விட்டாலும் விலகாதே! ~ விலகல் 23.4

பவித்ராவும் விஜயும் மாற்றி மாற்றி காரணம் கேட்டும் திவ்யா அமைதியாக தான் இருந்தாள். ஹரீஷ் வகுப்பில் அவளை கூர்ந்து கவனித்தாலும் எதுவும் கேட்கவில்லை.

பொறுமை இழந்த பவித்ரா அன்று மாலை திவ்யா கிளம்பும் முன், “உன் அப்பா பிரெண்ட் அப்படி என்ன தான் சொன்னார்?”

திவ்யாவின் முறைப்பில், “சாரி சாரி.. அவரை பற்றி என்ன சொன்னார்?”

“அந்த ஆளை பற்றி பேசாத.. நான் யோசிக்கிறது வேற”

“என்ன?”

“ஜனனி அம்மா மேல முழுசா தப்பு இல்லைனு தெரியுது.. இருந்தாலும் என்னால் ஏத்துக்க முடியலை

“புரியுற மாதிரி சொல்லு”

“தப்பெல்லாம் அந்த ஆள் மேல் தான் இருக்குது.. ஆனா அவங்க ஏன் என்னை அழிக்கா அழிச்சதா பொய் சொல்லி பெத்துக்கிட்டாங்க? அப்படி பெத்துக்கிட்டவங்க என்னை ஏன் அனாதை ஆசிரமத்தில் விட்டாங்க? பதினைந்து வருஷம் கழித்து ஏன் திடீர்னு வந்து நிற்கிறாங்க?”

“அவங்களிடம் பேசிப்பாரேன்”

திவ்யா முறைக்கவும், பவித்ரா, “நீ தான இப்போ சொன்ன.. தப்பு அவங்க மேல இல்லைனு… அதை மாதிரி மத்ததுக்கும் ஏதாவது காரணம் இருக்கலாம் தானே!”

“என்ன பெரிய காரணம் இருக்க போகுது? என்னை அழிக்க அவங்க நினைச்சப்ப காலம் கடந்து இருக்கலாம்.. வேண்டா வெறுப்பா பெத்து, என்னை தூக்கி எறிந்து இருப்பாங்க” என்று வெறுப்புடனும் கோபத்துடன் கூறினாள்.

“அப்படியே இருந்தாலும் பதினைந்து வருஷம் கழிச்சு ஏன் அவங்களா வரணும்?”

“என்ன இழவுக்கு வந்தாங்களோ! அப்படி வராமல் இருந்து இருந்தா இவ்வளவு வேதனையை நான் அடைந்திருக்க மாட்டேன்”

“எனக்கு என்னவோ நீ சேர்மன் சாரிடம் பேசினால்………”

“இதுக்கு தான் நான் உன்கிட்ட இதை பத்தி பேசலை.. நான் கிளம்புறேன்” என்றவள் பவித்ரா அழைப்பதை பொருட் படுத்தாமல் கிளம்பினாள்.

அதே நேரத்தில் அரவிந்த் ஹரீஷிடம், “என்ன முடிவு செய்திருக்க?”

ஹரீஷ் புன்னகையுடன், “நாளைக்கு சொல்றேன்”

“ஏன் நாளைக்கு தான் நல்ல நாளா?”

“நாளைக்கு திவ்யா பர்த்டே”

“பார்டா!” என்று கிண்டலாக கூறியவன், “உன்னையே பரிசா தரப் போறீங்களாக்கும்” என்றான் கண்சிமிட்டி.

“டேய்”

“என்ன! உண்மையை தானே சொன்னேன்”

“அடங்குடாஎன்றவன் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

திவ்யா பாடல்களுடன் இரவை கழிக்க ஹரீஷோ அடுத்த நாள் தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சிகளை பற்றி அறியாமல் தன்னவளிடம் எப்படி தன் காதலை சொல்வது என்ற சிந்தனையில் இரவை கழித்தான்.

ஹரீஷ் தன் காதலை சொல்லும் போது திவ்யா மறுப்பாள் என்பதை இருவருமே அப்பொழுது அறியவில்லை.

டுத்த நாள் திவ்யா வகுப்பிற்கு செல்லும் போது ஆசிரியர் அறையில் இருந்த ஹரீஷ், “திவ்யா” என்று அழைத்தான்.

அவள் ஆசிரியர் அறையினுள் சென்றதும், அவன் புன்னகையுடன், “ஹப்பி பர்த்டே” என்று கூறி கையை நீட்டினான்.

