தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 8.2

கேஸுக்கான ஹின்ட் உனக்கு தேவை இல்லையா? நான் பக்கா பிஸ்னெஸ் மேன்.. ஸோ.. மியுசுவல் பெனிஃபிட் வேணும்.” என்று மென்னகையுடன் அவன் கூற,

சிறு நக்கல் கலந்த நிதான குரலில், இப்போ பிஸ்னெஸ் மேனா நீ என்னை அழைக்கலையே!” என்றாள்.

நீ ஏசிபியா பேசும் நேரத்தில் நான் பிஸ்னெஸ் மேனா பேசுவேன்.. மத்த நேரத்தில் அம்முவோட ருது மாமாவா பேசுவேன்.”

உன் புத்தியில் நல்லா ஏத்திக்கோ.. அம்மு இல்லை.. பைரவி மட்டும் தான் இருக்கிறா. அண்ட் ஏசிபி-யா மட்டும் தான் நான் பேசுவேன்.”

பார்க்கலாம்..” என்று அவன் லேசான உல்லாசச் சிரிப்புடன் கூற,

நீயாச்சும் பொறுப்போட இருப்பனு நினைச்சேன்.. நீயும் குட்டையில் ஊறிய மட்டை தான்னு நிரூபிக்கிற” என்று சற்றே இகழ்ச்சியான கோபக் குரலில் கூறினாள்.

அந்தப் பொறுப்பு பருப்பு எல்லாம் எங்களுக்கும் இருக்குது.. அதுக்காக பெர்சனலை கவனிக்கக் கூடாதுனு இல்லையே!” என்று அவன் அலட்டிக் கொள்ளாமல் கூற,

அவளும் அதே பாவனையில், கவனிச்சுக்கோ.. ஆனா, அதில் என்னை இழுக்காதே!” என்றாள்.

நான் என்ன உன் கையை பிடிச்சு இழுத்தேனா, இல்லை, இடுப்பை பிடித்து இழுத்தேனா? இல்லை உன்னோட..” என்று ரசனையுடன் பேசியவனின் பேச்சை அவள் இடையிட்டு கோபத்துடன்,

ருத்ரேஷ்வர்!” என்று கத்த,

அவனோ,இரு அம்முகுட்டி.. மாமா இன்னும் முடிக்கலை.. எங்க விட்டேன்? ஆங்.. உன்னோட இடுப்பை இழுத்தேனா, இல்லை உன்னோட அழகு உதட்டை என்னோட உதட்டை வச்சு கவ்வி இழுத்தேனா!” என்று ரசனையும் கிறக்கமுமாக கூறினான்.

கெட்ட வார்த்தையில் திட்ட வந்தவள் நா அடக்கி, ராஸ்கல்” என்று திட்டி விட்டு, அழைப்பைத் துண்டித்தாள்.

கோபத்துடன் முணுமுணுப்பாக அவனை திட்டியவள், தண்ணீரை அருந்தி கோபத்தை மட்டுப்படுத்த முயற்சித்தாள்.

ஐந்து நிமிடங்கள் கழித்து ருத்ரேஷ்வர் மீண்டும் அழைத்தான். அவள் எடுக்கவில்லை என்றதும் மீண்டும் மீண்டும் அழைத்தான்.

ஒரு கட்டத்தில் அழைப்பை எடுத்த அவள், என்னடா வேணும் உனக்கு? இருக்கிற கோபத்துக்கு உன்னை ஸ்ட்ரேட்டா பரலோகத்துக்கு அனுப்பிடுவேன்.. நிச்சயம் உன் வீட்டில் இருக்கிறவன்க தான் அந்தப் பொண்ணை கொலை செய்து இருக்கிறான்க.. கொஞ்சம் கூட பொறுப்பே…..” என்று கோபத்துடன் பொரிந்துக் கொண்டிருக்க,.

அவனோ சிறு வயதில் அவளுக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்யும் நேரத்தில் அழைப்பது போல் மென்மையான குரலில், அம்முமா” என்று அழைத்தான்.

ஒரே ஒரு நொடி மௌனித்தாலும், சட்டென்று சுதாரித்து, என்னடா என்னை இமோஷனல்லா லாக் செய்து அவன்களை காப்பாத்தப் பார்க்கிறியா?” என்று நக்கலாக கேட்டவள்,

என்ன இருந்தாலும் உன்னோட பாசமலர் அத்தையோட குடும்பம் ஆச்சே!” என்று இகழ்ச்சியாக கூறி பின் அலட்சியம் கலந்த கோபத்துடன்,

ஆனா உன்னோட பசப்பு இந்த பைரவி கிட்ட நடக்காது” என்று ருத்ரனுக்கே ருத்ராதேவியாக நிமிர்ந்து நின்றாள்.

ருத்ரேஷ்வர் தீர்க்கமான குரலில், நான் உன்னைக் காதலிக்கிறேன்.. உன்னை தான் கல்யாணம் செய்துப்பேன்.. இது வேற.. இதையும் இந்த கேஸ்ஸையும் இணைத்துப் பார்க்காத..

என்ன தான் அத்தை மீது பாசம் என்றாலும், அந்த வயதிலேயே அவங்க தவறை சுட்டிக் காட்டினேன் தானே! அண்ட் எப்பவுமே தப்பு செய்தது யாரா இருந்தாலும் தண்டனை கிடைக்கணும் என்று தான் சொல்வேன், செயல் படுவேன்..

