நான் சாயும் தோள் -9

ஆதி கேட்ட அணைத்து தின்பண்டங்களும்  வர அவன் கொரிக்க ஆரம்பித்தான்.

அவன் உண்பதை பார்த்தவர்… “நான் சொல்லட்டுமா வேண்டாமா?” என்றார்.

“ம்ம்ம்ம் கண்டின்யூ கண்டின்யூ” என்று சைகை செய்யவும் தொடர்ந்தார்.

“எங்க விட்டேன்?” என்க.

“என்ன அதுக்குள்ள மறந்துட்டீங்களா? ” என அவரை பார்த்தான்

“ஆமா அப்படியே நான் இவனை மாதிரி இளங்குமரன் சொல்றா அதான் மறந்துட்டேன்ல” என்றார் பார்த்தா.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…10th லீவு ல காலேஜ் வந்தானு சொன்னிங்க”

“ஹான் ஆமா… காலேஜ் வந்தாளா… அன்னிக்கு…”(மீதி ஆஹ் நான் சொல்றேன்)

10த் பரிட்சை முடிந்ததும் வீட்டில் போர் அடிப்பதாக சொல்லி மாதவ் உடன் பார்த்தாவின் காலேஜிற்கு வந்தாள் ரிது.

காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இருவரும் பார்த்தாவின் அறைக்கு சென்றனர்.

ஏதோ கோப்புகளை ஆராய்ந்து கொண்டு இருந்த பார்த்தா இவர்களை பார்த்ததும் “ஹே ரிது குட்டி வா டா எப்படி இருக்க?” என நலம் விசாரித்தார்.

“நான் நல்லா இருக்கன் தாத்தா நீங்க எப்படி இருக்கீங்க?”

“ஆல் குட் டா எங்க இந்த பக்கம் தாத்தாவும் பேத்தியும் ஊர் சுத்த கெளம்பிட்டிங்களா?”

“டேய்… அவ வீட்ல போர் அடிக்குது னு சொன்ன… அங்க இருந்தா ஈஷா ஏத்தாது வேல சொல்றானு மேடம் கோச்சிக்க அவ சண்டை போட ஒரே அக்கப்போற இருக்கு அதான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்”

“ஹா ஹா ஹா அது சரி… குட்டி நீ வேணா காலேஜ் சுத்திப்பத்துட்டு வா நானும் தாத்தாவும் இங்க இருக்கோம்… அப்படியே ஸ்னாக்ஸ் ஏத்தாது வேணும் னா கேன்டீன் ல என் பெற சொல்லி வாங்கிக்கோ” என்று அவளை அனுப்பி வைத்தார்.

“ஒகே தாத்தா பை” என பல்லை காட்டியவள்  ஒரு துள்ளளுடன் சென்றாள் (வேற எதுக்கு ஸ்னாக்ஸ் சாப்பிட தான்)

“நல்ல புள்ளை ” என பார்த்தா அவள் செல்வதை பார்த்து சொல்ல

“யாரு அந்த மேடம் ஆஹ் நீ எப்போ பார்த்த? வீட்ல வந்து பாரு பக்கத்து வீட்டுல இருக்கவங்கலாம் எனக்காக இன்னும் போலீஸ் ஸ்டேஷன் ல கம்பளைண்ட் பண்ணாம இருகாங்க”… “இல்லனா எப்போவோ நோய்ஸ் நுய்சன்ஸ் னு  கம்பளைண்ட் பண்ணிற்பாங்க”

“ஹா ஹா.. சரி டா விடு சின்ன பொண்ணு போக போக சரி ஆயிடுவ”

“அட நீ வேற டா டெய்லி ஸ்கூல் ல இருந்து வரும்போது ஒரு பிரச்னைய இழுத்துட்டு வந்துடற”…

“வீடு வரைக்கும் வந்து கேள்வி கேக்கறாங்க… இவ பண்றது பத்தாது னு pluto வேற அவங்கள குறைச்சே ஒரு வழி பண்ணிடறான்”

“ஹா ஹா ஒரே ஜாலி ஆஹ் இருக்க போலவே” என்று சிரித்தார் பார்த்தா.

“என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கா… ” என தானும் சிரித்தவர் தொடர்ந்து

“Pluto னு சொன்னதும் ஞாபகம் வருது ஆதி எப்படி இருக்கான் US போய்ட்டானா? ஆல் ஒகே தான?”

“போய்ட்டான் டா ரூம் ல கிடைசிருச்சு நேத்து தான் பேசுனான் இன்னிக்கு ஈவினிங் கால் பண்ணுவான்”

“ஓ சரி சரி நான் கேட்டேன் னு சொல்லு… அப்பறம் இவன் படிச்சு முடிச்சுட்டு வந்ததும் நாம பேச வேண்டியது பேசிர்லாம்” என்றார் மாதவ்.

“சரி டா ” என பார்த்தா கூற… அடுத்து வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்இவர்கள் இங்கு ரூமில் இருக்க நேராக கேன்டீன் சென்ற ரிது ஒரு டீயும் சிக்கன் பப்ஸ்யும் ஆர்டர் செய்து ஒரு மேஜையை தேடி அமர்ந்தாள்.

