தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழமைகளே!!!
உடல் நிலை மற்றும் மனநிலை சரி இல்லாத காரணத்தால் இந்த சிறு இடைவெளி.. இனி இடைவெளி வராமல் பார்த்துக்கிறேன்.. இந்த கதை ரொம்ப முன்னாடி எழுதியதால், edit செய்து போடுறேன்.. அதான் mind set & health ஒழுங்கா இருந்தா தான் edit செய்ய முடியுது..
எனக்கு என்னவோ இரவு நேரம் தான் பதிவை போட வசதியா இருக்கும்னு தோணுது.. இனி அப்டேட்ஸ் நான் இரவில்(நள்ளிரவு/அதிகாலை) போட்டு வைக்கிறேன்.. நீங்க காலையில் அருந்தும் காப்பியுடன் படிச்சுக்கோங்க..
இந்த இடைவெளியை compensate செய்ய, இன்று(18Sep2025) இரவில் இருந்து இன்னொரு கதையையும்(தழல் பட்சியவள் பைரவி!) பதிவிடுறேன்.. இந்த கதை விறுவிறுப்பாக இருக்கும்.. heroine based story.. அதுக்காக ஹீரோ டும்மி கிடையாது.. அவனும் ஆளுமை நிறைந்தவன் தான் ஆனால் score பண்றது ACP பைரவியா தான் இருக்கும்..
விஜயதசமி(2Oct2025) அன்றில் இருந்து புது கதை “சுடும் பனித்துளியே!” பதிவிட ஆரம்பிக்கிறேன்.. இது மல்லி அக்கா சைட்டில் 4 எப்பி மட்டும் போட்டு நிறுத்திய கதை.. இனி தான் எழுத போறேன்.. ஸோ இந்த கதையின் பதிவுகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனி அன்று மட்டும் வரும்.. இதனுடன் ரீரன் கதைகள் தொடர்ந்து வரும்..

இப்போ திவ்யாவோட flashbackகு போவோமா……………..
விலகல் – 24
ராஜாராம் சொன்னதையெல்லாம் கேட்ட ஹரீஷ், இரண்டு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தான். பிறகு ஒரு முடிவுடன் அவரை நிமிர்ந்து பார்த்தவன், “உங்க மகள் திவ்யாவை எனக்கு கல்யாணம் செய்து வைங்க சார்… நான் அவளை நல்லா பார்த்துக்கிறேன்.” என்றான்.
பதில் கூறாமல் அமைதியாக அவனைப் பார்த்தவரின் கண்களில் மென்னகை இருந்தது.
அவன், “நான் அனாதைனு தயங்குறீங்களா சார்? என்னைத் தவிர என் திவ்யாவை யாரும் நல்லா பார்த்துக்க முடியாது… திவ்யா விரும்பும் சந்தோஷம், அன்பு, காதல், நிம்மதி எல்லாமே என்கிட்ட மட்டும் தான் அவளுக்குக் கிடைக்கும்.”
“இதைத் தெரியாமலா உங்ககிட்ட என் மகளைப் பற்றி சொன்னேன்!”
“சார்!” என்று அதிர்ச்சியுடன் பார்த்தான்.
அவர் புன்னகையுடன், “என் பொண்ணோட மனம் எனக்கு முன்னாடியே தெரியும்… உங்களோட மனம் ஓரளவுக்கு புரிந்தாலும், அதை ஒப்புக் கொள்வதில் உங்களுக்கு தயக்கம் இருப்பது புரிந்தது”
“எப்படி சார்?”
“மாமா சொல்லலாமே!”
“திவ்யா முழுமனதுடன் உங்களை ஏத்துக்கிட்ட அப்புறம், அப்படி கூப்பிடுறேன் சார்… அதுவும் காலேஜ் வெளியே.”
சிறு புன்னகையில் அதை அங்கீகரித்தவர்… பின், “என்ன தான் நீங்க ரெண்டு பேரும் வெளியே சண்டை போட்டுக் கொண்டாலும், இருவரும் மற்றவர் வார்த்தைக்கோ, மனதிற்கோ கட்டுப்படுவது முதல் நாளே எனக்குப் புரிஞ்சுது. இன்னைக்கு என்ன தான் நீங்க எனக்காகனு சொல்லி திவிமா பற்றி கேட்டாலும், உங்க முகத்தில் சிறு தவிப்பும் கவலையும் இருந்ததைப் பார்த்தேன்.”
“உங்களோட நிம்மதியும் எனக்கு முக்கியம் தான் சார்… நான் பொய் சொல்லலை. ஆனா…”
“உங்க திவ்யாவின் நிம்மதி அதை விட முக்கியம்.” என்று அவர் முடித்தார்.
அவனும் அசராமல் சிறு புன்னகையுடன், “ஆமாம் சார்.” என்றான்.
“திடீர்ன்னு எப்படி பொண்ணு கேட்டீங்க?”
“இன்னும் என் மனசை திவ்யாகிட்ட சொல்லலை. இன்னைக்கு தான் சொல்லணும் நினைத்தேன்… உங்ககிட்ட மெதுவா தான் பேசுறதா இருந்தேன். ஆனா, திவ்யாவோட ரணத்தைப் பற்றி தெரிந்ததும், அவளோட நிம்மதி, சந்தோஷத்தை தவிர… வேறு எதுவும் எனக்கு தெரியலை… அதான் கேட்டுட்டேன்.”
“ஹும்ம்… ஆல் தி பெஸ்ட்!”
“தாங்க் யூ சார்” என்றவன், “நான் உங்ககிட்ட அவளைப் பற்றி கேட்டதை, அவகிட்ட சொல்ல வேண்டாம்.”
அவர் சரி என்பது போல் தலையை ஆட்டினார்.
