந்தான்.. இன்னைக்கு நரேனும் அவன் அப்பாவும் நித்யா பத்தி பேச வந்தாங்க.. ஆனா, கிருஷ்ணா நரேன் அளவுக்கு அவங்க அப்பாக்கு டெக்னிகல் நாலெட்ஜ் கிடையாது.. ஸோ அவரை விட்டா கிருஷ்ணா இல்லை நரேனா இருக்கலாம்.. இல்லை அப்பாக்காக அவன்க செய்து இருக்கவும் வாய்ப்பு இருக்குது..

இன்னொரு விஷயம், இன்னைக்கு வைபை(WiFi) வொர்க் ஆகலைன்னு கம்ப்ளைன்ட் செய்ததால் ரெண்டு பேர் வந்து சரி செய்துட்டு போனாங்க.. இத்தனை வருஷத்தில் நெட் ப்ராப்ளம் இதான் முதல் முறை வந்து இருக்குது.. ஸோ வெளி ஆளா இருக்கவும் வாய்ப்பு இருக்குது..

இதை எல்லாம் வச்சு, யாரு சிசிடிவி புட்டேஜ் எடிட் செய்ததுனு தெரியலை.. என் இடத்திற்கே வந்து வேலையை காட்டி இருக்கிறான், அதான் அங்கே வச்சு பேச வேண்டாம்னு நினைத்தேன்.” என்று இவ்வளவு நேரம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று இலகு தன்மைக்கு மாறி, லேசான உதட்டோர புன்னகையுடன்,

அஃப்கோர்ஸ் உன் கூட பெர்சனல்லா தனியா டைம் ஸ்பென்ட் செய்யணும்னும் நினைத்தேன்.” என்றான்.

அவனது கடைசி கூற்றை கண்டு கொள்ளாத அவள், வேற எதுவும் சொல்லனுமா?” என்று கேட்டாள்.

அப்பொழுது மேசை பணியாளர் வந்து உணவுகளை வைத்துச் சென்றார்.

‘சில்லி பரோட்டா’வை அவள் பக்கம் அவன் நகர்த்த,

அவள், நான் ஜூஸ் குடிச்சிட்டேன்.” என்றாள்.

சின்ன வயசில்.. நீ இதை விரும்பிச் சாப்பிடுவனு, உனக்காகத் தான் ஆர்டர் செய்தேன்.”

அப்படியா! எனக்கு ஞாபகம் இல்லை” என்று அலட்சியமாக தோளை குலுக்கியவளுக்கு இன்றுமே அது பிடித்த உணவு தான்.

அவன் அவளை அழுத்தத்துடன் பார்க்க, அசராமல் எதிர் கொண்டவள், வேற எதுவும் சொல்லனுமானு கேட்டேன்” என்று அழுத்தமான குரலில் கேட்டாள்.

இதை சாப்பிடு.. சொல்றேன்” என்று அவன் கூற,

நீ கொடுத்த ஹின்ட்டே போதும்.. மீதியை நானே கண்டு பிடிச்சுக்கிறேன்.” என்றவள் கையை உயர்த்தி மேசை பணியாளரை அழைத்தாள். 

அம்மு..” என்று அவன் ஆரம்பிக்க,

காள் மீ பைரவி” என்று கட்டளையிட்டவள் அங்கே வந்த மேசை பணியாளரிடம், ஜூசுக்கு மட்டும் பில்.” என்று கூறினாள்.

மேசை பணியாளர் சென்றதும், ருத்ரேஷ்வர் கடும் கோபத்துடன், உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கிற?” என்று எகிற, அவனது பேச்சை இடையிட்டவள்,

கலைச்செல்வி கேஸ்ஸை பத்தி தான்.” என்றாள்.

ஏன்டி இப்படி செய்ற?” என்று அவன் கோபமும் வருத்தமுமாக பொரிய,

அவளோ, இன்னொரு முறை ‘டி’ சொன்ன! யோசிக்காம பல்லை பேத்திருவேன்” என்று மிரட்டினாள்.

அம்மு..” என்று அவன் ஆரம்பிக்க, அவள், பைரவி” என்று இடையிட்டாள்.

அம்முனு தான் கூப்பிடுவேன்.. எங்கே கை வை பார்க்கலாம்” என்று கோபத்துடன் சவாலிட்டான்.

அவள் அமைதியாக அவனைப் பார்க்க, அசராமல், என்ன!” என்றான்.

நீ அம்முனு கூப்பிட்டா மாற்றம் வந்திடுமா?”

அந்த தன்னம்பிக்கை இருக்கிறவ, ஏன் அம்முனு கூப்பிடாதனு சொல்ற?”

