“ப்ளீஸ்” என்றபோது அவளையும் மீறி அவளது இடது கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.
அவளது கண்ணீரை துடைத்தவன், “யூ ப்ளீஸ் மீ டியுட்ராப்” என்றான்.
“அய்யோ! ஒங்களுக்கு புரியல” என்று கத்தியபடி நகர்ந்தவள், “ஒங்க காதலை நான் ஒணராம இல்ல ஆனா கூடவே ஒவ்வொரு நிமிசமும் யே அப்பா நெனப்புதே யனக்கு அதிகமா வருது.. அதோட தாக்கத்துல ஒங்கள வருத்தி புடுவேன்.. அதுவு யனக்கு வலிதே.. மின்ன ஒங்க மேல கோபமும் வெறுப்பும் மட்டுந்தே இருந்துது.. இப்ப…” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
“இப்போ வெறுப்பு போய் பிடித்தம் வர ஆரம்பிச்சுடுச்சு தானே!” என்றான் உவகையுடன்.
அவள் அவனை முறைக்க,
“என்ன!”
“நான் என்ன சொல்லிகிட்டு இருக்கேன், நீக…” என்றவளின் பேச்சை மீண்டும் இடையிட்டவன்,
“எனக்கு இதான் அதி முக்கியம்” என்று முடித்தான்.
முறைப்பும் எரிச்சலுமாக, “ஒங்களுக்கு புரியலையா இல்ல நீங்க புரிஞ்சுக்க விரும்பலையா? என்னிய வுட்டு வெலகியே இருக ப்ளீஸ்.. நீங்க என்னிய நெருங்க நெருங்க, ஒங்களுக்குதே வலிக்கும்.. நானே வலிக்க செய்வேன்..
எத்தனை வலியைத் தான் நான் தாங்குவேன்! இது ஏன் ஒங்களுக்கு புரிய மாட்டிக்கு!”
“எனக்காக யோசிக்கிற பாரு.. என்னை கஷ்டபடுத்துறப்ப உனக்கு வலிக்குதுப் பாரு.. அதான்டி காதல்! இது ஏன் உனக்கு புரிய மாட்டிக்குது?”
அவனை முறைத்துவிட்டு நகர,
அவன், “ஓய்! என்ன எஸ்கேப் ஆக பார்க்கிற! பதிலைச் சொல்லு” என்றான் துள்ளல் குரலில்.
“என்ன தேவைக்கு? நீங்க ஒத்துக்க போறது இல்ல.. அதேன்”
“அப்படி நீ லாஜிக்கோட சொன்ன எதை நான் ஒத்துக்கலை?”
“செந்தூரனை கஷ்டபடுத்துற மாதிரி பேசினாலும் தான் எனக்கு வலிக்கும்”
அவன் முறைப்புடன், “அவனும் நானும் ஒன்னா?”
“இதுக்கு நான் பதில் சொல்லிடுவேன்.. உங்களுக்கு தான் வலிக்கும்” என்றபடி படுக்க தயாரானாள்.
“அவனும் நானும் ஒன்னு இல்லை.. அவனை விட நான் தான் உனக்கு முக்கியம்னு ஒரு நாள் நீயே சொல்லுவ”
அவள் பதில் அளிக்கவில்லை என்றதும், “என்ன பதிலை காணும்?” என்றான்.
அவனை பார்க்காமல், “என் எனெர்ஜியையும் நேரத்தையும் வேஸ்ட் செய்ய விரும்பலை” என்றவள் மெத்தை மீது இருந்த பூக்களை கீழே தள்ளிவிட்டு கொண்டிருந்தாள்.
“இந்த பூக்களை மாதிரி என் காதலையும் அலட்சியமா தள்ளி விடுறல!”
மீண்டும் அவனை முறைத்தவள், “ரொம்ப பேசினீங்க ரூம் வெளிய தள்ளிடுவேன்” என்றாள்.
“அத்தையும் தாத்தாவும் பாவம் இல்லையா?”
“மத்தவங்களுக்காகனே எல்லாத்தையும் செய்தா, எனக்காக நான் எப்போ வாழ?”
