குறிப்பு: வாழ்த்திய தோழமைகளுக்கு மிக்க மிக்க நன்றி.. மாலை தனி தனியா reply போடுறேன்.. முதல் நாள் காலேஜ் நல்லா போச்சு 🙂 🙂
முதல் நாள் காலேஜ், பையன் pick-up, திடீர் வேலையா வெளியே சென்றது னு பிஸியா போயிருச்சு.. பையனை தூங்க வச்சிட்டு வந்து எப்பி edit பண்ணி போடுறேன்..

விலகல் 21
திவ்யா தன்னை ஹரீஷின் மனைவி என்று சொன்னதில் இருந்து ஹரீஷ் அவளை முற்றிலும் தவிர்த்தான். வகுப்பில் கூட அவள் என்ன செய்தாலும் கண்டுக்கொள்வதில்லை. அவளிடம் கேள்வி கேட்பதையும் நிறுத்தி இருந்தான்.
அவனது விலகலை உணர்ந்தவள் வகுப்பில் சந்தேகம் கேட்டு அவனை பேச வைக்க முயற்சித்தாள்.
முதல் இரண்டு முறை பதில் சொன்னவன் அடுத்த முறை, “நீ வேணும்னே என் நேரத்தை வேஸ்ட்டாக்குற.. உண்மையிலேயே சந்தேகம் இருந்தா ஸ்டாஃப் ரூம் வந்து கேளு” என்று கூறிவிட்டு பாடத்தை தொடர்ந்தான்.
ஆனால் அவள் ஆசிரியர் அறைக்கு சென்றால், அவன் அங்கே இருக்க மாட்டான். அவள் வருவதை தூரத்திலேயே பார்த்துவிட்டு, எழுந்து வெளியே சென்று விடுவான்.
ஒரு நாள் மாலை வகுப்புகள் முடிந்த பிறகு அவனை பார்க்க அவள் கணினி ஆய்வகத்திற்கு சென்றபோது அவனுடன் ஆசிரியை ரமாலக்ஷ்மி பேசிக் கொண்டிருந்தார்.
திவ்யா கோபத்துடன் அவனை முறைக்க அவன், “என்ன?”
“ப்ரோக்ராம் கம்ப்ளீட் செய்ய வந்தேன்”
“போய் சிஸ்டம்மில் போடு”
“அதில் எரர் வந்துட்டே இருக்குது.. நீங்க வந்து பாருங்க”
ரமாலக்ஷ்மி, “நாங்க கொஞ்சம் முக்கியமானது பேசிட்டு இருக்கிறோம்.. நாளைக்கு வந்து போடு”
அவள் ஹரீஷை முறைத்தாள்.
மணியை பார்த்த ஹரீஷ், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்குது.. நாளைக்கு மார்னிங் வந்து போடு” என்றான்.
அவள் அவனை முறைத்துவிட்டு வெளியே சென்றாள்.
ரமாலக்ஷ்மி, “சேர்மன் சார் ரிலேடிவ்னு ரொம்ப திமிர் சார்.. எப்படி முறைக்கிறா பாருங்க”
“மேடம் நீங்க அபிசியல் விஷயம் மட்டும் பேசினால் நல்லது”
“சார்.. நான்……..”
“எனக்கு வேலை இருக்குது.. முக்கியமா எதுவும் இல்லைனா கிளம்புங்க”
“என்னை இன்சல்ட் செய்றீங்க சார்.. அன்னைக்கும்……..”
“நான் டிசென்ட்டா பேசிட்டு இருக்கிறேன்.. ஓபன்னா பேசினா தாங்க மாட்டீங்க”
“ஏன் சார் இப்படி இருக்கிறீங்க?”
“நான் இப்படி தான்”
“உங்களுக்கு புரியலையா?”
“உங்களுக்கு தான் புரியலை”
“என்ன புரியலை?”
