ஹரீஷ், “திவ்யா…..” என்று ஆரம்பிக்க,
அவளோ கோபத்துடன், “இப்போ உனக்கு என்ன தெரியனும்?”
அவளை அமைதி படுத்தும் எண்ணத்துடன் அவன், “இல்ல எனக்கு எதுவும் தெரிய வேணாம்… நீ…….”
“அதான! நீ என்ன என்னை காதலிக்கிறியா! என்னைப் பற்றி நீ எதுக்கு தெரிஞ்சுக்கனும்?” என்று வெடித்தாள்.
ஹரீஷ் மனதினுள், ‘இப்படி முன்னே போனால் முட்டி, பின்னே போனால் உதைத்தா என்ன செய்றது!’ என்று நினைத்தான்.
“என்ன அமைதியா இருக்கிற? அந்த ஆள் பேசியே கொல்றார்னா நீ அமைதியா இருந்தே கொல்ற!” என்று அதற்கும் திட்டினாள்.
“உன் மொபைல் தா”
“எதுக்கு? நீ வாங்கி கொடுத்தை நீயே வச்சிக்க போறியா?”
அவன் அமைதியான குரலில், “தா”
“முடியாது”
“நான் கேட்டா தர மாட்டியா?”
“ஏன் நீ மட்டும் என்ன ஸ்பெஷல்?”
“எனக்கு நீ ஸ்பெஷல் இல்லை தான் ஆனா உனக்கு நான் ஸ்பெஷல் தானே?”
“அதான் உனக்கு நான் ஸ்பெஷல் இல்லைனு சொல்லிட்டியே! அப்பறம் என்ன?” என்றாள் முறைப்புடன்.
அவன் அவளை ஆழ்ந்து நோக்கவும், இரண்டு நொடிகளில் கைபேசியை கொடுத்திருந்தாள்.
அவன் தனது கைபேசியில் இருந்த சில மெல்லிசை பாடல்களை அவளது கைபேசிக்கு அனுப்பினான்.
பின் கைபேசியை அவளிடம் நீட்டியபடி, “சில சாங்ஸ் அனுப்பி இருக்கிறேன்.. ஹாஸ்டல் போய் கேட்டு மைன்டை ரிலாக்ஸ் ஆக்கு”
“என்ன திடீர் கரிசனம்?”
“என் ஸ்டுடென்ட் மனநிலை எனக்கு முக்கியம்.. அதான்”
“ஓ! அதாவது என் இடத்தில் வேற எந்த ஸ்டுடென்ட் இருந்தாலும் இப்படி தான் செஞ்சிருப்ப!!!”
“ஆமா”
அவள் கோபத்துடன் கைபேசியை தூக்கிப் போட, அவன் சிரமத்துடன் அது கீழே விழும் முன் கைப்பற்றி, “திவ்யா கொஞ்ச நேரம் கண் மூடி பாட்டு கேளு.. மைன்ட் ரிலாக்ஸ் ஆகும்.. எதுனாலும் அப்பறம் யோசி.. இப்போ கிளம்பு”
“ஏன்டா நீயும் என்னை படுத்துற?” என்று இறங்கிய குரலில் கேட்டாள்.
“..”
“ஏன் எதுக்குனு தெரியலைனாலும் என் வேதனையும் வலியும் உனக்கு புரியுது ஆனா இப்போ கூட என்னை தோள் சாய்த்து ‘உனக்கு நான் இருக்கிறேன்’ னு சொல்ல மாட்டிக்கிறியே!” என்று வலி நிறைந்த குரலில் கூறினாள்.
அவள் கூறியதை கேட்டு அவன் மனம் மெளனமாக கண்ணீர் சிந்தினாலும் வெளியே உணர்சியற்ற பார்வையை தான் பார்த்தான்.
“போடா” என்றவள் வேகமாக வெளியேறினாள்.
பவித்ரா, “திவி ஒரு நிமிஷம் என் பேக் எடுத்துட்டு வரேன்”
“நான் ஹாஸ்டல் போறேன்.. நீ கிளம்பு”
“திவி”
“நீயாவது என்னை படுத்தாம நான் சொல்றதை கேளு” என்றவள் படி இறங்கினாள்.
பவித்ரா ஆசிரியர் அறைக்கு சென்றபோது ஹரீஷ் தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடியிருந்தான்.
