தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 8.1

அனிதா சென்றதும் கபிலன், அப்போ.. நகைக் கடையிலும் பார்ட் டைம் ஜாப் ஆப்ஷன் இருக்காதே மேடம்!” என்றான்.

மறுப்பாக தலை அசைத்த பைரவி, உறுதியா சொல்ல முடியாது.. ட்ரெஸ் கடை ருத்ரேஷ்வர் பொறுப்பில் இருப்பது.. நகைக்கடை கிருஷ்ணா பொறுப்பில் இருப்பது. ஸோ.. வித்தியாசப் படலாம்.. விசாரிச்சு பார்க்கலாம்.” என்றாள்.

இப்பவே போய் விசாரிக்கலாமா மேடம்?”

மணியைப் பார்த்தவள் அது நான்கு என்றதும், கிருஷ்ணா இல்லாத நேரத்தில் தான் விசாரிக்கணும்.. ஆனா… இதில் இன்னொரு சிக்கல் இருக்குது.. ஒருவேளை அவன் தான் கொலையாளியா இருந்தால், அவன் இல்லாத நேரத்தில் நாம போனாலுமே சிசிடிவி புட்டேஜ்ஜில் நாம வந்ததை பார்த்தா, அவன் அலர்ட் ஆகிடுவான்..

இல்லை… பாலாஜியோ நரேனோ கொலையாளியா இருந்தாலும், இவன் நாம வந்ததை வீட்டில் சொல்லும் போது கொலையாளி அலர்ட் ஆகிடுவான்.” என்றாள்.

இரண்டு நிமிடங்கள் யோசித்த பின், உங்க வைஃப் எப்படி? ஐ மீன் பயந்த சுபாவமா? தைரியமானவங்களா?” என்று கேட்டாள்.

பயந்த சுபாவம் கிடையாது ஆனா தைரியமானவ அப்படீன்னும் சொல்லிட முடியாது.. எதுக்கு மேடம் கேட்கிறீங்க?”

நமக்கு உதவி செய்ய முடியுமா? அவங்களை இதில் ஈடுபடுத்த நீங்க விரும்பலைனா வெளிப்படையா சொல்லிடலாம்.. இல்லை உங்களுக்கு சரினா, சும்மா நகை வாங்கப் போற மாதிரி போய் கலைச்செல்வி அங்கே வேலை செய்தாளானு  போட்டு வாங்க முடியுமா?”

போட்டு வாங்க, என் தங்கை தான் சரியான ஆள் மேடம்”

உங்க மனைவினா ஓகே.. தங்கை!” என்று அவள் யோசிக்க,

அவன் சிறு மென்னகையுடன், விஓசி கிரௌண்ட்ல என் தங்கையும் இருந்தா மேடம்.. நிச்சயம் செய்வா.” என்றான்.

அப்பொழுது பைரவிக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை எடுத்து, ஹலோ.. பைரவி ஸ்பீக்கிங்” என்றாள்.

குட் ஈவ்னிங் மேடம்.. நான் டேவிட்.. விங்க்ஸ் டியூஷன் சென்டரில் வேலை பார்க்கிறேன்.. நேத்து நான் லீவ்.. போலீஸ் விசாரிக்க வந்தது இப்போ தான் தெரியும்.”

கலைச்செல்வி பத்தி ஏதும் சொல்லனுமா?”

எஸ் மேடம்.. கலைச்செல்வி, வேற எங்கேயாவது வேலை பார்த்தது தெரியுமானு கேட்டாங்கனு என் பிரெண்ட் சொன்னான்.. அவங்களை ருத்ரா நகைக் கடையில் நான் பார்த்து இருக்கிறேன்.. சேல்ஸ் கேர்ள் வேலை பார்த்துட்டு இருந்தாங்க.. என் வைஃப்க்கு மோதிரம் வாங்கப் போனப்ப பார்த்தேன்”

கலைச்செல்வி அங்கே வேலை பார்த்ததை நீங்க வேற யார் கிட்டயும் சொன்னது இல்லையா?”

கலைச்செல்வி கூட நான் அதிகம் பேசிக்கலன்னாலும், நல்லா படிக்கிற பொண்ணு, வேலைக்கு வரதுக்கு காரணம் குடும்ப சூழ்நிலையா இருக்கும் என்பது என்னோட யூகம்..

அதுவும் முதலில் இருந்து இல்லாம பைனல் இயரில் தான் வந்தாங்க. ஸோ திடீர் பொருளாதார நெருக்கடியா இருக்கலாம்னு தோனுச்சு..

அன்னைக்கு நான் கடைக்குப் போனப்ப, அவங்க என்னை பார்த்து தெரிந்தது போல காட்டிக்கல.. அங்கே வேலை பார்க்கிறதை இங்கே யார் கிட்டயும் அவங்க சொன்னது போல எனக்குத் தெரியலை.. அதான்.. நானும் யார் கிட்டயும் சொல்லல”

ஹ்ம்ம்.. அன்னைக்கு நகை வாங்க எத்தனை மணிக்குப் போனீங்க? உங்க மனைவியும் வந்தாங்களா?”