“எனக்கு வெட்டியா கடலை போடுறது பிடிக்காது.. என் நேரத்தை வீணடிக்காம கடலை போடும் மாரீஸ்வரன் சார் கிட்டப் போய் பேசுங்க”
“சார்.. நீங்க அதிகமா பேசுறீங்க”
“நீங்க பேச வைக்கிறீங்க.. சரி நான் ஓப்பன்னா சொல்றேன்.. உங்களிடம் எனக்கு எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லை.. இனி இது மாதிரி வந்து பேசினா நான் கம்ப்ளைண்ட் செய்ய வேண்டியதா இருக்கும்”
அவர் கோபத்துடன் வெளியேற இவன் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருக்கையில் அமர்ந்தான். அந்த நிலையிலும் திவ்யாவை நினைத்து, ‘இவ வேற என்ன செய்ய போறாளோ!’ என்று மனதினுள் கூறிக் கொண்டான்.
அதே நேரத்தில் திவ்யா விஜய்யுடன் ஹரீஷ் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் ஹரீஷ் வீட்டிற்கு சென்ற போது நந்தகுமார் வந்திருந்தான்.
அழைப்பு மணி சத்தத்தில் கதவை திறந்த நந்தகுமார் இவளை பார்த்து மனதினுள் அலறினாலும் வெளியே, “என்ன?” என்று கெத்தாக வினவினான்.
அவன் கையை தடிவிட்டுவிட்டு உள்ளே சென்று அமர்ந்தவள், “விஜி உள்ளே வா” என்றாள்.
நந்தகுமார், “ஹே! என்ன நீ பாட்டுக்கு வந்து உட்காருர! முதல்ல வெளியே போ”
“ஏற்கனவே ரிஷி மேல செம்ம கோபத்தில் இருக்கிறேன்.. தேவை இல்லாம அந்த கோபத்தை உன் மேல் டைவர்ட் செய்திடாத”
“ரிஷி யாரு?”
“உன்னுடன் இருக்கானே ஒரு சாமியார் அவன் தான்”
“ஓ! ஹரியை சொல்றியா?”
“அந்த நரியே தான்”
“என்னது நரியா?”
“அதை விடு.. எனக்கு அவனை பற்றி முழு விவரமும் வேணும்.. சொல்லு”
“எதுக்கு?”
“இப்போ சொல்ல முடியுமா முடியாதா?”
அவன் சந்தேகத்துடன் பார்க்க, அவளோ, “என்ன!” என்று மிரட்டினாள்.
அவன் மனதினுள், ‘சொன்னால் அவன் என்னை கொன்னுடுவானே!’ என்று நினைக்க,
“சொல்லலைனா நான் உன்னை கொன்னுடுவேன்” என்றாள்.
அவன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க, அலட்டிக் கொள்ளாமல், “ஹ்ம்ம்.. சொல்லு” என்றாள்.
“உனக்கு ஏன் இந்த கொலைவெறி?”
“அவனை பற்றி சொன்னால் உனக்கு எந்த பாதிப்பும் இருக்காது”
“நீ எதுக்கு அவனை பற்றி கேட்கிற?”
“நான் அவனை லவ் பண்றேன்”
“என்னது!!!!!!!!!!!!!”
“எதுக்கு இவ்ளோ ஷாக்?”
“அவனை… நீ எப்படி?”
“ஏன்? நான் லவ் பண்ண கூடாதா?” என்று அவள் எழுந்தபடி வினவ,
நந்தகுமார் சிறு பயத்துடன், “இல்லை.. பண்ணலாம்.. பண்ணலாம்”
“ஹ்ம்ம்” என்றபடி இருக்கையில் அமர்ந்தாள்.
விஜய் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
நந்தகுமார், “இது அவனுக்கு தெரியுமா?”
“தெரியும்”
“என்ன.. சொன்னான்?”
“இப்போ ரிஷி பற்றி சொல்ல முடியுமா முடியாதா?”
“உனக்கே இது ஓவரா தெரியலையா?”
“தெரியலை”
நந்தகுமார் பல்லை கடித்துக் கொண்டு, “அவன் உனக்கு சரி சொன்னது போல தெரியலை.. இப்போ நான் அவனைப் பற்றி சொன்னா, அவன் என்னை நிஜமாவே கொன்னுடுவான்”
“ஓ! சரி நீ சொல்ல வேண்டாம்.. நான் ஸ்வேதா(விக்னேஷின் அக்கா) கிட்ட பேசிக்கிறேன்” என்றபடி எழுந்தாள்.
