விட்டாலும் விலகாதே! ~ விலகல் 19.2

அவள் கோபத்துடன், நீ அடிச்சாலும், நான் அதை தான் செய்வேன்.

மீண்டும் கையை ஓங்கியவன், சீ…” என்றபடி கையை இறக்கி, உனக்கு வெட்கமே இல்லையா?”

உன்கிட்ட எனக்கென்ன வெட்கம்?”

ஒரு ஆணிடம் இப்படி தான் பேசுவியா?”

உன்னிடம் இப்படி தான் பேசுவேன்.

தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், இங்க பார்… இது வெறும் இன கவர்ச்சி தான்… இந்த வயசில்…”

எனக்கு உன்னை பிடித்தது உன் வெளி தோற்றத்தை வைத்து இல்ல… உன்னோட அக அழகு தான் என்னைக் கவர்ந்துச்சு. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்குது. உன்னோட சிறு சிறு அசைவுகளில் இருந்து, உனனோட அளவான பேச்சு… உன் குணம்… உன் கோபம்னு எல்லாத்தையும் நான் அணு அணுவா ரசிக்கிறேன், நேசிக்கிறேன், எஸ் ஐ லவ் யூ ட்ருலி அண்ட் டீப்லி!

“…”

என்ன!”

எனக்கு அப்படி ஒரு எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.

பொய்”

எனக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை… நான் யாரையும் காதலிக்க மாட்டேன்.

ஏன்?”

அதை உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை.

நீ என்ன தான் சொன்னாலும், உன் மனசில் நான் இருக்கிறேன்னு எனக்கு தெரியும்.

அவன் தோள் குலுக்களுடன், உன்னோட தவறான எண்ணத்துக்கு நான் பொறுப்பில்லை. என்றான் அலட்சியத்துடன்.

நீ சொல்றது பொய் தான்… சில மாசங்களுக்கு முன்னாடி, ஒரே ஒரு முறை பார்த்த, யாருனே தெரியாத என்னை எப்படி மறக்காம இருந்த? நான் உன் மனசுல நிச்சயம் இருக்கேன். நீ கோபப்பட்டா லேசில் மலை இறங்குறவனா தெரிய… ஆனா, என் விஷயத்தில் பல முறை உன் கோபம் சட்டென்று மறைஞ்சு இருக்குது. இல்லைனு பொய் சொல்லாத..!

முதல் நாள் சேர்மன் ரூமில் நான் கை ஓங்கியதும், உன் கண்ணில் கடும் கோபத்தை ஒரு நொடி பார்த்தேன். ஆனா, அதுக்கு அப்புறம் நான் பேசியதும், என் கலங்கிய குரலோ.. என் வார்த்தையோ ஏதோ ஒன்னு உன் மனசை சட்டுன்னு மாத்திருச்சு. நான் வெளிய போகும் போது, உன்கிட்ட கோபம் இல்லை… என்ன சரியா?”

அது…..”

நீ ஒத்துக்கலனாலும் அது தான் உண்மை…! அப்புறம் கேன்டின்ல ஒரு சாரா உனக்கு என் மேல் கோபம் வந்தது தான். ஆனா, அப்பவும் நான் பேசிய ஏதோ ஒன்னுல உன் கோபம் போய்டுச்சு. அப்புறம் ஹாஸ்டல்ல என்னோட இறுக்கம் தளர, என் மனசை திசை திருப்பிட்டு தான் கிளம்பின. இப்படி பல இருக்குது. என்றவள் அவனது கண்களை ஆழ்ந்து நோக்கி,

இன்னமும் உனக்கு என் மேல் விருப்பம் இல்லைனு பொய் சொல்லப் போறியா?” 

மூச்சை இழுத்து விட்டவன், என் கோபத்தை பற்றி நீ சொன்னது சரி தான் ஆனா அதுக்கு நீ சொன்ன காரணம் தான் தவறு… நான் சேர்மன் சார் டிரஸ்ட் மூலமா தான் படிச்சேன். அவர்கிட்ட நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.”