பர்த்டே சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க வாங்கினேன் மேம்.. அதனால நான் மட்டும் தான் போனேன்.. அன்னைக்கு எனக்கு ஏழு மணிக்கு கிளாஸ் முடிஞ்சதும் கிளம்பிப் போனேன்.. ஸோ ஒரு ஏழேகால் இருக்கும்னு நினைக்கிறேன்.”

என்னைக்குப் போனீங்க?”

பிறந்தநாளுக்கு ரெண்டு நாள் முன்னாடி போனேன் மேடம்.. பத்தாம் தேதி.”

அப்போ அங்கே ஏதும் வித்யாசமா தெரிந்ததா? லைக் கலைச்செல்வி டென்ஷனில் இருந்த மாதிரி, இல்லை, வேற ஏதும் சேல்ஸ் கேர்ள் முகம் வாட்டமா இருந்ததா?”

அப்படி நான் பெருசா கவனிக்கலை மேம்.. கலைச்செல்வி இயல்பா இருந்தது போலத் தான் தெரிந்தது.”

ஓகே தேங்க் யூ.. தேவைப்பட்டா கூப்பிடுறேன்”

ஓகே மேம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

உங்க தங்கைக்கு இனி வேலை இல்லை.” என்ற பைரவி டேவிட் கூறியதை கபிலனிடம் பகிர்ந்தாள்.

பின், எனக்கு கிருஷ்ணாவோட அக்டிவிட்டீஸ் தெரிஞ்சுக்கணும்.. எப்பப்போ கடைக்கு வரான்? வேற எங்கெல்லாம் போறான்.. சேல்ஸ் கேர்ள்ஸ் கூட எப்படி பழகுறான்? கலைச்செல்வி ஒரு மாசமா தான் விங்க்ஸ்ஸில் வேலை பார்த்து இருக்கிறா. ஸோ இங்கேயும் ஒரு மாசம் தான் வேலை பார்த்து இருப்பா.. கடந்த ஒரு மாதத்தில் கடைக்கு பாலாஜி, நரேன், கஜேந்திரன், ருத்ரேஷ்வர் வந்தாங்களா என்பதையும் விசாரிக்கணும்.. முத்தரசன் கிட்ட இந்த வேலையைக் கொடுங்க.. அப்போ தான் விஷயம் வெளியே போகாது..

நாளைக்கு மதியம் இல்லை அதிகபட்சம் ஈவ்னிங் எல்லா விவரமும் எனக்கு வந்திருக்கணும்.. முதல்ல கலைச்செல்விக்கு அங்கே யார் கூடவும் பழக்கம் இருந்ததா? அங்கே வேலை பார்த்தவங்களுக்கு கலைச்செல்வி மேல் என்ன ஒப்பினியன் என்பதை விசாரிச்சு சொல்லச் சொல்லுங்க” என்றாள்.

ஓகே மேடம்” என்று கூறி வெளியேறினான்.

சிறிது நேரம் கழித்து பைரவியின் கைபேசி அலறியது. அழைத்தது ருத்ரேஷ்வர்.

அழைப்பை எடுத்து, ஹலோ” என்றாள்.

அம்மு.. எனக்கும் நித்யாக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆகலை”

நீ யாரைக் கல்யாணம் செய்தால் எனக்கென்ன?”

அப்போ உன்னை கல்யாணம் செய்துக்கலாம்!”

என் கிட்ட ப்ளிர்ட்(flirt) செய்ய முயற்சிக்காத.. வேஸ்ட் ஆஃப் டைம்.” என்று வெகு அலட்சியத்துடன் கூறினாள்.

அவளது அலட்சியத்தை அலட்சியம் செய்தவன், டின்னருக்கு நாம ரெண்டு பேரும் **** ஹோட்டல் போகலாமா?” என்று கேட்டான்.

நோ” என்றவள் அழைப்பைத் துண்டித்து விட்டாள். அவன் உடனே அழைத்தான்.

அழைப்பை எடுத்து அவள் கோபத்துடன் பேசும் முன் அவன், கேஸ் சம்பந்தமா முக்கியமான விஷயம் பேசணும்.. **** ஹோட்டலில் எத்தனை மணிக்கு சந்திக்கலாம்?” என்று கேட்டிருந்தான்.

சற்று நிதானித்தவள், இப்போ நீ எங்க இருக்க?” என்று கேட்டாள்.

நோ.. **** ஹோட்டலில் சந்திக்கலாம்.. அதுவும் உன்னோட தொடுப்பு இல்லாம, நீ மட்டும் தான் வர”

கேஸ் சம்பந்தப்பட்ட யாரையும் தனிப்பட்ட முறையில் நான் சந்திப்பது இல்லை.”

அப்போ உன்னோட ருது மாமாவை பார்க்க வா”

அவள் கோபத்துடன், தேவை இல்லாததைப் பேசாத” என்றாள்.

எனக்கு எது தேவை, எது தேவை இல்லைனு நான் தான் முடிவு செய்வேன்” என்று அவன் அழுத்தத்துடன் கூற,

அதே மாதரி எனக்குத் தேவையானதை நான் மட்டுமே முடிவு செய்வேன்.” என்று அவனுக்கு மேல் மிக அழுத்தமான குரலில் கூறினாள்.

error: Content is protected !!