அவள் தோளை குலுக்க, மேசை பணியாளர் கட்டணத் தொகையை கொண்டு வந்தார். பணத்தை செலுத்தியவள் அவர் அகன்றதும், ஒழுங்கா சாப்டுட்டு கிளம்பு” என்றபடி எழப் போக,

அவன் இறுகிய முகத்துடன், இன்னொரு விஷயம் சொல்லணும்.. கலைச்செல்வி இறந்தப்ப நான் ஊரில் இல்லை.. வந்து விசாரிச்சப்ப நரேன் அந்த இன்ஸ்பெக்டருக்கு வீடு வாங்கிக் கொடுத்து கேஸ்ஸை முடிக்க வைத்தது தெரிய வந்தது.” என்றான்.

வேற?”

ஆனா அவனோட நடவடிக்கைகளை கவனிச்சவரை அவன் கொலை செய்து இருப்பான்னு சொல்றபடி இல்லை.. என்னோட பிரெண்ட் ஒருத்தன் டிடெக்டிவ்.. அவனை வைத்து நரேனோட அக்டிவிட்டீஸ் அனலைஸ் செய்ததில் கலைச்செல்வியை அவனுக்குத் தெரியலைனு தான் அவன் ஆள் சொன்னான்.”

கொலை செய்ய முன்ன பின்ன தெரிந்து இருக்கணும்னு இல்லை.. ஒருவேளை இவனோட சட்ட விரோத செயல், இல்லை தப்பு எதையும் கலைச்செல்வி பார்த்து இருக்கலாம்..”

அப்படி சாட்சி இருக்கக் கூடாதுனு கொலை செய்து இருந்தா, காலேஜ்ஜில் டெட் பாடியை விட்டு இருக்க மாட்டான்”

திட்டமிட்ட கொலையா இல்லாம, விவாதம் செய்தப்ப தவறுதலா அவளை தள்ளி விட்டு அவ இறந்து இருக்கலாம்.. பயத்தில் டெட் பாடியை அப்படியே விட்டுட்டு வீட்டிற்கு வந்து இருக்கலாம்..

இல்லை… இப்போ நீ சொன்ன கோணத்தில் யோசிச்சா, அவன் மேல் சந்தேகம் வராதுனு நினைத்து இருக்கலாம்.”

ருத்ரேஷ்வர் அமைதியாக இருக்கவும், என்ன?” என்றாள்.

தெரியலை.. யோசிக்கிறேன்.”

இன்ஸ்பெக்டர் போக வேற யாரை எல்லாம் கவனிச்சு இருக்கிறான்?”

இன்ஸ்பெக்டர் மட்டும் தான்.. அவனோட பினாமி பேருல வீடு வாங்கிக் கொடுத்து இருக்கிறான்.”

பைரவி யோசனையுடன், நிச்சயமாத் தெரியுமா?” என்று கேட்டாள்.

ஹ்ம்ம்.. ஏன் கேட்கிற?” என்றதுக்கு பதிலை சொல்லாமல்,

நரேனும் கிருஷ்ணாவும் க்ளோஸ்ஸா?” என்று கேட்டாள்.

அப்படினு சொல்ல முடியாது.. கிருஷ்ணாக்கு நித்யா மேல் இருக்கிற பாசம், நரேன் மேல இருப்பதா எனக்குத் தெரியலை.. நரேன் கிருஷ்ணா கிட்ட பாசமா இருப்பான். ஆனா கிருஷ்ணா, கண்ணுக்கு தெரியாத ஒரு இடைவெளியில் நரேன் கூட பழகுறதை நான் உணர்ந்து இருக்கிறேன்.”

உன்னோட மாமா?”

அந்த ஆளை என் மாமானு சொல்லாத”

அவள் உதட்டை வளைத்து சிறிது நக்கலாக பார்க்க,

அதை கண்டு கொள்ளாதவன், அந்த ஆளு மூனு பேர் மேலயும் ஒரே மாதிரி தான் பாசம் வைத்து இருக்கார்.” என்றான்.

நரேன் கொலை செய்யல அப்படீன்னா, கிருஷ்ணாவோ அந்த ஆளோ கொலை செய்து, இவன் அவங்களை காப்பாத்த செயல்பட்டு இருக்கலாம்.” என்றவள்,

அதுக்காக நரேனை விட்டுடாத.. அவனை கவனிக்கிறதை நிறுத்த வேணாம்” என்றாள்.

ஹ்ம்ம்”

உன் வீட்டு ஆண்களுக்கு ப்ரேஸ்லெட் போடுற பழக்கம் இருக்குதா?”

இல்லை”

சரி.. தேங்க்ஸ்.. நான் கிளம்புறேன்.” என்று கூறி கிளம்பினாள்.

அவள் சாப்பிடாத உணவை சாப்பிட மனம் இல்லாமல் அவற்றை சிப்பம்(parcel) செய்து எடுத்துக் கொண்டு கிளம்பியவன், வீட்டிற்கு  செல்லும் வழியில் சாலையோரம் இருந்த இருவருக்கு அதை கொடுத்துவிட்டுச் சென்றான்.

தழல் தகிக்கும்…

error: Content is protected !!