“ஹே! இரு.. ஸ்வேதா கிட்ட என்ன பேச போற!”
“அதை எதுக்கு உன்கிட்ட சொல்லணும்?”
“ஹரி பற்றி சொல்றேன்”
திவ்யா புன்னகையுடன் அமர்ந்தாள்.
“உனக்கு……….” என்று ஆரம்பித்து நந்தகுமார் தயங்கி நிறுத்தினான்.
திவ்யா புன்னகையுடன், “நீயும் அவளும் காதலிக்கிறது தெரியும்.. அவ தான் என்கிட்ட சொன்னா.. உன் மேல் இருந்த பயத்தை போக்கியதே நான் தானே”
“அதான் தெரியுமே! அன்னைக்கு நீ கோவில்ல பேசியனப்ப நான் அங்க தான் இருந்தேன்” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.
வாய்விட்டு சிரித்த திவ்யா, “உன்னை டம்மி பீஸ் ஆக்கலை.. அப்படி சொன்னதால் தான் உன் மேல் இருந்த பயம் அவளுக்கு போச்சு.. அதனால தான் அடுத்த நாள் நீ சாரி கேட்டப்ப நின்னு பேசினா.. இல்ல நீ சாரி சொல்ல வந்ததை கூட புரிஞ்சுக்காம பயத்தில் நிக்காம ஓடி இருப்பா”
இரண்டு நொடிகள் யோசித்த நந்தகுமார், “ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்.. தேங்க்ஸ்”
“நீ தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு நான் உனக்கு எதுவும் செய்திடலை.. அவ பயத்தை போக்கினேன், அவ்ளோ தான்.. சரி ரிஷி பற்றி, அவன் பாமிலி பற்றி சொல்லு”
“அவன் சின்ன வயசில் இருந்து ஆனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன்.. செம படிப்ஸ்.. டுவெல்த் டிஸ்ட்ரிக்ட் பஸ்ட்.. நானும் அவனும் ஸ்கூலில் இருந்தே பிரெண்ட்ஸ.. உன் காலேஜ் சேர்மன் நடத்தும் டிரஸ்ட் மூலம் தான் IITயில் பி.இ படித்தான்.. அவன் காலேஜ் பஸ்ட் ரங்க் ஹோல்டர்.. அப்பறம் வேலை பார்த்துட்டே எம்.இ படிச்சான்.. ரெண்டு வருஷம் XXX காலேஜில் வேலை பார்த்துட்டு இப்போ உன் காலேஜில் வேலை பார்க்கிறான்..
அவனோட திறமைக்கு ஐ.டி கம்பெனி, லட்சத்தில் சம்பளம் கொடுக்க ரெடியா இருந்தும் அவன் லெக்சரர் வேலையை தேர்ந்தெடுத்தான்.. அதுக்கு காரணம் உங்க சேர்மன் என்பது என் கருத்து..
அவனுக்கு உங்க சேர்மன் சாரை ரொம்ப பிடிக்கும்.. அவர் மேல ரொம்ப மதிப்பும் மரியாதையும் வைச்சிருக்கான்.. பி.இ முடிச்சதும் முதல் மாத சம்பளத்தில் அவருக்கு ஒரு செட் டிரஸ் வாங்கி கொடுத்தான்..
அவனுக்கு பிரெண்ட்னா நானும் உங்க அரவிந்த் சாரும் மட்டும் தான்.. எங்க கிட்ட ஜாலியா பேசுவான் தான் ஆனா பொதுவா யாரோடவும் அதிகமா பேச மாட்டான்.. கோபம் வந்தா லேசில் அவனை சமாதனம் செய்ய முடியாது.. மனசுல என்ன இருக்குதுன்னு அவனா சொன்னா தான் உண்டு.. ஆனா அவன் வாயில் இருந்து லேசில் வார்த்தையை வாங்க முடியாது..
இப்போச் சொல்லு இவனை எப்படி நீ லவ் பண்ண?”