அந்த பொண்ணு இறந்தப்ப நான் ஊரில் இல்லை.. வந்ததுக்கு அப்புறம்  தான், சில விஷயங்கள் தெரியும்.. நானும் விசாரிச்சிட்டு தான் இருக்கிறேன்.. எனக்கு தெரிந்ததைப் பற்றிச் சொல்லத் தான் உன்னை கூப்பிடுறேன்.” என்றான். 

சற்று கோபம் தணிந்தவள், அதுக்கு எதுக்கு ஹோட்டல்?” என்று கறாராகவே கேட்டாள்.

காரணமா தான் சொல்றேன்.. நாம நேரில் பேசிக்கலாம்”

ஏழு மணிக்கு ஹோட்டல் ****ல் அஃபிஸியலா சந்திக்கலாம்”

உனக்கு தான் அஃபிஸியல்.. எனக்கு அஃபிஸியல் அண்ட் பெர்சனல்.. ஸோ உன்னோட தொடுப்பு அந்த கபிலன் இல்லாம வா” என்று கூற, அவள் பதில் கூறாமல் அழைப்பைத் துண்டித்தாள்.

இந்தச் சந்திப்பினால் நாளை வரப் போகும் பிரச்சனையை இருவருமே அப்போது அறியவில்லை.

ஆறரை மணியளவில் கபிலனை அழைத்த பைரவி அவன் வந்ததும், கேஸ் சம்பந்தமா ருத்ரேஷ்வரை **** ஹோட்டலில் ஏழு மணிக்கு சந்திக்கப் போறேன்.. ஸோ இப்போ கிளம்புறேன்..” என்றவளின் பேச்சை இடையிட்டு சிறு தயக்கத்துடன்,

மேடம், இது சரி வருமா?” என்று கேட்டவன்,

அதிகமா கேட்டு இருந்தால் சாரி மேடம்” என்றும் சேர்த்துக் கூறினான்.

நீங்க கேட்டதில் தப்பில்லை.. நானும் யோசிச்சேன்.. ஆனா.. தவிர்க்க முடியலை.. ருத்ரேஷ்வர் அவரோட இடம் வேண்டாம்னு சொல்றார்.”

ஆனா மேடம்..” என்று தயங்கி நிறுத்தினான்.

புரியுது.. ப்ரெஸ் பீப்பிள் பார்த்தா தேவை இல்லாத சர்ச்சை வரும்னு சொல்றீங்க.. நான் பார்த்துக்கிறேன்.” என்றவள் நடக்கப் போவதை அறியவில்லை.

ஆம், மறுநாள் செய்தித்தாள் ஒன்றில் இந்த சந்திப்பு தலைப்பு செய்தியாக வரப் போறதோடு, இவளது நேர்மை சந்தேகித்து விமர்சிக்கப் படப் போவதை இவள் அறியவில்லை.

கபிலன் அதற்கு மேல் விவாதிக்க முடியாமல் அமைதியாக நின்றான்.

நீங்க எதுக்கும் ஹாஸ்பிடல் போய் சங்கவி நர்ஸ் பத்தி விசாரிச்சிட்டு வாங்க.. போலீஸ்ஸா இல்லாம அவங்களோட தூரத்து சொந்தம்னு ஏதாவது கதை புனைந்து பார்த்துட்டு, முடிந்தால் அவங்க நம்பர் வாங்கிட்டு எனக்கு இன்பார்ம் செய்யுங்க” என்றாள்.

ஓகே மேடம்” என்று கூறி அவன் கிளம்பியதும் அவளும் ருத்ரேஷ்வரை சந்திக்கக் கிளம்பினாள்.

சரியாக சொன்ன நேரத்திற்கு சென்ற பைரவி ருத்ரேஷ்வரை காணாமல் அவனது கைபேசியில் அழைத்தாள்.

அவன் அழைப்பை எடுத்ததும், நான் வந்துட்டேன்.. நீ எங்க இருக்க?” என்று கேட்டாள்.

பத்து நிமிஷம்டா.. வந்துட்டே இருக்கிறேன்.. கிளம்புற நேரத்தில் ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு.. உள்ளே ஏசி டிவிஷன்லேயே தனி தனி கேபின் மாதிரி இருக்கும்.. நீ அங்க ஒரு கேபினில் உட்காரு.. நான் பத்து நிமிஷத்தில் வந்திருவேன்.”

உரிமையா ‘டா’ போட்டு பேசுற வேலை வச்சுகிட்ட, கபிலனை அனுப்பிட்டு நான் கிளம்பி போய்கிட்டே இருப்பேன்”

உன்னிடம் எனக்கு உரிமை இல்லையா?”

இல்லை.. அண்ட் இப்போ கேஸ் விஷயமா தான் பேச வந்து இருக்கிறேன்.” என்று கூறி அழைப்பைத் துண்டிக்க,

வாய் விட்டே பெருமூச்சை வெளியிட்ட ருத்ரேஷ்வர், ரொம்ப கஷ்டம்’ என்றபடி வண்டியை செலுத்தினான்.

அவன் கூறிய இடத்திற்கு பைரவி செல்ல, அன்று அந்த இடத்தில் அனைத்து மேசைகளும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தான் விதி என்பதா!

error: Content is protected !!