விட்டாலும் விலகாதே! ~ விலகல் 14.2

லூசா டா நீ” என்ற நண்பன், நீ பவித்ராவை ஒரு வார்த்தை சொன்னனு தான், இப்போ இந்த நிலைமையில் இருக்கிற… இன்னும் வேற ஏதாவது செய்யப் போய்…”

இதுக்கு மேல என்னை அவமானப்படுத்த என்ன இருக்குது?” என்று அவன் கத்தினான்.

நண்பன், உனக்கு இல்லை, ஆனா ஷரோன்!”

சைமன் சிறு அதிர்ச்சியுடன் பார்க்க,

நண்பன், நீ பவித்ராவை இழுத்தனா திவ்யா நிச்சயம் உன்னோட தங்கச்சிய இழுப்பா… நான் சொல்றதை கேளு… இதை இத்தோட விடு…! அவளை கவனிக்க வேற விஷயம் கிடைக்கும். என்று அறிவுரை கூறினான்.

அப்பொழுது சைமனின் கைபேசி சிணுங்கியது. அழைத்தது திவ்யா தான்.

சைமன் அழைப்பை எடுத்து, ஏய்! நீ மட்டும் என் கையில் கிடைத்த..!”

வாய்விட்டு சிரித்த திவ்யா, என்ன பாஸ்! பிளான் எல்லாம் புட்டுக்கிச்சா!”

இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படி.

பார்க்கலாம் டா. என்றவள், இப்போ எதுக்கு கூப்பிட்டேன்னா…”

நான் எப்படி இருக்கிறேன்னு பார்த்து சந்தோஷப்பட தான!”

அது உன் புத்தி… நான் அதுக்கு கூப்பிடலை… அடுத்து என்ன செய்றதுனு தப்பா யோசிச்சு, பவித்ரா பெயரை மட்டும் இழுத்து விடலாம்னு நினைக்காத! அப்படி ஏதாவது செஞ்ச அடுத்த நிமிஷம் நீ பேசியதை விட கேவலமா, உன் தங்கச்சியைப் பற்றி நான் பரப்புவேன்.

பொண்ணாடி நீ?” என்று சைமன் இயலாமை தந்த கோபத்துடனும், எரிச்சலுடனும் கத்தினான்.

இல்லை தான்… நான் சாதாரண பொண்ணு இல்லைடா… பாரதி கனவு கண்ட புதுமை பெண்…! உன்னைப் போன்ற ஆட்களை வதம் செய்யும் காளி!” என்று ஆக்ரோஷமாக கத்தியவள், அழைப்பை துண்டித்திருந்தாள்.

அழைப்பை துண்டித்தவள், செய்றது எல்லாம் பொறுக்கித் தனம்… இதில் இவனை எதிர்த்தால், நான் பொண்ணு இல்லையாமா!” என்று கோபத்துடன் பொருமினாள்.

அவளது ஆக்ரோஷத்தில், ஒரு நொடி சைமனே அதிர்ந்து பேச்சிழந்தான். அவளது குரல் ஒலிபெருக்கி இயக்காமலேயே வெளியே கேட்டதில், அவனது நண்பர்கள் சிறு பயத்துடன் அவனைப் பார்த்தனர்.

திவ்யா இவனுடன் பேசிய நேரத்தில்…

தன் முன் நின்றிருந்த விஜய்யை, ஹரீஷ் தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

விஜய், சார்” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.

‘சேதுபதி’ திரைப்பட பாடல் கொண்ட காணொளியை தனது கைபேசியில் ஓட்டிய ஹரீஷ் சிறு கோபத்துடன், இது யாரு செய்தது? நீயா, திவ்யாவா?”

நான் தான் சார்”

உன் பிரெண்டை காப்பாத்துறியா?”

இல்லை சார்… நிஜமா நான் தான் சார் செய்தேன்.

ஹரீஷ் அழுத்தத்துடன் பார்க்கவும் விஜய், இப்போ தான் சார், அவ கிட்ட இதுக்கு திட்டு வாங்கிகிட்டு வரேன். என்று நொந்து போன குரலில் கூறினான்.

ஹரீஷ், நீ செய்ததோட விளைவு உனக்கு புரியலை… நீ சைமனோட தன்மானத்தை சீண்டி இருக்க.

சார், அவனைப் பற்றி உங்களுக்கு தெரியாது” என்று அவன் சிறிது கோபத்துடன் கூறினான்.

தெரியும்.

இல்ல சார்… உங்களுக்கு தெரியாது”

தெரியும்” என்று அழுத்தத்துடன் கூறினான்.