பவித்ரா, “சார்” என்று இரண்டு முறை அழைத்த பிறகு தான் கண்களை திறந்தான்.
“திவ்யா ரொம்ப பாவம் சார்.. உங்க அன்பை மட்டும் தான் இப்போ அவ நம்பி இருக்கிறா.. நீங்க……” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த போது,
“என்ன! எனக்காக பிச்சை கேட்கிறியா?” என்று திவ்யாவின் குரல் கடுமையுடன் ஒலித்தது.
ஹரீஷ், “திவ்யா” என்று கண்டிக்கும் குரலில் அழைக்க,
திவ்யா கோபத்துடன் அவனை பார்த்து, “மூச்.. இவ்வளவு நேரம் நான் கெஞ்சியப்ப அமைதியா தானே இருந்த! அப்படியே இரு.. நான் என் பிரெண்ட் கிட்ட தான் பேசிட்டு இருக்கிறேன்”
“உன் பிரெண்ட் கிட்ட தான் பேசுற ஆனா என்னை பற்றி பேசுறியே!”
“இல்லை நான் என்னை பற்றி தான் பேசுறேன்.. அவ எனக்காக தான் பேசுறா ஆனா அவ சொல்லி நீ புரிஞ்சுக்கிற அளவுக்கு என் காதல் இறங்கிட நான் விரும்பலை” என்றவள் பவித்ராவை பார்க்க,
அவள், “சாரி” என்றாள்.
“இனி என்னை பற்றி நீ இவனிடம் பேசக் கூடாது இது என் மேல் ஆணை”
பவித்ரா அமைதியாக தலையை ஆட்டவும் திவ்யா, “கிளம்பு” என்றாள்.
பவித்ரா கிளம்பவும் ஹரீஷை திரும்பி பார்க்காமல் திவ்யாவும் கிளம்பினாள்.
சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தவன் பின் மணியை பார்த்துவிட்டு நந்தகுமாரை அழைத்தான்.
நந்தகுமார் அழைப்பை எடுத்து, “சொல்லுடா”
“நீ இப்போ ப்ரீயா?”
“என்னடா சொல்லு”
“நீ ப்ரீனா என்னை பிக்-அப் செய்துக்கிறியா?”
“வரேன்.. உன் வண்டிக்கு என்னாச்சு?”
“சரி நானே வந்துக்கிறேன்” என்று அழைப்பை துண்டித்தான்.
உடனே அவனை அழைத்த நந்தகுமார் அவன் அழைப்பை எடுத்ததும், “என்னடா ஆச்சு? சொல்லுடா”
“..”
“ஹரி”
“மனசு கொஞ்சம் சரி இல்லைடா.. இப்போ என்னால் வண்டி ஓட்ட முடியாது”
“அரவிந்த் எங்க?”
“அவன் கிளம்பி இருப்பான்”
“சரி அரை மணி நேரத்தில் நான் வரேன்.. நீ வெயிட் பண்ணு” என்று அழைப்பை துண்டித்தவன் அரவிந்தை அழைத்தான்.
அரவிந்த் அழைப்பை எடுத்து, “சொல்லு நந்து”
“நீ காலேஜ்ஜில் இருந்து கிளம்பிட்டியா?”
“இல்ல.. லேப்ல இருக்கிறேன்.. சின்ன வேலை.. ஏன் கேட்கிற?”
“ஹரி இப்போ தான் பேசினான்.. மனசு சரி இல்லை, வண்டி ஓட்ட முடியாது நீ வந்து கூட்டிட்டு போறியானு கேட்டான்”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவன் போறதை பார்த்தேனே! நல்லா தானே இருந்தான்! சரி நான் போய் பார்க்கிறேன்”
“நான் பேசியதா காட்டிக்காதே.. நான் அரை மணி நேரத்தில் அங்க வரேன்”
“நானே அவனை கூட்டிட்டு வரேன்”
“இல்ல நான் கிளம்புறேன்.. அவனே கிளம்பினாலோ உன் கூட வந்தாலோ எனக்கு போன் போடு”“சரி..” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் அவன் வேலை செய்ததை சேமித்துவிட்டு கணினியை அனைத்து ஆசிரியர் அறை நோக்கி சென்றான்.