“பொது வாழ்வில் இருந்துட்டு இப்படி சொன்னா எப்புடி? உங்கள் சேவை இந்த ஊருக்கு தேவை.. அதுவும் இந்த மாமனுக்கு ரொம்பவே தேவை”
“மாமனா?”
“அத்தை மகன் மாமா தானே!”
“சொத்தையே இல்லையாம்!”
“சரி.. இங்கே ஹஸ்பண்டை மாமானு தானே சொல்லுவாங்க”
“டெம்பரரி ஹஸ்பண்டை எல்லாம் அப்படி கூப்பிட முடியாது”
“ஒருவேளை பிரிறதா இருந்தா தாலியை கழட்டி வச்சிடுவியா?”
அவள் கடுமையாக முறைக்க,
“இல்லைல! அப்போ உன்னோட ஒன் அண்ட் ஒன்லி நிரந்திர ஹஸ்பண்டு நான் தான்.. நான் மட்டும் தான்”
“நான் தூங்க போறேன்” என்றபடி குழல் விளக்கை அனைத்து விடிவிளக்கை போட்டுவிட்டு படுத்து கண்களை மூடினாள்.
“என்னால் கீழலாம் படுக்க முடியாது”
கண்களை திறவாமல், “நான் படுக்க சொல்லலையே!” என்றாள்.
“பெட்டில் படுக்கவும் சொல்லலை”
“தாலி கட்ட கூட தான் சொல்லலை”
“நான் படுத்துட்டேன்” என்றபடி அவன் சட்டென்று படுத்துவிட, அவளது உதட்டோரம் மென் கீற்று உதித்தது.
சில நொடிகள் அமைதியாக கரைய, அவன், “டியுட்ராப்” என்று அழைத்தான்.
அவள் அமைதியாக இருக்க, “நீ தூங்கலைனு எனக்கு தெரியும்” என்றான்.
“ப்ச்.. என்ன வேணும்?”
“கடைசிவர ஒரு கேள்விக்கு நீ பதில் சொல்லலை.. மண்டபத்தில் உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையானு கேட்டதுக்கு பதில் சொல்லலை”
“காலி சட்டியில நண்டு உருளுற மாதிரி லொடலொடங்காம தூங்குங்க.. இனி பேசினா பதில் சொல்ல மாட்டேன்” என்றவள் திரும்பி படுத்துக் கொண்டாள்.
அதே நேரத்தில் தங்களது அரிசி ஆலயத்தில் நண்பனுடன் மது அருந்தி கொண்டிருந்த ஆளவந்தான் இருக்கையை தூக்கி போட்டபடி, “யனக்கு மனசே ஆரல” என்று கோபத்துடன் கத்தினான்.
“பார்த்துக்கிடலாம் மச்சி.. அவென்லா ஒரு ஆளா!” என்றபடி அவனது நண்பன் அவனை அமர செய்தான்.
“அதேன்.. அவெ என்ன பெரிய இவனா! சும்மா வுட கூடாதுல.. செமத்தியா செஞ்சுவுடனு.. என்னியவே நேக்கா ஏமாத்திபுட்டான்! அதுவு சத்தம் காட்டம தூக்கிட்டான்.. நானே எத்தன்! இவெ எனக்கே ஜித்தனால இருந்து இருக்கியான்!
வூட்டுல தலகாட்ட முடிலடா.. ஒவ்வொருத்தர் கேள்விக்கு வாய தொறக்கல.. அவிக பார்வ ‘நீயெல்லா என்னல ஆம்பள?’னு கேட்டு எக்களிக்கது போலதே இருக்கு.. அதுவு அவெ ஆத்தா என்னா பேச்சு பேசுது! யே அயித்தயவே ஒண்டிக்கு ஒண்டி கை பாக்கும் போல!
எல்லாம் அந்த சிரிக்கியாளதே.. அவளயு சும்மா வுட மாட்டேன்லே! இந்த ஆளவந்தான் ஆருனுட்டு காட்டுதே” என்றபடி குடி போதையில் மயங்கி இருந்தான்.
பனித்துளி குளிர காத்திருப்போம்…
தோழமைகள் அனைவருக்கும் (அட்வான்ஸ்) இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். safe ஆ என்ஜாய் பண்ணுங்க..