விலகல் -14
மதிய தேநீர் இடைவேளையில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனது இருசக்கர வண்டியின் மீது, சைமன் கடும் கோபத்துடனும், எரிச்சலுடனும் அமர்ந்திருக்க, அவன் அருகே அவனது நண்பர்கள் இருவர் நின்றிருந்தனர்.
சட்டென்று எழுந்தவன் கோபத்துடன் வண்டியை மிதிக்க, அது பெரும் சத்தத்துடன் அருகில் இருந்த வண்டிகளுடன் சேர்ந்து கீழே விழுந்தது.
நண்பர்கள், “டேய்!” என்று கத்தினர்.
சைமனின் கோபம் அடங்க மறுத்தது. அவனது கோபத்திற்கு காரணம், நம் திவ்யாவே தான். அவன்.. திவ்யா காலையில் அடி வாங்கியதையும், தன்னால் இரண்டு நாட்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டாள் என்பதையும், கல்லூரி முழுவதும் பரப்ப நினைத்தான். ஆனால், நடந்ததோ வேறு.
திவ்யா கிளம்பிச் சென்ற அரை மணி நேரத்திற்குள், அவள் இரண்டு நாட்கள் தற்காலிகமாக நீக்கப் பட்ட செய்தி கல்லூரி முழுவதும் பரவி விட்டது தான். ஆனால், அது பரவிய விதம் தான் சைமன் நினைத்தது போல் அல்லாமல், அவனுக்கு எதிராக அமைந்து விட்டது.
திவ்யா கிளம்பிய அடுத்த நொடியில் இருந்தே, (வகுப்பு நேரத்தில் தான்) விஜய் மற்றும் அவன் நண்பர்கள்… புலனம் மற்றும் குறுஞ்செய்தி மூலம் விஷயத்தை கல்லூரி முழுவதும் பரப்பினர்.
அதன் விளைவு,
“ஹே! திவ்யா, டூ டேஸ் சஸ்பெண்டு ஆகிட்டாளாம்… காரணம் தெரியுமா! சைமனை அடிச்சிட்டாளாம்.”
“சைமனையே அடிச்சிருக்கா! செம்ம தைரியம் தான்.”
“அவளது தைரியம் தான் காலேஜ் அறிந்த விஷயமாச்சே!” என்று முதலில் பரவிய விஷயம் சிறிது நேரத்தில்,
“ஹே! இப்போ தான் நியூஸ் வந்தது… சைமன் திவ்யாவை தெரியாம இடிச்சிட்டான் போல, அதான் அடிச்சிட்டா.” என்று ஆரம்பித்த விஷயம்… அடுத்த நிமிடமே,
“திவ்யா நெருப்பாச்சே!” என்று பேசப்பட்டு,
“நெருப்புடா நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ”
என்ற கபாலி திரைப்பட பாடல் பின்னணியில் ஓட “திவ்யானா நெருப்பு!”, “சைமன்னா மண்ணு” “திவ்யா கிட்ட வச்சிக்காத! மீறி வச்சுகிட்டா… சைமன் நீ பன்னு!” போன்ற வாசகத்துடன் ஒரு காணொளி பரப்பப் பட்டது.
இன்னும் சிறிது நேரத்தில்,
“ஹே மாமா you wanna hate me
ஹே மாமா you wanna hate me
ஹே மாமா you wanna hate me
நான் யாரு நான் யாரு
I Am a ten not a zero
I Am the only one that
Fighting for a Fight
Tell me if you are ready or not
Lets start bcoz am about to take
It to the Top like what
எங்கேயும் எப்போதும்
முதலடி அடிப்பது நான் தான்
தொட்டா தீப்பொறி தான்டா
சுட்டா எரிமலை தான்டா
நொடியில் இடி இடிப்பேன்டா
வாடா…
நான் யாரு, நான் யாரு..
கொய்யால நான் யாரு”
என்ற சேதுபதி திரைப்பட பாடல் (அவர்கள் செப்பனிடு செய்த பாடல்) பின்னணியில் ஓட,
“திவ்யானா சும்மாவா!” “திவ்யானா மாஸ்” “திவ்யானா கெத்து” “திவ்யானா தீப்பொறி” “தெரியாம இடிச்சதுக்கே அடினா! தெரிந்து இடித்து இருந்தால் இந்நேரம் சமாதி தான்” போன்ற வாசகத்துடன் ஒரு காணொளி பரவியது.