டீயும் பப்ஸ்யும் வர ரசித்து உண்டு கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த prof. அசோக் இவளை அந்த காலேஜில் படிக்கும் மாணவி கிளாஸை கட் அடித்துவிட்டு கேன்டீனில் இருக்கிறாள் என நினைத்து நேராக அவளது அருகே வந்தவர் மேஜையை தட்டி.

“ஹலோ எந்த இயர் ஸ்டுடென்ட் நீ? அறிவு இல்ல.. கிளாஸ் டைம் ல இப்படி டி தான் கட் அடிச்சுட்டு வந்துருவிய? Id கார்டு எங்க? ” என சரமாரியாக கோப கேள்விகளை கேட்டார் அவர்.

திடீர் என கேட்ட தொணியில் பயந்ந்துவிட்டவள்  வாயை திறக்கும் முன்

“இடியட் கேக்கறேன் ல ஆன்ஸர் மீ? ” என கத்தினார்.

“அது நான்…” மறுபடியும் அவள் வாய் திறப்பதற்குள் அந்த கேன்டீன் ஓனர் வேகமாக ஓடி வந்து

“சார் சார் அவங்க நாம பார்த்தா சார்க்கு தெரிஞ்சவங்க ” என கூற

“ஓ அப்படியா… ஏன்  மா கேட்ட வாய்யா திறந்து பதில் சொல்ல மாட்டிய” என  அதற்கும் திட்டிவிட்டு சென்றுவிட்டார்.

செல்லும் முன் பாவம் இவளை அவர் பார்க்க வில்லை.

அவரை முறைத்து கொண்டே நின்று இருந்தவள்

“என்னைய திட்டிட்டு போறீங்க கஞ்சி சட்டை… உங்கள நான் சும்மா விட மாட்டேன்” என கறுவி கொண்டாள்.

அன்று ஆரம்பித்தவள்… தொடர்ந்து காலேஜ் வந்தாள் ஒரு வாரத்திற்கு… ஒவொரு நாளும் அசோக்கை பழி வாங்க.

ஒரு நாள் அவர் கிளாசிற்கு செல்லும் வழியில் வாழை பழ தோளை போட்டாள்…

அந்த தோலை கவனித்தவர் போட்டவளை கவனிக்கவில்லை.

இங்கிலீஷிக்காரன் படத்தில் வரும் சத்யராஜை போல தோலை தாண்டி ஒற்றை காலை பின்னால் நீட்டி… ஒற்றை காலில் ஊன்றி நின்றவர்.. சுற்றிலும் பார்த்தார்… அவர் பார்ப்பதை உணர்ந்து ரிது படிகளில் ஒளிந்து கொண்டாள்.

அப்போது ரிதுவுக்கு தான் பிஜிஎம் கேட்டது…

“இங்கிலிஷ் காரன்” என்று

“ச்சே தப்பிச்சிட்டாரு” என செவுற்றில் குத்தினாள்.

மறுநாள் பெயிண்டை ஸ்டாப் ரூமில் யாரும் இல்ல சமயம் காதவின் மேல் வைத்து விட்டு லேசாக கதவை சற்றி விட்டு சென்றாள்.

அதே சமயம் அவருக்கு பதிலாக பியுன் ராமலிங்கம் கதவை திறக்க மொத்த பெயிண்டும் அவர் மீது அபிஷேகம் ஆனது.

அதற்கு மறுநாள் அவரது பையில் கரப்பான் பூச்சிகளை கொண்டு வந்து இறக்கினாள்.

அவரது பையில் தானது புத்தகத்தை எடுக்க வந்த மல்லிகா டீச்சர் “ஆஹாஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ” என அலறி அருகில் இருந்த அனைவரும் ஓடி வந்தனர்.

இப்படியாக அந்த வாரத்தில் 5 நாட்கள் பல விதமான பிளான்ங்களை போட்டவள் அதில் வெற்றி பெறாமல் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.அந்த வார கடைசி நாளில் அவரது பைக்கில் உள்ள பிரேக் வயரில் கை வைத்தாள்அன்று கல்லூரி முடிந்து பைக்கை எடுத்தவர் கல்லூரி கேட்டின் அருகே உள்ள ஸ்பீட் பிரேக்கிரில் பிரேக் புடிக்காமல் போனதால் சரிந்து விழுந்தார்.

இதை தூரத்தில் இருந்து பார்த்தவள்

“எஸ்” என குதித்தாள்.

இதை அவள் பின்னிருந்து பார்த்து விட்டார் மாதவ்.

அவள் அருகே சென்று “ரிது டூ பேட்” என கோவமாக கூறினார்.

“அவள் தலை குனிந்து கொண்டு நடத்தத்தை கூறினாள்”

“இருக்கட்டும் ரிது பட் இட்ஸ் ஸ்டில் நோட் கரெக்ட்… கோ அண்ட் டெல் ஹிம் தி ட்ருத் அண்ட் அஸ்க் சாரி… அப்போ தான் நான் உன்கூட பேசுவேன்” என்று கூறி சென்று விட்டார்.