ஸோ… அவர் என் ரிலேடிவ்னு தான், நீ உன் விருப்பத்தை மறைக்கிற

உளறாத”

நீ என்ன வேணா சொல்லிக்கோ’ என்ற அலட்சியத்துடன் அவள் இருக்க,

நீ அவர் ரிலேடிவ் என்பதால் தான் உன் மேல் இந்த கரிசனம்னு சொல்றேன்… மற்றபடி நீ நினைக்கிற மாதிரி இல்லை.

அவனை முறைத்தவள், என்னை அவர் ரிலேடிவ்வா பார்க்காத…”

அப்போ இந்த கரிசனம் கூட இருக்காது, பரவாயில்லையா?”

அப்படிப்பட்ட கரிசனமே எனக்கு தேவை இல்லை… இன்பாக்ட் எனக்கு உன் கரிசனம் தேவையே இல்லை…! அன்பு தான் தேவை… அதுவும் எனக்கே எனக்கான தூய அன்பு. என்னை திவ்யா என்ற தனி மனிஷியா மட்டும் பார்”

சில நொடிகள் மௌனத்தில் கழிய, கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டவள், சரி… உனக்கு என் மேல் விருப்பம் இல்லைனே வச்சிப்போம்…”

அது தான் உண்மை.

சரி… நீ என்னை விரும்பலை… பரவாயில்லை… என் காதலை நீ ஏத்துகோ.என்று அவள் அசராமல் கூற, அவன் மனதினுள் மலைத்துத் தான் போனான்.

அவன், என் பொறுமையை நீ ரொம்ப சோதிக்கிற

இது கூட…” என்று ஆரம்பித்தவள் பின், சரி விடு. நீ ஒத்துக்க மாட்ட” என்றாள்.

இங்கே பார்… நான் உன் சார்… சாரை ஸ்டுடென்ட் விரும்புறது தப்பு.

ஓ! அப்போ ஒரு வருஷம் கழிச்சு வந்து என் காதலை சொன்னா ஒத்துப்பியா! ஏன்னா அப்போ நீ என் சார் கிடையாதே. என்று நக்கலுடன் சிரித்தாள்.

அவன் அவளை முறைக்க, அவளோ அலட்டிக்கொள்ளாமல், உருப்படியான காரணம் எதையாவது யோசிச்சு சொல்லுங்க பாஸ்… ஆனா, என்ன காரணத்தை சொன்னாலும், என் முடிவில் மாற்றம் இல்லை. நான் இப்போ கிளம்புறேன்.என்றபடி எழுந்தாள்.

அவள் நடக்க ஆரம்பிக்கவும்,

அமைதி விரும்பியான எனக்கு, அடாவடியான உன்னை எப்படி பிடிக்கும்னு நினைக்கிற?”

எதிர்வினை தான் ஈர்க்கும் பாஸ். என்று அவள் அழகான புன்னகையுடன் தலை சரித்துக் கூறினாள்.

டாப்பரான எனக்கு, அரியர் வைத்திருக்கும் உன்னை எப்படி பிடிக்கும்?”

அவள் புன்னகைக்கவும்,

என்ன?”

இப்படி ஒரு மொக்கை ரீசனை சொல்றியே! அதுவும் புஸ்ஸுன்னு போகும் போது, நீ என்ன சொல்லுவியோனு யோசிச்சேன்…”

அவன் அவளை முறைக்க,

ஓகே ரிஷி கண்ணா, நாளைக்கு பார்க்கலாம்… பை” என்று கூறி கிளம்பியவள், மேஜை மீது இருந்த அவனது கைபேசியை எடுத்து, எனக்கு புது மொபைல் நீ வாங்கித் தர வரை, இது என்கிட்ட தான் இருக்கும். என்று கூறி ஓடிவிட்டாள்.

ஏய்” என்று அவன் கத்தியதை கேட்க, அவள் அங்கே இல்லை.

error: Content is protected !!