விஜய் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க…

ஏதோ தப்பா பேசினான்னு தெரியும். ஆனா, என்னனு தெரியாது… நான் ரொம்ப கேட்டதால் திவ்யா சொன்னா… என்னை மீறி விஷயம் வெளியே போகாது. என்றவன்,

நீ செய்த விஷயத்தால், திவ்யாக்கு தான் பிரச்சனை”

இது நான் தான் செய்தேன்னு எல்லாருக்கும் தெரியும் சார்.

நான் சைமன் பற்றி பேசுறேன்.

விஜய் புரியாமல் பார்க்கவும் அவன், சைமன் பதிலுக்கு நீ போட்டது போல ஏதாவது மீம்ஸ் திவ்யா பற்றி போட்டால் என்ன செய்வ?”

அப்படி செய்தா, அவனுக்கு சங்கு தான் சார்” என்று அவன் கோபத்துடன் கூற,

ஹரீஷ் நிதானமான குரலில், விஷயம் பரவினதுக்கு அப்புறம், நீ சங்கு ஊதி பிரயோஜனம் இல்லை. என்று திவ்யா கூறியது போல் கூறவும், அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.

ஹரீஷ் ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்த, அப்பொழுது விஜய்யின் கைபேசியில் அழைப்பு வந்தது. சத்தம் வரவில்லை என்றாலும், கைபேசியின் அதிர்வில் அதை கண்டு கொண்ட ஹரீஷ், யாரு?” என்றான்.

கைபேசியை எடுத்துப் பார்த்த விஜய், திவ்யா” என்றான்.

ஸ்பிக்கர் போட்டு பேசு.

விஜய் தயங்க, ஹரீஷின் முறைப்பில் அவன் சொன்னதை செய்தான்.

விஜய் ‘ஹலோ’ சொல்லும் முன் திவ்யா கோபத்துடன் பொரிந்தாள்,

பக்கி… நீ செய்ததை நான் சரி செஞ்சுட்டேன்… அவன் பவி பத்தி ஏதாவது பேசினா, அவனோட தங்கை பற்றி பேசுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கேன்… என்கிட்ட கேட்காம ஏதாவது மீம்ஸ் போட்ட! நீ அவனுக்கு சங்கு ஊதுறதுக்கு முன்னாடி, உனக்கு நான் ஊதிருவேன். என்றவள், அவனது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தாள்.

அவள் பேசியதை கேட்ட ஹரீஷ் உதட்டில் புன்னகை அரும்பியது.

விஜய் திருதிருவென்று முழிக்க, ஹரீஷ் விரிந்த புன்னகையுடன், உன் பிரெண்ட்க்கு இவ்ளோ பயப்படுவியா!”

விஜய் மெல்லிய புன்னகையுடன், சார், நான் மீம்ஸ்ஸில் போட்டது எதுவும் பொய் இல்லை… அவ நிஜமாவே நெருப்பு தான் சார்… எவ்வளவுக்கு எவ்வளவு குறும்பு செய்றாளோ, அதே அளவு டெரரும் கூட…”

“ஹும்ம்” என்றபோது ஹரீஷின் மனக்கண்ணில், அவளை அவன் கண்ட மற்ற சம்பவங்கள் வந்தது.

விஜய் ஹரீஷை ஆராய்ச்சி பார்வை பார்க்க, இரண்டே நொடியில் சுதாரித்த ஹரீஷ், இனி இப்படி செய்யாத… எதையும் செய்றதுக்கு முன் யோசித்து செய்… சைமன் கோபத்தில் திவ்யாவை ஏதாவது செய்தால்?”

ஒரு நொடி அதிர்ந்த விஜய், திவ்யாவை அவனால் ஒன்னும் செய்ய முடியாது சார்.

யானைக்கும் அடி சறுக்கும்னு கேள்விப் பட்டது இல்லையா? அவ பவித்ரா பற்றி தான் யோசிப்பா, தன்னைப் பற்றி யோசிக்க மாட்டா… சைமன் கிட்ட எதுக்கும் கொஞ்சம் கவனமா இரு…!

விஜய் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்தான். திவ்யா பற்றிய ஹரீஷின் புரிதலிலும், அவள் மீது அவன் காட்டும் அக்கறையிலும் தான் விஜய் ஆச்சரியம் கொண்டான். அதே நேரத்தில் தோழிக்காக மகிழ்ச்சியும் அடைந்தான்.

ஹரீஷ், என்ன! சொன்னது புரிந்ததா?”

“ஹும்ம்” என்று தலையை ஆட்டினான். 

சரி, கிளாஸ்க்கு போ.

இயல்பிற்கு திரும்பிய விஜய், சார், திவ்யாவிற்கு ஏதும் பிரச்சனை வந்திராதே!” என்று இழுத்தான். இந்த கேள்வியை கேட்டது, ஹரீஷின் மனதை மேலும் ஆராயவே.

error: Content is protected !!