முகத்தை சுருக்கீயவள் “ஷிட்” என காலால் தரையைப் உதைத்து விட்டு நேராக அசோக்கிடம் சென்றாள்.

நல்ல வேலை சிறு சிராய்ப்புகளுடன் தப்பித்தார்.

அவர் அருகே சென்றவள்

“சார் ஆர் யு ஒகே? ” என கேட்க.

“அவள் முகத்தை பார்த்தவர் யா ஐ அம் பைன்… இதுக்கும் நீங்க தான் காரணமா?” என கேட்டார்.

அவர் கேட்டத்தில் திக்கென்று ஆனது”உ உ உங்களுக்கு… எப்படி தெரியும்?”

“நான் நீங்க பெயிண்ட் பக்கெட் ஆஹ் டோர் மேல வெக்கற அப்போ பார்த்தேனே.. அதான் அன்னிக்கு எனக்கு பதில் பியுனை அனுப்பினேன்”என கூறினார்.

“சாரி சார்… நீங்க அன்னிக்கு திட்டினது எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு” என்க.

“ம்ம்ம்ம் நானும் சாரி அன்னிக்கு உன்ன பத்தி விசாரிச்சுட்டு அப்பறம் நான் பேசிர்க்கணும்” என்றார்.

“இட்ஸ் ஒகே சார்… நான் போய் பிரஸ்ட் அய்ட் கிட் கொண்டு வரேன்” என்று சென்றவள்.

அவருக்கு வந்து மருந்திட்டாள்… இதை அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார் மாதவ்.

உதட்டில் சிறு புன்னகையுடன் “குட் கேர்ள்” என தனது பேத்தியை மெச்சிகொண்டார்.

அதன் பிறகு அவருடன் காலேஜிற்கு வருவதை நிறுத்தி கொண்டாள்.

இந்த கதையை கேட்டு கொண்டு இருந்தா ஆதி

“அடி பாவி” என வாயில் கை வைத்தான்.

“அதுக்கு தான் டா சொல்றேன் கொஞ்சம் அவ வம்புக்கு போகாம இரு… ஏற்கனவே அவ நீ போனதுல இருந்து கோவமா இருக்கா… இதுல அவளை நீ என்கிட்ட சண்டைக்கு வா வா னு கூப்பிட்ற அப்பறம் நான் தனியா எப்படி இருக்கறது” என்றார்.

“கவலை படாதீங்க தாத்தா அவளாம் என ஒன்னும் பண்ண மாட்டா” என்றான்.

“ம்ம்க்கும் நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும்… அவ உன்மேல செம கடுப்புல இருக்கா… நீயா போய் மாட்டிக்காத… அப்பறம் உன்ன படுக்க போட்டு உன்மேல ஏறி கதகளி அடிர்வா” என்றவர்…

“அப்பறம் ஆதி கண்ண… நான் உங்கிட்ட ரெண்டு விஷயம் சொன்னேன் நீ யோசிச்சி இன்னிக்கு சொல்றேன் னு சொன்ன… என்ன முடிவு பண்ணிர்க்க?” என்றார்.

” ப்ச் தாத்தா… செகண்ட் சொன்ன விஷயம் எனக்கு ஒகே தான் பண்ணலாம்… பட் ஃபர்ஸ்டு சொன்ன விஷயம் நீங்க இப்போ சொன்ன கதைக்கு அப்பறம் யோசிக்க வேண்டிய விஷயம். “

“ஆதி புரியுது ஆன அவ நீ நெனைக்கிற மாதிரி இல்ல டா ” என பார்த்தா கூற.

” அது தெரியும் தாத்தா உங்களைவிட அதிகமா அவளை பத்தி எனக்கு தெரியும் ஆனா அவ ஏன் என் மேல கோவமா இருக்கா அது தான் எனக்கு புரியல”

“அது நீ அவ கிட்ட சொல்லாம போய்டியாம் அதான் அவ…” என்று சொல்லி முடிப்பதற்குள் இடை புகுந்தான் ஆதி

“இல்ல தாத்தா நான் சொல்லிட்டு தான் போனேன்… இது வேற எதோ என்னனு தெரில பாப்போம்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அவளுக்கு ஒகே னா அப்பறம் ப்ரோஸிட் பண்ணலாம்”. என்று கூறி பேச்சை முடித்தான்.

“சரி பா… நான் மாதவ் கிட்டயும் த்ரிலோக் கிட்டயும் என்ன சொல்லட்டும்?”

” நான் பேசிட்டு சொல்றேன் னு சொல்லுங்க ”  என்று கூறி எழுந்து தனது அடுத்த வகுப்புக்கான நோட்ஸை எடுத்து கொண்டு சென்றான்.

அவன் செல்வதை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவர்… “இன்னும் என்னலாம் கிறுக்கு தனம் பண்ண போறாங்களோ தெரிலயே… கடவுளே என்னை இந்த கிறுக்கு பசங்க கிட்ட இருந்து காப்பாத்து பா”  என வேண்டி கொண்டார்.

error: Content is protected !!