மொத்தத்தில், சைமனின் மரியாதை பாதாளத்திற்கு தள்ளப்பட்டு, திவ்யாவின் மரியாதை வான் அளவிற்கு உயர்ந்தது.
சைமனின் நண்பர்கள் “டேய்!” என்று கத்தியதும், கோபத்துடன் அவர்களைப் பார்த்தான். அவர்களுக்கு அவன் நிலை புரிந்தாலும், அதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. மதியம் சைமன் பேசியது, அடிவாங்கியது என்று அனைத்துமே, விஷயம் பரவிய பிறகே அவர்களுக்குத் தெரியும்.
அவர்கள் எண்ணமோ ‘இவன் தேவை இல்லாமல் அவசரப் பட்டுட்டான்’ என்பது தான். ஆனால், அதை இப்பொழுது அவனிடம் சொல்ல முடியாது என்று அமைதியாக நின்றனர்.
திவ்யா பவித்ராவிடம் சொன்னது சரியே…! சைமன் இயல்பில் கெட்டவன் இல்லை…! அது என்னவோ, முதல் வருடத்தில் இருந்தே திவ்யாவிற்கும் அவனுக்கும் ஆகாமல் போய் விட்டது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்வர். எப்பொழுதும் முதலில் பிரச்சனையை ஆரம்பிப்பது சைமனாக தான் இருக்கும். அதில் ஒன்று அல்லது இரண்டு முறை சைமன் வெற்றி பெற்றிருந்தாலும், பெரும்பாலும் வெற்றி பெறுவது திவ்யா தான்.
…………………
அதே நேரத்தில், விஜயை அழைத்த திவ்யா.. அவன் அழைப்பை எடுத்ததும், “டேய் லூசு! அறிவிருக்காடா” என்றாள்.
“ஏன்டி!” என்று அவன் பாவம் போல் வினவினான்.
“உன்னை மெசேஜ் மட்டும் தானே பரப்பச் சொன்னேன்… இந்த மீம்ஸ்-லாம் எதுக்கு போட்ட?”
“பின்ன, நம்ம கெத்தை காட்ட வேணாமா? அது போக… அவன் பேசிய பேச்சு!” என்று அவன் பல்லைக் கடிக்க,
திவ்யா, “டேய்… அவன் பவி பத்தி எதுவும் தப்பா பரப்பிடக் கூடாது… அதான் எனக்கு கொஞ்சம் கவலையா இருக்குது.”
“அவன் அப்படி மட்டும் செய்தான்! செத்தான்…! நிச்சயம் அவனுக்கு சங்கு தான்.”
“பரப்பினதுக்கு அப்புறம் நீ சங்கு ஊதி ஒன்னும் ஆகப் போறதில்லை.” என்றவள், “ஹும்ம்… ஒரு ஐடியா வந்துருச்சு… இரு, அவகிட்ட பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன்.” என்று கூறி, அவனது பதிலை எதிர் பார்க்காமல் அழைப்பை துண்டித்தாள்.
அப்பொழுது ஒரு மாணவன் வந்து, “விஜய், உன்னை ஹரீஷ் சார் உடனே லேப் த்ரீ-க்கு வரச் சொன்னார்.” என்றான்.
விஜய், ‘இவர் எதுக்கு கூப்பிடுறார்? இவர் என்ன சொல்லப் போறாரோ?’ என்ற எண்ணத்துடன் ஹரீஷை பார்க்கச் சென்றான்.
சைமன், “நான் உண்மையை சொல்லிடட்டுமா?”
அவன் நண்பன், “என்னன்னு?”
“அது… இடிச்சதுக்காக அவ அடிக்கலை.. நான்…”
“இன்னும் உன்னை தப்பா பேசுவாங்க.”
“ஏன்? ஏன்?”
“நீ பேசிய விஷயம் அப்படி”
“அப்படி சொல்ல வேண்டாம்… விஜய்யும் அவளும் நெருக்கமா…”
“யாரும் நம்ப மாட்டாங்க.” என்று ஒரு நண்பனும், “சேர்மன் சார் உன்னை காலேஜ் விட்டே தூக்கிடுவார்.” என்று இன்னொரு நண்பனும் கூறினர்.“ச்ச்” என்று கோபத்துடன் காலை உதைத்தவன், “விஜய்-பவித்ரா பத்தி பரப்பினா…”