ஆச்சிரியத்தில் கண்கள் விரிய மெல்லிய புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்று கூறி கையை நீட்டி அவனுடன் குலுக்கினாள். அவளது புன்னகை கண்களை எட்டவில்லை என்பதை கவனிக்க தவறினான்.

அப்பொழுது தங்ககுமார் உள்ளே வரவும், அவள், “ஓகே சார்” என்று கூறி வெளியேறினாள்.

எப்பொழுதும் சற்று தாமதமாக வரும் தங்ககுமார் இன்றைக்கு சீக்கிரமாக வந்தது விதியின் சதியோ! அவர் சற்று தாமதமாக வந்திருந்தால் அவன் அவளுக்காக வாங்கிய புடவையை கொடுத்து காதலை சொல்லியிருப்பான். இந்த இடத்தில் தான் விதி விளையாடி விட்டது. அதை அறியாத ஹரீஷ் தங்ககுமாரை மனதினுள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அங்கே வந்த விஜய் ஹரீஷிடம் சென்று, “கொஞ்சம் தனியா பேசணும் சார்” என்றான்.

ஹரீஷ் எழுந்து வெளியே வந்ததும் விஜய், “இன்னைக்கு திவ்யா பர்த்டே சார்”

“தெரியும்.. நான் விஷ்ஷஸ் சொன்னேன்

“சார்!” என்று அவன் நம்ப முடியாமல் கூறவும் ஹரீஷ் உதட்டோர புன்னகையுடன், “எதுக்கு கூப்பிட்ட?”

“திவி பர்த்டேயை கொண்டாடியதே இல்லை சார்”

ஹரீஷ் ஆச்சரியத்துடன் பார்க்கவும்,

விஜய், “ஸ்கூல் டேஸ்ஸில் கொண்டாடியதா பவித்ரா சொல்லியிருக்கா ஆனா எனக்கு தெரிந்து கொண்டாடியது இல்லை.. இது தான் கடைசி வருஷம்.. அதான் கேக் வாங்கிட்டு வந்திருக்கிறேன்.. முதல் பிரியட் நீங்க தான்.. நீங்க சொன்னா அவ கேட்பா சார்.. ப்ளீஸ் சார் நீங்க சொல்றீங்களா?”

“சரி சொல்றேன்”

“ரொம்ப தேங்க்ஸ் சார்.. நீங்க உடனே சரி சொல்லுவீங்கனு நான் நினைக்கவே இல்லை சார்.. இன்பாக்ட் திட்டுவீங்கனு நினைச்சேன்”

“ஏன்?”

“அது.. நீங்க.. கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.. அதான்” என்று சமாளித்தான்.

ஹரீஷ் மெல்லிய புன்னகையுடன், “சரி கிளாஸ்க்கு போ” என்று கூறி ஆசிரியர் அறைக்கு சென்றான்.

வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும் ஹரீஷ் உற்சாகத்துடன் திவ்யாவின் வகுப்பிற்கு சென்றான்.

அவன் வருகை எண்ணிக்கையை பதிவு செய்ததும் விஜயிடம் கண்ஜாடை காட்டினான்.

விஜய் அணிச்சலை(cake) எடுத்துக் கொண்டு திவ்யா முன் நிற்க, மற்றொரு நண்பன் சிறு கருவி கொண்டு வண்ண காகிதங்களை தூவ, அனைவரும் ஒன்றாக, “ஹப்பி பர்த்டே திவ்யா” என்றனர்.

திவ்யா விஜயை முறைத்தாள்.

விஜய், “இது தான் கடைசி வருஷம்.. ப்ளீஸ் திவி”

“எனக்கு பிடிக்காதுனு தெரிந்தும் ஏன் என்னை கம்பெல் பண்ற?”

ஹரீஷ், “உன் பிரெண்ட்ஸ் ஆசை படுறாங்க.. இந்த முறை கட் செய்யலாமே!”

திவ்யா ஹரீஷை பார்க்க, அவன் கண்களில் ‘கட் பண்ணு’ என்று கூறினான்.

அவள் மறுப்பாக தலை அசைக்கவும், ஹரீஷ் ஆழ்ந்த குரலில், “திவ்யா.. நானும் சொல்றேனே!” என்றான்.

சிறிது கலங்கிய கண்களுடன் அவனை பார்த்து, “என்னை பொறுத்தவரை இது ஒரு கருப்பு நாள்.. ப்ளீஸ் வேண்டாம்” என்றவள் வெளியேறிவிட்டாள்.

error: Content is protected !!