அவன், “சார் ஒரு விஷயம்… ரெண்டு நாட்கள் முன்னாடி ராகவன் திவ்யாவை பார்க்க வந்திருந்தார்…”
“தெரியும்… திவ்யா ஏதோ கோபமா பேசி அனுப்பியிருக்கிறா”
“கோபமா மட்டுமில்லை சார்… வெறுப்புடன் அனுப்பிட்டா… இனி அவளைப் பார்க்க வந்தால் அவ உயிரை விட்டுடுவான்னு சொல்லி அனுப்பிட்டா.”
“என்ன சொல்றீங்க?”
“ஆமா சார்… ராகவன் பிரெண்ட் யாரிடமோ அவரைப் பற்றி கேட்டதாவும், அவரின் சுயரூபம் தெரிந்து விட்டதாகவும் சொன்னா…”
“ஸோ… அவள் அம்மா மேல் பெருசா தப்பு இல்லைனு புரிந்திருப்பா.” என்றவர், “அதான் அன்னைக்கு ஜனனி கிட்ட சாதாரணமா பேசியிருக்கனும்.”
“ஜனனி?”
“என் இரண்டாவது மகள்… நம்ம மெடிக்கல் காலேஜ்ஜில் தான் படிக்கிறா”
“சின்ன திருத்தம் சார்… அது உங்க காலேஜ்.”
அவர் புன்னகைக்கவும், “சரி சார், நான் கிளம்புறேன்.” என்று கூறி வெளியே சென்றவன், முதல் வேலையாக தன்னவளைத் தேடினான்.
அவன் ஆசிரியர் அறைக்குச் சென்றதும், அவன் முகத்தைப் பார்த்த அரவிந்த், மற்றவர்கள் முன் எதையும் கேட்காமல், “காபி குடிக்க போகலாமா?” என்று வினவினான்.
“ஹும்ம்” என்று கூறி அரவிந்துடன் கல்லூரி உணவகம் சென்றான்.
எப்பொழுதும் போல் காபியுடன் அமர்ந்த அரவிந்த், “என்னாச்சுடா?”
“திவ்யா பற்றி சார் எல்லாம் சொன்னார்… நான் அவர் கிட்ட பொண்ணு கேட்டேன்… அவர் சாதாரணமா சிரிச்சிட்டே இது தெரியாமலா திவ்யா பற்றி உங்களிடம் சொன்னேன்னு கேட்கிறார்டா”
“பார்த்தியா! நான் பர்ஸ்ட்டே சொன்னேன்… சாரிடம் பேசுன்னு… சரி அதான் பிரச்சனை இல்லையே, அப்புறம் ஏன் உன் முகம் சரி இல்லை?”
“திவ்யாவை காணும்டா”
“நல்லா தேடுனியா?”
“தேடிட்டேன்… கிளாஸில் இல்லை… பவித்ராகிட்ட கூட கேட்டுட்டேன்… அவளுக்கும் தெரியல… விஜய்யும் காணும்… ரெண்டு பேர் போனுக்கும் கால் செய்திட்டேன்… எடுக்கல…”
“விஜய் கூட தானே இருக்கிறா… பத்திரமா தான் இருப்பா.” என்று கூறியவனும், மனதினுள் ‘எங்கே போனாள் இந்தப் பெண்?’ என்றே கேட்டுக் கொண்டான்.
“ச்ச்… எனக்கு இப்போவே அவளைப் பார்க்கணும்டா… அவ அழுதுட்டு போனது தான் என் கண் முன்னாடி வருதுடா” என்றவனின் குரல் வெகுவாகக் கலங்கி இருந்தது.
என்ன சொல்லி தேற்ற என்று அறியாத அரவிந்த், நண்பனின் கையை ஆதரவாகப் பற்றினான்.
……………………..
சிறிது நேரம் திவ்யாவை அழ விட்ட விஜய், “போதும்டா” என்றான்.
அவன் அறையில் இருந்த தண்ணீரை அவளுக்குக் கொடுத்து பருகச் சொன்னான்.
அவள் தேம்பியபடியே, “இப்போ ரிஷிக்கு. எல்லா உண்மையும் தெரிந்து இருக்கும்…”
“என்னடா சொல்ற?”
“ஹும்ம்… சேர்மன் அவனிடம் என் பிறப்பை பற்றி சொன்னதை கேட்டேன்… அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்! சும்மாவே என் காதலை ஏற்கமாட்டான்.” என்றவள் விஜய் பதில் சொல்லும் முன், “ஆனா, இப்போ கூட அவன் எனக்காக கேட்கலடா… சேர்மன் சாருக்காக தான் கேட்டான்.”
“இல்லைடா… அவர் உனக்காக தான்….”
மறுப்பாக தலை அசைத்தவள், “அவன் சொன்னதை நானே கேட்டேன்… எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ!” என்றவள்,
“என்னுடைய ஒன்பதாவது வயது வரை நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அப்போ என்னுடன் என் சாருமா இருந்தாங்க… எனக்கு திவ்யானு பேர் வச்சது அவங்க தான்… நான் எப்பவும் சந்தோஷமா இருக்கனும்னும், அவங்க வாழ்க்கைக்கு ஒளி தருபவள் என்ற எண்ணத்திலும், இந்தப் பெயரை வச்சதா சொல்லுவாங்க..!. சாருமா யாருனு உனக்கு தெரியாதுல! அவங்க தான் என் அம்மா… மிஸ்டர் ராகவனோட முதல் மனைவி… ராகவன் யாருன்னு….”
“தெரியும்டா”
“உனக்கு ஒரு வேடிக்கை தெரியுமா? பெத்த பொண்ணையே, தன் பொண்ணுனு தெரியாம தத்தெடுத்த மேதாவி தான் அவர்…”“என்னடா சொல்ற!”